Parvatham LAW FIRM

Parvatham LAW FIRM Clarity in law

15/10/2022

திராவிட முன்னேற்ற கழகத்தின் அராஜகம்..... இன்று காலை வேலூர் மாவட்டத்தில் வேலூரின் முக்கிய சாலையை மறித்து போராட்டம்.... ஆயிர கணக்கான மக்கள் அவதி.... ஜனநாயக முறையில் மனு கொடுக்க சென்ற பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களை கைது செய்த காவல் துறை இன்று என்ன செய்யும்???

01/08/2018

பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்யும் பிள்ளைகளுக்கு, பெற்றோரின் சொத்துகளில் உரிமைகோர அனுமதியில்லை - உச்சநீதிமன்றம்

07/05/2018

எவ்வளவு கேவலமான மீடியாக்கள் : 😡
********************************************************
சன்நியூஸ் பெண் செய்தியாளர்

இடம் : எர்ணாகுளம் பஸ் ஸ்டாண்ட்.

நீட்தேர்வு எழுத திருநெல்வேலி யில் இருந்து கேரளா வந்த மாணவனிடம் பேட்டி.
செய்தியாளர் : உங்களுக்கு தேர்வு மையம் கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளதால் சிரமமாக உள்ளதா ?

மாணவன் : இல்லை ( இப்போதே செய்தியாளர் முகத்தில் கறி பூசி ஆகி விட்டது ) விடவில்லை

மாணவனின் அம்மாவிடம்
செய்தியாளர் : நீங்கள் சொல்லுங்கள் உங்களுக்கான சிரமங்களை ?

மாணவனின் தாயார் : பெரிய பாதிப்பு எதுவுமில்லை பயண களைப்பு மட்டுமே உள்ளது.அரசும் தன்னார்வலர்களும் உதவி உள்ளனர்.(அடுத்த அடி)
இவ்வளவையும் கேட்டு விட்டு

செய்தியாளர் : இவர்கள் காலையிலேயே திருநெல்வேலியில் இருந்து வந்திருக்கிறார்கள்.மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.மாணவர்கள் வழி தெரியாமல் தவிக்கின்றனர்.(இவ்வளவுக்கும் மாணவர்கள் வந்தது சிறப்பு பேருந்தில்) என்ன ஒரு ஈன புத்தி !!!

இன்று காலை பாலிமர் நியூஸ் :

மாணவனின் தந்தை யிடம் !!! செய்தியாளர் : உங்கள் சிரமங்களை சொல்லுங்கள்?

தந்தை : எந்த சிரமும் இல்லை.எல்லாம் நல்ல படியாக நடந்து கொண்டிருக்கிறது.(மற்றொரு மாணவியின் தாயாரிடம்)

செய்தியாளர்: உங்கள் மகளிடம் நகைகளை கழற்ற சொன்னதில் சிரமமாக இல்லையா ?

தாயார் : இல்லை.முன்னேற்பாடாக வந்தால் எந்த சிரமமும் இல்லை.எல்லா தகவலும் எங்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்க பட்டிருந்தது.எங்களுக்கு தான் அவர்கள் தேர்வை நன்றாக எழுத வேண்டும் என்ற சிறிய டென்சன்.ஆனால் அவர்களுக்கு சிறிதளவும் டென்சன் இன்றி தெளிவாக தேர்வு எழுத சென்றிருக்கிறார்கள்

செய்தியாளர்:🤭 (இப்போது தெரிகிறதா யார் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள் என்று )

06/05/2018

இந்தியாவில் சட்ட படிப்பு..??
-dhaneshbalamurugan

இந்தியாவில் சட்ட படிப்பு இரு விதமாய் உள்ளது. ப்ளஸ் டூ முடித்து விட்டு நேரே BL படித்தால் ஐந்து வருட படிப்பு. BA, B.Sc, B.Com என ஏதேனும் ஒரு டிகிரி முடித்து விட்டு படித்தால் மூன்று வருடம். (ஆம் எந்த டிகிரி படித்தாலும், BL - மூன்று வருட படிப்பில் சேர்ந்து படிக்கலாம்). தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. சேலத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்திய அளவில் புனே மற்றும் பெங்களுருவில் சில சிறந்த சட்ட கல்லூரிகள் (National Law school) உள்ளன.

சென்னையில் அரசு சட்ட கல்லூரி தவிர BA BL - Honours என்கிற கோர்ஸும் உள்ளது. இது பாரிஸ் கார்னர் சட்ட கல்லூரி வளாகத்தில் இல்லை. சென்னை ஆர். ஏ புரம் அருகே உள்ளது. இந்த படிப்பிற்கு மிக நல்ல மதிப்பு உள்ளது. இங்கு படித்தால் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது

தேர்வு முறை

+2 மதிப்பெண் அடிப்படையில் 5 வருட படிப்பிற்கும், கல்லூரி மதிப்பெண் அடிப்படையில் 3 வருட படிப்பிற்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முன்பு சட்டக்கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது நுழைவுத் தேர்வு நீக்கம் செய்யப்பட்டு +2 மற்றும் கல்லூரி மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. குறைந்தது 80% க்கு மேல் +2 ல் மார்க் இருந்தால் தான் அரசு சட்டக்கல்லூரி பற்றி நினைத்து பார்க்க முடியும். அதேபோல் 3 வருட சட்டப் படிப்பிற்கும் அதிக பிரசன்டேஜ் தேவை. தற்போது சட்டப் படிப்பிற்கான போட்டி அதிகமாகி விட்டது என்றே கூற வேண்டும்.

செலவு

அரசு சட்ட கல்லூரியில் படித்தால் செலவு மிக குறைவே. கல்லூரிக்கான செலவு (Term fees, exam fees, etc) வருடத்திற்கு 5000-க்குள் அடங்கி விடும். ஹாஸ்டலில் தங்கி படித்தால் அதற்கான செலவு அந்தந்த ஊர் பொறுத்து இருக்கும்.

பிற மாநில கல்லூரிகள்

முழு நேர மாணவனாக இல்லாமலே சட்டம் படிப்பதற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நிறைய கல்லூரிகள் உள்ளன. இங்கு தரபடுவது LLB என்ற பட்டம் . BL - LLB இரண்டும் சமமே. சட்ட படிப்பு தமிழகத்தில் BL என்றும், பிற மாநிலங்களில் LLB என்றும் அழைக்க படுகிறது.

ஆனால் இந்த கல்லூரிகள் தனியார் என்பதால் costly-ஆக இருக்கும்; தோராயமாக வருடத்துக்கு ருபாய் 30,000 ஆகலாம். தேர்வு எழுத நீங்கள் அந்த ஊருக்கு சென்றாக வேண்டும். (இது தொலை தூர கல்வி அல்ல என்று அறிக).

சில யூனிவர்சிட்டிகள் தொலை தூரத்தில் படிக்க BGL என்ற படிப்பு வைத்துள்ளனர். இது கோர்ட்டுக்கோ, வேலைக்கோ எந்த விதத்திலும் உதவாது. வேலைக்காக அல்லது வேலை உயர்வுக்காக படிக்கிறீர்கள் என்றால், இதனை படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். BGL-க்கு பெரும்பாலும் நல்ல வேலை கிடைக்காது

வேலை வாய்ப்புகள்

1 . வழக்கறிஞர் ஆக Practise செய்வது:

BL முடித்தவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் கோர்ட் சென்று Practise செய்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா? இருப்பினும் BL முடித்து அதிக அளவு சதவீதத்தினர் ( 40 to 50% ) வழக்கறிஞர் தொழில் செய்கிறார்கள் என்ற அளவில் இதனை முதலில் பார்ப்போம்.

பெரும்பாலும் முதலில் யாரேனும் ஒரு வழக்கறிஞரிடம் ஜூனியராக பணி புரிய வேண்டும். இது அந்தந்த ஊருக்கு ஏற்ப டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என மாறுகிறது. டிஸ்ட்ரிக்ட் கோர்ட், ஹை கோர்ட்டில் பெரும்பாலான ஜூனியர் வழக்கறிஞர்கள் குறைவான சம்பளமே வாங்குகின்றனர். சில ஆண்டுகள் இப்படி கஷ்ட ஜீவனம் தான். பின் தனக்குள்ள தொடர்புகளை வைத்து சுமாராக ஐந்து ஆண்டுகளில் தனியாக Practise செய்யலாம்.

பழைய காலத்தில் " சீக்கிரம் நிறைய கேஸ் வரணும்னா தந்தை வக்கீலா இருக்கணும் இல்லாட்டி மாமனார் வக்கீலா இருக்கணும்" என்பார்கள். இது ஓரளவுக்கு உண்மை தான். முதல் தலை முறை வக்கீல்கள் தனியே சம்பாதிக்க நிறைய ஆண்டுகள் தேவை படுகிறது.

2. பெரிய Law firm களில் இணைந்து பணியாற்றுவது:

இந்தியாவில் பல சிறப்பான Law firm-கள் உள்ளன. உதாரணத்துக்கு சில: AZB Partners, Kochar and Co, Amarchand Mangal Das. சென்னையிலேயே Fox Mandal Associates, King and Partridege போன்றவை..

இந்த Law firm-களில் ஜூனியராக அல்லது முழு நேர ஊழியராக சேர்ந்தால் துவக்கதிலேயே ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கும். மேலும் போக போக, நாம் செய்யும் வேலைக்கு சதவீத (Percentage) அடிப்படையில் பணம் தருகின்றனர். இதன் மூலம் சில வருடங்களிலேயே மாதம் லட்ச ருபாய் சம்பாதிக்கும் வக்கீல்கள் பலர் உள்ளனர்.

நல்ல Law firm-ல் நுழைய சரியான reference தேவை. அதாவது அங்கு உங்களை சேர்த்து விடும் விதமான நபரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!!

3. நிறுவனங்களில் வேலை :

இந்தியாவில் லட்சக்கணக்கான கம்பனிகள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை பெரிய கம்பனிகள். இவற்றில் Law officer, Legal Manager, AGM, GM என பல்வேறு பதவிகளில் BL முடித்தவர்கள் வேலை செய்கின்றனர். துவக்க சம்பளமே ஓரளவு decent ஆக இருக்கும். போக போக நிச்சயம் சம்பளம் கூடும். ரிஸ்க் இல்லாமல் குறிப்பிட்ட வருமானம் விரும்புவோர் நிறுவனங்களில் பணி செய்யலாம்.

மேலும் தற்போது Legal Process Outsourcing என்கிற தொழிலும் அதிகரித்து வருகிறது. இது பற்றி சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லீகல் வேலைகள் இங்கு Outsource செய்யபடுகின்றன ( IT Outsourcing போலவே). இதனாலும் BL-க்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.

இவை தவிர BL முடித்தோர் Civil services (IAS, IPS, etc ), பிற அரசு வேலை என பல இடங்களில் உள்ளனர்.

ஒரு நல்ல வக்கீலுக்கு (கோர்ட்/ அலுவலக வேலை எதுவாக இருந்தாலும்) முக்கிய தேவை எழுத்தாற்றல் (Drafting skills) மற்றும் பேச்சாற்றல்.. இப்படி எழுத்து மற்றும் பேச்சில் ஈடு பாடு இருந்தால் நிச்சயம் நீங்களோ உங்களுக்கு தெரிந்தவருக்கோ இந்த படிப்பை சிபாரிசு செய்யலாம்.

Courtesy: dhaneshbalamurugan

தொடர்ந்து மூன்று முறை, இந்திய ஜனாதிபதிகள்,. வழக்கறிஞர்கள்.    வக்கீல்டா!                           ...                  ...
02/05/2018

தொடர்ந்து மூன்று முறை, இந்திய ஜனாதிபதிகள்,. வழக்கறிஞர்கள். வக்கீல்டா! ... Three Consecutive time, President of India is "LAWYER".

1. Pratibha Patil (Lawyer) - 2007-2012
2. Pranab Mukherjee (Lawyer) - 2012-2017
3. Ram Nath Kovind (Lawyer)- 2017 onward



"Jai Hind"

02/05/2018
19/04/2018

இந்தியக் குற்றத் தண்டனை விதித் தொகுப்பு section 494 - சட்டப்படி திருமணம் செய்த பெண் உயிருடன் இருக்கும் போது மற்றொரு பெண்ணை திருமணம் செய்வது பலதார மணம் குற்றமாக கருதப்படும் என்றும், அவ்வாறான குற்றம் நிருபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் என்கிறது சட்டம்.

மனைவி உயிருடன் இருக்கும் போது (சட்டப்படி பிரியாத நிலையில்) கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தால் (Living together Relationship) அந்த உறவு அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவே கருதப்படும் என்றும், அவ்வாறு சேர்ந்து வாழும் பெண்ணுக்கு மனைவி என்ற அந்தஸ்த்தை கோர இயலாது எனவும் அது சட்டவிரோத உறவாக கருதப்படும் எனவும் நீதிமன்றம் பலமுறை தீர்ப்ப அளித்துள்ளது. (மாண்புமிகு நீதியரசர் K S ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திரா அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் நவம்பர் 29, 2013 அளித்த தீர்ப்பின் மேற்கோள்).
...

MVC Act, 1988. Car driver dashing against tanker parked in the middle of the national highway without indicator or parki...
14/04/2018

MVC Act, 1988. Car driver dashing against tanker parked in the middle of the national highway without indicator or parking lights. NO contributory negligence on the part of the car driver. High Court order reversed. Full compensation awarded. As per Road Regulations, 1989, no vehicle is to be parked on a busy road.

Archit Saini versus Oriental Insurance CoLimited
(2018) 3 SCC 365

Compiled by
PARVATHAM LAW firm
9750222227

10/04/2018

மிக முக்கியமான தீர்ப்பு...

வெற்று காசோலையில் கையெழுத்து போட்டு கடன் வாங்குபவர்கள் மீது , கடன் வாங்கிய தொகைக்கு மேல் பல மடங்கு அதிக தொகையை இட்டு காசோலையை நிரப்பி வழக்கு தொடுக்கப்படும் நிலையில், கை எழுத்தை தவிர, மற்ற வாசகங்களை கடன் வாங்கியவர்தான் எழுதினாரா என கண்டுபிடிக்க, கை எழுத்து நிபுணர் முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையாகி, 30 தடவை அதே காசோலை வாசகங்களை எழுதி காண்பிக்க வேண்டும். அதை காசோலையில் உள்ள எழுத்துக்களின் தன்மையை ஒப்பிட்டு பார்த்து, கை எழுத்து நிபுணர் அறிக்கை தர வேண்டும். அதை முக்கிய சாட்சியாக கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என சமீபத்தில் மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்திரவிட்டுள்ளது.

CRL.M.P.No 808/2017
Dated 26/03/2018
நீதியரசர் பி.என் . பிரகாஷ் இந்த தீர்ப்பை அளித்தார்

08/04/2018

Address

2/1a Banglore Road Makkan
Vellore
632001

Telephone

919750222227

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parvatham LAW FIRM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category