தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் சமுகம் சார்ந்த விவாத களம்

  • Home
  • India
  • Tiruchirappalli
  • தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் சமுகம் சார்ந்த விவாத களம்

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் சமுகம் சார்ந்த விவாத களம் அன்பார்ந்த வழக்கறிஞர்களே சட்டம் சார?

23/08/2020
25/12/2016

கடனுறுதிச் சீட்டில் எழுதப்படும் வாசகங்கள் ஒரு குறிப்பிட வகையில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது கடித அமைப்பிலோ அல்லது வேறு வகையிலோ கூட இருக்கலாம்.எனினும் அது மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் - பிரிவு - 4 - ன் கூறுகளுக்கேற்ப அமைந்திருத்தல் வேண்டும்.(Jangaldass - V/S - Chetesmal AIR - 1938 Sind 24 )

21/12/2016

மருத்துச் சாட்சியம் வயதிற்கான அறுதிச் சான்று ஆகாது.( S. K. Belal - V/S - State of Orissa 1994 Cri. LJ 467 )

19/12/2016

இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு - 138 விசாரணைகளின் வரிசை முறை - மறுவிசாரணையின் போது ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என வரம்பு ஏதுமில்லை.மறு விசாரணையின் போது எத்தனைய எண்ணிக்கையிலும் கேள்விகள் கேட்கலாம். ( Rammi Alias Rameshwar - V/S - State of M. P - 1999 Cri.LJ - 456 SC )


பொதுவிடத்தில் புகைபிடித்தல் பொதுத்தொல்லை என்பதால் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு - 133 தொல்லையை நீக்குவதற்கான நிபந்தனைக் கட்டளையின் உதவி கொண்டு அதனைக் குறைக்க முடியும்.( ராமகிருஷ்ணன் - எதிர் - கேரளா 2000 ( 1 ) Crime 93 )

19/12/2016

இந்திய தண்டனைச் சட்டம் - 1860 பிரிவு - 420 - ஏமாற்றுதல் - வாடிக்கையாளர் திரையரங்குகளில் உள்ள நுழைந்தவுடன் திரையரங்கின் உள்ள குளிர்பதன சாதனம் , மின் விசிறிகள் நேர்மையற்ற முறையில் மின்சக்தி சேமித்து ஆதாயம் பெற வேண்டி திரையரங்கு உரிமையாளர் நிறுத்தி விட்டார் இது ஏமாற்றுதல் குற்றமாகும்.( Poovalappil David - V/S Kerala 1989 Cri. LJ 2452 )

15/11/2016
16/08/2016

ஈரோட்டு முடிவுகள் தவறுதான்; ஆனாலும் அமல்படுத்த வேண்டும்-ஏன்?-
**********
நீதிமன்றப் புறக்கணிப்பை இடைக்காலமாக ஒத்தி வைப்பதாக ஆகஸ்டு 14 அன்று ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவு வழக்கறிஞர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “நீதிமன்றப் புறக்கணிப்பை தொடருவோம்” “இனி JAC வேண்டாம்” என்பன போன்ற கருத்துகள் ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் பரப்பப்படுகின்றன. இந்தக் கருத்துகளை எழுதுபவர்கள் யார்? போராட்டத்தை தள்ளி வைத்தது தவறு என்ற கோபத்தில் இவ்வாறு எழுதுபவர்களும் இருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமிழக வழக்கறிஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத ஒற்றுமையை உடைப்பதற்குத் துடித்துக் கொண்டிருக்கும் சக்திகளும் இருக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தில் துவக்கம் முதல் ஈடுபட்டு வருபவன் என்ற முறையிலும், ஏற்கெனவே சஸ்பெண்டு செய்யப்பட்ட 43 பேரில் ஒருவன் என்ற முறையிலும், இக்கட்டான இந்த தருணத்தில் எனது கருத்தினை தெரிவிப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
இந்தப் போராட்டம் நாம் நினைத்ததைக் காட்டிலும் நீண்டு கொண்டே செல்கிறது. தலைமை நீதிபதி கவுலின் சர்வாதிகார மனப்பான்மை, மனன் குமார் மிஸ்ரா தமிழர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பு, பிரபாகரன், செல்வம் போன்றோரின் எட்டப்பன் வேலை, அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் நீதிபதிகளின் கையாட்களாக செயல்படுவது, பிற மாநில பார் கவுன்சில்களும் இந்த ஆபத்தை உணர்ந்து ஆதரவு தராமல் இருப்பது – என்பன போன்ற பல காரணங்கள் இதற்கு உள்ளன. விதிகளைத் திரும்பப் பெறும் வரை புறக்கணிப்பை தொடரவேண்டும் என்று நாம் முடிவு செய்திருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல வருமானமில்லாமல், குடும்பச் செலவை சமாளிக்க முடியாமல் பலர் தடுமாறுகின்றனர். இருந்தபோதிலும் கஷ்டத்தை மறைத்துக் கொண்டு போராட்டத்தில் உறுதியாக நின்று வருகின்றனர். இந்த உறுதியை உடைப்பதற்குத்தான் 126 வழக்கறிஞர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். திரு முத்துராமலிங்கம் மரணத்துக்குத் தள்ளப்பட்டார்.
கடைசியாக டில்லிக்குப் போய் வந்த ஒருங்கிணைப்பாளர் திரு.திருமலைராஜன், பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொருட்டு ஆகஸ்டு 15 போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தார். அப்படியும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் ஈரோடு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய பெரும்பான்மையான சங்கங்களின் பிரதிநிதிகள், புறக்கணிப்பை தொடரவேண்டும் என்றே பேசினார்கள். முடித்துக் கொள்ளலாம் என்று சிறுபான்மை சங்கத்தினர் பேசினார்கள்.
இறுதியாகப் பேசிய திரு.திருமலைராஜன், மிகவும் பாதகமான சூழல் நிலவுவதாக விளக்கினார். கோவை, சேலம், ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட பல பார்கள் முடித்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்திருப்பதை எடுத்துக் காட்டினார். இந்த மனநிலை பரவலாக நிலவுவதை கணக்கில் கொள்ளவேண்டுமென்றார். அது மட்டுமின்றி போராட்டத்தை இடைநிறுத்தம் செய்தால், 126 பேரின் சஸ்பென்சன் ரத்து, 43 பேரில் விசாரணையை விரைந்து முடித்தல், நீதிபதிகள் கமிட்டியின் எண்ணிக்கையை அதிகரித்து திருத்த விதிகள் இல்லாமலாக்கப்படுதல், சென்னைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தல் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று நம்பகமான மீடியேட்டர்கள் (செல்வம், பிரபாகரன் அல்ல) கூறியிருப்பதாகவும், அதனால் போராட்டத்தை இடைநிறுத்தம் செய்வதாகவும் கூறினார். போராட்டத்தை தொடரவேண்டுமென்றுதான் பெரும்பான்மையினர் கருதுகின்றனர் என்ற போதிலும், இந்த முடிவுதான் இப்போதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுவதாகவும், ஒரு வாரத்தில் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் உடனே போராட்டத்தை மீண்டும் தொடங்குவதில் எந்த தடையும் இல்லை என்றும் அறிவித்தார்.
அவருடைய அறிவிப்பு பெரும்பான்மையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்னைப் பொருத்தவரை, புறக்கணிப்பை இடைநிறுத்தம் செய்வது என்ற முடிவு தோற்றுவித்த அதிர்ச்சியைக் காட்டிலும், பெரும்பான்மையின் கருத்தை நிராகரித்ததுதான் பேரதிர்ச்சி. இந்தப் போராட்டத்தில் நம் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. என்ற போதிலும், நாம் இரண்டு விசயங்களை சாதித்திருக்கிறோம்.
முதலாவதாக பரமசிவம், பால் கனகராஜ் முதல் பிரபாகரன், செல்வம் வரையிலான அனைத்து அதிகாரபூர்வமான தலைமைகளும் நமக்கு எதிராக இருந்த நிலையில், நெல்லிக்காய் மூட்டை போல வழக்கறிஞர்கள் சிதறிவிடுவார்கள் என்று நீதிபதிகள் இறுமாந்திருந்தனர். நாம் கூட்டுக் குழு என்ற தலைமைக் குழுவை உருவாக்கினோம். போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களைக் கூட்டினோம். கருத்து வேறுபாடுகளை சுதந்திரமாக விவாதித்து குழப்பமின்றி முடிவெடுத்தோம்.
இரண்டாவதாக, கீழமை நீதிமன்றங்களைப் பொருத்தவரை 100% புறக்கணிப்பை அமல்படுத்தி வருகிறோம். இதற்கு முந்தைய பொதுக்குழு கூட்டங்களில் புறக்கணிப்பு போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று சில சங்க பிரதிநிதிகள் கருத்து கூறியிருக்கின்றனர். இருப்பினும் அவர்களும் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். இந்த ஒற்றுமை நம்முடைய இரண்டாவது சாதனை.
சுதந்திரமான விவாதம். செயல்பாட்டில் ஒற்றுமை என்ற இந்த இரு தண்டவாளங்களின் மீதுதான் நமது போராட்டம் இரண்டு மாதங்களுக்கு மேலாக தடையின்றி ஓடியிருக்கிறது. இப்போது “வண்டி இடைநிறுத்தம் செய்யப்பட்டு விட்டதே” என்பதைக் காட்டிலும் தண்டவாளத்துக்கு வந்திருக்கும் ஆபத்துதான் நம் கவலைக்குரியது. புறக்கணிப்பு போராட்டத்தை இடைநிறுத்தம் செய்வது என்ற முடிவில் எனக்கும் உடன்பாடில்லைதான். ஆனால் அதைக்காட்டிலும் மையமான பிரச்சினை - இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்பது.
ஒருவேளை பெரும்பான்மை சங்கங்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் போராட்டத்தை இடைநிறுத்தம் செய்வது என்று கருத்து தெரிவித்திருப்பார்களேயானால், எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். சங்கம் என்பதன் பொருளும் ஜனநாயகம் என்பதன் பொருளும் அதுதான்.
“பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கவேண்டும் என்பதற்காக ஆகஸ்டு 15 போராட்டத்தை நிறுத்தியும் பயனில்லாத நிலையில், அடுத்து போராட்டத்தை எப்படி தொடர்வது எனப் பேசப்போகிறோம்” என்று எண்ணியே ஈரோடு கூட்டத்துக்கு சென்றோம். “தலைவர், செயலருக்குத்தான் அனுமதி” என்று அறிவிக்கப்பட்டதால், வழக்கமாக பொதுக்குழுவிற்கு வருவதைப் போல பெரும் எண்ணிக்கையில் வழக்கறிஞர்களும் ஈரோட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் போராட்டத்தை இடைநிறுத்தம் செய்வது என்பதை மையப் பொருளாக வைத்தே கூட்டம் கொண்டு செல்லப்பட்டது.
புறக்கணிப்பு போராட்டத்தை இடைநிறுத்தம் செய்வது பற்றி இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று தலைமை கருதியிருந்தால், தனது கருத்தை எல்லா சங்கங்களுக்கும் தெரிவித்து, அனைவரையும் தத்தம் சங்கங்களில் விவாதித்து முடிவெடுத்துக் கொண்டு ஈரோட்டுக்கு வருமாறு கூறியிருக்க வேண்டும். அதுதான் முறை. ஆனால் அப்படி நடக்கவில்லை.
இருந்த போதிலும் ஈரோட்டில் பேசிய 50 பிரதிநிதிகளில் சுமார் 30 பேர் போராட்டம் தொடரவேண்டும் என்றுதான் பேசினர். சுமார் 15 பேர் இடைநிறுத்தம் செய்யலாம் என்று பேசினர்.சிலர் கருத்துச் சொல்லவில்லை. நீண்ட போராட்டங்களில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம்தான். “இரண்டு கருத்துகளையும் உங்கள் சங்கத்தில் பேசிவிட்டு வாருங்கள். நான்கு நாட்களுக்குப் பின் பொதுக்குழு கூட்டி தீர்மானிப்போம்” என்று முடிவெடுத்திருக்கலாம். இதையும் செய்யவில்லை.
“ஏன் சஸ்பென்சனை நீக்கவில்லை, ஏன் சட்டத்திருத்தத்தை நீக்க முடியவில்லை?” என்று நாம் யாரும் கூட்டுக்குழு தலைமையை கேட்கவில்லை. இது ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்கும் போராட்டம். வெற்றி தோல்வி எதுவானாலும் அதற்கு நம் அனைவரும் பொறுப்பு என்ற புரிதலில்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் ஜனநாயக வழிமுறைகளை மீறக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
எனினும் போராட்டத்தை இடைநிறுத்தம் செய்வது என்ற கூட்டுக்குழுவின் முடிவு அறிவிக்கப்பட்டு பத்திரிகைகளில் செய்தியாகவும் வந்து விட்டது. எந்தக் கோரிக்கையும் நிறைவேறாத நிலையில் எதற்காக இடைநிறுத்தம் என்று பலர் ஆத்திரமாக கேட்கின்றனர். புறக்கணிப்பை தொடருவோம் என்று கூறுகின்றனர். உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு நடந்து கொள்வது எதிர் தரப்புக்குத்தான் சாதகமாக அமையும். கூட்டுக்குழு இல்லாமல் போனால் கொண்டாட்டம் நீதிபதிகளுக்கும் செல்வம், பிரபாகரன் போன்றோருக்கும்தான். கூட்டுக்குழு என்பது நாம் அனைவரும் இணைந்து உருவாக்கிய ஒரு அமைப்பு. அதன் தலைவர்கள் யாராக இருப்பினும், அப்படி ஒரு அமைப்பு நமக்குத் தேவை. அப்படி ஒரு அமைப்பு இல்லையென்றால், நாம் முழு அடிமைகளாக மாற்றப்படுவோம்.
இடைநிறுத்தம் என்ற இந்த முடிவு எடுக்கப்பட்ட முறையில் நமக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும், அறிவிக்கப்பட்ட முடிவை நாம் அமல் படுத்துவோம். வேறு எதற்குப் பயன்பட்டாலும் பயன்படாவிட்டாலும், வழக்கறிஞர் ஒற்றுமையைப் பாதுகாக்க அது பயன்படும். இந்த முடிவு எடுக்கப்பட்ட முறை தவறு என்பதை அடுத்த பொதுக்குழுவில் பேசுவோம்.
தவறான முறையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நாம் ஏன் கட்டுப்பட வேண்டும் என்று சிலர் வாதாடலாம். வாதம் சரிதான். ஆனால் அதன் விளைவு என்பது கூட்டுக்குழுவின் அழிவு. அதாவது சிலர் நீதிமன்றம் செல்வார்கள், சிலர் புறக்கணிப்பார்கள். தமிழகம் இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தூற்றலாம். மொத்தத்தில் அதன் முடிவு என்பது போராட்டம் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக இருக்கும். ஒரு வார இடை நிறுத்தம் கூடாது என்பதற்காக நாம் மேற்கொள்ளும் அத்தகைய நடவடிக்கை போராட்டம் நிரந்தரமாக நிறுத்தப் படுவதற்கு வழி வகுத்து விடும்.
இடைநிறுத்தம் காரணமாக கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், பொதுக்குழுவில் நாம் பரிசீலிப்போம். அப்போது, இடை நிறுத்த வேண்டும் என்று கூறிய சங்கங்களையும் புறக்கணிப்பு போராட்டத்தில் நாம் ஈடுபடுத்த முடியும். அந்த முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பை அவர்கள் நிச்சயமாக உணருவார்கள்.கூட்டுக்குழு தலைமை ஈரோட்டில் செய்த தவறை சரி செய்வதற்கான வழி இதுதான். இது மட்டும்தான் என்பதே என் கருத்து.
-----------------------------------
சே.வாஞ்சிநாதன்,
மதுரை உயர்நீதிமன்றக் கிளை

13/01/2016
அச்சம் ஏன் ? வழக்குரைஞர் போராட்டமா, நீதிபதி சர்வாதிகாரமா ?நீதிபதிகளின் ஊழல், பாலியல் அத்துமீறல்களைக் கேள்விக்குள்ளாக்கும...
18/11/2015

அச்சம் ஏன் ? வழக்குரைஞர் போராட்டமா, நீதிபதி சர்வாதிகாரமா ?
நீதிபதிகளின் ஊழல், பாலியல் அத்துமீறல்களைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்குரைஞர்களின் போராட்டத்திற்குப் பதில் அளிக்க முடியாத நீதிபதிகள் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாகக் கதையளக்கிறார்கள்
“நீதிபதிகள் (உள்ளூர் போலீசை வைத்துக் கொண்டு) தங்களுக்கு முழுக்க முழுக்க பாதுகாப்பு இல்லை என்று உணர்கிறார்கள். அதனால், உள்ளூர் போலீசுக்குப் பதிலாக மத்தியத் தொழிற் பாதுகாப்புப் படையை உள்ளே அழைத்தார்கள். அதுவும் பலனின்றிப் போனால், எல்லைப் பாதுகாப்புப் படை, இராணுவம் உட்பட வேறு படைகள் அழைக்கப்படுவார்கள்.”- இப்படி தமிழக அரசை எச்சரித்தது அல்லது மிரட்டியது இந்திய உச்ச நீதிமன்றம்.

வழக்குரைஞர்கள் ஊர்வலம்
நீதித்துறையில் தாண்டவமாடும் இலஞ்சத்தை ஒழிக்கக் கோரியும், இலஞ்சப் பணத்தில் ஊறித் திளைக்கும் நீதிபதிகளின் பெயர்களை அம்பலப்படுத்தியும் தென்மாவட்ட வழக்குரைஞர்கள் கடந்த செப்டம்பரில் மதுரையில் நடத்திய ஊர்வலம்
பிற எல்லாத் துறைகள் மீதும் நம்பிக்கை இழந்துவிட்ட எளிய மக்களுக்கும் கடைசிப் புகலிடம் நீதிமன்றங்கள்தாம் என்பதைச் சொல்லியே இந்திய அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை வைக்கும்படியான மாயையைத் தக்கவைக்க முயலுகிறார்கள். ஆனால், அந்த நீதிமன்றமோ, அதுவும் அதன் உச்ச நீதிமன்றமோ தனது கடைசிப் புகலிடமாக இராணுவத்தைத்தான் நம்புகிறது. அப்படி இருக்கும்போது இந்திய எளிய மக்கள் தமது கடைசிப் புகலிடமாக உச்ச நீதிமன்றமேயானலும் அதை இனியும் நம்பலாமா!

அப்படி என்ன நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுப்போனது? பொதுமக்களாலா, தீவிரவாதிகளாலா? அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. போலீசால்தான் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது, வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் தாக்கப்பட்டார்கள்; அதற்கு யாரும் தண்டிக்கப்படவில்லை; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிபதிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் என்றால் கருப்புப் பூனைப் படையை போட்டுக்கொள்வார்கள்.

“நீதிமன்றங்களில், குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைதியான, கண்ணியமான சூழலில், வழமையான முறையில் வழக்குகளை நடத்தமுடியவில்லை; வழக்கறிஞர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் இருக்கிறார்கள்; கட்டைப் பஞ்சாயத்து செய்கிறார்கள்; மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்; அளவுக்கு மீறிப் பணம் பறிக்கிறார்கள்; இரவில் அறைகளில் தங்கி குடிக்கிறார்கள்” என்று பலவாறான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். நீதிமன்ற வளாகத்தில் தனிநபர் ஒழுங்கீனங்கள் என்று எடுத்துக்கொண்டால், வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, நீதிபதிகளும் அவற்றில் ஈடுபடுகிறார்கள். ஒழுங்கீனங்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தனிநபர்வாரியாக சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.

ஆனால், அவ்வாறு செய்யாமல், போலீசு அதிகாரியின் அறிக்கையைக் காப்பியடித்து, வழக்கறிஞர்கள் அனைவரின் பொதுப்போக்குகளாகச் சித்தரித்து, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களை வெளியேற்றிவிட்டு, நீதித்துறையையும் சட்டத்துறையையும் முழுமையாகக் கைப்பற்றி ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் சதிகார நோக்கில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் செயல்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக குற்றப் பின்னணியுள்ள வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கை; சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு; பார் கவுன்சிலைச் சீரமைப்பது, வழக்கறிஞர்களுக்கான கல்விச் சீரமைப்பு, அங்கீகாரத்துக்கான தேர்வுமுறையைப் புகுத்துவது; நீதித்துறைக்கு எதிரான ஒழுங்கீனம், கண்ணியக்குறைவு, அவமதிப்பு முதலானவற்றைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தச் சதியில் பார்ப்பன நீதிபதிகளோடு சமூகச் சொரணையற்று, பிழைப்புவாதிகளாகச் சீரழிந்துபோன பிற பிரிவு நீதிபதிகளும் கைகோர்த்துக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியொரு மேல்சாதி, மேட்டுக்குடி அதிகாரச் சாதியாகப் பரிணமித்துள்ளார்கள்.

நீதிமன்றத்தில் போலீஸ் தாக்குதல்
சென்னை உயர்நீதிமன்றத்தில் புகுந்து தமிழக போலீசு நடத்திய தாக்குதலில் மண்டை உடைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்யம் (இடது) மற்றும் வழக்குரைஞர்கள் (கோப்புப் படம்).
இந்த மக்கள் விரோத அதிகாரச் சாதி இப்போது ஒரு பொதுக்கருத்தைப் பரப்புகிறது: நீதிமன்ற வளாகத்தில் தனிநபர் ஒழுங்கீனங்களில் ஈடுபடுபவர்களையும் சேர்த்து குற்றப் பின்னணியுள்ள வழக்கறிஞர்கள் என்று அனைவரையும் முத்திரை குத்துகிறார்கள். இது, பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி, அவதூறு செய்து அரசியல் எதிர்த் தரப்பை ஒடுக்குவதுபோன்ற சூழ்ச்சி. அதன் தொடச்சியாக, வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்றங்களைப் புறக்கணிக்கிறார்கள்; நீதிமன்ற வளாகத்தில் கோஷங்கள் போடுகிறார்கள், பிரச்சாரங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள் என்றும், இவை ஏதோ கிரிமினல் குற்றங்களைப் போலவும் இவற்றால் நீதிமன்ற மாண்பு, புனிதம், கண்ணியம் குறைந்து போவதாகவும், நீதிபதிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவதாகவும், அதனாலேயே இத்தனை கெடுபிடிகள் என்றும் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.

2009-ம் ஆண்டு பிப்ரவரியில்சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குப் பெரும் படையாகத் திரண்டு வந்த போலீசு, அங்கிருந்த வாகனங்களை உடைத்துநொறுக்கி, வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் ஓடஓட விரட்டி மண்டையை உடைத்து வெறியாட்டம் போட்டது. அந்தக் குற்றத்துக்காக யாரையும் தண்டிப்பதற்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் எதற்கும் இதுவரை துப்பில்லை. வாயிலே கருப்புத் துணி கட்டிக்கொண்டு குழந்தை குட்டிகளோடு போய் நீதிபதியை மறித்து முழக்கம் போடுவதும்; அநீதியான தீர்ப்பை மீறி அமைதியாகப் போராடுவதும், அதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டு அடாவடியாக நடத்துவதைக் அங்கேயே ஊர்வலம் போய் கண்டிப்பதும் நீதிபதிகளுக்கு எப்படி ஆபத்தாகும்?

நீதிபதிகளையும் போலீசாரையும் அவர்களது அதிகார முறைகேடுகளையும் அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் நாளும் நெருக்கமாக இருந்து அவதானித்து வருவதால் அவர்களது வரம்புகளையும் வழக்கறிஞர்கள் அறிந்துள்ளார்கள். இவர்களில் சமூக, அரசியல் உணர்வுபெற்ற வழக்கறிஞர்கள் இயல்பிலேயே போராட்டக்காரர்களாக இருக்கிறார்கள். நீதிபதிகளும் போலீசாரும் மட்டுமல்ல, ஆட்சியாளர்கள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் அதிகார முறைகேடுகளையும் அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் காத்து நிற்கும் அரண்களான நீதிமன்றங்கள் அல்லாது வேறெங்கு போய் போராடுவார்கள்! நீதிபதிகளின் ஊழல்கள் உட்பட போராட்டக்காரர்கள் எழுப்பும் பிரச்சினைகள் மீது பதில் சொல்வதற்குப் பதிலாக நீதிபதிகளிடம் இல்லாத மாண்பு, கண்ணியம் பற்றிப் பேசி நடவடிக்கை எடுக்கிறார்கள்!

Address

19A, Diamond Bazaar , Jabharsha Street, Trichy
Tiruchirappalli
620008

Telephone

9444253030

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் சமுகம் சார்ந்த விவாத களம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் சமுகம் சார்ந்த விவாத களம்:

Share