22/11/2022
உங்களிடம் சட்ட புத்தகங்கள் உள்ளதா? தூக்கி குப்பையில் போடுங்கள்!
ஆமாம். அவை எதிலும் தற்போதைய சட்ட திருத்தங்கள் இருக்கப் போவதில்லை. அப்படியே பழைய மத்திய சட்டத்தை அச்சடித்தது போலவே இருக்கும். மாநில அரசின் திருத்தங்கள் சேர்க்கைகள், உயர்நீதிமன்ற திருத்தங்கள் சேர்க்கப் படாமல் அவற்றின் பயன் என்ன?
உரிமையியல் நடைமுறை சட்டம் தொடர்பாக நான் எழுதி வருகிறேன். அதன் 2019 ஆம் வருட Bare Act என்னிடம் இருக்கிறது. ஆனால் அதில் உயர்நீதிமன்ற திருத்தங்கள் இல்லை.
உதாரணமாக, கட்டளை 41 விதி 1 மேல்முறையீடு தாக்கல் செய்ய "Copy of Judgement" இணைக்க வேண்டும் என உள்ளது. இந்த copy என்ற வார்த்தைக்கு முன்பாக Certified என்கிற வார்த்தை சேர்க்க 1963 லேயே சென்னை உயர்நீதிமன்றம் சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது. ஆனால் புத்தகத்தில் அவ்வாறு இல்லை.
13-08-2021 அரசிதழில் வந்தது முதலாக, இதே விதியில் "or Computerized" என்கிற வார்த்தை சேர்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னர் "mechanically reproduced" என்கிற பதம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் எப்போதிருந்து இருக்கிறது என தெரியவில்லை.
இதன் பொருள், மேல்முறையீடு தாக்கல் செய்ய தீர்ப்பின் சான்றிட்ட நகள் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அது Mechanically Produced (டைப் அடித்த அல்லது ஜெராக்ஸ்) ஆகவும் இருக்கலாம். Computerized (இணையத்தில் தரவிறக்கப் பட்ட நகல்) ஆகவும் இருக்கலாம். இல்லையா!
சட்ட புத்தகத்தில் இல்லாமல் இதை நாம் நீதிபதியிடம் அல்லது நீதிமன்ற ஊழியரிடம் எப்படி காட்டி புரிய வைக்க முடியும்?
இந்த விதியில் மதராஸ் உயர்நீதிமன்ற திருத்தங்கள் என்னவெல்லாம் செய்து உள்ளது. LawRato தளத்தில் கிடைத்தது.
Madras amendments in
Order XLI Rule 1
(i)
in sub-rule (1),
before, the word "copy", insert the word "certified"
(ii)
to sub-rule (1), insert the following words, namely:-
"The copy of the judgment shall be printed copy in every case in which the High Court has prescribed that the judgment shall be printed when a copy is applied for, for the purpose of appeal."
(iii)
in sub-rule (1) insert the following proviso, namely:-
"Provided that, in appeals from decrees or Order under any special or local Act to which the provisions or Parts II and III of the Limitation Act IX of 1908, do not apply and in which certified copies of such decrees or Orders have not been granted within the time prescribed for preferring an appeal, the Appellate Court may admit the memorandum of appeal subject to the production of the copy of the decree or Order appealed from within such time as may be fixed by the Court."
(iv)
in sub-rule (1), insert the following further proviso and Explanation, namely:
"Provided further that when the decree appealed from is a final decree in partition suit with Schedules attached thereto, the Appellate Court may dispense with the production of the copy of the decree, if the appellant filed a certified copy of the judgment appealed against and produces also a certificate from the Lower Court as to the value of the subject-matter of the proposed appeal."
"Explanation.-The words 'Appellate Court' in sub-rule (1) be deemed to include the Registrar of the High Court, where the appeal is preferred to the High Court." (w.e.f. 25-12-1963)
(v)
in sub-rule (2), at the end, insert the following words, namely:-
"The memorandum shall also contain a statement of the valuation of The appeal for the purposes of the Court-fees Act."
இவ்வளவு விஷயங்கள் என் புத்தகத்தில் இல்லை. உங்களிடமும் உள்ள புத்தகங்களிலும் தேடினாலும் இருக்கப் போவதில்லை. உயர்நீதிமன்ற தளத்திலும் எல்லா திருத்தங்களும் பதிவேற்றம் செய்யப் படுவதில்லை. இதனால் தான் referrence புத்தகங்கள் அவசியம் ஆகிறது.
அல்லது சென்னை உயர்நீதிமன்ற திருத்தங்கள் மட்டும் சேர்க்கப்பட்ட சட்ட புத்தகம் எதும் இருந்தாலும் எனக்கு தெரிவியுங்கள்.
உரிமையியல் நடைமுறை சட்டத்தில் எனக்கு அதிக ஆர்வம் இருப்பதால், அது தொடர்பாக எனது வலைப் பக்கத்தில் எழுதிக் கொண்டு வருகிறேன். எனது பதிவுகளில் இந்த சிக்கல்கள் இல்லாமல், அனைத்து திருத்தங்கள் குறிப்பிட கவனம் எடுத்துக் கொள்கிறேன்.
https://advmeerantj.co.in
இந்த சட்ட திருத்தத்தை காட்டி, xerox அல்லது ecourt இணைய தள தீர்ப்பை வைத்து மேல்முறையீடு தாக்கல் செய்தால், நீதிபதி ஏற்றுக் கொள்கிறார்களா என பரிசோதித்து விட்டு, எனக்கும் தகவல் சொல்லுங்கள் 😀.
அடுத்த பதிவில் இன்னொரு சுவாரசியமான சட்ட திருத்தத்தை பார்க்கலாம்.
- த. செ. மீரான், வழக்கறிஞர், திருவைகுண்டம்.