01/04/2026
#போதைப்பொருள்_குற்றவாளியல்ல;
#நானொரு_போர்க்கைதி..!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ,
மனைவி சிலியா ப்ளோரஸ்
இரண்டு பேரும் இப்போது
அமெரிக்க நியூயார்க்கில் புரூக்ளின்
கூட்டாட்சி தடுப்புக்காவல் மையத்தில்
அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வெனிசுவேலாவிலிருந்து
அவர்கள் கடத்தப்பட்டு
இன்றோடு 88 நாள்கள்.
நாலுநாள் முந்தி - 26ஆம் தேதி -
மேன்ஹேட்டன் ஃ பெடரல் நீதிமன்றத்தில்
அவர்களை விசாரணைக்கு
அழைத்து வந்த படத்தை
இங்கே பதிந்திருக்கிறேன்.
Thanks TMZ.com.
"போதைப்பொருள் குற்றவாளி அல்ல;
நானொரு போர்க்கைதி" என்று
அங்கே முழங்கினார் மதுரோ.
அவர் தன் முகநூல் பக்கம் மூலம்
நமக்கெல்லாம் நன்றி செய்தி
ஒன்றை அனுப்பியிருக்கிறார் :
'நாங்கள், நிக்கோலஸ் மதுரோ மோரோஸ், சிலியா ஃப்ளோரஸ் டி மதுரோ, இருவருமாக - வெனிசுலாவின் உன்னதமான மக்களுக்கும், உலகம் முழுவதுமுள்ள நல்மனம் கொண்ட அனைவருக்கும் - எமக்கு ஆதரவளிக்கும் அவர்களின் வலிமை, துணிச்சல் , ஒற்றுமைக்காக ஆழ்ந்த நன்றியை இதன் மூலம் தெரிவிக்கிறோம்.
உங்கள் செய்திகள், உங்கள் மின்னஞ்சல்கள், உங்கள் கடிதங்கள் உங்கள் பிரார்த்தனைகளை அனைத்தையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம்.
உங்கள் அன்பின் ஒவ்வொரு வார்த்தையும், பாசத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும், ஆதரவளிக்கும் ஒவ்வொரு செய்கையும் எங்கள் ஆன்மாவை நிரப்பி, எங்களை ஆன்ம ரீதியாக பலப்படுத்துகின்றன. நாங்கள் நலமுடன், உறுதியுடன், அமைதியுடன் அத்துடன் இடைவிடாத பிரார்த்தனையிலும் இருக்கிறோம்.
கடினமான காலங்களில்கூட குலைந்து போகாமல் ஒற்றுமையுடன் இருக்கவும் - வெனிசுலாவுக்குள்ளும், வெளியிலும் - அன்பை வெளிப்படுத்த - மனசாட்சியின் குரலை எதிரொலிக்க - ஒற்றுமையை பறைசாற்ற எங்கள் மக்கள் கொண்டிருக்கும் ஆற்றல் எங்களுக்கு ஆழ்ந்த வியப்பை அளிக்கிறது.
நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்கும் அன்பின் செய்தி, எங்களுக்கு தார்மீக வலிமையாகவும், அகத்தின் உறுதியாகவும், வாழ்வின் மிக உயர்ந்த விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பாகவும் உருமாறுகிறது.
இன்று, முன்னெப்போதையும்விட அதிகமாக, நாட்டின் அமைதி, தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், குற்றங்களைப் பொறுத்தல், ஒவ்வொருவருக்குமிடையில் ஒற்றுமை போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து வலிமையுடன் முன்னெடுக்க அனைவரும் முன்வர வேண்டுமென்று அழைக்கிறோம்.
சக உரையாடல், சக வாழ்வு, சக மரியாதை ஆகிய பாதையிலிருந்து யாரும் விலகிச் செல்ல வேண்டாம்; ஏனெனில் அதுவே நம் தாய்நாட்டின் பாதை; அதுவே நீதியின் பாதை.
புனித லூக்காவின் நற்செய்தியில்,“கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்” என்று நம் கடவுள் இயேசு கிறிஸ்து கூறியது போல, நீங்கள் நம்பிக்கையோடு கேளுங்கள், நம்பிக்கையுடன் தேடுங்கள், அன்போடு தட்டுங்கள். ஏனென்றால், உண்மையிலும், அமைதியிலும், ஒளியிலும் உறுதியாய் நிலைத்திருக்கும் மக்களுக்கு இறைவனின் பாதைகள் திறக்கப்படுகின்றன.
உங்கள் செய்திகள், கடிதங்கள், பிரார்த்தனைகள் , மேலும் உங்கள் அளவற்ற அன்பு ஆகியவற்றிற்காக எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம்.
எங்கள் நன்றியும், எங்கள் பிரார்த்தனைகளும், எங்கள் ஆன்மிக அரவணைப்பும் - இன்றும், நாளையும், என்றென்றும் உங்களோடு நிலைத்திருக்கும்!'
💕சந்திரசேகர் முகநூலில்
#இஸ்கப்
Govindaraj Ramaswamy முகநூலில்...