Advocate Trichy NS DILIP BA,BL,.

Advocate Trichy NS DILIP BA,BL,. வழக்கறிஞர்.சமூக சேவகர்...

 #திருச்சிராப்பள்ளி_மாநகராட்சியின்_தந்தை  #மேயர் என் மீது எப்பொழுதும் தனிப்பட்ட அன்பு♥ பாராட்டும் பாசமிகு அண்ணன்  #மு_அன...
12/06/2023

#திருச்சிராப்பள்ளி_மாநகராட்சியின்_தந்தை #மேயர் என் மீது எப்பொழுதும் தனிப்பட்ட அன்பு♥ பாராட்டும் பாசமிகு அண்ணன் #மு_அன்பழகன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தேன்.💐🙏

 ்டில்_புத்தாண்டின் நீதிமன்றம் துவங்கிய  முதல் நாளில்  நீதிமன்ற பணிகளுக்கு இடையே! நீதிமன்றத்தில் எனக்கு உதவிகரமாகவும்   ...
03/01/2023

்டில்_புத்தாண்டின் நீதிமன்றம் துவங்கிய முதல் நாளில் நீதிமன்ற பணிகளுக்கு இடையே!

நீதிமன்றத்தில் எனக்கு உதவிகரமாகவும் உந்து சக்தியாக விளங்கும் #என்_உயிருக்கு_உயிரான_பாசமிகு_அன்பு_தம்பிகள் வழக்கறிஞர்கள் #முத்துகிருஷ்ணன் #யோகராஜ் #ரிஷிகேசன் #சதீஷ்குமார் #வினோத்குமார் #ஸ்ரீரங்கம்_கோபி #சரவணன் #இளங்கோவன் ஆகியோருடன் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இந்த வாழ்வை கொடுத்த அனைவருக்கும் நன்றி♥

#வழக்கறிஞர்_திருச்சி_திலிப் #9965544411

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்  எனக்கு புதிதாக இன்னோவா காருடன்  தீபாவளியை கொண்டாட துவங்குகிறேன்!!!!!❤️🙏  #வழ...
24/10/2022

அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனக்கு புதிதாக இன்னோவா காருடன் தீபாவளியை கொண்டாட துவங்குகிறேன்!!!!!
❤️🙏 #வழக்கறிஞர்_திருச்சி_திலீப்

23/10/2022

தீபாவளிக்கு தன் பிள்ளைகளுக்கு புத்தாடை எடுக்க முடியாதவர்கள் மட்டும் என்னை தொடர்புக்கொள்ளவும்! அடுத்தவர்களின் பெயரை சொல்லி கேட்கவோ! போலியாகவோ கேட்டு நேரத்தை வீனாக்க வேண்டாம்! Come to my inbox🙏 உன்மையாக கஷ்டப்படுவர்கள் தொடர்புக்கொன்டால் நிச்சயம் உதவி செய்கிறேன்! #வழக்கறிஞர்_திருச்சி_திலீப்

17/10/2022

*NSD LAW FIRM முகநூல் பக்கம்* https://www.facebook.com/NSD-LAW-FIRM-cell96777-06622-696759200699260/ *NSD LAW FIRM*
*Trichy.NS.DILIP.BA.,BL.*
*{Advocate & Legal consultant}*
அலுவலகம்:no.6. heeber (court) road beemanagar trichy-1
*96777-06622 என்ற வாட்சப் என்னில் உரிய தகவல் ஆவனங்களுடன் மெசேஜ் மட்டும் செய்யவும்*

*NSD LAW FIRM வாட்சப் குழுவில் இனைய*
https://chat.whatsapp.com/G6mTuHlrDjLHWGFinDTart
*NSD LAW FIRM டெலிகிராம் குழுவில் இனைய* https://t.me/NSDLAWASSOCIATED
*NSDசட்ட பார்வை*
*YOUTUBE சேனலை* subscribe செய்து பாருங்கள்🔔 https://youtube.com/channel/UC78USnaLqpYbVmKQctTm2Ow பின்தொடர்ந்து தினமும் சட்ட தகவல்களை அறியலாம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்
தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம்
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி லாபமாக முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, தொழிலாளிகளுக்கும் பங்கு தரப்பட வேண்டும் என்கிற சமூக நீதிக் கோரிக்கையில் பிறந்ததுதான் தொழிலாளர்களுக்கான மீதூதியம் வழங்கும் சட்டம் - 1965 (Payment of Bonus Act - 1965). இச்சட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு மீதூதியம் (Bonus) வழங்கப்பட்டு வருகிறது.

நோக்கம்

இந்தியாவில் தொழில் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தில் தொழிலாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கினை வழங்குவதற்கான மீதூதியம் வழங்கும் சட்டம் 1965-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பினை நிர்ணயித்து மீதூதியம் குறித்த தொழிற்தகராறுகளைத் தவிர்ப்பது என்று விளக்கப்பட்டுள்ளது.

மீதூதிய வகைகள்
மீதூதியம் வழங்கல் சட்டம் லாபத்தில் இருந்து கணக்கிடப்படும் மீதூதியத்தைப் பற்றி மட்டுமே தெரிவிக்கிறது. ஆனால் மீதூதியம் நடைமுறையில் அது வழங்கப்படும் முறைகளைப் பொறுத்தும் வேறுபடுகிறது. இதனால் மற்றவகை மீதூதியங்களைப் பெற உரிமை இல்லை என்பதல்ல.

உற்பத்தி மீதூதியம்

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் செய்யப்பட்ட மொத்த உற்பத்தியின் அடிப்படையில் வழங்கப்படும் மீதூதியம் இது.

லாபத்தில் மீதூதியம்

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஈட்டப்பட்ட லாபத்திலிருந்து அந்த ஆண்டிற்குரிய மீதூதியத்தின் அளவைக் கணக்கிட்டு லாபத்தில் மீதூதியம் எனப்படுகிறது.

வழக்காறு மீதூதியம்

தீபாவளி, தைப்பொங்கல் போன்று சிறப்பு விழாக்களின் போது அந்த விழாக்காலச் செலவுகளைச் சரிக்கட்ட தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் மீதூதியம் இது.

ஒப்பந்த மீதூதியம்

தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும் மீதூதியம் இது.

மீதூதியச் சட்டத்தின் சிறப்புகள்
இச்சட்டத்தின் கீழ் வரும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் அதன் தொழிலாளர்களுக்கு மீதூதியம் வழங்குவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம் மீதூதியம் வழங்குவதற்கான கோட்பாடுகளை வரையறை செய்கிறது.
இச்சட்டம் வழங்கப்பட வேண்டிய மீதூதியத்திற்கு குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்புகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.
லாபத்தில் இருந்து வழங்கப்படும் மீதூதியத்திற்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும்.
இச்சட்டம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்
[10/16, 16:46] Adv Trichy NS Dilip.BA.BL: மீதூதியச் சட்டத்தின் சிறப்புகள்
இச்சட்டத்தின் கீழ் வரும் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் அதன் தொழிலாளர்களுக்கு மீதூதியம் வழங்குவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம் மீதூதியம் வழங்குவதற்கான கோட்பாடுகளை வரையறை செய்கிறது.
இச்சட்டம் வழங்கப்பட வேண்டிய மீதூதியத்திற்கு குறைந்தபட்ச வரம்பு மற்றும் அதிகபட்ச வரம்புகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.
லாபத்தில் இருந்து வழங்கப்படும் மீதூதியத்திற்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும்.
இச்சட்டம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும்.
வரையறைகள்
ரூ.6500 வரை மாதச்சம்பளம் பெறும் தொழிலாளர்களும், மேற்பார்வையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் எழுத்தர்கள் அனைவரும் இச்சட்டப்படி தொழிலாளர்கள் என்று கருதப்படுவார்கள். ஆனால் பயிற்சித் தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது.
பணமாகத் தரப்படும் ஊதியம் அனைத்தும் சம்பளம் எனப்படும். அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படி ஆகியவைகள் அதில் அடங்கும்.(மிகுநேரக் கூலி,பயணப்படி, ஊக்குவிக்கும் மீதூதியம், ஆட்குறைப்பிற்காகக் கொடுக்கப்படும் நஷ்டத் தொகை, நன்றித் தொகை மற்றும் ஓய்வு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் தொகை, ஓய்வூதிய நிதி மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிர்வாகம் கொடுக்கும் சந்தாத் தொகை போன்றவை சம்பளக் கணக்கில் வராது.)
ஒரு நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாடும் பராமரிப்பும் அரசால் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தால் செய்யப்பட்டு வந்தால் அந்நிறுவனம் பொது நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் எனப்படுகிறது. அத்தகைய நிறுவனம் அரசு அல்லது ரிசர்வு வங்கி அல்லது அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் மூலமாகக் கட்டுப்படுத்தப்படலாம்.
4. ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக மீதமிருக்கும் உபரித்தொகை மீதூதிய உச்சவரம்பின்படி தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய மீதூதியத்தை விட அதிகமாக இருந்தால் அந்த மிகுதித் தொகையை அடுத்து வரும் நான்காண்டுகளுக்கு ஒதுக்கி வைக்கலாம். அத்தொகையினை அந்த நான்கு கணக்காண்டுகளில் மீதூதியம் வழங்கப் பயன்படுத்தலாம். இதை ஒதுக்கி வைத்தல் என்கிறார்கள்.
ஒரு கணக்காண்டில் ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தில் அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக தொழிலாளர்களுக்குத் மீதூதியம் தருவதற்கு இறுதியாகக் கிடைக்கும் உபரித்தொகை இல்லாது போனால் அல்லது குறைவாகத் தோன்றக்கூடிய பணத்தை அடுத்து வரும் நான்கு கணக்காண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டில் சரி செய்து கொள்ளலாம். இதை சரி செய்தல் என்கிறார்கள்.
மீதூதியம் கணக்கிடும் விதி
மீதூதியம் என்பது நிர்வாகம் கருணையின் அடிப்படையில் வழங்கும் கருணைத்தொகை அல்ல. மீதூதியம் வழங்குவது தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்தின் சட்டக் கடமை. இத்தொகையைக் கணக்கிடுவதற்காக விதி ஒன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு ஆண்டின் மொத்த லாபத்தில் இருந்து கீழ்க்காணும் கழிவுகளைக் கழித்துக் கொண்ட பின்னர் இறுதியாகக் கிடைக்கக் கூடிய உபரி மதிப்பிலிருந்து மீதூதியம் கணக்கிடப்படுகிறது.

கழிவுகள்
ஒரு ஆண்டில் ஒரு நிறுவனம் ஈட்டும் மொத்த லாபத்திலிருந்து போடப்பட்ட முதலீடுகளுக்காக 6 சதவிகிதம் தொகையைக் கழித்துக் கொள்ளலாம்.
செயல் மூலதனத்திற்காக 2 முதல் 4 சதவிகிதம் தொகை வரை ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம்.
தேய்மானச் செலவுகளைக் கணக்கிட்டு அதனை லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.
நிறுவனத்தின் புனரமைப்பு அல்லது தொழில் வளர்ச்சிக்கான நிதியைக் கழித்துக் கொள்ளலாம்.
அந்த ஆண்டின் அந்நிறுவனம் கட்டுகின்ற வருமானவரி மற்றும் இதர நேரடி வரிகளைக் கழித்துக் கொள்ளலாம்.
மேற்கண்டவைகள் கழிக்கப்பட்டது போக மீதியிருக்கும் லாபத்தை தொழிலாளர்கள் அனைவரும் நேர்மை நெறியின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். மீதி எதுவுமில்லாத போது மீதூதியம் கிடையாது!

சட்டதகவல்!

#வழக்கறிஞர்_திருச்சி_திலீப்

வழக்கறிஞர் திருச்சி NS.திலீப் NSD LAW FIRM

பொய் புகாரில் சிக்கிய என் கட்சிகாரரிடம் FIR போடாமல் இருக்க மிரட்டி எழுதிவாங்கிகொன்ட SI  அப்போதும் லஞ்சம் பெற்று விடுவித்...
15/10/2022

பொய் புகாரில் சிக்கிய என் கட்சிகாரரிடம் FIR போடாமல் இருக்க மிரட்டி எழுதிவாங்கிகொன்ட SI அப்போதும் லஞ்சம் பெற்று விடுவித்துள்ளார்!

மீண்டும் பொலியாக மிரட்டி எழுதி வாங்கியதை வைத்துக்கொன்டு 50000 பனத்தோடு வா இல்லை என்றால் FIR போடுவேனு மிரட்டிய கண்டோன்மென்ட் காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் மனுவை திருச்சி மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து கொடுத்தோம்!

விரைவில் விசாரனைக்கு அழைக்கிறேன் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கமிஷனர் உறுதி கூறியுள்ளார்!

#வழக்கறிஞர்_திருச்சி_திலீப்

 #திருச்சி_வயலூர் ரோட்டில்  * நிறுவனத்தை ரிப்பன் வெட்டி வணிகர் சங்க தலைவர் என் பாசமிகு அண்ணன்!  #கோவிந்தராஜீலு* வும் நான...
05/10/2022

#திருச்சி_வயலூர் ரோட்டில் * நிறுவனத்தை ரிப்பன் வெட்டி
வணிகர் சங்க தலைவர் என் பாசமிகு அண்ணன்! #கோவிந்தராஜீலு* வும்
நான்{ #திருச்சி_திலீப்} குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கிவைத்தோம்*

அருகில் BNI மாவட்ட இயக்குனர் நண்பர் #ஜஹாங்கீர்_அஹமத்* வணிகர் சங்க நிர்வாகிகள் அண்ணன்கள் #தமிழ்செல்வன்* #ஸ்ரீதர்* நண்பர் #திருமாவளவன்*

மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் என் இனிய நண்பர் #விக்னேஷ்வரன்* என் இரு கண்கள் தம்பிகள் வழக்கறிஞர் #முத்துகிருஷ்ணன் #திருப்பதி* கடை உரிமையாளர் #தனசேகர்* மற்றும் பலர் உள்ளனர்!♥

 #ஒரத்தநாடு_அரசு_கலை  #கல்லூரி  #சமூக_பணி_துறை சார்பில்   #மனநலம் குறித்த சிறப்பு 🎤 #கருத்தரங்கம் மன்னார்புரம் 👁️  #விழி...
01/10/2022

#ஒரத்தநாடு_அரசு_கலை #கல்லூரி #சமூக_பணி_துறை சார்பில் #மனநலம் குறித்த சிறப்பு 🎤 #கருத்தரங்கம் மன்னார்புரம்
👁️ #விழியிழந்தோர்👁️ #மகளிர்_மறுவாழ்வு_மைய்யத்தில் நடைபெற்றது!

கல்லூரி பேராசிரியர்கள்! காப்பகம் இயக்குனர்! விழியிழந்தோர் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்! #நிகழ்ச்சியில்_சிறப்பு_அழைப்பாளராக கலந்து கொண்டு #மனநலம்_பயிற்ச்சியும்! #எழுச்சியோடு_உறையையும் நிகழ்த்தினேன்!

என் உறையால் ஈர்க்கப்பட்டு அவர்கள் காட்டிய அன்பு💓 அங்கிருந்து வெளிவரமுடியவில்லை! அடுத்த மாதம் எனது பிறந்தநாளில் மீண்டும் சந்திப்பதாக உறுதி அளித்து விடைபெற்றேன்!🙏

#வழக்கறிஞர் #திருச்சி #திலீப்

 #வாழ்வில்_உழைத்து_உயர___________நினைப்பவர்களை_ஊக்கப்படுத்துவோம்! நான் திருச்சி நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஜல்லிக்க...
19/09/2022

#வாழ்வில்_உழைத்து_உயர___________நினைப்பவர்களை_ஊக்கப்படுத்துவோம்!

நான் திருச்சி நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஜல்லிக்கட்டு ரோட்டில் நடைமேடையில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தேன்!

ஒரு ஹாட் பாக்ஸ், டீ-கேனையும் வைத்துக்கொண்டு மூன்று சிறுவர்கள் சூப்பு சுண்டல் இருக்கிறது? வேண்டுமா? சார் என்று கேட்டார்கள்!

படிக்கும் மாணவர்களாக இருப்பார்கள் இவர்களுக்கு கடையை காலி செய்வதற்கு அறிவுரை சொல்லி அனுப்பி விடுவோம்! என்று நினைத்து சரி சூப் ஒன்று கொடுப்பா என்று அவர்களும் கொடுத்தார்கள்!

அவர்களிடம் பேச்சு கொடுத்தேன்! உங்கள் வயது என்ன? படிப்பு என்ன? என்று கேள்வி கேட்டேன்!

1) என் பெயர் சரன் வயது 19 நான் ரிப்போட்டர் என்றான்! எந்த பத்திரிக்கை என்றேன்?
அதில் உனக்கு சம்பளம் கிடைக்குமா? உன்னை அந்த பத்திரிகைக்காரன் ஏமாத்த நீயும் பெரிய ரிப்போர்ட்டர்னு நினைச்சுகிட்டு வாழ வேண்டியதுதான்டா,தம்பி, நீ அதுக்கு இந்த வேலை செய்வதை மேல் என்றேன்!

ஆமா அண்ணா ஒரு ரூபாய் கூட சம்பளம் இல்லை! அதனால் தான் இந்த கடையை துவங்கி இருக்கிறேன்!என்றான்!

(2)வது இளைஞன் என் பெயர் லோகேஷ்! நான் பொறியியல் படிக்கிறேன்! என்றான்! நாங்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் எதை செய்தாலும் சேர்ந்துதான் செய்வோம் அண்ணா! ஆகையால் இந்த கடையை என் நண்பனுக்காக நானும் சேர்ந்து துவங்கியுள்ளேன்! என்றான்!!

அடுத்து மூன்றாவதாக ஒரு சிறுவன் இருந்தான்! அவன் பள்ளியில் படிப்பதாக சொன்னான்! அவனை ஏன் அழைத்து வந்தீர்கள் என்று கேட்டேன்? எங்க கூடவே வீட்ல பக்கத்துல இருப்பானா இன்னைக்கு லீவு அதனால கூட்டிட்டு வந்தோம் என்றார்கள்!

[மிக பெரிய பொருளாதார பின்னனி இல்லாமல் சொந்த காலில் நிற்க்கும் இவர்கள்தான் உன்மையான ஹீரோக்கள் அப்பா பனத்தில் ஆடிகாரில் போவதும் 5 நட்சத்திரம் விடுதி நடத்துவதும் பெருமை அல்ல!]

இன்று தான் முதலில் கடை திருக்கிறீர்களா? என்று கேட்டேன்! இல்லை பிராட்டியூரில் நான்கு நாட்களாக கடை வைத்திருந்தோம்! அங்கு வியாபாரம் சரியாக இல்லை! எனவே இன்று தான் இங்கு வந்து கடை அமைத்துள்ளோம் என்றார்கள்!

சரி தம்பி இங்கு கடைசியில போட்டு இருக்கீங்க! நீங்க பஸ் ஸ்டாப் பக்கத்துல கொஞ்சம் ஒட்டி போட்டீங்கன்னா இன்னும் நிறைய பேர் வருவாங்க! அதனால நீங்க அந்த எம்ஜிஆர் சிலையை ஒட்டி பஸ் ஸ்டாப் பக்கத்துல போடுங்க தம்பி என்று ஆலோசனை வழங்கினேன்!

உடனே அந்த சிறுவர்கள் அங்கே போட்டால் போலீஸ் காலி செய்ய சொல்லி விட்டால் என்று கேள்வி எழுப்பினார்கள்! என்னுடைய விசிட்டிங் கார்டை வச்சிகங்க தம்பி போலீஸ் ஏதும் சொன்னாங்கன்னா எனக்கு போன் பண்ணு நான் பார்த்துக்கிறேன் என்று அவர்களுக்கு ஆதரவையும்! நம்பிக்கையும் அளித்து வந்தேன்!

சூப் குடித்துவிட்டு ரூபாய் 50 அவர்களிடம் கொடுத்தேன்! அவர்களோ எங்களுக்கு 10 ரூபாய் கொடுங்கள் போதும் என்று வாங்க மறுத்தார்கள் மிகவும் பிடிவாதமாக அவன் சட்டை பாக்கெட்டில் 50 ரூபாயை தினித்துவிட்டு வந்தேன்!

இந்த சின்னஞ்சிறு வயதில் நஷ்டமே அடைந்தாலும்! தொடர்ந்து உறுதியோடு உத்வேகத்தோடும் எப்படியாவது தொழில் செய்து சம்பாதித்து விட வேண்டும் என்று லட்சிய உறுதி கொண்ட இந்த இளைஞர்களை சந்தித்ததை பெரும் பாக்கியமாக நினைத்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்!

தொழில் என்றால் எவ்வளவு கஷ்டம்! தொழில் வளர்ச்சி என்பது எவ்வளவு சிரமம்! என்பது திருச்சியில் ஒரு கிளையாய் துவங்கி பல்வேறுப்பட்ட பிரச்சனைகளுக்கும் இடையூறுகளுக்கும் இடையில் அதை 5 கிளைகளாக்கி தொழில் நிறுவனம் நடத்திய எனக்கும் நன்றாக தெரியும்!

இந்த சிறிய இளைஞர்கள் நாளைய பெரும் தொழிலதிபர்களாக வர வளர ♥மனதார உனர்வுபூர்வமாக வாழ்த்துகிறேன்! நீங்களும் வாழ்த்துக்களோடு நிற்காமல்!*

*நீதிமன்றம் அருகில் மாலை வேலைகளில் வந்தால் இவர்களின் நேர்மைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரத்தை ஆதரவினையும் வியாபாரம் செய்து தெரிவியுங்கள்* 🙏 #வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப்

10/09/2022

ிருச்சி_சக்தி [பெண்கள்] சங்கத்தின்* சிறப்பு_கூட்டத்தில் #சிறப்பு_அழைப்பாளராக கலந்துக்கொண்டு #பெண்_உரிமை என்ற #தலைப்பில் #சிறப்பு_உறையாற்றி!

#பெண்கள்_சட்டம் குறித்தும் #சிறப்பு_வகுப்பு_எடுத்தேன்!

#வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப்

 #பெரம்பலூர்  #நீதிமன்றத்தில்  #2  #குற்ற  #வழக்கில்  #காவல்துறையின்   #சந்தேகத்தின்  #பலனை  #என்கட்சிகாருக்கு  #சாதகமாக...
06/09/2022

#பெரம்பலூர் #நீதிமன்றத்தில் #2 #குற்ற #வழக்கில் #காவல்துறையின் #சந்தேகத்தின் #பலனை #என்கட்சிகாருக்கு #சாதகமாக்கி #விடுதலை #செய்தது!*🙏 #வழக்கறிஞர் #திருச்சி #திலீப்

 #திருச்சி  #நீதிமன்றம் வந்த  #பிரபல  #மூத்த  #பொது  #நல  #வழக்கறிஞர்  #யானை  #ராஜேந்திரனுடன் இனிமையான சந்திப்பு! இதுவரை...
03/09/2022

#திருச்சி #நீதிமன்றம் வந்த #பிரபல #மூத்த #பொது #நல #வழக்கறிஞர் #யானை #ராஜேந்திரனுடன் இனிமையான சந்திப்பு! இதுவரை மூன்று பொது நல வழக்குகளை #பொது #மக்களின் #நலனுக்காக #உயர்நீதி #மன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்! வரும் காலங்களில் அதிகம் #பொது #நல #வழக்குகளை தாக்கல் செய்வேன்! #வழக்கறிஞர் #திருச்சி #திலீப்

Address

No 6 Reliance Fresh Back Side Heeber Road Beemanagar
Tiruchirappalli
620001

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Trichy NS DILIP BA,BL,. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Advocate Trichy NS DILIP BA,BL,.:

Share