YP Law Associates Madurai

YP Law Associates Madurai A Professional Legal Consultancy

We Deals the Matters relating to Money, mortgage, hire purchase claims, Debt recovery, Securitisation etc, Property laws, Land laws, Title suits, ceiling laws, Stamp Act, Undervaluation, Boundary & Survey disputes, Identification of properties on ground with survey assistance, Building Regulations, Wills, Succession, Probate, Easements and licences, partnerships, partition, injunctions, specific p

erformance, Rent control, Damages including Professional negligence, Accident Claims, Hire Purchase, consumer disputes, defending requisitioning authorities in Land Acquisition References regarding compensation, etc.

19/01/2024

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் திட்டம் ஏதாவது உள்ளதா?

லட்சமி என்ற சிறுமி அவளது தந்தை மூலமாக உச்சநீதிமன்றத்தில் நீதிப்பேராணை (குற்றவியல்) எண் - 129/2006 என்ற எண்ணில் தாக்கல் செய்த வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 357(A) ன் கீழ் "தமிழ்நாடு பாதிக்கப்பட்டவர் இழப்பீட்டுத் திட்டம் 2013" என்ற ஒரு திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. குற்றத்தினால் இழப்பு அல்லது காயம் ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் ஆணை.

அதன்படி மத்திய அரசின் துணையுடன் தமிழக அரசு G.O (Ms) No. 1055, Home (Police, XII), II(2)/HO /898(a)/2013 நாள் - 30.11+2013 என்ற அரசாணையை இயற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றியது.

பாதிக்கப்பட்டவர் ஏதாவது ஒரு பிடியாணை வேண்டாக் குற்றத்தில் சம்மந்தப்பட்டிருந்தால் அவருக்கோ அல்லது அவரது வாரிசுகளுக்கோ இந்த தொகை கிடைக்காது. அதாவது பாதிக்கப்பட்டவர் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இருக்கக்கூடாது.

உண்மையில் குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு தொகையை பெற இந்த திட்டத்தின் தலைவராக இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் ஆணையர் வசம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்.

இந்த திட்டம் சாதி, மதம் வேறுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும். பட்டியல் சாதியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற்றிருந்தாலும்கூட இதிலும் இழப்பீடு பெறலாம். ஆனால் தொகை நேர்விற்கு ஏற்ப கழிக்கப்படும்.

உயிரிழப்புக்கு ரூ 3 லட்சம், கை, கால் அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகத்தை இழந்தால் அந்த இழப்பு 80% க்கு மேல் இருந்தால் ரூ 2 லட்சம், 50%க்கு கூடுதலாக இருந்தால் ரூ. 1 லட்சம், ஆசிட் வீச்சினால் உயிரிழந்தால் ரூ. 3.5 லட்சம், பாலியல் வல்லுறவுக்கு ரூ 3 லட்சம், கடத்தல், மானப்பங்கம் படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுக்கப்படுகிறது.

கூடுதலாக ஈமச் சடங்குகளுக்கு ரூ. 2000, மருத்துவ செலவுகளுக்கு ரூ. 1.50 லட்சம் வரை காப்பீடு மூலம் வழங்கப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 4 அல்லது 6 ன் கீழ் பாலியல் வல்லுறவுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது.

ஆனால் அதே குற்றம் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டத்தின் ன் கீழ் நடைபெற்றிருந்தால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 க்கு ரூ 5 லட்சம், பிரிவு 376(n) க்கு ரூ. 8.25 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் இவர்கள் விதி 12(5) ன்படி தமிழ்நாடு பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் பலனையும் கூடுதலாக பெறலாம்.

நன்றி 🤝

19/01/2024

*விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய* *என்ன ஆவணங்கள் தேவை*

விவாகரத்து வழக்கு எங்கு தாக்கல் செய்யவேண்டும்.

விவாகரத்து வழக்கு.

விவாகரத்து வழக்கில் தேவையான ஆவணங்கள்.

விவாகரத்து வழக்கிற்கு எவ்வளவு செலவு ஆகும்.

விவாகரத்து வழக்கு எங்கு தாக்கல் செய்ய வேண்டும்.

What documents are required to file a divorce case? Where to file divorce case

விவாகரத்து வழக்கு-Divorce case details.

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட வேண்டுமென்றால் சில ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கில் நீங்கள் ஆவணங்கள் தாக்கல் செய்கிறீர்கள் என்றால் அவற்றை ஆய்வு செய்த பின்புதான் உங்களுடைய வழக்கு பதிவு செய்யப்படும்.

நீதிமன்ற ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பு அந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றால் உங்களுடைய வழக்கிற்கு ஒரு எண் வழங்கப்படும் அந்த எண்ணின் படி தான் உங்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டு உங்களுக்கான விசாரணை நடைபெறும்

சரிபார்க்கப்படும் இந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை நிலைப் படுத்துவதற்கு ஒரு மனுதாரருக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

விவாகரத்து வழக்குகளை தாக்கல் செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது என்ற விபரம் நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் அதை தெரியபடுத்தவை இன்றைய பதிவு.

விவாகரத்து வழக்கில் தேவையான ஆவணங்கள். What documents are needed to apply for divorce?

கணவரின் இருப்பிட சான்று (ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு)

மனைவியின் இருப்பிட சான்று

திருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ்.

இருவரின் திருமண போட்டோ கணவன் மனைவி சேர்ந்து இருக்க வேண்டும்.

யார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம்.

இருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (ஏதாவது இருந்தால் மட்டும்)

ஒரு வருடத்திற்கு மேல், கணவர், மனைவி பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை காட்டும் ஆவணம் (ஏதாவது இருந்தால் மட்டும்)

சொத்துக்கள் ஏதும் கணவர், மனைவிக்கு இருந்தால், அதை காட்டும் ஆவணம்(ஏதாவது இருந்தால் மட்டும்)

மனுவை தாக்கல் செய்ய தயார் படுத்துவதற்கு நடைமுறைப்படுத்துவதற்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது.

வழக்கு தாக்கல் செய்யும் போது ஏற்ப்படும் செலவுகள் தனி வழக்கறிஞர் கட்டணம் தனி.

வழக்கறிஞர் கட்டணம் விவாகரத்து வகை மற்றும் சம்பந்தப்பட்ட காலத்தைப் பொறுத்து வழக்கின் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத தன்மையை பொறுத்து ரூ. 10,000 முதல் ரூ.50,000 வரை கட்டணமாக வசூலிக்கலாம். உயர்நீதிமன்றங்களில் ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் கட்டணமாக வழக்கறிஞர்கள் பெறுகிறார்கள்.

வழக்கறிஞர்கள் வழக்குகளை நடத்துவதற்காக வாய்தாவிற்கும் கட்டணங்கள் வாங்குகிறார்கள். வாய்தாவிற்கு எவ்வளவு கட்டணம் வாங்குகிறார்கள் என்றால் 1000 முதல் 2000 வரை வழக்கறிஞர் கட்டணமாக வாங்குகிறார்கள் மேலும் வாய்தா விற்கு உயர்நீதிமன்றங்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கட்டணம் என்று வழக்கறிஞர்கள் வழக்கை நடத்துவதற்கு தங்களது கட்டணமாக பெறுகிறார்கள்.

மேலும் தக்கால் செய்யும் மனுகளுக்கு தனி கட்டண செலவுகள் வசூலிக்கப்டுகிறது.

விவாகரத்து வழக்கு எங்கு தாக்கல் செய்யவேண்டும். Where can a divorce case be filed?

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றால் எங்கே தாக்கல் செய்ய வேண்டும்.

என்ற விபரம் நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ஒரு வழக்கை தாக்கல் செய்ய குறிப்பிட்ட எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளது அந்த எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் தான் வழக்குகள் விசாரிக்கபடுகிறது.
அதன் விபரம் பின் வருமாறு.

விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய கணவன் அல்லது மனைவி கடைசியாக இருவரும் எங்கு கணவர் –மனைவியாக வாழ்ந்தார்களோ அந்த இடத்தில் வழக்கு போடலாம். இதற்காக நம்பகூடிய எழுத்துபூர்வமான ஆதாரம் வேண்டும்,

உதாரணம் – வாடகை ஒப்பந்தம், குடும்ப அட்டை.

கணவன் மனைவிக்கு திருமணம் நடைபெற்ற இடத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.

அதாவது எந்த ஊரில் திருமணம் நடைபெறுகிறதோ அந்த ஊர் தாலுகாவில் இருக்கக்கூடிய மாவட்ட நீதிமன்றத்திலோ அல்லது சார்பு நீதிமன்றத்திலோ அல்லது நேரடியாக குடும்பநல நீதிமன்றம் இருக்கிறது என்றால் குடும்ப நல நீதிமன்றத்திலோ விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய முடியும்.

திருமணம் செய்த ஊர் அல்லாத வேறு ஊரில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் வேறு ஊரில் கணவன்-மனைவி தம்பதிகளாக வாழ்ந்து இருக்க வேண்டும்.

அப்படி வேறு ஊரில் வாடகைக்கு இருந்தோ அல்லது வீட்டை வாங்கிய அங்கே தங்கியிருந்து கணவன்-மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் விவாகரத்து வழக்கில் சம்பந்தப்பட்ட தாலுகாவில் இருக்கக்கூடிய மேற்கண்ட நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்ய முடியும்.

*எடுத்துக்காட்டாக*

மாநகராட்சி எல்கைக்குட்பட்டது என்றால் மாவட்ட நீதிமன்றம் அல்லது குடும்ப நீதிமன்றம் மாநகராட்சிக்கு வெளியே என்றால் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். .

19/01/2024

*தாத்தாவின் பூர்வீக சொத்தில்* *பேத்திக்கு பங்கு உண்டா இல்லையா*

நமது நாட்டில் ஆரம்பத்தில் ஆண்களுக்கு தான் சொத்து என்றாலே பங்கு கொடுக்கபட்டது எதையும் அனுபவிக்கும் உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தது பின்னர் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கபட்டு 1956 சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் ஆண்களை போல் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்று கூறப்படுவது தொடர்பாக பல்வேறு புதிய கேள்விகள் எழுகின்றன. இதில் குறிப்பாக, தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது, பரம்பரை சொத்தில் அவரது மகன், மகள் ஆகியோருக்கு, சம உரிமை உண்டு என்று தான், இதற்கு பொதுவான விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை. தாத்தாவின் பெயரில் இருக்கும் சொத்துக்கும் பொருந்துமா என்பதில், பலருக்கும், குழப்பம் நிலவுகிறது.

சில இடங்களில். தந்தை சொத்தில் மட்டும் தான். பெண்களுக்கு சம உரிமை என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக, சட்ட வல்லுனர்கள் கூறும் ஆலோசனைகள்:

தாத்தாவின் பெயரில் இருக்கும் சொத்து, அவரது சுய சம்பாத்திய சொத்தாகவும், பரம்பரை வழியாக, அவர் பெயருக்கு வந்த சொத்தாகவும் இருக்கலாம். இதில், அவரது சுய சம்பாத்திய சொத்துக்கு ஒரு மாதிரியும், பரம்பரை சொத்துக்கு ஒரு மாதிரியும், விளக்கங்கள் கூறப்படுவதால், குழப்பங்கள் ஏற்படுகின்றன.

தாத்தா உயிருடன் இருக்கும் போதே, சுய சம்பாத்திய சொத்துகள், யார் யாருக்கு சென்று சேர வேண்டும் என்று, உயில் எழுதிவிட்டால், அதன் படியே பேரன், பேத்திகள் உரிமை பெற முடியும்.

ஆனால், உயில் எழுதப்படாத நிலையில், அவரது சுய சம்பாத்திய சொத்தில், பங்கு பிரிப்பது சற்று சிக்கலானது தான். குறிப்பாக, தாத்தாவுக்கு மகன், மகள்கள் எத்தனை பேர், அவர்களில், யார், யாருக்கெல்லாம் வாரிசுகள் இருக்கின்றனர் என்பதை, பார்க்க வேண்டும்.

அவரது உயில், எழுதப்படாத சுய சம்பாத்திய சொத்தை பிரிக்கும் போது, பாட்டி இருந்தால், அவருக்குள்ள உரிமையையும் கருத்தில் கொள்ள வேண்டும். பேரன் பேத்திகளின் பெற்றோர் உள்ளார்களா, அந்த பெற்றோரின் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்களது வாரிசுகள் ஆகியோரின் உரிமைகளையும், கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பரம்பரை சொத்து எனில், அது, எந்த வழியில் அவருக்கு வந்தது என்பதை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தான், அடுத்த வாரிசுகளுக்கான உரிமை உறுதி செய்யப்படும்.

சில சமயங்களில், குறிப்பிட்ட சொத்தின் பரம்பரை உரிமை, தாத்தாவுடன் முடிவடையலாம். இப்படி முடிவடையும் போது, அது, அவரது தனிப்பட்ட சொத்தாகி விடவும் வாய்ப்புள்ளது.

எனவே, இந்திய சொத்துரிமை சட்டம், இந்திய வாரிசுரிமை சட்டம் ஆகியவற்றில், அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில், பேரன், பேத்திகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டி நிவாரணம் தேடிக் கொள்ளலாம்.

19/01/2024

*மூத்த குடிமக்கள் நலம்*
*பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் 2007*

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களை பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் மற்றும் சொத்துக்கள் எதுவும் இல்லாத பொழுதும், உரிய பராமரிப்பு கிடைக்கவில்லையெனில் இச்சட்டத்தின் கீழ் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறலாம்.

பெற்றெடுத்த தாய் தந்தை மட்டுமல்லாது மாற்றாந் தாய் – தந்தை, வளர்ப்புத் தாய் – தந்தை ஆகியோரும் இச்சட்டத்தின் கீழ் பராமரிப்புத் தொகை கோரலாம். பிள்ளைகள் இல்லாத மூத்த குடிமக்கள் தனது சொத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர் அல்லது தனது காலத்திற்குப் பிறகு தனது சொத்தை அடைய இருப்பவர் ஆகியோர் மீதும் பராமரிப்புத் தொகை கோரி மனு செய்யலாம்.

*மனு செய்தல் முறை*

இச்சட்டத்தின் கீழ் பராமரிப்பு உதவித் தொகை கோரி மனு அளிக்க நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டியது இல்லை. கோட்டாட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தில் மனுவினை தாக்கல் செய்யலாம். இதற்கென தீர்ப்பாயங்கள் உட்கோட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பாயங்கள் ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருக்கின்றன.

*விண்ணப்பிக்கும் முறை*

பெற்றோர்களோ அல்லது மூத்த குடிமக்களோ தங்கள் இயலாமையின் காரணமாக நேரடியாகச் சென்று தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்ய இயலவில்லை என்றால் தங்களுக்கு பதிலாக வேறொருவரையோ அல்லது ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாகவோ மனு தாக்கல் செய்யலாம்.

*வழங்கப்படும் உதவிகள்*

இச்சட்டத்தின் கீழ் பெற்றோர்களுக்கு தீர்ப்பாயத்தால் வாழ்க்கை பொருளுதவிக்கு வகை செய்யும் ஆணைகளின் பேரில் தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக மாதம் ரூ. 10000-த்திற்கு மிகாத வகையில் பாரமரிப்புத் தொகை பெற்றுத் தர வழி வகை செய்யப்படும்.

*பராமரிப்பு தொகை வழங்கப்படாத பட்சத்தில் வழங்கப்படும் தண்டைகள்*

தீர்ப்பாயத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கிணங்க பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ தகுந்த காரணமின்றி செயல்படவில்லை எனில் ஒரு மாதத்திற்கான சிறைத் தண்டனையோ அல்லது பணம் செலுத்தும் வகையில் சிறைத் தண்டனையோ எது அதிகமோ அந்தக் காலம் வரை தண்டனை வழங்கப்படும்.

மூத்த குடிமக்களை ஆதரவற்ற நிலையில் விட்டுச் சென்றால், அம்மூத்த குடிமக்களை பராமரிக்கத் தவறியவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ரூ. 5000 அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக வழங்கப்படும்.

19/01/2024

*சர்பாசி சட்டம் – 2002*
(Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest)….

என்பதையே….

”SARFAESI ACT” என்று சுருக்கமாக அழைக்கிறோம். ஒரு பார்வை… சிறு அலசல்…

வங்கிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே ஒருவருக்கு கொடுத்த கடனை வசூலித்துக் கொள்வதற்கு இந்தச் சட்டம் முழு அதிகாரத்தைத் தருகிறது.

இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், “வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம்” என்ற அமைப்பின் உதவியையும் வங்கிகள் பெறலாம்.

இந்தச் சட்டம் கடந்த 2002ம் ஆண்டுதான் இயற்றப்பட்டது.
2002ம் ஆண்டுக்கு முன்பு வரை வங்கிகள் தன்னுடைய வாடிக்கையாளருக்கு வழங்கிய கடனை வசூலிக்க படாதபாடுபட்டு வந்தது.

அதற்கு வங்கியானது முதலில் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். வழங்கப்பட்டிருக்கும் கடன் தொகைக்கு ஏற்ப நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். கடனுக்காக ஜாமீனாக கொடுக்கப்பட்ட சொத்தை ஜப்தி செய்வதற்கு பல சட்ட நடைமுறைகளை பின்பற்றி, வழக்கை நடத்தி தீர்ப்பைப் பெற வேண்டும்.

ஆனால், இந்த சர்பாசி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. யாரையும் எதிர்பார்க்காமல், வங்கியானது தான் கொடுத்த கடனை தானே வசூல் செய்வதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்தது.

இந்தச் சட்டத்தின் கீழ், ‘கடன் வசூல் தீர்ப்பாயம்’ (Debt Recovery Tribunal) என்று ஒன்றும் ‘கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்’ (Debt Recovery Appellate Tribunal) என்று ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது..
இதில் எளிய முறையில் வங்கியானது கடன்காரர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். பிணைய சொத்தை வழக்கு தொடுப்பதற்கு முன்பாகவே வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட குற்றவியல் நடுவர் (DRO) மற்றும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக பற்றுகை செய்யலாம்.

நீதிமன்றம் பக்கம் போகும் வேலையே வங்கிக்கு இல்லை. அதே மாதிரி கடன்காரர்களும் கண்டபடி எதிர்வாதம் செய்யவும் முடியாது.

பிரிவு – 13

அடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளவர்கள், அதற்கு ஈடாக அளித்துள்ள சொத்துகளின் மீது சர்பாசி சட்டம் 2002 – பிரிவு 13-ன் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். ஒரு வேளை உத்தரவாத கையெழுத்திட்ட நபர்கள் அதற்கு ஈடாக நிறுவன பங்குகளைக் காட்டியிருந்தால் அவற்றை விற்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

பிரிவு – 17

வங்கியினுடைய சட்ட நடவடிக்கைளில் குறை ஏதாவது இருந்தால் அல்லது வங்கியானது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அது பற்றி கடன்பெற்றவர் சர்பாசி சட்டம் பிரிவு 17-இன்படி கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிடலாம்.

பிரிவு – 34

பிரிவு 34-இன்படி சர்பாசி சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வங்கிகள் செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி எவரும் இடைக்கால உறுத்துக்கட்டளை உள்ளிட்ட இடைக்கால நிவாரணம் எதையும் நீதிமன்றங்களில் இருந்து பெறவே முடியாது.

ஏனென்றால், அவைகளை வழங்குவதற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.

நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும்போது தனி நபர் பிணை அல்லது ஜாமீன் கேட்பது அவர்களின் வழக்கமான நடைமுறையாகும். சொந்தமாக ஜாமீன் அளித்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை மீட்கும் நடவடிக்கையை வங்கிகள் கடைசி பட்சமாகத்தான் மேற்கொள்கின்றது.

சொந்த ஜாமீன் அளித்தவர்களின் மீது கொடுத்த கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் எடுத்த நடவடிக்கை மிகக் குறைவாகும்.

கடன் மீட்பு தீர்ப்பாயத்துக்கு செல்லும் முன் உத்தரவாதம் அளித்த நபரின் சொத்துகளை முடக்கி அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை வங்கிகள் முதலில் எடுக்க வேண்டும்.

கடன் வாங்கிய ஒரு நிறுவனம் நஷ்டமாகி மூடப்பட்டு இருந்தால், அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சொந்த ஜாமீன் வழங்கியவர்களிடமிருந்து அந்தக் கடன் தொகையை வசூலிக்குமாறு நிதி அமைச்சகம் அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கு கடந்த 18.03.2016 அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கைகளை பிற தொழில் நிறுவனங்களின் தொழிலதிபர்களிடமும் மேற்கொள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி அனுப்பியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு கடன் அளித்த விஷயத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு சென்று விட்ட நிலையில் அவரிடமிருந்து, ”வழங்கிய கடனை” வசூலிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இதுபோன்ற நிலை பிற வாராக்கடனை செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக நிதி அமைச்சகம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

1) வழக்கு எண்: 2015 (1) CTC 526 (Mad)

சர்பாஸி சட்டத்தின் வாயிலாக வங்கி எடுத்து ஏலம் விட்ட சொத்தை ஒருவர் வாங்குகின்றார். அவ்வாறான ஏலத்திற்கு எடுத்த தொகைக்கு Sale Certificate வழங்கப்படுகின்றது. அந்த Sale Certificate அடிப்படையில் ஏலத்தில் சொத்தை எடுத்தவர் அதை பதிவு செய்ய முனையும்பொது, பதிவாளர் அந்த சொத்தின் அரசு மதிப்பிற்கு Stamp Duty செலுத்த சொல்கின்றார்.

உயர்நீதிமன்றமானது, section 47-A of the Indian Stamp Act, 1899, பொருந்தாது எனவும், Sale Certificate மதிப்பிற்கு Stamp Duty செலுத்துவதே சரி! என ஆணையிட்டுள்ளது.

2) வழக்கு எண்: 2016(2) CTC 319 (SC)

ஒருவர் வீட்டிற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அவர் வீட்டை வாடகைக்கு வீட்டை விட்டுள்ளார். இதற்கிடையில் வீட்டிற்காக வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாத நிலையில், வங்கியானது சர்பாஸி சட்டத்தை பயன்படுத்தி அந்த வீட்டின் உடமையை எடுக்க முயற்சி செய்கின்றது.

அப்போது ஒரு சட்ட வினா எழுகின்றது. வாடகைதாரர் குடியிருக்கும்போது, மேற்படி சட்டத்தை கொண்டு அவரை வாடகைதாரரை அங்கிருந்து அகற்றிவிட்டு அந்த வீட்டின் உடமையை எடுக்கு சர்பாஸி சட்டம் அனுமதிக்கின்றதா?

அதற்கு உச்சநீதிமன்றம் “சர்பாஸி சட்டத்தில் வாடகைதார்ர் இருக்கும்போது அவரை காலி செய்து உடமை எடுக்க அதிகாரம் இல்லை, எனவும் வாடகைதாரரை முறையாக சட்டப்படியாக அவரை அந்தவீட்டை விட்டு காலி செய்த பின்னரே அந்த வீட்டின் உரிமையை எடுக்க முடியும் என தீர்ப்பளித்துள்ளது.

3) வழக்கு எண்: 2015(4) CTC 18 (Mad)

சர்பாஸி சட்டத்தின்படி சொத்தின் உடமையை எடுக்கும் வகையில் வங்கியானது நீதிமன்றத்தில் ஆணையிட கோரியதில், வங்கி அதற்கான ஆணையை பிறப்பித்திருக்கும் நிலையில் (உடமை இன்னும் எடுக்கப்படவில்லை) சொத்தின் உரிமையாளர் DRT –ல் மேல்முறையீடு செய்கின்றார்.

வங்கியானது சொத்தின் உடமை இன்னும் எடுக்கபடாத்தால், மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று வாதிட்டதின் பேரில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகின்றது. சொத்தின் உரிமையாளரின் மேல்முறையீட்டின் உரிமையானது சொத்தின் உடமை எடுக்கப்படவில்லை என்பதை காரணமாக கொண்டு, எந்தவிதத்திலும் பாதிக்காது என தீர்ப்பளித்துள்ளது.

4) வழக்கு எண்: 2016 (3) CTC 66 (Mad).

SARFAESI சட்டத்தின் படி கடன் பெற்றவரின் சொத்துக்களை வங்கி எடுத்து கொள்கின்றது.

அந்த கடன் பெற்றவர் இந்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்பதால் வங்கியானது அந்த சொத்தை விற்கும்போது விற்ற பணத்தில் இருந்து முதலில் இந்திய சுங்கவரி துறையானது வரியை பெற உரிமை உள்ளது! என்ற வாதத்தை மேற்படி சட்டத்தின் பிரிவு 35 யை காட்டி சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

19/01/2024

*பிடியாணை (Warrant) என்றால் என்ன*

குற்றம் செய்த ஒருவரை அல்லது குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகின்ற ஒருவரை எங்கு பார்த்தாலும் கைது செய்து தன் முன்னால் ஆஜர் படுத்துவதற்கு காவல்துறைக்கு நீதிமன்றம் இடுகின்ற ஆணை பிடியாணை (Warrant) ஆகும்.

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-70 ஒரு பிடியாணை என்பது எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டு, நீதிமன்றத்தில் தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற அலுவலரால் கையெழுத்து போடப்பட்டு, அந்த நீதிமன்றத்தின் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பிடியாணை அதனை பிறப்பித்த நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகின்ற வரையிலோ அல்லது உரிய காவல்துறை அதிகாரியால் நிறைவேற்றப்படுகின்ற வரையிலோ அமுலில் இருக்கும்.

பிடியாணைகள் ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை, ஜாமீனில் விடமுடியாத பிடியாணை என்று இரண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

*ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை* *(Cr.P.C:71 - Bailable Warrant)*

ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால் அவரிடமிருந்து தக்க பிணையத்தை (Surity)பெற்றுக்கொண்டு அவரை காவல்துறை பாதுகாப்பில் இருந்து விடுவிக்கலாம் என்று அந்தப் பிடியாணையில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை ஆகும்.

*ஜாமீனில் விட முடியாத பிடியாணை* *(Non-Bailable Warrant)*

ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால், அவரை பிணையில் விடுவிக்க அந்த பிடியாணையில் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றால் அது ஜாமீனில் விடமுடியாத பிடியாணை ஆகும். இருந்த போதிலும், கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சமயத்தில், அவருக்கு அந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கலாம்.

*பிடியாணையின் சாராம்சம் (Cr.P.C:75)*

பிடியாணையினை நிறைவேற்றுகின்ற காவல்துறை அலுவலர் அல்லது வேறு நபர் அதில் கூறப்பட்டுள்ள சாராம்சத்தை கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு அறிவிக்க வேண்டும். அவர் பிடியாணையை பார்க்க வேண்டும் என்று கேட்டால் அதனை அவருக்கு காண்பிக்க வேண்டும்.

*24 மணி நேரத்திற்குள் ...(Cr.P.C:76)*

பிடியாணையின்படி கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடாத பட்சத்தில் அவரை 24 மணி நேரத்திற்குள் காவல்துறை அலுவலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்.

*பிடியாணையை நிறைவேற்றும் இடம்* *(Cr.P.C:77)*

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஒரு பிடியாணையை இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் நிறைவேற்றலாம்.

*குற்ற விசாரணை முறைச் சட்டம்* *பிரிவு-78*

ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு ஒரு பிடியாணையை பிறப்பிக்கும் நீதிமன்றம், அதன் அதிகார வரம்பிற்கு வெளியே அந்த பிடியாணையானது நிறைவேற்றப்பட வேண்டியதிருக்கும்போது, அந்த மாவட்ட நீதித்துறை நடுவர் அல்லது காவல் ஆணையர் அல்லது மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியவர்களில் ஒருவருக்கு தபால் மூலமாகவோ, அதனை அனுப்பி அதனை நிறைவேற்றச் செய்யவேண்டும்.

*குற்ற விசாரணை முறைச் சட்டம்* *பிரிவு-79*

ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையானது, அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நிறைவேற்றப்பட வேண்டியதிருந்தால், அந்தப் பகுதிக்குரிய நீதிமன்ற நடுவரிடமோ, தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரியிடமோ ஒப்புதல் கையொப்பம் பெறுவதற்கு அந்த பிடியாணை கடிதம் காவல்துறை அலுவலர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அப்பிடியாணையில் மேற்கண்ட அதிகாரிகளால் ஒப்புதல் செய்யப்பட்டால் அந்த காவல்துறை அலுவலர் அந்த பிடியாணையை நிரைவேற்றும் அதிகாரத்தை பெற்றவர் ஆவார்.

*குற்ற விசாரணை முறைச் சட்டம்* *பிரிவு-80*

சரி, பிடியாணையின்படி அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நியமிக்கப்பட்ட காவல்துறை அலுவலர் ஒருவரை கைது செய்து விட்டார். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?

பிடியாணையை பிறப்பித்த நீதிமன்றமானது (பிடியாணை கைதி) கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இல்லை என்றால், அந்த வட்டார எல்லைக்குள் அதிகாரமுடைய காவல்துறை அதிகாரி முன்னால் கைதியை ஆஜர் படுத்த வேண்டும்.

கைது செய்யப்பட்ட நபர் பிடியாணையில் குறிப்பிட்டுள்ளவர்தான் என்று தங்களுக்கு தோன்றினால், நீதித்துறை நடுவர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் ஆணையர் அந்த கைதியை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட வேண்டும். பிணையம் கொடுக்கக்கூடிய குற்றம் என்றால் பிணையம் கொடுக்கலாம். அந்த பிணைய பத்திரத்தை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

*குற்ற விசாரணை முறைச் சட்டம்* *பிரிவு-81*

பிணையில் விட முடியாத குற்றமாக இருந்தால், எந்த மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதோ அந்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அல்லது செஷன்ஸ் கோர்ட் நீதிபதியோ தக்க பரிசீலணை செய்து அந்த கைதியை பிணையில் விட உத்தரவிடலாம்.

19/01/2024

ஒருவர் தான் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டிருந்த நாலு கோடி ரூபாய் பொருத்து எந்த ஒரு ஏற்பாடும் செய்து வைக்காமல் இறந்துவிட்ட சூழ்நிலையில் அவரது வாரிசுகளில் இருவரை மட்டும் மேற்படி வைப்பீட்டுத் தொகைக்கு நாமினியாக நியமித்து சென்றுள்ள சூழ்நிலையில் பிற வாரிசுகள் அதில் தங்களுக்கு பாகம் உள்ளதாக கூறி பாகப்பிரிவினை வழக்கினை தாக்கல் செய்துள்ளனர் மேற்படி வழக்கினில் நாம்மினிகளால் வங்கியிலிருந்து பெற்றுக்கொண்ட தொகையில் அவர்களுக்கு உரித்தான பங்கினை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்திருந்த வழக்கினில் பிரதிவாதிகள் தரப்பில் மேற்படி வாதிகள் ஏற்கனவே பிரதிவாதிகளுக்கு எதிராக வங்கி வைப்பீட்டுத் தொகையினை பிரதிவாதிகளுக்கு கொடுக்கக் கூடாது என்றும் நிரந்தர தடையுறுத்து கட்டளை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கில் இடைக்கால தடை இல்லாத சூழ்நிலையில் பிரதிவாதிகளால் வங்கியில் இருந்து மேற்படி பணம் எடுத்துக் கொள்ளப்பட்டதால், வாதிகள் மேற்படி வழக்கினை திரும்ப பெற்றுக் கொண்டு இந்த பாகப்பிரிவினை வழக்கை தாக்கல் செய்துள்ளதால் இந்த வழக்கானது கட்டளை இரண்டு விதி இரண்டின் கீழ் பாதிப்புக்கு உள்ளாகிறது என்றும் மேலும் வாதிகள் பணம் வேண்டி இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதால் அவர்களால் நீதிமன்ற கட்டணம் சட்டம் 37 கீழ் கட்டணம் செலுத்த இயலாது என்றும் அவர்கள் சட்டப்பிரிவு 24 இன் கீழ் நீதிமன்ற கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் மேலும் வளர்க்க முடிவதற்கு முன்பு பிரதிவாதிகளை வாதிகளின் பங்குத் தொகையை நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய கோர இயலாது என்றும் எடுத்து வைக்கப்பட்ட வாதத்தினை ஏற்றுக்கொண்ட விசாரணை நீதிமன்றம் மேற்படி மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த சூழ்நிலை இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவினை ஆராய்ந்த சென்னை உயர்நீதிமன்றம் *ராஜலட்சுமி மற்றும் இருவர் _-எதிர்-_ பாலசுப்ரமணியம் மற்றும் பலர்* என்ற வழக்கினில் பாகப்பிரிவினை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அசையும் சொத்து அசையா சொத்து என்று பிரிவினை கிடையாது என்றும் எனவே சட்ட பிரிவு 37 உட்பிரிவு 2ன் கீழ் நீதிமன்ற கட்டணம் செலுத்தினால் போதுமானது என்றும் மேற்படி பிரிவு சொத்து வகைபாடுகளின் அடிப்படையில் எந்த ஒரு வேறுபாடுகளும் சொல்லவில்லை என்றும் எனவே சட்ட பிரிவு 24ன் கீழ் நீதிமன்றம் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மேலும் முந்தைய வழக்கான நிரந்தர தடைஉறுத்து கட்டளை வழக்கானது பாகப்பிரிவினை கோரும் வழக்கினை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் ஏனெனில் இரு வழக்கிற்குமான வழக்கு மூலமானது வேறுபடுகிறது என்றும் கூறி விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவினை ரத்து செய்து மேல்முறையீட்டினை அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.

19/01/2024

ஏற்றதை ஆற்றல் கோரிய வழக்கினில் தாவா சொத்து ஆள்வரைக்கு வெளியில் இருந்தாலும் தாக்கல் செய்ய இயலுமா?

வாதி பிரதிவாதிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொண்ட கிரைய ஒப்பந்தமானது சென்னையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள சூழ்நிலையில் ஆனால் தாவா சொத்தானது சென்னைக்கு வெளியே உள்ளதால் ஏற்றதை ஆற்றக் கோரிய வழக்கினை சென்னையில் தாக்கல் செய்துள்ளதால் மேற்படி வழக்கினை கோப்பிற்கு எடுத்துக் கொள்ள இயலாது என்று முதலாவது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றம் மறுத்துள்ள சூழ்நிலையில் இதனை எதிர்த்து வாதியால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவினை ஆராய்ந்த சென்னை உயர்நீதிமன்றம் *சோபன் குமார் எதிர் கருணாகரன் மற்றும் இருவர்* என்ற வழக்கினில் குறித்த வகை பரிகாரம் கோரி தாக்கல் செய்யப்படும் வழக்கானது நிலம் வழக்கு என்று சொல்ல இயலாது என்றும் மேற்படி வழக்கானது ஒப்பந்தம் சம்பந்தமான வழக்கு என்றும் இந்த வழக்கில் இறுதியாக இடத்தின் சுவாதீனம் எடுத்து தர வேண்டியது இருந்ததாலும் வழக்கானது நிலத்திற்கான வழக்கு அல்ல என்றும் பாகப்பிரிவினை, விளம்புகை, உருத்து கட்டளை போன்ற பரிகாரங்கள் இடம் சம்பந்தமாக கேட்கப்படும் பொழுது மட்டுமே அது நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு என்று குறிப்பிட இயலும் என்றும் இந்த வழக்கினை நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு என்றும் அந்த நிலமுள்ள இடத்தில் தான் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விசாரணை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது ஏற்க இயலாது என்றும் இந்த வழக்கினை கோப்பிற்கு எடுத்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

19/01/2024

பதிவு செய்யப்படாத கிரைய ஒப்பந்தம் மற்றும் பொது அதிகார பத்திரத்தின் அடிப்படையில் இடத்தின் சுவாதீனத்தை கோர இயலுமா?

வாதியால் அனுபவ சுவாதீனம் மற்றும் இடைக்கால பயன் வேண்டி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கானது வாதி தாவா சொத்தின் உரிமையை பதிவு செய்யப்படாத கிரைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், பதிவு செய்யப்படாத ஒரு பொது அதிகார பத்திரத்தின் அடிப்படையிலும் தனக்கு தாவா சொத்தின் உரிமையாளர் வழங்கி உள்ளதாக கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினில் பிரதிவாதி தான் இடத்தின் உரிமையாளரின் சகோதரர் என்றும் அவர் தனக்கு ஹிபா மூலம் மேற்படி இடத்தினை கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ள சூழ்நிலையில் இதனை ஆராய்ந்த விசாரணை நீதிமன்றம் வாதிக்கு அவர் கோரிய பரிகாரம் கிடைக்க தக்கது என்று உத்தரவிட்டுள்ளது. அதனை எதிர்த்து பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானதும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது இதனை எதிர்த்து பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் *"சகில் அஹமத் _-எதிர்-_ சையத் ஹுசைன்"* என்ற வழக்கினில் பதிவு சட்டம் சட்டப்பிரிவு 17 மற்றும் 49 மற்றும் சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 54 ஆகியவற்றின் கீழ் உரிமை மாற்றம் பெறும் ஆவணமானது கட்டாயமாக பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும் பதிவு செய்யப்படாத ஆவணத்தின் அடிப்படையில் கூற இயலாது என்றும் மேற்படி விடயத்தினை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே *சுராஜ் லேம்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் எதிர் ஹரியானா அரசு மற்றும் ஒருவர்* என்ற வழக்கினில் உறுதி செய்து இருப்பதாகவும் எனவே வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்று கூறி இந்த மேல்முறையீட்டினை அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.

19/01/2024

*சமரச மனம் முறிவு மனுவினை தரப்பினர்கள் நேரில் வராமல் காணொளி மூலம் தாக்கல் செய்ய இயலுமா?*

கணவன் மனைவி இருவரும் அமெரிக்காவில் குடியிருந்து வரும் சூழ்நிலையில் அவர்கள் அவர்களது அதிகாரம் பெற்ற முகவரின் மூலம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஒத்திசைவு மனம் முறிவிற்கு விண்ணப்பித்துள்ள சூழ்நிலையில் குடும்ப நல நீதிமன்றம் மனுவினை தாக்கல் செய்ய இரு மனுதாரர்களில் யாரேனும் ஒருவராவது நேரில் வரவேண்டும் என்றும் அவ்வாறு வராத சூழ்நிலையில் மேற்படி மனுவினை கோப்பிற்கு எடுத்துக் கொள்ள இயலாது என்றும் தெரிவித்து நிராகரித்துள்ள சூழ்நிலையில் இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் *ஐஸ்வர்யா ஸ்ரீதர் அவர்களுக்காக அவரது அதிகாரம் பெற்ற முகவர் புவனேஸ்வரி _-எதிர்-_ ஹரிஹர வெங்கட்ராமன் பாலசுப்ரமணியம் அவருக்காக அவரது அதிகாரம் பெற்ற முகவர் பாலசுப்ரமணியன்* என்ற வழக்கினில் ஆராய்ந்த உயர் நீதிமன்றம் மேற்படி வழக்கினை இந்த சீராய்வு மனுவில் மனுதாரர் ஏற்கனவே சேர்ந்து வாழக்கோரி ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார் என்றும் அதேபோல் எதிர்மனுதாரர் விவாகரத்துக் கூறி ஒரு வழக்கினை தாக்கல் செய்திருந்தார் என்றும் மேற்படி அவர்கள் இருவருக்குள் கடந்த 13.12.2022 அன்று ஏற்படுத்திக் கொண்ட சமரச முடிவின்பால் இந்த மணமுறிவு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் 5 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் பிரிந்து வாழ்வதாலும் உச்ச நீதிமன்றம் *சாந்தினி எதிர் விஜயா வெங்கடேஷ்* மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் *ஆதித்யா ஜெகநாத் எதிர் யாரும் இல்லை* என்ற வழக்குகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேற்கோள் காட்டி வழக்கினை காணொளி மூலம் நடத்தலாம் என்றும் தரப்பினர்கள் காணொளியில் பங்கேற்கலாம் என்றும் அதனை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் சமரச வழக்குகளை மேற்கொள்ளலாம் என்றும் அதனை விடுத்து தரப்பினர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது என்றும் தெரிவித்து இந்த வழக்கினை கோப்பிற்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டதுடன் ஆறு மாத காலத்தினை குறைத்துக் கொடுக்கும் முடிவினை குடும்ப நீதிமன்றமே மனுவினைப் பொறுத்து தீர்மானிக்கலாம் என்று கூறி உத்தரவிட்டுள்ளது.

19/01/2024

*பிரிபடாத கூட்டு குடும்ப சொத்துக்களில் கூட்டு பங்குதாரர்களுக்கு தனது பங்கினை தானமாகவோ அல்லது செட்டில்மென்டாகவோ எழுதினால் அது செல்லுமா?*

*கதை சுருக்கம்:*
வாதி தாவா சொத்தில் ஒரு பகுதியானது தனது தந்தைக்கு பிதுராஜித வகையில் கடந்த 5.9.1955 அன்று தனது தந்தை/ 1ம் பிரதிவாதி மற்றும் அவரது சகோதரர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட பாகப்பிரிவின் அடிப்படையில் பாத்தியப்பட்டது என்றும் மீதமுள்ள சொத்துக்கள் மேற்படி பாகப்பிரிவினை அடிப்படையில் வந்த சொத்துக்களின் வருமானத்தின் அடிப்படையில் வாங்கப்பட்ட சொத்துக்கள் ஆகும். வாதியின் தந்தை மேற்படி சொத்துக்களை இரண்டாம் பிரதிவாதியான தனது மகனுக்கும் அவரது மகன்களுக்கும் கடந்த 2002 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் எழுதி வைத்துள்ள நிலையில் மேற்படி சொத்துக்களில் வாதியும் ஒரு பங்குதாரர் என்பதால் அவரது சம்மதம் இல்லாமல் கர்த்தானவர் எந்த ஒரு பங்குதாரருக்கும் தானமோ செட்டில்மெண்டோ செய்ய இயலாது என்றும் ஆதலால் மேற்படி செட்டில்மெண்டுகள் செல்லாது என்றும் தனக்கு சொத்தில் மூன்றில் ஒரு பங்கு உள்ளதாக பாகம் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

*வழக்கு விவரம்:*
வாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த விசாரணை நீதிமன்றம் 2004 ஆம் ஆண்டிற்கு முன்பு செட்டில்மெண்ட் செய்து விட்டதால் பெண்களுக்கு இந்து வாரிசுரிமை திருத்த சட்டம் 2005 அடிப்படையில் உரிமை வருவதற்கு முன்பே இந்த செட்டில்மெண்ட் செய்து விட்டதால் வாதி பாகம் கோர இயலாது என்று குறிப்பிட்டு வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதனை எதிர்த்து வாதியால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவான *கலாவதி -எதிர்- ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் 3 நபர்கள்* என்ற வழக்கில் உயர்நீதிமன்றம் வாதி தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதமான கூட்டு பங்குதாரரின் அனுமதி இன்றி கூட்டு பங்கு சொத்துக்களில் எந்த நபருக்கும் அந்த சொத்து குறித்து தானம் மற்றும் கிரையம் எழுத இயலாது என்றும் அவ்வாறு எழுதினால் அது செல்லாது என்றும் குறிப்பிட்டு அதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் *தமன்னா வெங்கடசுப்பம்மா _எதிர்_ தமன்னா ராட்டன்ன மற்றும் பலர்* என்ற வழக்கினை மேற்கோள்காட்டி தானம் மற்றும் செட்டில்மெண்ட் செல்லாது என்று குறிப்பிட்ட நிலையில் மேற்படி வழக்கினில் ஆராய்ந்து பார்க்கும் பொழுது அதை தானமாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் விடுதலை செய்ததாக எடுத்துக் கொள்ளலாம் என்று இருப்பதால் செட்டில்மெண்ட் செய்வதற்கு தான் தடை உள்ளதை தவிர விடுதலை செய்வதற்கு தடை இல்லை என்பதால் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் ஆனாலும் அவரால் அவருடைய பங்கை மட்டுமே எழுதிக் கொடுக்க இயலும் என்றும் செட்டில்மெண்ட் அல்லது கொடை செய்வதன் மூலம் இடம் பிரிபட்டதாக ஆகாது என்றும் மேற்படி சொத்தானது பிதுராஜித வகையான சொத்து என்ற தன்மை மாறவில்லை என்பதால் வாதிக்கு மேற்படி சொத்தில் மூன்றில் ஒரு பங்கு பாத்தியப்பட்டது என்றும் விசாரண நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

*சென்னை உயர் நீதிமன்றம்*

*A.S. No 63/2012*

*Kalavathy -Vs- Sriramulu Naidu and 3 others*

Dt. 07.06.2023

Address

Madurai
PH:9043043099

Telephone

+919043055661

Website

Alerts

Be the first to know and let us send you an email when YP Law Associates Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to YP Law Associates Madurai:

Share