SY LAW TALKS

SY LAW TALKS Advocate
(3)

08/03/2026
08/03/2026

⚖️ Bhuwan Mohan Singh v. Meena (2014) – Supreme Court
📌 Principle:
இந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் மிகவும் முக்கியமான கருத்தை கூறியது.
ஜீவனாம்சம் வழங்குவது கணவனின் சட்டப்பூர்வ கடமை.
மனைவி வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இந்த ஜீவனாம்சம் வழங்கப்படுகிறது.
Court order இருந்தும் கணவன் பணம் கொடுக்காமல் இருந்தால், அதை தாமதப்படுத்துவது சட்டத்தை தவறாக பயன்படுத்துவது என்று நீதிமன்றம் கூறியது.

08/03/2026

⚖️ Rajnesh v. Neha (2020) – Supreme Court
📌 Principle:
இந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் ஜீவனாம்சம் தொடர்பாக முக்கியமான வழிகாட்டுதல்கள் கொடுத்தது.
மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்குவது கணவனின் சட்டப்பூர்வ கடமை என்று கூறப்பட்டது.
நீதிமன்றம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு பிறப்பித்த பிறகும் respondent அதை செலுத்தாமல் இருந்தால்,
அந்த தொகையை வசூலிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம்.
respondent-ன் வருமானம், சம்பளம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தொகை வசூலிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

08/03/2026

2️⃣ Shahada Khatoon v. Amjad Ali (2001) – Supreme Court
📌 Principle:
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது:
ஜீவனாம்சம் order-ஐ respondent பின்பற்றவில்லை என்றால்
நீதிமன்றம் recovery proceedings எடுக்கலாம்.
தேவையானால் சொத்து / வருமானத்தில் இருந்து வசூலிக்கலாம்.

08/03/2026

1️⃣ Kuldip Kaur v. Surinder Singh (1989) – Supreme Court
📌 Principle:
இந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான விஷயம் கூறியது.
நீதிமன்றம் ஜீவனாம்சம் (maintenance) வழங்க உத்தரவு கொடுத்த பிறகும் கணவன் பணம் கொடுக்காமல் இருந்தால்,
அந்த உத்தரவை அமல்படுத்த நீதிமன்றத்திற்கு பல அதிகாரங்கள் உள்ளன.
தேவையானால் சம்பளம், சொத்து போன்றவற்றில் இருந்து தொகையை வசூலிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
👉 இதன் நோக்கம்:
ஜீவனாம்சம் உத்தரவு paper order ஆக மட்டும் இருக்கக் கூடாது; மனைவிக்கு உண்மையாக பணம் கிடைக்க வேண்டும்.

கணவன் ஜீவனாம்சம் தரவில்லை என்றால் அவர் வேலை செய்யும் இடத்திலிருந்து பெற முடியுமா?
08/03/2026

கணவன் ஜீவனாம்சம் தரவில்லை என்றால் அவர் வேலை செய்யும் இடத்திலிருந்து பெற முடியுமா?

27/02/2026

திருமண பதிவு ஏன் அவசியம்?

27/02/2026

Yamunabai Anantrao Adhav vs Anantrao Shivram Adhav (1988)
🔎 பிரச்சனை:
முதல் திருமணம் செல்லுபடியாக இருந்தபோது, இரண்டாவது திருமணம் செய்த பெண் Maintenance கேட்டார்.
⚖️ தீர்ப்பு:
செல்லுபடியாகாத திருமணத்தில் Maintenance உரிமை கிடையாது.
📌 முக்கிய பாடம்:
திருமணத்தின் சட்டபூர்வ தன்மை மிகவும் முக்கியம்.
பதிவு இருந்தால், சட்டபூர்வத்தை நிரூபிக்க எளிது.

27/02/2026

Bhaurao Shankar Lokhande vs State of Maharashtra (1965)
🔎 பிரச்சனை:
திருமண சடங்குகள் (Essential ceremonies) நடந்ததா என்பது விவாதமாகியது.
⚖️ தீர்ப்பு:
வெறும் சேர்ந்து வாழ்ந்தது மட்டும் திருமணம் ஆகாது.
சட்டப்படி அவசியமான சடங்குகள் நடந்தது நிரூபிக்க வேண்டும்.
📌 விளக்கம்:
திருமண பதிவு இல்லையெனில்,
➡️ சடங்கு நடந்ததை சாட்சி மூலம் நிரூபிக்க வேண்டிய நிலை
➡️ நிரூபிக்க முடியாவிட்டால், திருமணம் செல்லாது என்று Court சொல்லலாம்

27/02/2026

Seema vs Ashwani Kumar (2006) – Supreme Court of India
🔎 பிரச்சனை:
இந்த வழக்கில், திருமண பதிவு இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை பாதிக்கப்படுவதாக கேள்வி எழுந்தது.
⚖️ நீதிமன்ற கருத்து:
அனைத்து மதத்தினரின் திருமணங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.
பதிவு இல்லையெனில், Maintenance, வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் பெண்கள் பாதிக்கப்படுவார்கள்.
📌 முக்கிய கருத்து:
திருமணம் நடந்தது நிரூபிக்க முடியாத நிலை வரக்கூடும்.
அதனால், பதிவு செய்வது பாதுகாப்பு.

திருமண பதிவு ஏன் அவசியம்?
27/02/2026

திருமண பதிவு ஏன் அவசியம்?

📚📚📚
24/02/2026

📚📚📚

Address

Tirupur
641604

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when SY LAW TALKS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category