07/11/2014
பகுதி - 1
கடவுள் கொடுத்த வரம்!
பக்தி மிகுந்த ஒருவனுக்கு கடவுள் நேரில் தோன்றினாராம். அவரும் உனக்கு என்ன வேண்டும் என்றாராம்.
அவனும் வறுமையில் வாடுகிறேன் எனக்கு உதவி செய்யுங்கள் என்றான்.
கடவுள் அவனுக்கு கண்டிப்பா செய்கிறேன் ஆனாலும் உன் உழைப்பும் வேண்டும் அதனால் நான் உனக்கு ஒரு வரமும் சிறிது மூலதனமும் தருகிறேன் நீ இதை வைத்து வாழ்வில் முன்னேறிக் கொள் என்றார்.
மேலும், வரம் என்னவெனில் நான் தரும் முதலீட்டை வைத்து வியாபாரம் செய்து அதை ஒரே நாளில் இரட்டிப்பாக பணம் பெறுவாய், அந்த பணத்தை மறுநாள் முதலீடாக வைத்து அன்றைய தினமே அதை இரட்டிப்பாக லாபம் பெறுவாய் இது போல் தினமும் இரட்டிப்பாக லாபம் அடைவாய் இதுவே நான் உனக்கு தரும் வரம் என்றார்.
பக்தன் ரொம்ப நன்றி சாமி! ...முதலீடு என்று தலையை சொரிந்தான்..
புரிகிறது பக்தா! என்ற கடவுள் அவன் கையை நீட்ட சொல்லி அவன் கையில் கொடுத்த கணம் மறைந்து விட்டார்..
ஆவலுடன் அவன் தன் கையை பார்த்தவனுக்கு அதிர்ச்சி !!!
அவன் கையில் இருந்தது 'ஐந்து பைசா'!!!!!!
சரி அவன் கிடக்கட்டும். அவன் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்?
நாம் தான் விடாமுயற்சி வீராசாமி ஆயிற்றே?
கடவுளே சொல்லிவிட்டார் முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று ஆரம்பித்து விட்டீர்கள்.
முதல் நாள் அந்த ஐந்து பைசாவை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள் 10 காசாக லாபம் அடைகிறீர்கள். அன்றைய இறுதியில் உங்களிடம் இருப்பது 10 காசு.
வரம் நன்கு வேலை செய்கிறது...
உற்சாகத்தோடு இரண்டாம் நாள் அந்த 10 காசு முதலீட்டில் 20 காசாக லாபம் அடைகிறீர்கள்.
மூன்றாம் நாள் அந்த 20 காசு முதலீட்டில் 40 காசாக லாபம் அடைகிறீர்கள்.
இது போலவே ஒரு மாதம் விடாமல் முயற்சி செய்கிறீர்கள். மாத இறுதியில் அதாவது சரியாக 31 ஆவது நாள் உங்கள் கையில் எவ்வளவு இருக்கும்?
எங்க 5 நிமிடத்தில் விடையை சொல்லுங்கள்?
II
II
II
II
விடை: ஐந்து கோடி?????????
என்ன நம்ப முடியவில்லையா?
ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து ஒவ்வொரு நாளாக போட்டு பாருங்கள்... மலைத்து போய் விடுவீர்கள்!!!
இதைதான் POWER OF COMPOUNDING என்று சொல்வார்கள்.