A.G.A Law Associate P Ltd, Surandai&Tenkasi

A.G.A Law Associate P Ltd, Surandai&Tenkasi A.G.A Law Associate P Ltd, Surandai&Tenkasi

10/05/2025
15/09/2024

*நீதிமன்றம் சாட்சிகளின் விதங்கள்*

*1. பொய் சாட்சி (Lying Witness) .*

*2. அதிகம் பேசும் சாட்சி ( Flippant Witness).*

*3. பிடிவாதம் பிடிக்கும் சாட்சி (Dogged Witness).*

*4. தயக்கம் காட்டும் சாட்சி ( Hesitation Witness).*

*5. பயத்தால் உடல் நடுங்கும் சாட்சி( Nervous Witness) .*

*6.சிரிப்பூட்டுகின்ற சாட்சி ( Humorous Witness).*

*7. வஞ்சகச் சாட்சி ( Cunning Witness).*

*8. கபட சாட்சி ( Canting hypocrite).*

*9. பாதி உண்மையும் பாதி பொய்யும் சொல்லும் சாட்சி (The Witness Who Speaks partly true and partly false).*

*10. தொழில் வழியான சாட்சி.( Professional Witness).*

*11.அலுவல் சார்ந்த சாட்சி . (Official Witness).*

*12. காவல்துறை சாட்சி. (Police Witness).*

*13. மருத்துவ சாட்சி.( Medical Witness).*

*14. நாகரீகமான சாட்சி ( Cultural Witness).*

*15. நேர்மையான சாட்சி. ( Honest Witness).*

*16. தனிப்பட்ட சாட்சி.(Independent Witness).*

*17. பெண் சாட்சி.(Women Witness).*

*18. குழந்தை சாட்சி. (Child Witness).*

*19. அயலிடவாத சாட்சி.(Alibi Witness).*

*20.நேரில் பார்த்த சாட்சி.( Eye Witness).*

*21. கல்வி அறிவில்லாத சாட்சி.(illiterate Witness).*

*22. உறவு நிலை சாட்சி ( Relation Witness)*

23. *தற்செயலாக பார்த்த சாட்சி . (Chance Witness).*

24. *பிறழ் சாட்சி . (Hostile Witness).*

25. *குற்றமேற்ற சாட்சி.(Approver Witness).*

26. *காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட சாட்சி (Trap *Witness).*

05/03/2022

*Crpc Sec.107 - பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் -*

ஒரு நபர் அமைதி குலைவை ஏற்படுத்துகிறார் என காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அதனை சப் கலெக்டருக்கு அனுப்புவார்கள். அந்த தகவலின் அடிப்படையில் சப் கலெக்டர் உடனடியாக மேற்படி நபரிடமிருந்து 1 வருட காலத்திற்கு அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறி பிணையப் பத்திரம் எழுதி வாங்குவார். ஆனால் எவ்வித விசாரணையும் செய்ய மாட்டார். ஆனால் இவ்வாறு சப் கலெக்டர் செய்வது சட்ட விரோதமாகும். "ஒரு நபர் அமைதி குலைவினை ஏற்படுத்துவார் என்கிற தகவல் கிடைக்கப் பெற்று, அத்தகைய அமைதிக் குலைவை ஏற்படுத்தும் நபரிடம் அமைதியை பேணுவதற்காக உறுதியை பெறுவதற்கு உகந்த வழக்கு என்று சப் கலெக்டர் கருதினால், அந்த நபரிடமிருந்து அமைதியை பேணுவதற்காக ஒரு பிணையப் பத்திரத்தை எழுதி பெறுவதற்கான அதிகாரத்தை கு.வி.மு.ச பிரிவு 107(1) சப் கலெக்டருக்கு வழங்குகிறது. அந்த சட்டப் பிரிவை படித்து பார்க்கும் போது சப் கலெக்டருக்கு ஏராளமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. பிணையப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனையை பிணையம் அளித்தவர் நிறைவேற்ற தவறினால், அவருக்கு சிறை தண்டனை அளிக்கலாம் என்கிற அதிகாரமும் சப் கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த குற்றச்சாட்டுகளும் வனையாமல், எந்த விசாரணையும் நடத்தாமல் தண்டனை அளிக்கக்கூடிய அதிகாரம் சப் கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. அது மிகவும் அபாயகரமான ஓர் அதிகாரமாகும். சப் கலெக்டருக்கு அதிக படியாக வழங்கப்பட்டுள்ள அந்த அதிகாரத்திற்கு ஒரு தடையை ஏற்படுத்தும் விதமாக பிரிவு 107(1) அமைந்துள்ளது. அந்த பிரிவின் படிதான் மனநிறைவு அடைந்தது குறித்து சப் கலெக்டர் பதிவு செய்ய வேண்டும். எனவே கு. வி. மு. ச பிரிவு 107(1) ன் கீழ் வாய்மொழியாக உத்தரவுகளை சப் கலெக்டர் பிறப்பிக்க கூடாது. அவருடைய விருப்பத்திற்கேற்ப உத்தரவுகளை பிறப்பிக்ககூடாது. அவர் அந்த உத்தரவை பிறப்பிப்பதற்கான காரணத்தை விரிவாக குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும், சுருக்கமாக குறிப்பிட வேண்டும். அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாக கு.வி.மு.ச பிரிவு 107(1) செயல்படுகிறது. பிடிக் கட்டளை வேண்டாக் குற்றமொன்று நடைபெற்றிருந்தால் மட்டுமே FIR பதிவு செய்யப்பட வேண்டும். கு.வி.மு.ச பிரிவு 107ன் கீழ் ஒரு FIR பதிவு செய்ய முடியாது.

08/01/2022

வழக்கறிஞர்களுக்கு சட்டம் வழங்கும் உரிமைகள்!.......................................................................
ஆறு உரிமைகள் பின் வருமாறு;
1. Right of pre audience
2. Right to practice the profession
3. Right to enter in any court
4. Right against arrest
5. Right to meet accused
6. Privileges to a lawyer under the Indian Evidence Act, 1872

முதலாவது உரிமை கீழ்க்காணுமாறு வரிசைப் படுத்தப்படுகிறது.
ஒருநீதிமன்றத்தில் இவர்கள் அனைவரும் இருந்தால் முதலாவதாக கேட்கப்படும் உரிமையைத்தான் Right of Pre audience என்கிறோம்.
1. Attorney General
2. Solicitor General
3. Additional Solicitor General
4. Second Additional Solicitor General and the Advocate General of India
5. Advocate General of any state
6. Senior Advocates
7. Other Advocates
நீதிமன்ற மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசினாலன்றி, இவர்கள் பேசுவதை தடுக்கமுடியாது.

இரண்டாவது உரிமை Right to practice the profession ஆகும். இது இருவகையில் பாதுகாக்கப் படுகிறது.
முதலாவது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19(1)(g) -ன் படி தொழில்செய்யும் உரிமை.
இரண்டாவதாக, வழக்கறிஞர் சட்டம், 1961-ன் பிரிவு 30-ன் கீழ் எந்த நீதிமன்றத்தில் பதிவுபெற்ற வழக்கறிஞர் தொழில் புரிய உரிமை வழங்குகிறது.

மூன்றாவது உரிமை Right to enter in any court வழக்கறிஞர் சட்டப் பிரிவு 30, இவ்வுரிமையை வழங்குகிறது.

நான்காவது உரிமை Right against arrest
உரிமையியல் நடைமுறை சட்டப் பிரிவு 135-ன் படி, ஒரு வழக்கறிஞர் நீதிமன்றம் செல்கையிலோ, பணியிலிருக்கும்போதோ, நீதிமன்றத்திலிருந்து திரும்பும்போதோ கைது செய்யப்படுவதை தடை செய்கிறது.

ஐந்தாவது உரிமை Right to meet accused ஆகும்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை சந்திக்கும் உரிமை வழக்கறிஞருக்கு உண்டு. அவர் சிறையில் இருந்தாலும் கூட, காலவரையறைக்கு உட்பட்டு, சந்திக்க உரிமை உண்டு.

ஆறாவதாக Privileges to a lawyer u/s 129 of Indian Evidence Act
இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 129-ன் கீழ், வழக்கறிஞருக்கும், அவரது கட்சிக்காரருக்கும் இடையிலான தனிப்பட்ட தகவல் தொடர்பை தெரிவிக்குமாறு கேட்கவோ, மிரட்டவோ எவருக்கும் உரிமையில்லை. வழக்கறிஞர் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில், அதனை சாட்சியமாக கூற இயலும். ஆனால், கட்டாயப்படுத்த சட்டத்தில் இடமில்லை.⚖

21/12/2021

What does a lawyer do?

A lawyer is a professional who helps individuals and businesses navigate the legal process. Lawyers specialize in particular areas, such as family, tax and criminal law. A lawyer’s duties depend on their specialty, but often include:

Working with paralegals, investigators, police and clients to prepare comprehensive cases for mediations and trials, including preparing legal documents and collecting evidence

Attending hearings, trials and other legal meetings with clients

Scheduling and administering full depositions of case witnesses and relevant experts

Interpreting laws, regulations and rulings for clients and informing them of their legal rights

Preparing legal documents for clients, including wills, business contracts and divorce agreements

Reviewing discovery documents and determining the best legal action for each client

27/11/2021

CCTV FOOTAGE பதிவுகளை RTI ல் பெறலாம் என்பதற்கான மத்திய தகவல் ஆணைய உத்தரவு.

அரசு அலுவலகங்களின் CCTV பதிவுகளின் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறலாம்.

மத்திய தகவல் ஆணையம் CIC / SA / C / 2015 / 900106 ன் படி FAA : 03-12-2014 ,SA : 12-03-2015 Hearing date :16-07-2015 Decision NO : 3815 / 2015 ன் படி CCTV camera footage பொது ஆவணம்.

👉தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பயனடைய தகவலுக்காக சமர்பிக்கிறேன் தெரிந்த உள்ளங்களுக்கும் தெரிந்து கொண்டு பயனடைய பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பு உறவுகளே...

Address

11. 3. 86-3, Pavoorchathram Road, Near By Sub-Registrar Office, Surandai
Tenkasi
627859

Telephone

+919952456321

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.G.A Law Associate P Ltd, Surandai&Tenkasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to A.G.A Law Associate P Ltd, Surandai&Tenkasi:

Share