23/03/2020
கீழுள்ள கட்டுரையை வாசித்து தங்களது முன்மொழிவுகளை தெரிவியுங்கள்
Outbreak Of Covid- 19
Measures To Be Taken By Chairman And his Council In Urban Council- Eravur
இன்று முழு உலகமும் எதிர் நோக்கியிருக்கும் ஒற்றை எதிரியின் மீதான பயங்களும் அத்தகைய பயத்தின் மீதான நியாயமான கற்பிதங்களும் வரலாறு நெடுகிலும் மனித உயிர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இதுவரை மனிதனால் மருந்தென்று எதுவூம் கண்டுபிடித்திராத அல்லது கண்டுபிடித்திருந்தும் பொது மக்கள் பாவனைக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிராத அபாயகரமான தொற்று நோய்கள் Infectious disease மனிதர்களுக்கிடையே பரவூம் சந்தர்ப்பத்தில் வரலாற்றினூடாக மனித சமுதாயம் குறித்த நோய்களுக்கெதிராக எவ்வாறு எதிர்வினையாற்றியிருக்கிறது என்பதனை மறு பரிசீலனை செய்வதன் மூலம் குறித்த நோய் தொடர்பிலும் அத்தகைய நோய்கள் ஏற்படும் போது அவற்றிலிருந்து தங்களைக் தற்காத்துக் கொள்ளும் விதங்கள் தொடர்பிலும் எம்மால் அது தொடர்பான கடந்த கால அறிவினைப் பெற்றுக் கொள்ள முடியூமாக இருக்கும்.
2003-2004ம் ஆண்டுகளில் தோன்றிய
1.Swine Flu
2. Avian Bird Flu
3. SARS (Severe Acute Respiratory Syndrome)
மேற்குறிப்பிட்ட வைரஸ் தொற்று நோய்களின் பின்னரே தற்காலத்ததைய சமூகம் தொற்று நோய்கள் பற்றிய உலகளாவிய பார்வiயினையூம் அது தொடர்பில் மக்களை விழிப்பூட்டலில் அத்தியாவசியத்தினையூம் புரிந்து கொண்டது. மேலும் தொற்று நோய்கள் பற்றிய கொள்கையாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலும் புதிய பரிமாணங்களை (Policy Making & Infrastructure) நவீன உலகு உலக சுகாதார நிறுவனத்தின் கண்காணிப்புடன் செய்து கொண்டது.
14ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் மூன்றிலொரு பங்கு மக்களின் இறப்பிற்கு காரணமாகவிருந்தஇ இனம்புரியாதஇ உலக வரலாற்றில் கறுப்பு மரணங்கள் (Black Death) என இன்றுவரையிலும் அழைக்கப்படும் ப்ளேக் (Plague) (எலியின் மூலம் ஏற்பட்ட ஒரு வகைத் தொற்று) எனும் தொற்று நோய் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் முழுவதும் பரவி பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பில் அரசுகள் மற்றும் மருத்துவ குழுமங்கள் எத்தகைய நியமங்களின் கீழ் தொழிற்படவேண்டுமென்பது பற்றிய தௌpவினை மக்களுக்கு வழங்கியிருந்தது.
இருப்பினும், தற்போது சீனாவின் வூஹான் (Wuhan) என்கின்ற மாகாணத்தில் தொடங்கி இன்று எம் வீட்டு கதவினை தட்டுமளவிற்கு கொரோனா வைரஸ் (Coronovirus) என்ற வகையினுள் அடங்கும் கோவிட் -19 (COVID-19) என்ற வைரஸ் தொற்றானது இன்று வரையிலும் உலகளாவிய ரீதியில் 350,453 வைரஸ் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் 15இ315 மரணங்களை ஏற்படுத்தியூள்ளதுடன் 100,354 பேர் பூரணமாக குணமாகியூமுள்ளனர். (www.worldometers.info/coronovirus)
இத்தகைய நிலையில் எமது மாவட்டத்தில் இதுவரையிலும் இரண்டு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அரசு கருதும் நபர்களினை தனிமைப்படுத்தி அவதானிக்கும் தனிமைப்படுத்தும் நிலையமொன்றினையூம் அரசு எமது மாவட்டத்தில் “மட்டக்களப்பு கெம்பசில்” (Batticaloa Campus) ஏற்படுத்தியூள்ளதும் நாம் அறிந்ததே.
வலிந்தோ அல்லது தற்செயலாகவோ தற்போது குறித்த வைரஸ் எமது மாவட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுவிட்டது. மத்திய மற்றும் மாகாண அரசு இணைந்து குறித்த நோய்த்தொற்றின் தீவிரத்தினைக் குறைக்க பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது பாராட்டத்தக்கதே.
இருப்பினும்இ அரசாங்கம் ஒன்றின் மூன்றாவதும் கடை நிலையூமான உள்ளாட்சி அதிகார சபைகளில் உள்ளடங்கும் “ஏறாவூர் நகரசபை” குறித்த நோய்தொற்று தொடர்பில் ஏன் எதிர்வினையாற்ற தவறிவிட்டது மற்றும் மக்களினை விழிப்பூட்ட தவறிவிட்டமை தொடர்பில் கேள்வியெழுப்பவேண்டிய கட்டாயம் : நானும் ஏறாவூரான் என்கின்ற வகையில் எனக்கு ஏற்பட்டதாகவே தோன்றுகின்றது.
1987ம் ஆண்டின் 18ம் இலக்க நகர சபைகள் கட்டளைச்சட்டத்தின் பிரிவூ 35 (f) பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
generally, to promote the public health, welfare, and convenience, and the development, sanitation, and amenities of the town.
பொதுவாக உள்ளுராட்சி மன்றங்களின் கடமைகள் தொடர்பில் www.clgf.org.ukகீழ்வருமாறு குறிப்பிடுகின்றது:-
Local Authorities have responsibility for Public Health, Utility Services and Rural Road
எனவே, பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களின் தொழிற்படுகை மிக அத்தியாவசியமானது என்பது தொடர்பில் இங்கே எவருக்கும் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்க முடியாது. வரிகளை வரூசூலித்தல் மற்றும் உபவிதிகளை உருவாக்கும் அதிகாரங்களை பெற்றிருக்கும் உள்ளுராட்சி அதிகார மன்றங்கள் தொடர்பிலான சட்டங்களில் தவிசாளருக்கும் உப தவிசாளருக்கும் தான் பதவி வகிக்கும் காலப்பகுதியில் தங்களது பதவி நிலையின் காரணமான சமாதான நீதவானவாகவூம் உத்தியோகபூர்வமற்ற நீதவானாகவூம் (JPUM) கருதப்படல் வேண்டுமென 1987ம் ஆண்டின் 18ம் இலக்க நகர சபைகள் கட்டளைச்சட்டத்தின் பிரிவூ 23 பின்வருமாறு குறிப்பிடுகின்றது:-
The Chairman and the Vice-Chairman of the Urban Council of each town shall, during the tenure of his office, be exofficio a Justice of the Peace and Unofficial Magistrate for the district within which that town is situated
இத்தகைய அதிகாரங்களும் தவிசாளருக்கு வழங்கியிருப்பது பொது மக்கள் சுகாதாரம் என்கின்ற பெயரில் வெறுமனே கழிவகற்றல் மேலாண்மைக்கு (Waste Management) தலைமை வகிப்பதற்காகவல்ல. தனிப்பட்ட ஒரு குழுவினை அல்லது பொதுவான ஒரு மனித குழுமத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அறிந்து அதற்கேற்ப சட்டதிட்டங்களுக்குட்பட்டு அவர்களுக்கேற்ப சட்டத்தினையூம் ஒழுங்கினையூம் மக்கள் கடைப்பிடிப்பதனை உறுதிப்படுத்துவதுடன் பொது மக்கள் சுகாதாரம் தொடர்பில் தவிசாளர் தலைமையில் செய்யக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கேயாகும்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் 22 மற்றும் 23ம் திகதிகளில் ஏறாவூ+ர் நகர சபையில் அறபா வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் செய்யது முகம்மது அஸ்ஸாம் முகம்மது சறூஜ் என்பவரது தொற்று நோயினை தற்காத்தல் நடவடிக்கைகளில் ஒன்றாக தனது சொந்த செலவில் தொற்று நீக்கிகளை (னளைiகெநஉவழைn டுiஙூரனை) அவரது மேற்பார்வையில் அவரது வட்டாரத்தினுள் அமைந்துள்ள சகல வீடுகளுக்கும் தௌpத்துள்ளமை சாதாரண மனிதன் என்ற வகையில் அரசியல் நோக்கங்களுக்கப்பால் ஏற்றுக் கொள்ளத்தக்கவொரு முன்னுதாரணமாகவே பார்க்க முடிகின்றது.
ஏறாவூர்-06 வட்டாரத்தின் தேர்வூ செய்யப்பட்ட உறுப்பினரான முகம்மது சாலி நளீம் அவர்களும் 1500.00 பெறுமதியான உலர் உணவூப் பொருட்களை விநயோகம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வெறுமனேஇ ஒரு நகர சபை உறுப்பினரால் செய்ய முடிந்த இது போன்றவொரு செயலை ஏன் தவிசாளர் தலைமையிலான அவர் சபை மேற்கொள்ளவில்லை. பொது மக்களின் வரிப்பணத்தினை வசூலித்து கருவூலமாகப் பெற்றுக் கொள்கின்றவர்கள் பொது மக்கள் சுகாதாரம் தொடர்பில் செயலாற்றாமை அவர்களது செயற்திறன் தொடர்பில் சந்தேகிக்கவே செய்கின்றது.
எனது நியாபங்களுக்கமைவாகஇ தவிசாளருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று எமது நகர சபையில் கொண்டு வரப்படவூள்ளதாக குறிப்பிட்டு சபை கடந்த 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்னாள் கூட்டப்பட்ட பொழுது “தன்னைத் தவிர ஏறாவூ+ருக்கு தவிசாளாராக இருக்க தகுதி எவருக்குமில்லை” எனும் வாக்கியத்தினை தவிசாளர் அவர்கள் உபயோகித்ததாக சபை அமர்வின் போது பெறப்பட்ட காணொளிகள் கட்டியம் கூறின.
தகுதி வாய்ந்தவொரு தவிசாளர் மக்களுக்கு சேவையாற்ற இதைவிட தக்க தருணமொன்று தேவையா..? தனது திறமையை தனது தகுதியை மக்கள் மீதான நேசத்தை தனது அறிவூக்கூர்மையை வெளிப்படுத்த ஆண்டவன் இதைவிட அரிய சந்தர்ப்பத்தினை தந்துவிடவா போகின்றான். ஏறாவூ+ர் நகர சபையின் தவிசாளர் ஆகக் குறைந்தது மேற்கொண்ட எந்த நடவடிக்கைகள் தொடர்பாகவூம் மக்கள் கவனம் ஈர்க்கவில்லை என்பதுடன் அவரது அதிகாரம் தொடர்பில் எதிர்க்கேள்வி கேட்கக்கூடிய இக்கட்டான தருணத்தில் இருக்கின்றார் என்றே சொல்லலாம்.
தற்போதுள்ள வளர்ந்து வரும் இளம் சமுதாயத்திற்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையளிக்கக் கூடிய அரசியல் ஆளுமையாக தாங்கள் இருப்பீர்கள் என்று என்றௌ ஒரு நாள் நான் நினைத்திருக்கவூம் கூடும்.
இருப்பினும்இ வடிகான்கள் தோண்டுவதனையூம் கழிவகற்றல் மேலாண்மையினையூம் சேவையாகப் பார்க்கும் மனோநிலையில் மக்கள் இல்லை என்பதனை தவிசாளர் புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஆகக்குறைந்ததுஇ இத்தகைய இடர் காலங்களில் எவ்வாறு தனது அதிகாரத்திற்குட்பட்டு சேவையாற்றுவது தொடர்பில் தங்களுக்கு ஆலாசனை வழங்கி வழிநடாத்தக்கூடிய ஒருவரையாவது தாங்கள் ஆலோசகராக கொண்டிருக்கவில்லையா என்றே முடிக்கவேண்டியிருக்கிறது. மேலும்இ தங்களது மேற்பார்வையின் கீழ் தங்களது செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெரியப்படுத்தும் ருசடியn ஊழரnஉடை நுசயஎரச எனும் முகப்புத்தக கணக்கின் அறிக்கைகளும் என்னை புளகாங்கிதம் செய்விக்கவில்லை என்பதனாலேயே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
சில முன்மொழிவூகள்:-
அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி உதவியை பெறல் அல்லது முயற்சித்தல்
உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் உதவியினை பெறல்
இளைஞர் மன்றங்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்களினூடாக சிரமதானப் பணியினை மேற்கொள்ளல்
வட்டார ரீதியில் குறித்த நோய் பற்றியூம் அதனைக் காக்கும் முறைகள் தொடர்பிலும் விழிப்பூட்டல்
ஊரடங்குச் சட்டத்தின் போது மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை அறிவித்தல்
தொற்று நீக்கிகளை தௌத்தல்
அரசு பராமரிப்புக்கென வழங்கியூள்ள பொது இடங்களை தொற்று நீக்கம் செய்தல்
தற்போதைய நிலவரத்திற்கமைய நகரசபை நிதியினை அதிகரித்து பெறக் கூடிய கொள்கை வகுப்பாக்கங்களை ஏற்படுத்துவதுடன்
வெளியூ+ர் பிரயாணிகள் தொடர்பான தகவல்களைப் பெற்று உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தல்
அன்றாடம் உழைத்து வாழ்க்கை நடாத்தும் தொழிலாளர்களுக்கு நிதயூதவி அல்லது கடன் வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்தல்
அத்தகைய நோக்கங்களுக்கு நிதி சேகரிப்பதற்கென உள்ளுர் தொழில் முனைவோர்களினதும் தனவந்தர்களினதும் நிதி ஆதாரங்களைப் பெறல்
உயிர்ப்புடன் செயற்படக்கூடிய சகர சபை ஒன்றின் முன்மாதிரி தவிசாளராகவூம் தாங்கள் திகழ்ந்திருக்கலாம். ????????????
ம்ஹூம்…. யாருமேயில்லாத டீக்கடையில் டீ ஊற்றி என்ன பிரயோசனம்…..
குறிப்பு:- இக்கட்டுரை அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கப்பால் நெருக்கடியான தருணமொன்றில் உள்ளுராட்சி சபையின் தவிசாளர் எவ்வாறு செயற்பட்டிருக்கவேண்டுமென்ற எனது எதிர்பார்ப்பின் மீதான ஏமாற்றங்களை பேசுகின்றதே தவிர எவர் சார்பானதுமான எனது அரசியல் பக்கச் சார்பினை நிரூபிப்பதற்கோ அல்லது பொன்முடி வேண்டி இழைக்கப்பட்ட புகழ் மாலையோ இதுவல்ல வென்பதை மனங்கொள்க.. அதிகாரத்தினை நோக்கி உண்மைகளையூம் யாதார்த்தங்களையூம் பற்றி கேள்வி கேட்கும் சமுதாயமொன்று வளர்ந்து வரும் காலமென்பதையூம் உணர்தல் நலம்.