26/06/2013
"வாழ்க்கையை வரலாறு ஆக்கியோன் "
----------நூல் வெளியீடு -------------------
-----------------------------------------------------
இடம் : தக்கலை,
நாள் : 29-06-2013 சனிக்கிழமை
நேரம்: மாலை 3 மணி
----------------------------------------------------
அன்புடையீர் வணக்கம் ,
பிரபல நாடகக் கலைஞரும், தமிழ்நாடு அரசின் கலை நன் மணி பட்டமும், தக்கலை கன்னித்தமிழ் கலை, இலக்கிய சங்கத்தின் நாடகக்காவலர் விருதும். தமிழ்நாடு அனைத்து கலைஞர்கள் நல இயக்க நிருவனத் தலைவருமான ஆர் .எம். மஞ்சு கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் திடீரென காலமானார். அமரர் ஆர் .எம். மஞ்சு கன்னித்தமிழ் கலை, இலக்கிய சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்.
அன்னாரது நாடகம், சமுதாயம், அரசியல் கலைத் தியாகம்-தொண்டினைப் பாராட்டி நினைவு படுத்தும் வகையில் ஒரு நூல் வெளியிட சங்கம் தீர்மானித்து, அதன்படி நூல் ஒன்றை ஜனதா தள மாநிலத்தலைவர் திரு.முகமது இஸ்மாயில் அவர்கள் வெளியிட அதன் முதல் நூலை ஆசிரியர் .குமரி ஆதவன் அவர்கள் பெற்று பேசுகிறார். 2-ம் நூலை கருங்கல் ஏ.மத்தியாஸ் அவர்கள் பெற்று பேசுகிறார். 3-ம் நூலை எச்.செல்வின் கனகரோஸ் அவர்கள் பெற்று பேசுகிறார்.
நிகழ்ச்சிக்கு, கன்னித்தமிழ் கலை, இலக்கிய சங்கத் நிருவனத் தலைவர் கவிஞர்.திரு.இரா.மீ.இயற்கை அரசன் தலைமையில், எ.சார்லஸ் , கே.முரளீதரன் ஆகியோர் முன்னிலை வகிக்க, தக்கலை சந்திரன் வரவேற்று பேசுகிறார். தலைமை ஆசிரியர் ஜே.ஜோபிரகாஸ் நூல் ஆய்வுரை வழங்குவார் . மேலும் கன்னித்தமிழ் கலை, இலக்கிய சங்கத் உறுப்பினர்கள் திரு .வை.பாலசந்தர் , மா.பென்னி , நாக.அய்யப்பன் , குமரிதோழன் , சிவா , ப .முருகேசன் ,எஸ்.எஸ்.லெலின் ,எஸ்.சுப்பிரமணியம், வை.விஜயகோபால் , கலையூர் எம் .எ .காதர் ,டி .பால்ராஜ் , தமிழ்நாடு அனைத்து கலைஞர்கள் நல இயக்க உறுப்பினர்கள் கலைதோழன் , கோ.கோபாலகிருஸ்ணன் (கே.ஜி ), எம்.எஸ்.தாஸ் , நெல்சண்டேவி, என் .எஸ்.ஜெயகுமார் , கோலப்பன் ,நாணப்பன் ,ராஜேந்திரன் ,தேவதாஸ் , ஜானிஜார்ஜ் , ஆறு ஆல்பர்ட் ராஜ், ராம்பிரபு மற்றும் கருங்கல் வட்டார வர்த்தக சங்க தலைவர் கருங்கல் ஆர்.ஜார்ஜ் . வி.ஜெயபால், கு .பரமேஸ்வரன் , இரா .வேலப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுவர் . கன்னித்தமிழ் கலை, இலக்கிய சங்கத் துணை தலைவர் தக்கலை .ப .நடராசன் நூல் கருத்துரை வழங்குகிறார் . ஆர்.ஆர்.நிசாந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
முடிவில் ஆசிரியர் சி .கணபதி நன்றி உரை ஆற்றுவார்.