Criminal Court Advocates Association, Trichy

Criminal Court Advocates Association, Trichy President Mr. Rajendra Kumar Senior advocate
Secretary Mr.P.V.Venkat Advocate

05/02/2021

வருகிற 08.02.2021 திங்கள் கிழமை முதல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் பிணை மனுக்கள் / முன் பிணை மனுக்கள் மற்றும் பிற வழக்குகள் இமெயில் மூலம் தாக்கல் செய்யப்படும் நடைமுறை நிறுத்தபடுகிறது.

எனவே பிணை மனுக்கள் / முன் பிணை மனுக்கள் மற்றும் பிற வழக்குகளை தாக்கல் செய்பவர்கள் நேரடியாக Filing Counter No. 1 ல் (New Building Entrance Corridor - Centralized Filing Centre Room) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை (கொரானா கட்டுப்பாடுகளுக்கு முன்னர் பின்பற்றிய நடைமுறை போலவே) தாக்கல் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

08/06/2020

Physical Filing of Fresh Suits and other category of cases both civil and crminal will be allowed from Wednesday, 10th june on all working days. Separate Drop boxes will be placed in front of the 4th ASJ. (Near by old cjm)

24/03/2018
18/02/2018

Read on......

*V V V Important for all of us*

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம்.
பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984.
ஆனால், நடைமுறை அப்படியா இருக்கிறது?
இல்லவே இல்லை!
நிலத்தைப் பதிவு செய்துவிட்டு, 'பட்டா பெயர் மாறுதலுக்காக' வி.ஏ.ஓ., -விடம் போகிறோம்.
அவர் குறைந்த பட்சம் 4000 ரூபாயில் தொடங்கி நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
வெறும் பட்டா பெயர் மாறுதலுக்கோ, உட்பிரிவு உள்பட பெயர் மாறுதலுக்கோ 'சல்லிக்காசு' கூட கட்டணமில்லை. ஆனால் அவரோ, தாசில்தார், மண்டல துணை தாசில்தார் உள்பட, வருவாய்த் துறையின் அத்தனை மேஜைகளுக்கும் படியளந்துதான் பட்டா பெற முடியும் என்பதாக நம்மிடம் 'அளந்து', நம்மிடம் எதிர்பார்க்கும் தொகைக்கான 'பங்குத் தொகைப் பிரிப்புப் பட்டியலை' விரிக்கிறார்.
இந்தக் கொள்ளையை எதிர்த்து, சமூக ஆர்வலர் திரு ஓ.பரமசிவம் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி திரு. சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர், தமிழக அரசின் 1984-ஆம் ஆண்டு அரசாணையின்படி எவ்விதக் கட்டணமுமின்றி உடனடியாகப் பட்டா பெயர் மாறுதல் செய்து வழங்கிட ஆணையிட்டுள்ளனர்.
மேலும், "நிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் பெறப்படுவதால், பதிவு செய்த ஒரு மாத காலத்துக்குள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து உரியவருக்கு வழங்கப்பட வேண்டும்; புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை!" என்றும் அத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளனர்.

அந்தத் தீர்ப்பின் நகல்.

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CBwQFjAA&url=http%3A%2F%2Findiankanoon.org%2Fdoc%2F102996905%2F&ei=hi6dVYOlL4K4uATehKKgDA&usg=AFQjCNGHQb5xxpWfQJ4g8RRdl3TO6_sR5Q

தாசில்தார் தொடங்கி, வி.ஏ.ஒ வரை அடிக்கும் பகற்கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைப்போம்!
எல்லோருக்கும் போய்ச் சேருமளவு இத் தகவலைப் பரப்புங்கள்!🙏

31/12/2017

பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது.

அதேபோல் UDR பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது.

பட்டா மாற்றம் :

பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது.

1. நிலச் சொந்தக்காரர்கள் தாமே மேற்கொள்ளும் நடவடிக்கை (உரிமையை தாமே மாற்றுவது)

2. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலோ அல்லது வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் விற்பனையின் மூலமான நடவடிக்கை (கட்டாய உரிமை மாற்றம்)

3. ஒருவருக்கு பின் ஒருவர் என்ற வாரிசுரிமை மூலமான அடிப்படையில் (வாரிசுரிமை மாற்றம்)

தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டா பெறுவதற்கும், பட்டா மாற்றம் செய்வதற்கும் தமிழக அரசு சட்டங்களையும், விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது. அதில் சில முக்கியமான பகுதிகளை நாம் அறிந்து கொண்டால் பட்டா பெறுவதும், பட்டா மாற்றம் செய்வதும் எளிதாகிவிடும்.

தமிழ்நாடு பட்டாப்பதிவு புத்தக சட்டம், 1983 :

பிரிவு 3(1) - தாசில்தார் ஒவ்வொரு நில உடமையாளருக்கும் அவர் சொந்தமாக வைத்திருக்கும் நிலத்தை பொருத்து அவர் விண்ணப்பத்தின் பேரில் பட்டா பதிவு புத்தகம் ஒன்றை வழங்க வேண்டும்

பிரிவு 3(7) - தாசில்தார் பட்டா மாற்றம் செய்வதற்கு முன் நிலத்தில் அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு நியாயமானதொரு வாய்ப்பினை கொடுக்க வேண்டும்

பிரிவு 3(9) - பட்டா பதிவு புத்தகத்தில் அடங்கியுள்ள பதிவுகள், விவரங்கள் ஆகியவற்றுக்காக ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் பட்டா பதிவு புத்தக பதிவேடு பராமரிக்கப்பட்டு வர வேண்டும்

பிரிவு 3(10) - உரிய கட்டணங்கள் செலுத்தப்படுவதன் பேரில் நில உடமையாளருக்கு பட்டா பதிவு புத்தகம் வழங்கப்பட வேண்டும்.

பிரிவு 10 - பட்டாவில் மாற்றம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் மனுவை தாசில்தாரிடம் தான் கொடுக்க வேண்டும். தாசில்தாரே முதன்மை அதிகாரி ஆவார்.

பிரிவு 12 - தாசில்தார் உத்தரவின் மீது வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும்

பிரிவு 13 - வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்

தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள், 1987 :

விதி 3(1) - தாசில்தார் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களை பொருத்தமட்டில் ஒவ்வொரு உரிமையாளருக்கும், இந்த சட்டத்தின் கீழ் பட்டா விவரக்குறிப்பு புத்தகம் வழங்கப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிட்டு சம்பந்தப்பட்ட கிராமத்தில் தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும்

விதி 7 - பட்டா உரிமை புத்தகங்களுக்கான கட்டணம் ரூ. 20 /- ஆகும்

விதி 13 - இந்த சட்டத்தின் கீழ் பட்டா பதிவு புத்தகத்தில் யாருடைய உரிமைகள் அல்லது பற்றுகள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதோ அல்லது பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நபர் தாசில்தார் கேட்டுக் கொள்வதன் பேரில் தாசில்தாரின் ஆய்வுக்காக, இச்சட்டத்தின் யாதொரு நோக்கத்திற்காக விவரங்களையும், ஆவணங்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் தாசில்தாருக்கு அளிக்க வேண்டும்

விதி 14 - இச்சட்டத்தின் கீழ் தாசில்தார் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும்

விதி 15(1) - தாசில்தார் அல்லது வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை திருத்தியமைக்க வேண்டும் என்று கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து கொள்ள வேண்டும்

விதி 15(2) - மேற்சொன்ன கால அளவிற்குள் அந்த மனுவை, மனுதாரர் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்கு நியாயமான, போதுமான காரணம் உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் கருதினால் விதி 15(1) ல் கூறப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் உத்தரவை திருத்தியமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொள்ளலாம்

ஆட்சேபனைகளை எப்படி தாக்கல் செய்ய வேண்டும்? :

1. தாசில்தாரின் பட்டா மாற்றம் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது

2. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி பட்டா மாற்றம் செய்வதற்கு முன் ஏற்கனவே கூட்டுப்பட்டாவில் உள்ள எனக்கு நீதிக்குட்பட்டு அறிவிப்பு கொடுக்காமலும், வாய்ப்பு அளிக்காமலும் என் தரப்பு வாதத்தை கேட்காமலும் வழங்கியது தவறு.

30/12/2017

Srivilliputhur வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த திரு. கோவிந்தராஜ் மற்றும் நீராதலிங்கம் ஆகியோர்களை காவல்துறை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்ததாக பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்கு)

Srivilliputhur வழக்கறிஞர் சங்கத்தினர் நகர காவல்நிலைய ஆய்வாளரிடம் தங்கள் சங்கத்தின் சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர், காவல்துறை சட்டம் 42-A ன் கீழ் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி வழக்கறிஞர் சங்கம் நடத்த அனுமதி கோரிய ஊர்வலத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும் எனக்கூறி காவல்துறை சட்டம் பிரிவு 42-A ன் கீழ் ஊர்வலம் நடத்த தடை விதித்து ஒரு உத்தரவை பிறப்பித்தார். அவருடைய உத்தரவுக்கு ஆதரவாக காவல்துறை துணை கண்காணிப்பாளின் 12.8.2012 ஆம் தேதியிட்ட நடவடிக்கை குறிப்புகளை உத்தரவுடன் இணைத்திருந்தார். அந்த நடவடிக்கை குறிப்பில் காவல்துறை சட்டம் பிரிவு 42 - A ன் கீழ் Srivilliputhur உட்பிரிவு பகு பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், யாரேனும் ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டம் நடத்த விரும்பினால் அதற்காக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த தடை உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கம் மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.

வழக்கை நீதியரசர் திரு. K. சந்துரு விசாரித்தார்.

காவல் ஆய்வாளர் உத்தரவில் காவல்துறை சட்டம் பிரிவு 42 - A என குறிப்பிட்டிருந்தது தவறானதாகும் என்றார். காவல்துறை சட்டத்தில் 42-A என்ற சட்டப்பிரிவு ஏதுமில்லை. ஆனால் 42-A என்ற சட்டப்பிரிவு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டத்தில் (Tamilnadu District Police Act, 1859) உள்ளது. அந்தப் பிரிவின்படி காவல்துறை துணை கண்காணிப்பாளர் என்கிற பதவிக்கு குறையாத பதவி வகிப்பவர் பொது அமைதி கருதி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காவல் அதிகாரிகளை ஒரு கூட்டம் அல்லது ஊர்வலம் ஆகியவை பொது இடங்களில் நடக்கும் பொழுது அந்த கூட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு அறிக்கை தயார் செய்யும்படி எழுத்து மூலமாக உத்தரவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல் சட்டத்தில் மேற்சொன்னவாறு கூறப்பட்டுள்ள நிலையில் காவல்துறை சட்டம் பிரிவு 42-A ன் கீழ் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அல்லது காவல்துறை ஆய்வாளர் ஆகியோர்களுக்கு ஒரு ஊர்வலம் அல்லது பொதுக்கூட்டம் ஆகியவற்றை தடை செய்வதற்கு எப்படி அதிகாரம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொது மக்களிடத்தில் எடுத்துச் சொல்வது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்று கூறி அதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் "S. ரங்கராஜன் Vs P. ஜெகஜீவன்ராம் (1989-2-SCC-574)" மற்றும் "CJ. ரீஜன் Vs காவல்துறை துணை கண்காணிப்பாளர் (2008-3-MLJ-926)" ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.

காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு பிரமாண வாக்குமூலத்தை எதிருரையாக தாக்கல் செய்தார். அந்த எதிருரையில் காவல் ஆய்வாளர், துணை கண்காணிப்பாளரின் உத்தரவைதான் செயல்படுத்தியுள்ளார் என்றும் காவல்துறை அதிகாரிகள் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர் சங்கம் கூறியுள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்றம் " D. K. பாசு Vs மேற்கு வங்க மாநிலம் (AIR-1997-SC-610)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட நெறிமுறைகளை காவல்துறை பின்பற்றியுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நகரில் பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகவும், வழக்கறிஞர்கள் மீது காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கினால் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறியிருந்தார். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19(1) ன்படி வழங்கப்பட்டுள்ள கருத்துக்களை வெளியிடும் சுதந்திரமானது சில நியாயமான வரைமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும், இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 14 அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கூறுவதாகவும் கூறியிருந்தார். மேலும் வழக்கறிஞர்கள் தற்போது வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார். மேலும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பதாகவும், இந்த சூழ்நிலையில் அனுமதி வழங்க முடியாது என்றும் பொதுமக்களும் வழக்கறிஞர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராக இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கினால் வன்முறை வெடிக்கும் என்றும் கூறியிருந்தார்.

காவல்துறை சட்டம் பிரிவு 42-A ன் படி காவல்துறை அதிகாரி ஒரு காவல் அலுவலரை பொதுக்கூட்டம் அல்லது போராட்டம் நடக்கும் இடத்திற்கு அனுப்பி அங்கு நடைபெறுவதை பதிவு செய்யலாம் என்று கூறுகிறது. பிரிவு 30(2) பொதுச்சாலைகளில் நடைபெறும் ஊர்வலங்கள், கூட்டங்கள் ஆகியவற்றை பற்றி கூறுகிறது.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் எழுந்த ஒரு வழக்கில் காவல்துறை ஆணையருக்கு மெட்ராஸ் நகர காவல்துறை சட்டம் (City Police Act) பிரிவு 41 ன் கீழ் உள்ள அதிகாரங்களை "நெடுமாறன் Vs தமிழக அரசு (1999-1-LW-CRL-73)" என்ற வழக்கில் இந்நீதிமன்றம் குடிமக்களுக்குள்ள உரிமைகள் பற்றியும் அந்த உரிமைகளை செயல்படுத்துவதை நியாயமான முறையில் கட்டுப்படுத்துவது பற்றியும் விரிவாக கூறியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 ல் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மிகவும் மதிப்பு வாய்ந்த உரிமைகளாகும். அந்த உரிமைகளை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் ஆளுகிறவரின் விருப்பத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவாகவும் இருக்கக்கூடாது. ஜனநாயகம் வலுவாகவும் உயிரோட்டத்துடனும் இருப்பதற்கு ஒவ்வொருவருடைய கருத்துக்களையும், அக்கருத்துகள் குறித்த விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் எந்த தடையும் இல்லாமல் நடைபெற வேண்டும். எதிர் தரப்பினரால் வெளியிடப்படும் அனைத்து கருத்துக்களும் நாட்டின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் எதிராகிவிடும் என கண்ணை மூடிக் கொண்டு ஆட்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது.

காவல்துறை ஆணையர் மெட்ராஸ் நகர காவல் சட்டம் பிரிவு 41 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் பயன்படுத்த வேண்டும். அந்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு இயற்றப்பட்டதாகும்.அந்த காலகட்டத்தில் போராட்டங்களை அடக்குவதென்பது கொள்கையாக இருந்தது. ஆனால் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு முன்பு போல் காவல்துறை சட்டத்தை பயன்படுத்த முடியாது.

காவல்துறையினருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக அவர்கள் நினைக்கிறபடியெல்லாம் ஆட முடியாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் அதிகாரங்களைப் காவல்துறையினர் பயன்படுத்த வேண்டும். அடிப்படை உரிமைகள் மீது காவல்துறையினரால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நியாயமானதாக இருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் "ஹிமாட்லால் கோ Vs காவல் ஆணையர், அகமதாபாத் (AIR-1973-SC-87)" என்ற வழக்கில் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 ல் கூறப்பட்டுள்ள 'சுதந்திரமாக கூடுதல்' என்கிற உரிமைக்கு எதிராக இருக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் தடை செய்யல என்று தீர்ப்பு கூறியுள்ளது. அதேபோல் " S. ரங்கராஜன் Vs P. ஜெகஜீவன்ராம் (1989-2-SCC-574)" என்ற வழக்கிலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 19 பற்றி விரிவாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

குறைகளை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு செல்வது அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை எந்த காரணமும் இல்லாமல் காவல்துறையினர் தடை செய்ய முடியாது. அப்படி தடை விதிப்பது சட்ட விரோதமாக கருதப்படும் என கூறி வழக்கறிஞர் சங்கம் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

W. P. NO - 11282/2012

Srivilliputhur Advocate Bar Association, Reb by the Secretary, P. Rasaiya

Vs

1.தமிழ்நாடு அரசிற்காக அதன் செயலாளர்
2. மாவட்ட ஆட்சியர், விருதுநகர் மாவட்டம்
3. காவல் கண்காணிப்பாளர், விருதுநகர் மாவட்டம்

2012-2-LW-CRL-509

( தீர்ப்பு விவரத்தை சுருக்கமாக தந்துள்ளேன்)

https://www.nrilegalservices.com/how-to-evict-the-tenant/
05/09/2017

https://www.nrilegalservices.com/how-to-evict-the-tenant/

Firstly, an eviction notice is the first legal action for a landlord for removing his/her tenant. In case tenant fails to comply according to the notice, a landlord may file a suit for eviction of the tenant in the court of law. In India, there are limited number of reasons for which a tenant can

Address

Combined Court Building, Cantonment
Tiruchirappalli
620001

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Telephone

8675132507

Website

Alerts

Be the first to know and let us send you an email when Criminal Court Advocates Association, Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share