Senthilkumar Gopalan Advocate Pollachi

Senthilkumar Gopalan Advocate Pollachi Advocate@Pollachi
Consultations / Documentations
Litigations / Legal Opinions

_*Limitation Periods*_1. The time for filing First Appeal in civil cases is 30 days.2. The time for filing Second Appeal...
15/10/2025

_*Limitation Periods*_

1. The time for filing First Appeal in civil cases is 30 days.

2. The time for filing Second Appeal in civil cases is 60 days.

3. The time for filing civil revision is 90 days.

4. The limitation period for appeal in Capital Punishment is 7 days.

5. The limitation period of appeal from Magistrate to Sessions Court is 30 days.

6. The limitation period of appeal from Sessions Court to High Court is 60 days.

7. The limitation period of appeal from the High Court to the Supreme Court is 30 days.

8. The limitation period of appeal from High Court to Supreme Court in special Leave to Appeal is 30 days.

9. The limitation period of appeal from Magistrate to High Court in acquittal in Challan Case is 30 days and in Complaint Case 60 days.

10. The limitation period of appeal from Sessions Court to High Court in acquittal in Challan Case is 30 days and in Complaint Case 60 days.

11. The limitation period of appeal from High Court when case decide by it in its original jurisdiction and to Division Bench than 20 days in acquittal or conviction as the case may.

12. The Plaintiff has a time of 6 years to file ex*****on.

13. The limitation in civil suits is 3 years from the cause of action.

14. The Article 150 Appeal from death sentence to High Court is 7 days.

15. Article 151. High Court Order on original side, appeal is 20 days.

16. Article 154. Appeal to any Court other than High Court is 30 days.

17. Article 155. Criminal appeal to High Court is 60 days.

*காவல் நிலையத்தில் பெண்களின் உரிமை என்ன?************பெண்கள் காவல் நிலையங்களில் (Police Station) விசாரணை, கைது, புகார் அள...
16/07/2025

*காவல் நிலையத்தில் பெண்களின் உரிமை என்ன?*
***********
பெண்கள் காவல் நிலையங்களில் (Police Station) விசாரணை, கைது, புகார் அளித்தல் போன்ற நேரங்களில் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட உரிமைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் பெண்களை தவறான கைது, ஒடுக்குமுறை, அச்சுறுத்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் உள்ளன.

பெண்களின் காவல் நிலைய உரிமைகள் பட்டியலாகவும், எடுத்துக்காட்டுகளுடன்வும் வழங்கப்பட்டுள்ளன:
---

🔰 பெண்களுக்கு காவல் நிலையத்தில் உள்ள முக்கிய உரிமைகள்:
---

✅ 1. இரவு நேரத்தில் (6 PM ௭ 6 AM) கைது செய்ய அனுமதி இல்லை

காவல்துறைக்கு ஒரு பெண்ணை இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டுமானால்,
➤ மஜிஸ்திரேட் எழுத்துப் பூர்வ அனுமதி கட்டாயம்.

இதை மீறினால், அது முறைகேடு (violation) ஆகும்.
---

✅ 2. பெண் போலீசால் மட்டுமே கைது செய்ய வேண்டும்

பெண்ணை ஆண் போலீசார் கைது செய்ய இயலாது.

பெண் போலீசால் மட்டுமே உடல் தொடுதல், கைது, கைதிற்கான சோதனை செய்வது சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது.

இது **CrPC Section 46(4)**ன் அடிப்படையில் பாதுகாப்பு.
---

✅ 3. உடல்நிலை சோதனை (Medical or Physical Examination) ௭ பெண் மருத்துவர் / அதிகாரி கட்டாயம்

பெண் கைதாரின் உடல்நிலை சோதனை செய்யப்படும்போது,
➤ பெண் மருத்துவர் அல்லது பெண் மருத்துவ அதிகாரி மட்டுமே பரிசோதிக்க வேண்டும்.

IPC Section 53(2) இன் படி இது அவசியம்.
---

✅ 4. பெண்கள் தனியாக காவல் நிலையத்தில் வைக்கக்கூடாது

காவல்நிலையத்தில் பெண் கைதாரை தனியாக வைக்க முடியாது.

அவருடன் பெண் காவலர், அல்லது மற்ற பெண் கைதார்களுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

தனியாக வைக்கப்பட்டால், அது சட்ட மீறல்.
---

✅ 5. கணவன் / உறவினர் / வழக்கறிஞர் இல்லாமல் பெண்ணிடம் நேரடி விசாரணை செய்ய காவல்துறைக்கு முழு உரிமையில்லை.

விசாரணை நேரத்தில், பெண் போலீஸ் இருக்க வேண்டும்.
---

✅ 6. FIR பதிவு செய்யும் உரிமை (Zero FIR உரிமை உட்பட)

பெண் எங்கு குற்றம் நடந்தாலும், அருகிலுள்ள எந்த காவல் நிலையத்திலும் FIR பதிவு செய்யலாம்.

இது Zero FIR எனப்படுகிறது ௭ பிறகு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மாற்றலாம்.

போலீஸ் FIR பதிவு செய்ய மறுத்தால், அதன் மீது முக்கியமான நடவடிக்கை எடுக்கலாம்.
---

✅ 7. மரியாதையுடன் நடத்தப்படும் உரிமை

Section 160 CrPC படி, 15 வயதுக்கு குறைந்த பெண், 65 வயதுக்கு மேற்பட்ட பெண் மற்றும் மற்றமொழியாளர் ஆகியோரை வீட்டிலேயே விசாரணை செய்ய வேண்டும் (அல்லது பாதுகாப்பான இடத்தில்).

---

✅ 8. வழக்கறிஞரின் உதவி பெறும் உரிமை

விசாரணையின் போது பெண், தன்னுடைய வழக்கறிஞரின் உதவியோடு பதில் அளிக்கலாம்.

சட்டத்திற்கேற்ப, காவல்துறை அதை அனுமதிக்க வேண்டியது அவசியம்.
---

✅ 9. புகார் அளிக்க யாரும் தடையின்படக்கூடாது

பெண் நேரடியாக காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யலாம், அல்லது

100 / 112 ௭ காவல் உதவி அழைப்பு

பெண்கள் ஹெல்ப்லைன்: 1091

போலீசார் புகார் பெற மறுத்தால், மேலதிக அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் அல்லது RTI மூலம் கேட்கலாம்.
---

✅ 10. CCTV பாதுகாப்பு ௭ தனியுரிமை உரிமை

காவல்நிலையத்தில் CCTV உள்ளதா, பெண் விசாரணை அறை தனிப்பட்டதா என்பதை கேட்கும் உரிமை உண்டு.

---
📝 எடுத்துக்காட்டு:

ஒரு பெண் இரவு 9 மணிக்கு தாக்குதலுக்கு உள்ளாகி அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லும்போது:

காவல்துறை அதிகாரி, FIR பதிவு செய்ய வேண்டிய கடமை உடையவர்.

விசாரணையில் பெண் காவலர் இருக்க வேண்டும்.

உடல் சோதனை செய்ய வேண்டுமானால், பெண் மருத்துவர் கட்டாயம்.

இந்த உரிமைகள் பெண்களை முறைகேடுகளிலிருந்து பாதுகாக்க, சட்டத்தின் முழு பாதுகாப்புடன் காவல்துறையை அணுக உதவுகின்றன. இது பெண்கள் சட்ட விழிப்புணர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.











_*சட்டத்தின் அறியாமையும் குற்றமே...⚖️*_ *கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்*                      ...
21/05/2025

_*சட்டத்தின் அறியாமையும் குற்றமே...⚖️*_

*கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்*


1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும.


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.G செந்தில்குமார், வழக்கறிஞர் பொள்ள...
14/04/2025

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

G செந்தில்குமார், வழக்கறிஞர் பொள்ளாச்சி.

13/02/2025
அண்டத்தில் ஆதிகால ஊற்றே எம் தமிழே - வாழையடி வாழையாக வாழுங்கள் தமிழை போல !!வாழ்த்துக்களோடு வளமும் பெருகட்டும் - தமிழ் புத...
14/04/2024

அண்டத்தில் ஆதிகால ஊற்றே எம் தமிழே -
வாழையடி வாழையாக வாழுங்கள் தமிழை போல !!
வாழ்த்துக்களோடு வளமும் பெருகட்டும் -
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

*பொள்ளாச்சி வக்கீல்
G.செந்தில் குமார்*

13/04/2024

பெயருக்கு பிரதமர் வேட்பாளர் ..
ஆனால் சட்டத்தை மதிக்காமல் தடுப்பை தாண்டி செல்கிறார் ...
நாமும் அதை பெருமையுடன் பரப்பி சந்தோசப்படுகிறோம்.. நாமெல்லாம் என்ன மாதிரி டிசைனே..

உலகெங்கிலும் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் *அனைவருக்கும் யுகாதி தின நல்வாழ்த்துக்கள்.* எல்லா நலமும் வளமும் நன்மையும் நல்லற...
09/04/2024

உலகெங்கிலும் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் *அனைவருக்கும் யுகாதி தின நல்வாழ்த்துக்கள்.*

எல்லா நலமும் வளமும் நன்மையும் நல்லறமும் நாளும் பெருகி மகிழ்ந்து வாழ நம் தெய்வங்களின் இன்னருளை இறைஞ்சி வாழ்த்தி வணங்குகிறோம்.🙏🌷

பொள்ளாச்சி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினராக ...
23/12/2022

பொள்ளாச்சி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினராக என்னை தேர்வு செய்தமைக்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.,.

கோ. செந்தில் குமார் வழக்கறிஞர் பொள்ளாச்சி

Address

Pollachi
642001

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 2pm

Telephone

+919842722637

Alerts

Be the first to know and let us send you an email when Senthilkumar Gopalan Advocate Pollachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Senthilkumar Gopalan Advocate Pollachi:

Share

Category