JK சட்ட உதவி மையம்

JK சட்ட உதவி மையம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JK சட்ட உதவி மையம், Legal Service, PARAMATHI VELUR, Namakkal.

05/07/2024
27/10/2021

சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்: இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து வழங்குவதற்கு கணவன் மற்றும் மனைவி இடையேயான தகராறு முன்நிபந்தனை அல்ல⚖

வழக்கின் பெயர் சந்தியா சென் எதிராக சஞ்சய் சென் பின்னணி உண்மைகள் இந்த ஜோடி பிப்ரவரி 2017 இல் திருமணம் செய்துகொண்டனர், அதன் பிறகு அவர்கள் இரண்டு நாட்கள் ஒன்றாக தங்கினர். அவர்கள் திருமணமான ஒரு வருடத்திற்குப் பிறகு விவாகரத்து கோரி ஒரு கூட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்தனர், அதற்கு அவர்களுக்கு 6 மாத கூலிங் ஆஃப் காலம் வழங்கப்பட்டது. அவர்கள் குளிர்ச்சியான காலத்திற்குப் பிறகும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர், ஆனால் விசாரணை நீதிமன்றம் பரஸ்பர விவாகரத்து ஆணையை அனுப்ப மறுத்து, ஒரு வருடத்திற்கு நீதித்துறை பிரிவின் ஆணையை வழங்கியது. இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 13-A சம்பந்தப்பட்ட விதிகள், விவாகரத்துக்கான காரணங்கள் பிரிவுகளின் (ii), (vi) மற்றும் (vii) ஆகியவற்றின் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்தால் தவிர, விவாகரத்துக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்படும் போது மாற்று நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. சட்டத்தின் 13 வழக்கின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நீதித்துறை பிரிப்பு ஆணையை நிறைவேற்றுகிறது. இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 13-பி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்வதற்கான விதியை உருவாக்குகிறது, இது பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து ஆணையைப் பெற ஒரு வருடம் பிரிந்து 6 மாதங்கள் குளிரூட்டும் காலத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. நீதிமன்றத்தின் அவதானிப்பு, வழக்கின் சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவெடுப்பதற்கு ஆணையை அனுப்புவதற்கு விசாரணை நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட ஏற்பாடு என்று நீதிமன்றம் கூறியது. அவர்கள் ஒன்றாக இருந்த குறுகிய காலத்தில், கடுமையான தகராறு இருந்திருக்க முடியாது, ஆனால் பரஸ்பர விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும்போது தகராறு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கருதி நீதிமன்றம் ஆணையை வழங்கியது. விண்ணப்பம் முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது விவாகரத்து கோருவதற்கான கட்சிகளின் முடிவிற்கு வழிவகுத்த காரணங்களைக் கண்டுபிடிப்பது நீதிமன்றத்தில் இல்லை. விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து வழங்கியது.⚖

30/05/2021

கொறானாவால் இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் என்ற இடத்தில் *due to covid19* என போட்டு வாங்கவும். சுப்ரீம் கோர்ட் உத்தரவு. தற்போது வழங்கப்படும் சான்றிதழ்களில் *respiratory problem, heart problem* என போட்டு விடுகிறார்கள். அப்படி பதிவாகி விட்டால் பின்னர் ஏதும் அரசு உதவிகள் அறிவிக்கப்பட்டால் பெற முடியாது. எனவே சரியாக எழுதி வாங்கவும்.

*பொதுமக்கள் நலன் கருதி jk*

17/02/2021

ஒரு வழக்கு தரப்பினருக்கு அவருடைய சரியான முகவரிக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட்டு, அந்த அறிவிப்புகள்

அவர் வீட்டில் இல்லை
வீடு பூட்டப்பட்டுள்ளது
கடை சாத்தப்பட்டுள்ளது

என்கிற மேற்குறிப்புகளுடன் திருப்பப்பட்டிருந்தால், அந்த அறிவிப்புகள் முகவரிதாரருக்கு சார்வு செய்யப்பட்டு விட்டதாக கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் " மத்திய பிரதேச மாநிலம் Vs ஹீராலால் மற்றும் பலர் (1996-7-SCC-523)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே ஒரு வழக்கு குறித்து மறுதரப்பினருக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பு முகவரிதாரர் வீட்டில் இல்லை, வீடு பூட்டப்பட்டுள்ளது, கடை சாத்தப்பட்டுள்ளது என்ற மேற்குறிப்புகளுடன் அஞ்சல் துறையால் திருப்பப்பட்டால், அந்த அறிவிப்பு முறையாக சார்வு செய்யப்பட்டு விட்டதாக கருத வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

TR C. M. P. NO - 207/2017

DT - 21.7.2017

M. வளர்மதி Vs A. சுப்புராஜ்

2017-3-MWN-CIVIL-808

11/09/2020

#வாங்கிய_கடனை_திருப்பி கட்ட முடியாவிட்டால் தீர்வு தீக்குளிப்புதானா? கலெக்டரிடம் மனு கொடுத்தால் பிரச்சினை தீருமா?

வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாவிட்டால் தீர்வு தீக்குளிப்புதானா? கலெக்டரிடம் மனு கொடுத்தால் பிரச்சினை தீருமா?

இல்லை

தீர்வு 1

கந்து ஒழிப்பு சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவரே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். நீதிமன்ற கட்டணம் ரூ.100 மட்டுமே வட்டி 100க்கு ரூ1 மட்டுமே கணக்கிடப்படும். ஏற்க்கனவே செலுத்திய வட்டி தொகையையும் ரூ.1 பைசா வட்டியில் சரிக்கட்டிக்கொள்ளலாம். அசல் தொகையினை மொத்தமாக கட்ட வேண்டியதில்லை.

தீர்வு 2

பணம் கட்ட இயலாதவர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம்.

தீர்வு 3

தன்னை நொடிப்புநிலை அடைந்தவர் மஞ்சள் நோட்டீஸ் என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். நொடிப்புநிலை அடைந்தவர் என அறிவிக்கப்பட்டவர் கடனை திருப்பி கட்ட தேவையில்லை.

குறிப்பு: நீதிமன்ற கட்டணமும், வக்கீல் கட்டணமும் செலுத்த இயலாதவர் அனைத்து நீதிமன்றங்களிலும் செயல்படும் இலவச சட்ட உதவி மையத்தை அனுகி வழக்கு தாக்கல் செய்யலாம்

08/09/2020

#நீங்கள்_கைது_செய்யப்பட்டால்_உங்கள் உரிமைகள் என்ன?
1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு
3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு
4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்
5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்
விலங்கிடலாமா?
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது
கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை.
குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
*******
கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்
1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்
6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.
7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.
******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?
முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம்.

01/08/2020

#அரசாணை_G_O_540_பற்றி_அறிவோம் அரசு நிலம்,ஏரி,குளம், போன்ற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனில். அரசாணை 540 ன் கீழ் தாசில்தார் அவர்களுக்கு மனு செய்யலாம்...அவர் 60 நாட்களுக்குள் அந்த மனு மீது நடவடிக்கை எடுத்து ஆக வேண்டும் என அரசாணை உள்ளது. தன்னார்வலர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் ... நன்றி...

Address

PARAMATHI VELUR
Namakkal
638182

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when JK சட்ட உதவி மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category