18/03/2024
Grievous Hurt / கொடுங்காயம் போன்ற குற்றங்களுக்கு மட்டுமே FIR போடுவோம் என சொல்லி வெளிபடையாக காயம் இல்லையென FIR பதிவு செய்யாததால் நீதிமன்றம் மூலம் FIR பதிவு செய்ய உத்தரவு பெறுவதற்கான வழக்கு . ஒரு குற்றம் நடைபெற்றதாக புகார் கொடுக்கும்போது, அப்புகார் வாங்கி கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று புலனாய்வு செய்ய வேண்டும் ,அல்லது முதல்கட்ட விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாமல் புகார்தாரருக்கு வெளிபடையான காயம் இல்லையென சொல்லி புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் மறுக்க கூடாது.காவல்துறையினர் புகார் வாங்க மறுப்பதும் மனித உரிமை மீறல் செயலாகும் .
மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஒரு புகார் பெறுவதற்கான வழிமுறைகளையும், அவற்றை எவ்வாறு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டுமென வழிகாட்டல் வழங்கினாலும் நீதிமன்றம் அவமதிப்பு செய்யும் விதமாக காவல்துறை செயல்படுகின்றனர். மேலும் வெளிப்படையாக காயம் இல்லையென்றாலும் எதிரிக்கு தண்டனை தர வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் வேறு காவல் நிலைய காவல் ஆய்வாளர் விசாரணை செய்ய வேண்டுமென உத்தரவு கேட்க வேண்டும்.
- வழக்கறிஞர் ரிச்சர்ட் BE.,LL.B,
CALL 082483 09166