விஜயராகவன் வழக்கறிஞர் ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்

  • Home
  • United States
  • Salem, OR
  • விஜயராகவன் வழக்கறிஞர் ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்

விஜயராகவன் வழக்கறிஞர் ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்

03/16/2026
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆணையை ஏற்று இன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதி ஓமலூர்...
03/08/2026

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆணையை ஏற்று இன்று ஓமலூர் சட்டமன்ற தொகுதி ஓமலூர் தெற்கு ஒன்றியத்தில் வாக்குச்சாவடி திருவிழா நடைபெற்றது. இதில் வீடு வீடாக சென்று திராவிட மாடல் ஆட்சியை அகற்றுவதன் அவசியத்தை எடுத்துக் கூறியம் பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

01/30/2026

தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு, ஆவின் கர்நாடகத்தில் பால் வாங்குவதா? கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்!

தமிழ்நாட்டில் குறைவான விலையில் பால் கிடைக்கும் போது, அதை முழுமையாக கொள்முதல் செய்யாமல், கர்நாடகத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக பால் உற்பத்தியாளர் அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. தமிழ்நாட்டு உழவர்களுக்கு துரோகம் செய்து விட்டு, அண்டை மாநிலத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் வாங்குவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

பால் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களின் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில் தினமும் 1.70 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இதில் தினமும் 30 லட்சம் லிட்டர் முதல் 34 லட்சம் லிட்டர் வரை தான் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தமிழகத்தின் மொத்த பால் உற்பத்தியில் 17.60% முதல் 20% வரை தான். ஆவின் நிறுவனம் நினைத்தால் தமிழ்நாட்டில் அதன் பால் கொள்முதல் அளவை இரட்டிப்பாக்குவது கூட சாத்தியம் தான். ஆனால், அதைச் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்து பால் கொள்முதல் செய்யும் முயற்சியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

இந்தியாவிலேயே ஆவின் நிறுவனம் தான் மிகக் குறைந்த விலைக்கு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து வருகிறது. இதை பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்ததைத் தொடர்ந்து பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 , எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 என்ற கொள்முதல் விலையுடன் கடந்த 2023&ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் கூட கட்டுபடியாகக்கூடிய விலை அல்ல.

அதே நேரத்தில் கர்நாடகத்தில் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42 கொள்முதல் விலையுடன், ரூ.5 ஊக்கத் தொகை சேர்த்து ரூ.47 வழங்குகிறது. தமிழ்நாட்டில் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூ.38&க்கும் ஒரு லிட்டர் பசும்பால் கிடைக்கும் நிலையில், அதைக் கொள்முதல் செய்யாமல் கர்நாடகத்தில் லிட்டருக்கு ரூ.2 அதிக விலை கொடுத்து பசும்பாலை கொள்முதல் செய்வதும், அதை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர போக்குவரத்துச் செலவாக லிட்டருக்கு ரூ.3 செலவழிப்பதும் வணிகரீதியாக அறிவார்ந்த செயல் அல்ல. ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் பாலை கர்நாடகத்திலிருந்து ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்வதாக வைத்துக் கொண்டால் தினமும் ரூ.50 லட்சமும், மாதத்திற்கு சுமார் ரூ.15 கோடியும் ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும்.

ஏற்கனவே ஆவின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.525 கோடிக்கும் கூடுதலாக இழப்பை சந்தித்து வரும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டால், ஆண்டு இழப்பு மேலும் ரூ.200 கோடி வரை அதிகரிக்கக் கூடும். அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி, ஆவின் நிறுவனத்திற்கும் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இப்படி ஒரு முடிவை ஆவின் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் எதற்காக எடுத்தன? என்பதை உழவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவேளை ஆவின் நிறுவனத்திற்குத் தேவையான பால் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வது தான் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தான் பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு வகை செய்யும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே ஒரு முறை தான் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பின் 2023&ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஊக்கத்தொகையும் கூட முறையாக வழங்கப்படுவதில்லை. கடைசியாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு 25 மாதங்களாகும் நிலையில், அதன்பின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.

அதேநேரத்தில் ஆவின் நிறுவனத்தை விட தனியார் பால் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுவும் கூட ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவு குறைந்ததற்கு காரணமாக இருக்கக்கூடும். சிக்கலுக்குத் தீர்வு என்ன? என்பதைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக அண்டை மாநிலத்திற்கு சென்று அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்வது சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலாக்கவே வகை செய்யும். எனவே, கர்நாடகத்தில் இருந்து பால் கொள்முதல் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்; மாறாக, பசும் பால் கொள்முதல் விலையை கர்நாடகத்திற்கு இணையாக லிட்டருக்கு ரூ.45 வீதம் உயர்த்தி வழங்குவதன் மூலம் கொள்முதலை அதிகரிக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்.

இன்று பனையூர் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் ஓமலூர் சட்டமன்ற  தொகுதிக்கான நேர்காணலில் கலந்து கொண்ட போது  # Anbumani ...
01/29/2026

இன்று பனையூர் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கான நேர்காணலில் கலந்து கொண்ட போது # Anbumani Ramadoss

இன்று 26/01/2026 திங்கட்கிழமை அண்ணார் திரு. மு_கார்த்திEX.MLA பாமக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்...
01/26/2026

இன்று 26/01/2026 திங்கட்கிழமை அண்ணார் திரு. மு_கார்த்திEX.MLA பாமக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணார் திரு. சதாசிவம் MLA உள்ளிட்ட பாமக MLAகள் தமிழ்நாடு ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின தேனீர் விருந்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர்களுடன் பங்கேற்ற போது.

01/20/2026

ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டனவா? ஆளுனர் உரை என்ற பெயரில் திமுக அரசு வாசித்தது பொய்யுரை!

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட 1176 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.12.16 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் ஆளுனர் உரை என்ற பெயரில் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட உரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான பொய் ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே லட்சக்கணக்காக கோடி ரூபாய் முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டதாகவும், அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது. பல தருணங்களில் திமுக அரசின் இந்த பொய் முதலீடுகளை பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1059 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.11.32 லட்சம் கோடி முதலீடுகள் வந்து விட்டதாகவும், அதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் திமுக அரசு பொய்கூறி வந்தது. ஆனால், இது பொய் என்றும், தமிழக அரசு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவான மதிப்பு கொண்ட முதலீடுகள், அதாவது வெறும் 8.80% முதலீடுகள் மட்டுமே வந்திருப்பதாகவும், அதிலும் பெரும்பாலானவை தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டத்திற்காக முதலீடு செய்தவை என்பதையும் திமுக அரசின் பொய் முதலீடுகள் என்ற தலைப்பில் ஆவணமாக தயாரித்து கடந்த நவம்பர் மாதம் வெளியிடிருந்தேன்.

அதுவரை 100% முதலீடும் தமிழ்நாட்டிற்கு வந்து விட்டதாக கூறிக் கொண்டிருந்த தமிழக அரசு, வெறும் 23% புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டும் தான் முதலீடு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு வணிக உற்பத்தி தொடங்கப்பட்டிருப்பதாக ஒப்புக்கொண்டது. 23% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெற்றிருப்பதாக அரசு கூறினாலும் கூட, அவற்றில் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளில் முதல்கட்டமாக சிறிய பங்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருப்பதால் மொத்த முதலீட்டின் அளவு ரூ. 1 லட்சம் கோடியை, அதாவது 8.80 விழுக்காட்டைத் தாண்டவில்லை என்பது தான் உண்மை.
உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, இன்னும் கேட்டால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பையும் சேர்த்தால், தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தின் அளவான 8.80 விழுக்காட்டை விட குறைந்து 8.20 விழுக்காடாகி விட்ட நிலையில், மொத்த முதலீடும் வந்து விட்டது போன்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றிருக்கிறது. திமுக அரசின் இந்த மோசடியை மக்கள் நம்ப மாட்டார்கள்.

அதேபோல், திமுக அரசின் 7000 மெகாவாட் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், 2640 மெகாவாட் மின் திட்டங்கள் உற்பத்தியை தொடங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் இன்னொரு பொய்யை திமுக அரசு கூறியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரே ஒரு அனல் மின் திட்டத்திற்குக் கூட அடிக்கல் நாட்டப் படவில்லை; ஒரே ஒரு புதிய மின்னுற்பத்தி நிலையம் கூட உற்பத்தியைத் தொடங்கவில்லை என்பது தான் உண்மையாகும். ஆனால், மீண்டும், மீண்டும் பொய்களை அடுக்குவதன் மூலம் மக்களை நம்ப வைத்து விட முடியும் என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை திமுக அரசு செய்து வருகிறது. இம்முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது.

ஆளூனர் உரை என்பது அரசின் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்னும் சில வாரங்களில் வீட்டுக்கு அனுப்பப்படவிருக்கும் திமுக அரசால் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. கடந்த காலங்களில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பதால் அவற்றையும் கூறவில்லை. அதனால் தான் ஆளுனர் உரையிலும் பொய் மூட்டைகளை திமுக அரசு அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்களை மட்டுமே முதலீடாக வைத்து ஏமாற்றிய திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.

Address

Salem, OR

Website

Alerts

Be the first to know and let us send you an email when விஜயராகவன் வழக்கறிஞர் ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category