Bharathkumar Law Office

Bharathkumar Law Office Legal Services l Criminal Lawyer I Civil Lawyer l Kovilpatti l Thoothukudi

07/10/2025

பத்திர பதிவு அலுவலகத்தில் (Sub Registrar Office) பயன்படுத்தப்படும் தடங்கள் மனு
விளக்கம்

இது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் “Obstruction Petition” அல்ல,
ஆனால் ஒரு நிலம் அல்லது சொத்துக்கான பதிவு தற்காலிகமாக தடுக்க பதிவு அலுவலகத்தில் அளிக்கப்படும் தடங்கள் மனு (protest Petition) ஆகும்.

இதைப் பொதுவாக “தடங்கள் மனு” / “protest Petition” / “Objection Petition” என்று அழைக்கிறார்கள்.

தடங்கள் மனு

பத்திர பதிவு அலுவலகத்தில் ஒருவர் ஒரு சொத்துக்கு சம்பந்தப்பட்ட பதிவு நடைபெறாமல் இருக்க கோரி அளிக்கும் எழுத்து மனுவே “தடங்கள் மனு” எனப்படுகிறது.

அதாவது:

இந்த நிலம் குறித்து வழக்கு நடக்கிறது / சொத்து உரிமை சர்ச்சை நிலையில் உள்ளது / போலி ஆவணம் தயாராகிறது”என்பதுபோன்ற காரணங்களால், அந்த நிலம் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்யாமல் இருக்க வேண்டி மனு அளிக்கப்படுகிறது.

சட்ட அடிப்படை

இந்த நடைமுறை Registration Act, 1908-ன் கீழ் நேரடியாக குறிப்பிடப்படவில்லை,
ஆனால் Tamil Nadu Registration Department Circulars மூலம் அனுமதிக்கப்பட்டது.

Inspector General of Registration Circular No. 67/2011

Circular No. 10/2015, Circular No. 4/2022
அதாவது,

District Registrar (Administration) அல்லது Sub-Registrar ஒருவர்
தகுந்த ஆதாரங்கள் இருந்தால் “Tadangal Note” அல்லது “Stop Registration Note” என்ற வகையில்
குறிப்பைச் சேர்க்கலாம்.

தடங்கள் மனு கொடுக்கும் நிலைகள்

1. நிலம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது

2. போலி ஆவணம் தயாராகும் சந்தேகம் ஏற்பட்டால்

3. மைனர் (Minor) சொத்து விற்பனை செய்யப்பட முயற்சித்தால்

4. குடும்பப் பிரிவு இல்லாமல் ஒருவர் தனியாக விற்றால்

5. மரபுரிமை உரிமை பற்றிய சர்ச்சை இருந்தால்

தடங்கள் மனு கொடுக்கும் நடைமுறை

மனு தயார் செய்தல்

மனு சமர்ப்பிக்கும் நடைமுறை

மனுவில் சேர்க்க வேண்டிய விவரங்கள்:
விவரம் விளக்கம்

மனுதாரர் பெயர், முகவரி உங்கள் முழு விவரம்

சொத்து விவரம் Survey No, Village, Taluk, District

மனுவுக்கான காரணம் வழக்கு, சர்ச்சை, போலி ஆவணம்

ஆதார ஆவணங்கள் Court Copy, Patta, Sale Deed, Aadhar copy
மனுதாரர் கையொப்பம் Self attested

மனு தருவதற்கான காரணம் (உதா: வழக்கு, தடை உத்தரவு, உரிமை சர்ச்சை)

ஆதார ஆவணங்கள் (உதா: patta, court copy, family tree)

மனு சமர்ப்பிக்கும் இடம்

சம்பந்தப்பட்ட Sub Registrar Office-இல்
அந்த நிலம் பதிவு செய்யப்படும் பகுதியில் மனு கொடுக்க வேண்டும்.

ஒரு copy-ஐ District Registrar (Administration) கும் அனுப்புவது சிறப்பு

பதிவு அலுவலக நடவடிக்கை

மனுவை பெற்ற பின், Sub Registrar ஒரு "Tadangal Note" பதிவு சிஸ்டத்தில் சேர்ப்பார்.

அந்த Survey Number / Document Number-க்கு “Objection Note” சேர்க்கப்படும்.

இதனால் அந்த நிலத்துக்கான புது ஆவணம் பதிவு செய்ய முடியாது,
District Registrar அனுமதி இல்லாமல்.

தடங்கள் மனுவை கொடுத்தால் அது நிலையான தடையில்லை — தற்காலிகமானது.

District Registrar விசாரணை செய்து, போதுமான ஆதாரம் இல்லாவிட்டால்
அந்த “protest petition” நீக்கலாம்.

உண்மையான உரிமை சர்ச்சை இருந்தால் நீதிமன்ற இடைக்கால தடை (Injunction Order) பெறுவது சிறந்தது.

தடங்கள் குறிப்பு (Tadangal Note) சேர்க்கப்பட்ட பின்

சிஸ்டத்தில் Survey Number அடிப்படையில் “Stop Registration Note” தோன்றும்

அதே சொத்துக்கான எந்தவொரு Sale Deed / Settlement / Gift deed ஆகியவையும் பதிவு செய்ய முடியாது

District Registrar அனுமதி பெறாமால் அந்த பதிவு நடக்காது

தடங்கள் நீக்கம் (Removal of Tadangal)

யாராவது தவறான தகவல் அடிப்படையில் தடங்கள் மனு கொடுத்திருந்தால்:

1. உரிமையாளர் District Registrar (Admin)-க்கு “Removal Petition” அளிக்கலாம்

2. இரு தரப்பும் அழைக்கப்பட்டு விசாரணை நடக்கும்

3. உண்மை ஆதாரத்துடன் உரிமை உறுதி ஆனால்
→ Tadangal Note நீக்கப்படும்

4. அதற்கான ஆணை பதிவு அலுவலகத்தில் சேர்க்கப்படும்

தவறான தடங்கள் மனு கொடுத்தால் என்ன ஆகும்?

தவறான/தீங்கிழைக்கும் நோக்கத்தில் மனு கொடுத்தால்
அது Misuse of Process எனக் கருதப்படும்

மனுதாரருக்கு Section 182, 211 IPC அடிப்படையில்
பொய்மனு / Malicious Complaint வழக்கு போடலாம்

District Registrar மனுவை கருப்பு பட்டியல் (Black List)-இல் சேர்க்கலாம்

முடிவு (conclusion)

அம்சம் விவரம்

நோக்கம் போலி பதிவு தடுக்கல் / சொத்து சர்ச்சை அறிவித்தல்
மனு அளிக்கும் இடம் Sub Registrar / District Registrar (Admin)
முடிவு “Tadangal Note” சேர்க்கப்படும்
செல்லுபடியாகும் காலம் விசாரணை முடியும் வரை அல்லது நீதிமன்ற உத்தரவு வரும் வரை
நீக்கம் District Registrar விசாரணை மூலம்

PJ.பாரத்குமார் MA.,BL.,
வழக்கறிஞர்
கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம்.

பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சட்டப்படியாக அதற்கு எந்தெந்த வகையில் நடவடிக்கை எடுப்பார்கள்?பொதுச்சொத்திற்கு சேதம் வ...
10/09/2024

பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சட்டப்படியாக அதற்கு எந்தெந்த வகையில் நடவடிக்கை எடுப்பார்கள்?

பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை எடுக்கும் முறைகள்!

ரயில் மறியல், பஸ் மறியல், பஸ்ஸை கொழுத்துவது, சேதப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்பது போன்ற அத்துமீறல்கள் நம் அரசியல் பாரம்பரியமாகிப் போனது. அரசின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த பல அரசியல் கட்சிகள் சுய விளம்பரம் மற்றும் சுய லாபத்திற்காக செய்யும் சில ஆபத்தான அபத்த காரியங்களே இவை.

ஒரு மரம் வளர பல ஆண்டுகள் பிடிக்கும். வளர்ந்த பின், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தனது கிளைகளாலும், இலைகளாலும் நிழலைத்தந்து, காய், கனிகளை வழங்கி, மழை தந்து, மனித இனத்திற்கு அளப்பரிய தொண்டாற்றுபவை மரங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது மனித இனத்தையே வெட்டிச் சாய்ப்பதற்கு சமமாகும்.

சரி, இவற்றை செய்பவர்களுக்கு தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 சொல்லும் நடவடிக்கைகளைப் பற்றி பார்ப்போம்

தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992

Tamilnadu Property (prevention of Damage &Loss) Act,1992

சட்ட எண்: 59/1992

பொருள் வரையறைகள்- (பிரிவு 2)

“அரசு” என்றால் மாநில அரசு என்று பொருள்படும்.

“கேடு” (Mischief) என்பது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 425 ஆம் பிரிவின் உள்ள அதே பொருளைக் கொண்டதாக இருக்கும்;
“அரசியல் கட்சி” என்றால், 1968-ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் அளிப்பு) ஆணையின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி என்று பொருள்படும்;
“சொத்து” என்றால், கீழ்க்குறித்துள்ளவற்றில் ஏதொன்றுக்கும் சொந்தமான அல்லது அதன் உடைமையிலுள்ள அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள அசையும் அல்லது அசையாச் சொத்து அல்லது இயந்திரம் எதுவும் என்றும் பொருள்படும்.

மத்திய அரசு; அல்லது
மாநில அரசு; அல்லது
உள்ளூர் அதிகார அமைப்பு ஏதொன்றும்; அல்லது
தமிழ்நாடு மாநில மின்சார வாரியம்; அல்லது
இந்த மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஏதொன்றும்; அல்லது
1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்திக் கீழ்ப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்பட்டுள்ள, ஒரு நிலவள வங்கி உள்ளடங்களாக, கூட்டுறவுச் சங்கம் ஏதொன்றும்; அல்லது
நாடளுமன்றத்தாலோ அல்லது இந்த மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையாலோ நிறைவேற்றப்பட்ட சட்டம் ஏதொன்றின்படியேனும் அமைத்துருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனம் ஏதொன்றும்; அல்லது,

மத்திய அரசு அல்லது மாநில அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஏதொன்றும்; அல்லது
ஏதேனும் நிலையம், வணிக அமைப்பு அல்லது தொழில் நிறுவனம்; அல்லது
ஏதாவது நிறுவனம்
விளக்கம்: இந்தக் கூற்றின் படி “நிறுவனம்” என்பது ஏதேனும் கூட்டமைப்பு எனப் பொருள்படும் மற்றும் இதில் பொறுப்பாட்சி, நிறுவனம், சங்கம் அல்லது தனி ஆட்களைக் கொண்ட கழகம் உள்ளடங்கும்.

சொத்தைப் பொறுத்த அளவில் கேடு செய்வதற்கான தண்டனை (பிரிவு 3)

Punishment for committing mischief in respect of Property

சொத்து எதனையும் பொறுத்த அளவில், செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்து, அதன் மூலம் அத்தகைய சொத்திற்கு நூறு ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையளவிற்குச் சேதம் அல்லது இழப்பை விளைவிக்கின்ற அல்லது,

எந்த நோக்கத்திற்காகவேனும் பொதுமக்களுக்கோ அல்லது நபர் எவருக்குமோ தண்ணீர் வழங்கும் அளவைக் குறைத்தலையோ, அல்லது பொது வடிகால் ஏதேனும் வழிந்தோடுதலையோ அல்லது அதற்குத் தடங்கலையோ விளைவிக்கின்ற அல்லது பெரும்பாலும் விளைவிக்கக்கூடும் என்று தாம் அறிகின்ற செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்கின்ற அல்லது
பொதுச்சாலை, பாலம் அல்லது இயற்கையான அல்லது செயற்கையான நீர்வழிப்போக்கு வரவுக்குரிய கால்வாய் எதனையும் பயணஞ் செய்வதற்கோ அல்லது பாதுகாப்பு குன்றியதாக ஆக்குகின்ற செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்கின்ற எவரொருவரும்

ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது, போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனும் இருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு ஓராண்டிற்கும் குறைவானதொரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

தீ அல்லது வெடிபொருள் மூலமாகப் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிக்கின்ற கேடு: (பிரிவு 4,)

Mischief causing damage to Property by Fire or Explosive Substance

சொத்து எதற்கேனும் நூறு ரூபாய் அல்லது அதற்கு மேம்பட்ட தொகையின் அளவிற்குச் சேதம் விளைவிக்கும் உட்கருத்துக்கொண்டோ, அல்லது தன்செயலின் மூலம் தான் சேதத்தைப் பெரும்பாலும் அதற்கு விளைவிக்கக்கூடும் என்பதை அறிந்தோ, தீ அல்லது வெடிப்பொருள் எதனின் மூலமாகவேனும் கேடு செய்கின்ற எவரொருவரும் இரண்டாண்டுகளுக்குக் குறைவானதாக இருக்கக்கூடாத, ஆனால் பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு காலளவிற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனுமிருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு, இரண்டாண்டுக்கும் குறைவானதொரு காலஅளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

மோட்டர் வாகனங்களில் பயணஞ் செய்கின்றவர்கள் மீது கற்கள், செங்கற்கள் முதலானவற்றை எறிவதற்கான தண்டனை:- (பிரிவு 5)

Punishment for throwing stones, Bricks, etc., upon persons travelling in motor vehicles

மோட்டர் வாகனங்களில் எதிலேனும் பயணஞ்செய்கின்ற நபர்கள் மீது கற்களையோ, செங்கற்களையோ, சோடா பாட்டில்களையோ அல்லது பிற பொருள் எதையேனும் எறிகின்ற செயலைச் செய்கின்ற அல்லது அதைத் தூண்டிவிடுகின்ற அல்லது ஏவிவிடுகின்ற அல்லது அதற்கு மற்றபடி உடைந்தையாயிருக்கின்ற எவரொருவரும், ஆறு திங்களுக்குக் குறையானதாக இருக்கக்கூடாத, ஆனால் ஐந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனுமிருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவானதொரு காலஅளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

விளக்கம்: இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக “இயக்கூர்தி” (மோட்டார் வாகனம்) என்பது 1988-ஆம் ஆண்டு இயக்கூர்திகள் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (28)- ஆம் கூறிலுள்ள அதே பொருளைக் கொண்டதாக இருக்கும்.

ஜாமீன் குறித்துத் தனியான வகைமுறை ( பிரிவு 6.)

Special Provision regarding Bail

இந்தச் சட்டத்தின்படி, தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயலொன்றைச் செய்துள்ளத்தாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள அல்லது தண்டனைத்தீர்ப்பு, வழங்கப்பட்டுள்ள நபரெவரும், அவர் காவலில் இருப்பாராயின், விடுவிக்கப்படுவதற்கான விண்ணப்பத்தை எதிப்பதற்கான வாய்ப்பொன்று குற்றவழக்குத் தொடரும் அரசு தரப்புக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றாலன்றி (மற்றவர் அளிக்கும்) பிணையத்தின் (ஜாமீன்) பேரிலோ, அல்லது சொந்தப் பிணைமுறிவின் பேரிலோ விடுவிக்கப்படுதல் ஆகாது.

இழப்பீடு செலுத்துவதற்கான ஆணை (பிரிவு 7)

(Order to pay Compensation)

இந்தச் சட்டத்தின் படியான குற்றச் செயலொன்றுக்காகப் பணத்தடையை விதிக்குங்கால், நீதிமன்றமானது, தீர்ப்புரை வழங்குகையில், வசூலிக்கப்பட்ட பணத்தண்டனைத்தொகை முழுவதும் அல்லது அதன் பகுதி எதுவும்; -

குற்றவழக்குத் தொடர்ந்த நடவடிக்கையில் முறையாக ஏற்பட்ட செலவுகளைக் கொடுத்துத் தீர்ப்பதற்கு;

அக்குற்றச்செயலால் விளைவிக்கப்பட்ட இழப்பு அல்லது ஊறு எதற்குமாக, நபரெவருக்கேனும் இழப்பீடு செலுத்துவதற்கு;
பொதுச்சாலை, பாலம் அல்லது இயற்கையான அல்லது செயற்கையான நீர்வழிப் போக்குவரவுக்குரிய கால்வாய் ஏதொன்றும் உள்ளடங்கலாக, அப்பொதுச் சொத்திற்குப் பதிலாக வேறொன்றை அமைத்துத் தருவதற்கு அல்லது நேர்விற்கேற்ப, முன்பிருந்த நிலைக்கு அதை மீட்டளிப்பதற்குப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று ஆணையிடலாம்.

மேல்முறையீட்டிற்குட்பட்ட வழக்கொன்றில் பணத் தண்டனையனது விதிக்கப்படுமாயின், அம்மேல்முறையீட்டினை முன்னிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட கால அளவு முடிவடைவதற்கு முன்னரோ, அல்லது மேல்முறையீடானது முன்னிடப்பட்டிருந்தால், அம்மேல்முறையீட்டில் தீர்ப்பளிப்பதற்கு முன்னரோ, அவ்வாறு பணஞ்செலுத்துதல் கூடாது.

இந்தப் பிரிவின்படியான ஆணையொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றமோ, அல்லது தனது சீராய்வு அதிகாரங்களைச் செலுத்தும் போது உயர்நீதிமன்றமோ கூடப்பிறப்பிக்கலாம்.
அதே பொருள் குறித்த பிந்தைய உரிமையியல் வழக்கெதிலேனும் இழப்பீட்டினை வழங்கு காலத்தில், நீதிமன்றமானது, இந்தப் பிரிவின்படி இழப்பீடாகச் செலுத்தப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்ட தொகை எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

வேறுவிதமாக வகை செய்யப்பட்டவாறல்லாமல், பணத்தண்டனையானது ஒரு பகுதியாக அமைந்திராத தண்டனையொன்றை நீதிமன்றமொன்று விதிக்கின்றபோது, அந்நீதிமன்றமானது, தீர்ப்புரை வழங்குகையில், எந்தச் செயலுக்காகக் குற்றஞ்சுமத்தப்பட்ட நபருக்கு அவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ, அந்தச் செயலின் காரணமாக இழப்பு அல்லது ஊறு எதையேனும் உற்றிருக்கின்ற நபருக்கு இழப்பீடு என்கின்ற வகையில், அந்த ஆணையில் குறித்துரைக்கப்படக்கூடிய தொகையை செலுத்துமாறு குற்றஞ்சுமத்தப்பட்ட நபருக்கு ஆணையிடலாம்.
குற்றச் செயல்களை விசாரணை செய்வதற்கான அதிகாரம்: - (பிரிவு 8)

Power to try Offences

பெருநகர் தலைமைக் குற்றவியல் நடுவரொருவரின் நீதிமன்றத்திற்கு அல்லது அமர்வு நீதிமன்றத்திற்குக் கீழமைந்த நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க குற்றச்செயல் ஏதொன்றையும் விசாரணை செய்தல் ஆகாது.

குறித்த சில நேர்வுகளில் இழப்பீட்டைச் செலுத்துவதற்கான கடப்பாடு(பிரிவு 9.)

(Liability to pay Compensation in Certain Cases)

இந்தச் சட்டத்தின் என்ன அடங்கியிருந்தபோதிலும், அரசியல் கட்சியொன்றினாலோ, வகுப்பு, மொழி அல்லது இனக் குழுவொன்றினாலோ ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம், ஒருங்கு கூடுகை, சட்டம், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம் எதனின் அல்லது பிற நடவடிக்கை எதனின் பேரிலும் இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்கதான குற்றச்செயலொன்று செய்யப்பட்டிருக்குமிடத்து, அந்தக் குற்றச் செயலானது அத்தகைய அரசியல் கட்சியாலோ, அல்லது வகுப்பு, மொழி அல்லது இனக்குழுவினாலோ செய்யப்பட்டிருப்பதாகவுங்கூட அனுமானிக்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அத்தகைய அரசியல் கட்சியோ அல்லது வகுப்பு மொழி அல்லது இனக்குழுவோ, சொத்து எதற்கும் விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்கான இழப்பீட்டை இந்தச் சட்டத்திற்கும் மற்றும் அதன்படி செய்யப்படும் விதிகளின் வகைமுறைகளுக்கும் இணங்கச் செலுத்துவதற்குக் கடப்பாடுடையதாக இருத்தல் வேண்டும்.

இழப்பீட்டுக் கோரிக்கை (பிரிவு 10.)

Claim For Compensation

சொத்திற்கு விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்காகக் கேட்கப்படும் இழப்பீட்டுல் கோரிக்கை எதுவும்,
அவ்வாறான சேதம் (அ) நட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஏதேனும் நபர் ஒருவரால்; அல்லது
பிரிவு 2-ன் கூறு (4) உட்கூறு (a) முதல் (i) வரையில் குறிப்பிடப்பெற்ற அதிகார ஆயத்தினால் அதிகாரமளிக்கப்பெற்ற ஏதேனும் அலுவலரால் செய்து கொள்ளப்படுதல் வேண்டும்.
சொத்திற்கு விளைவிக்கப்படும் சேதம் அல்லது இழப்பிற்காகக் கேட்கப்படும் இழப்பீட்டுக் கோரிக்கைக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப் படக்கூடிய படிவத்தில் இருக்க வேண்டுமென்பதடன், வகுத்துரைக்கப்படக்கூடிய விவரங்களைக் கொண்டிருத்தலும் வேண்டும்.
பிரிவு 11 இழப்பீட்டை முடிவு செய்வதற்கான அதிகார அமைப்பு:

Authority to Decide Compensation

சொத்திற்கு விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்காகக் கேட்கப்படும் இழப்பீட்டுக் கோரிக்கை ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படக்கூடிய அதிகார அமைப்பினிடம் செய்துகொள்ளப்படுதல் வேண்டும் என்பதுடன், அதன்பேரில் அதன் முடிவே இறுதியானதாகும்; மேலும், நீதிமன்றம் எதிலும் அதற்கு ஆட்சேபம் எழுப்பப்படுதலுமாகாது.
பொதுச் சொத்திற்கு விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்கான இழப்பீட்டின் அளவைகுறித்து முடிவுக்கு வருவதில் (1)-ஆம் உட்பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பானது.
அச்சொத்தின் மதிப்பு:
அப்பொதுச் சொத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் அளவு, மற்றும்
வகுத்துரைக்கப்படகூடிய பிற விசயங்கள்
ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

(1)-ஆம் உட்பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பு, இழப்பீட்டிற்கான கோரிக்கையை முடிவுசெய்வதில், வகுத்துரைக்கப் படக்கூடிய நடைமுறையைப் பின்பற்றுதல் வேண்டும்.

(1)-ஆம் உட்பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பானது,
உறுதிமொழியின் பேரில் சாட்சியம் எடுக்கின்ற;
சாட்சிகள் முன்னிலையாவதை வலியுறுத்துகின்ற;
ஆவணங்களையும் முக்கிய சான்றுப் பொருள்களையும் வெளிக்கொணர்கின்ற மற்றும் அவற்றை தாக்கல் செய்கின்ற நோக்கத்திற்காகவும்; மற்றும்
வகுத்துரைக்கப்படக்கூடிய பிறநோக்கங்களுக்காகவும்,
- ஆம் ஆண்டு உரிமை வழக்கு விசாரணைமுறைத் தொகுப்புச் சட்டத்தின்படி உரிமைவழக்கு நீதிமன்றமொன்றிற்குள்ள அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருக்கும்.
இழப்பீடானது நிலவரி நிலுவையைப் போன்றே வசூலிக்கப்படுதல் (பிரிவு 12)

Recovery of Compensation as Arrear of Land Revenue

11-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி வகுதுரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பு, சொத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் அல்லது இழப்பு எதற்குமான இழப்பீட்டுத்தொகை நிர்ணயிக்கப்பட்டதன் பேரிலும்

10-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் படி நபரின் விண்ணப்பத்தின் பேரில் அல்லது வகுத்துரைக்கப்பட்டுள்ள அலுவலரின் விண்ணப்பத்தின் பேரிலும் அத்தொகைக்கான சான்றிதழொன்றை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கலாம்; மாவட்ட ஆட்சியரும், நிலவரி நிலுவையொன்றைப் போன்ற அதே முறையில், அதனை வசூலிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மேல்முறையீடு (பிரிவு 12 A)

Appeal

பிரிவு 11-ன் உட்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பெற்ற அதிகார ஆயத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்திரவினால் பாதிப்புற்ற ஏதேனும் நபர், வகுத்துரைக்கப்பட்ட அவ்வாறான கால அளவிற்குள், இதன் பொருட்டு அரசினால் குறிப்பிடப்பெற்ற அவ்வாறான அதிகாரிக்கு, குறிப்பிடப்பெற்ற அவ்வாறான வகையில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
மேல்முறையீட்டினை முடிவு செய்திட, உட்பிரிவு (1)-ன் கீழ் குறிப்பிடப்பெற்ற அதிகாரி, வகுத்துரைக்கப்படவாறான நடைமுறைவினைப் பின்பற்றிடுவார் மற்றும் அவ்வாறான மேல்முறையீட்டில் அவ்வாறான அதிகாரியின் முடிவே இறுதியானதாகும் மற்றும் அம்முடிவிற்கு யாதொரு நீதிமன்றத்திலும் வினா எழுப்பிட இயலாது.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம் (பிரிவு 13.)

Power to make Rules

அரசு இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
மேற்சொன்ன அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு ஊறின்றி, அத்தகைய விதிகள்:
இழப்பீட்டிற்கான விண்ணப்பமொன்று எந்த அலுவலரால் செய்துகொள்ளப்படவேண்டும் என்பதற்கும்.
இழப்பீட்டிற்கான விண்ணப்பத்தைப் பொறுத்த அளவில், இழப்பீட்டிற்கான விண்ணப்பத்தின் படிவம், அதில் என்ன விவரங்கள் அடங்கியிருக்கலாம் என்பது, மற்றும் அதற்காகச் செலுத்தப்படவேடிய கட்டணங்கள் எவையேனுமிருப்பின் அக்கட்டணங்கள் ஆகியவற்றிற்கும்
இழப்பீட்டுக் கோரிக்கையானது எந்த அதிகார அமைப்பிடம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்கும்,

11-ஆம் பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பினால் இழப்பீட்டின் அளவைக் குறித்து முடிவுக்கு வருவதில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விசயங்கள் எவை என்பதற்கும்;
11 –ஆம் பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பினால், இழப்பீட்டுக் கோரிக்கையை முடியு செய்வதில் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன என்பதற்கும்; மற்றும்,
வகுத்துரைக்கப்படவேண்டியதற்கான அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விசயம் எதற்கும்.
வகுத்துரைக்கப்படவேண்டியதற்கான அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விசயம் எதற்கும் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும் அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அல்லது அதனை அடுத்துவருகின்ற கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர், அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும் மாறுதல் எதையும் செய்யச் சட்டமன்றப் பேரவை உடன்படுமானாலோ அல்லது அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படவோ அல்லது பிறப்பிக்கப்படவோ கூடாது என்று சட்டமன்றப் பேரவை உடன்படுமானாலோ அந்த விதி அல்லது அறிவிக்கையானது அதன் பின்னர் அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெறுதல் வேண்டும்; அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம் போதல் வேண்டும்; எனினும் அவ்வாறு மாற்றியமைத்து அல்லது செயல் வடிவம் பெறாது போனது எதுவும், அந்த விதியின்படியோ அல்லது அறிவிக்கையின்படியோ, முன்னதாகச் செயல்பட்ட செயல் எதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.

பிரிவு. 14 காப்பு

இந்தச் சட்டத்தின் வகைமுறைகள், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் ஏதொன்றிற்கும் கூடுதலாக அமைந்தவையாக இருக்கவேண்டுமேயன்றி அதைக் குன்றச் செய்வனவாக இருத்தலாகா; மற்றும் இந்தச் சட்டம் ஒருபுறமிருக்க, நபரெவருக்கேனும் எதிராகப் புலனாய்வு என்கிற வகையிலோ, அல்லது மற்றப்படியோ தொடுக்கபடக்கூடிய நடவடிக்கை எதிலிருந்தும் அந்நபருக்கு இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும் விலக்களித்தல் ஆகாது.

பிரிவு 15. நீக்கம்

1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச்சொத்து (அழிப்பு மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டமானது, இதன் மூலம் நீக்கப்படுகிறது.

   மனித உரிமை மீறல் சம்மந்தமாக தனிநபர் மீது வழக்கு தொடர முடியாது*1) மனித உரிமை சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் செய்யும் ம...
23/07/2024


மனித உரிமை மீறல் சம்மந்தமாக தனிநபர் மீது வழக்கு தொடர முடியாது*

1) மனித உரிமை சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் செய்யும் மனித உரிமை மீறல்கள் குறித்தான செயல்களை மட்டுமே விசாரிக்க முடியும். அரசு ஊழியர் அல்லாதவர்கள் மீது மனித உரிமை மீறல் குறித்தான குற்றங்களை விசாரிக்க முடியாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு Santhosh Hospitals Ltd Vs State Human rights commission (2005-2-MWN-CRI-46-DB) என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

2) மனித உரிமை ஆணையத்திற்கும், மனித உரிமை நீதிமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மனித உரிமை நீதிமன்றத்தை விடவும் மனித உரிமைகள் ஆணையத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மனித உரிமைகள் சட்டம் பிரிவு 16 ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மனித உரிமை மீறல் குறித்தான சட்ட நடவடிக்கைகளை அரசு ஊழியர்கள் மீது தான் எடுக்க முடியும் என தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் Vs தமிழ்நாடு அரசு (1997(Vol.XLI) MLJ-CRL-655) என்ற வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

எனவே மனித உரிமை மீறல்களுக்காக தனி நபர்கள் மீது மனித உரிமை நீதிமன்றத்தில் மனித உரிமை சட்டப்படி வழக்கு தொடர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 31721/2007, M. Loganathan and L. Latha Vs V. R. Eshvaramorrthy (2010-2-MWN-CRL-21)

3) ஒரு கட்சிக்காரருக்காக வக்காலத்து தாக்கல் செய்த வழக்கறிஞர் , தனக்கு வழக்குரைஞர் கட்டணம் கொடுக்கவில்லை என்பதற்காக வழக்கில் ஆஜராக மறுக்க முடியாது. கட்சிக்காரரின் வக்காலத்தை ஏற்றுக் கொண்ட வழக்கறிஞக்கு அக்கட்சிக்காரர் சேவை கட்டணம் கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் அவருக்காக வாதாட வேண்டியது அவ்வழக்கறிஞரின் கடமை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
Ali Mohammed Kashmiri case - AIR 1960 AII (FB) P 660

4) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் ஆவணங்களை, பொது ஆவணங்களாக கருத வேண்டும். ஆகவே அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சான்றாவணங்களாக குறியீடு செய்யலாம்.

(2009) 4 MLJ (Crl) Rakkappan Vs. State rep. By Inspector of Police, Cherambadi Police Station, Uthagamandalam District and 2011-1-LW (Crl) 335 S.Ramkumar Vs. State and Ors.

5) புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியுமா?
சென்னை உயர்நீதிமன்றம் " மந்திரன் கோனான் Vs காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் (2006-2-MWN-CRL-356)" என்ற வழக்கில், திருமணம் சம்மந்தமாக இல்லாமல் எதிரி தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டால் அதனை இ. த. ச பிரிவு 498 A ன் கீழான குற்றமாக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

6) அதேபோல் உச்சநீதிமன்றம் " பிரீத்தி குப்தா Vs ஜார்க்கண்ட் மாநில அரசு (2010-7-SCC-667)" என்ற வழக்கில், ஒரு கணத்தில் ஏற்படுகிற கோபத்தின் காரணமாக பெரும்பாலான புகார்கள் இ. த. ச பிரிவு 498 A ன் கீழ் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறு விசயத்தை மிகவும் பெரிதுபடுத்தி அது சம்பந்தமாக புகார் அளிக்க கூடாது. வழக்கறிஞர்கள் இ. த. ச பிரிவு 498 A ன் கீழான பிரச்சினையை ஒரு அடிப்படை சமூக பிரச்சினையாக கருதி அதனை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பொய் புகார் கொடுக்க உடந்தையாக இருக்கக்கூடாது. பல பொய் புகார்கள் உருவாக வழக்கறிஞர்கள் காரணமாக இருக்கக்கூடாது. எனவே பொய்யான வரதட்சணை வழக்குகளை ஏற்க முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இதே கருத்தை உச்சநீதிமன்றம் " பஸ்கான் குமார் மீன் Vs பஞ்சாப் மாநில அரசு" என்ற வழக்கில் வலியுறுத்தியுள்ளது.

7) எனவே புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
RSO 31 - 5(ii) மற்றும் 8 ன்படி புல உட்பிரிவுக்கு உட்படாத இனங்கள் மற்றும் பிரச்சினைக்குரியவை இல்லாத இனங்களில் பட்டாதாரர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு வருவாய் ஆய்வாளரால் பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை தற்போது இல்லை. பட்டா வழங்குதல் கணினி மயமாக்கப்பட்டதால் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியரால் பட்டா மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் (CLA Lr. K4/369/2013, DT - 5.2.2013)

8) RSO 31-6(ii) ன்படி 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போனவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கப்படும் நிலையில் அவரது வாரிசுகள் அல்லது அனுபவதாரர் பெயரில் உரிமையியல் நீதிமன்றங்களின் தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்படும் (CLA. Lr. K4/369/2013, DT - 5.2.2013)

M.A.,B.L.,
094431 70786

18/07/2024

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - 1969 ஆம் ஆண்டு பிறப்பு - மற்றும் இறப்பு பதிவு சட்டம் 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள், விதி எண்.9(3)-இல் திருத்தம் ஆட்கொணர்வு மனு எண்.3043/2014-இல் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் 13.04.2017-ஆம் நாளிட்ட உத்தரவு காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் மீது ஆணை வெளியிடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.3(2) பிரிவு
அரசாணை (நிலை) எண்.324. நாள்: 28.06.2023,
சோபகிருது வருடம், ஆனி 13, திருவள்ளுவர் ஆண்டு 2054, படிக்கப்பட்டது:
1. அரசாணை (நிலை) எண்.293, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, நாள்: 02.12.2016
2. ஆட்கொணர்வு மனு எண்.3043/2014 -இல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய 15.07.2016 மற்றும் 13.04.2017 நாளிட்ட உத்தரவுகள்.
3. கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண்.RA5(1)/927/2015, நாள்: 18.02.2019.
4. அரசுக் கடித எண்.4532/RA-3(2)/2022-1, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நாள்: 09.02.2022.
5. கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண்.RA-5(1)/927/2015, நாள்: 28.06.2022.
6. அரசுக் கடித எண்.4532/RA-3(2)/2022-3, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள்: 05.05.2023
ஆணை:
*********
மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள், ஆட்கொணர்வு மனு எண்.3043/2014-இல் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளின்படி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, 2000-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள், விதி 9(3)ஐ திருத்தம் செய்து அரசாணை (நிலை) எண்.293, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் (AB2) துறை, நாள் 02.12.2016-இல் ஆணை வெளியிட்டு அதன்படி, "முதல்நிலை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு/ பெருநகர மாஜிஸ்திரேட்டு" என்ற சொற்றொடருக்கு பதிலாக, "வருவாய் கோட்டாட்சியர் பதவிக்கு குறையாத நிலையிலுள்ள நிருவாக நடுவர்கள்" என அறிவிக்கையிடப்பட்டு, இந்த ஆணை 25.01.2017 முதல் அமலுக்கு வந்தது என தெரிவித்துள்ளார். மேலும், அரசின் அறிவுறுத்தல்களுக்கிணங்க, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையுடன் 17.05.2018 அன்று கூட்டம் நடத்தப்பட்டது என்றும், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ஒரு வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் அரசுக்கு அனுப்பப்பட்டது என்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசு கடிதத்தில், காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் தொடர்பாக, நிருவாக நடுவர்கள் பின்பற்றப்பட வேண்டிய திருத்திய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் மீது தங்களது அறிக்கையை அனுப்பி வைக்கும்படி கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார். அதன்படி, மறுப்புரைகளைப் பெறுவதற்கான காலஅளவை
30 நாட்களாகக் குறைத்தும், ஆதார் அட்டையை ஆதார ஆவணமாகச் சேர்த்துக் கொள்ளலாமென்றும், 1969-ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் 13(3)-ஆம் பிரிவின் கீழ் பிறப்பு மற்றும் இறப்புகளைத் தாமதமாகப் பதிவு செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளுக்குத் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
3. ஆட்கொணர்வு மனு எண்.3043/2014-இல் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த 13.4.2017-ஆம் நாளிட்ட உத்தரவின் அடிப்படையிலும் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையரின் கருத்துரு ஆகியவற்றை அரசு கவனமாகப் பரிசீலித்து, பரிசீலினைக்குப்பின் இவ்வரசாணையின் பிற்சேர்க்கையில் உள்ளவாறு காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் மீது ஆணை வெளியிடுதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறது.
4. காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் மீது ஆணை வெளியிடுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மேற்படி வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பின்பற்றுமாறு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும், அரசால் பரிந்துரைக்கப்பட்ட நேர அட்டவணை மற்றும் சீராய்வு அட்டவணை சார்நிலை அலுவலர்களால் தவறாமல் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
5. மேலும், காலதாமதமாக பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் தொடர்பாக பெறப்படும் விண்ணப்பம் மற்றும் பணிநிரவல் (Workflow) ஆகியவற்றை கையாளுவதற்கு இணையவழி செயலலகு (Online Module) ஒன்றை உருவாக்க, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையர், சென்னை-2
அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
(ஆளுநரின் ஆணைப்படி)
குமார் ஜயந்த்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
பெறுநர்
கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர்,
சேப்பாக்கம், சென்னை-600 005.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்.
நகல்
அரசு முதன்மைச் செயலாளர்,
மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குநர் / தலைமைப் பதிவாளர் பிறப்பு மற்றும் இறப்பு,
359, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 006. ஆணையர்,
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA), 807, அண்ணாசாலை, சென்னை-600002.
ffice
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (OP-II] துறை. தலைமைச் செயலகம், சென்னை-600 009.
இருப்புக்கோப்பு/ உதிரி நகல்.
// ஆணைப்படி அனுப்பப்படுகிறது //

அரசாணை (நிலை) எண்.324, வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைத் [வ.நி.3(2)] துறை, நாள்: 28.06.2023-இன் பிற்சேர்க்கை நிகழ்வு ஏற்பட்டு ஓராண்டிற்குள் பதிவு செய்யப்படாத, காலதாமதமாகப் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளின் மீது நிருவாக நடுவர் வாயிலாக ஆணையிடுவது (வருவாய் கோட்டாட்சியர் பதவி நிலைக்கு குறையாத) தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகள்
இந்த வழிகாட்டு நெறிமுறைகள், நிகழ்வு ஏற்பட்டு ஓராண்டிற்குள் பதிவு செய்யப்படாத, காலதாமதமாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளின் மீது ஆணையிடுவதற்குப் பொருந்தும். ஆட்கொணர்வு மனு எண்.3043/2014-இல் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் 13.4.2017-ஆம் நாளிட்ட உத்தரவின்படி, 25.01.2017-க்கு பிறகு காலதாமதமாகப் பதிவு செய்யப்பட்ட பிறப்பு/இறப்பு பதிவுகளின் மீது நீதித்துறை / பெருநகர மாஜிஸ்திரேட்டு வாயிலாக ஆணையிடப்பட்ட யாதொரு உத்தரவும் செல்லாது. மேற்சொன்ன நாளிலிருந்து, அதிகாரவரம்புக்குட்பட்ட நிருவாக நடுவர்கள் என்ற நிலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர்கள் வாயிலாக காலதாமதமாக செய்யப்படுகின்ற பதிவு மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.
1. மனுதாரர், பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்த அதிகார வரம்பிற்குட்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம், பிறப்பு அல்லது இறப்பை காலதாமதமாகப் பதிவு செய்வதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 2. மனுதாரர் 25.01.2017-க்கு முன்னர் நீதித்துறை / பெருநகர மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவு நகலுடன் வருவாய் கோட்டாட்சியரை அணுகும்பட்சத்தில், வருவாய் கோட்டாட்சியர், ஏற்கெனவே பிறப்பித்த ஆணையின் மீது, நீதித்துறை / பெருநகர மாஜிஸ்திரேட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணையின்றி மீளவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 3. மனுதாரரின் விண்ணப்பமானது, 'கிடைக்கப் பெறாமைச் சான்றிதழுடன்' (Non-Availability Certificate) இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 'கிடைக்கப் பெறாமைச் சான்றிதழ்', அதிகார வரம்பிற்குட்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களிடமிருந்து கீழே பரிந்துரைக்கப்பட்ட அதிகாரி வாயிலாகப் பெறப்பட வேண்டும்:-
நிகழ்வுப் பகுதி கிராம ஊராட்சி
பேரூராட்சி
நகராட்சி
மாநகராட்சி
பாளையம்
அணுகப்பட வேண்டிய அதிகாரி வட்டாட்சியர்/
அலுவலர்
செயல் அலுவலர்
ஆணையர்
ஆணையர்
செயல் அலுவலர்
கிராம நிருவாக
குறிப்பு: காலப்போக்கில், உள்ளாட்சி அமைப்புகளைத் தரம் உயர்த்துதல் அல்லது இணைப்பதன் காரணமாக, நிகழ்வு (பிறப்பு/இறப்பு) நடந்த இடம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு தரம் உயர்த்தப்பட்ட / மாற்றப்பட்ட பகுதியுடன் இணைக்கப்பட்டிருந்தால், விண்ணப்பதாரர் தொடர்புடைய நிகழ்வுப் பகுதியின் தரம் உயர்த்தப்பட்ட பகுதியின் அதிகாரியை அணுக வேண்டும்.
மனுதாரர் பின்வரும் ஆண்டுகளுக்கு 'கிடைக்கப் பெறாமைச் சான்றிதழைப்" பெற்று வழங்க வேண்டும்.
i . பிறப்பு / இறப்பு நிகழ்ந்த ஆண்டு.
ii . பிறப்பு / இறப்பு நிகழ்ந்த ஓராண்டுக்கு முன்னர். iii . பிறப்பு / இறப்பு நிகழ்ந்த ஓராண்டுக்குப் பின்னர்.
4. காலதாமதமாக மேற்கொள்ளப்படுகிற
பதிவுக்கான விண்ணப்பத்தை, மனுதாரர் ரூ.10/- மதிப்புள்ள நீதிமன்றக் கட்டண வில்லை ஒட்டப்பட்ட உறுதி ஆவணத்தில், கிடைக்கப் பெறாமைச் சான்றிதழ் மற்றும் பின்வரும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்:-
கிடைக்கப் பெறாமைச் சான்றிதழுடன் கூடுதலாக மனுதாரரால் (இருக்கிறவாறாக) அளிக்கப்பட வேண்டிய ஆதார ஆவணங்கள்:
அ. பிறப்பை பதிவு செய்வதற்கு
i. பிறந்த தேதி பதிவு செய்யப்பட்டள்ள மதிப்
இடமாற்றுச் சான்றிதழ்
ii. கடவுச்சீட்டு
iii. ஓட்டுநர் உரிமம்
PS
iv. வாக்காளர் அடையாள அட்டை
v. ஆதார் அட்டை
சான்றிதழ் மற்றும்
vi. பள்ளித் தலைமை
ஆசிரியர்களிடமிருந்து
பதிவுருக்களின் சுருக்கம்
பெறப்பட்ட பள்ளிப்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லையெனில், மருத்துவமனையில் பிறப்பு ஏற்பட்டிருப்பின், மருத்துவமனைப் பதிவுரு.
வீட்டில் பிறப்பு நிகழ்ந்திருந்தால், குடும்பத் தலைவர் அல்லது வீட்டில் இருக்கிற குடும்பத் தலைவரின் நெருங்கிய உறவினர் மற்றும் அத்தகைய யாதொரு நபரும் இல்லாதபட்சத்தில், மேற்சொன்ன காலத்தில் அங்கிருந்த வயது முதிர்ந்த மூத்த ஆடவரிடம் பெறப்பட்ட எழுத்துப்பூர்வ அறிக்கை.
ஆ. இறப்பைப் பதிவு செய்வதற்கு
அடையாளச் சான்றாக:
i. இறந்தவர் மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆதார் அட்டை
ii. ஓட்டுநர் உரிமம்
iii. கடவுச்சீட்டு
iv. வாக்காளர் அடையாள அட்டை
V. குடும்ப அட்டை
மேற்குறிப்பிட்டவை நீங்கலாக, பின்வரும் ஆவணங்கள் இறப்புக்கான சான்றாக அளிக்கப்பட வேண்டும்:-
i. எரியூட்டு மைதான (சுடுகாடு) அறிக்கை. புதைக்கப்பட்டிருப்பின், இடுகாட்டுப் பொறுப்பாளரிடமிருந்து பெறப்பட்ட அடக்கச் சீட்டு.
ii. மருத்துவமனையில் மரணம் நிகழ்ந்திருப்பின், மருத்துவமனைப் பதிவுரு.
ii. விபத்து, கொலை, தற்கொலை மற்றும் ஆள் அரவமற்ற இடத்தில் ஏதேனும் சடலம் கண்டெடுக்கப்படின், முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் உடற் கூராய்வு அறிக்கையின் நகல்.
iv. வீட்டில் மரணம் நிகழ்ந்தால், குடும்பத் தலைவர் அல்லது வீட்டில் இருக்கிற குடும்பத் தலைவரின் நெருங்கிய உறவினர் மற்றும் அத்தகைய யாதொரு நபரும் இல்லாதபட்சத்தில், மேற்சொன்ன காலத்தில் அங்கிருந்த வயது முதிர்ந்த மூத்த ஆடவரிடம் பெறப்பட்ட எழுத்துப்பூர்வ அறிக்கை.
5. மனுதாரரால் அளிக்கப்பட்ட தகவல்கள் / ஆவணங்கள் தவறானவை என கண்டறியப்பட்டால், அத்தகைய தவறான தகவல்களை அளித்தமைக்காக இந்திய தண்டனைச் விதிக்கோவையின் பிரிவு 177 மற்றும் 199-இன்கீழ் அவர்மீது வழக்குத் தொடரலாம் என்பதற்கான எழுத்துப்பூர்வ உறுதிமொழியை மனுதாரர் வழங்க வேண்டும்.
சுய
6. விண்ணப்பதாரரால் ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளனவா என்பதை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். இந்த முதற்கட்ட ஆய்வுக்குப் பிறகு, இவ்விவரங்கள் தொடர்புடைய கிராம நிருவாக அலுவலருக்கு (சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை வருவாய் ஆய்வாளர்) அனுப்பப்பட வேண்டும். கிராம நிருவாக அலுவலர், நிகழ்வு/ஆவணங்களின் உண்மைத் தன்மையை விசாரித்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை வருவாய் ஆய்வாளருக்கும், வருவாய் ஆய்வாளர் ஒரு வாரத்தில் வட்டாட்சியருக்கும், வட்டாட்சியர் 2 வாரத்திற்குள் வருவாய் கோட்டாட்சியருக்கும் அறிக்கையை அனுப்ப வேண்டும்.
7. வருவாய் கோட்டாட்சியரிடம் மனுதாரர் விண்ணப்பத்தை அளிக்கும்போது, தொடர்புடைய பிறப்பு/இறப்பு நிகழ்வுகள் குறித்த விவரங்களை உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியிடுமாறு மனுதாரருக்கு உத்தரவிடப்பட வேண்டும். மேலும், மறுப்புரைகளைப் பெறுவதற்கான காலஅளவு அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் ஆகும். அவ்வாறு வெளியிடப்பட்டதற்கான ஆதாரத்தை வருவாய் கோட்டாட்சியர் விசாரணையின்போது நேரடியாக அளிக்க வேண்டும்.
8. கிராம நிருவாக அலுவலரிடமிருந்து விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், வருவாய் கோட்டாட்சியர் விண்ணப்பதாரரையும், விசாரணைக்குத் தேவைப்படுகிற ஏனைய சாட்சிகளையும் விசாரணைக்கு வருமாறு அழைத்து. வருவாய் கோட்டாட்சியர் திருப்தி அடையும்பட்சத்தில் பிறப்பு / இறப்பினை பதிவு செய்து அல்லது விண்ணப்பத்தினை நிராகரித்து ஆணைகளைப் பிறப்பிப்பார். விண்ணப்பதாரரிடமிருந்து அனைத்து ஆவணங்களும் பெறப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தேவையான
9. வருவாய் கோட்டாட்சியர், மேற்படி பதிவு செய்யப்பட வேண்டிய தொடர்புடைய பதிவாளரை அணுகுமாறு குறிப்பிட்டு, அதிகார வரம்பிற்குரிய பகுதி தொடர்புடைய கணக்குத் தலைப்பில் காலதாமதக் கட்டணம் ரூ.500/- செலுத்துவதற்கு காலதாமதமாக மேற்கொள்ளப்படுகிற பதிவுக்கான ஆணையை விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும். காலதாமதமாக மேற்கொள்ளப்படுகிற பதிவு ஆணையின் நகல், அதிகார எல்லைக்குட்பட்ட பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர், மாவட்ட வருவாய் அலுவலர் (மாவட்டப் பதிவாளர்) மற்றும் வருவாய் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் (கூடுதல் மாவட்டப் பதிவாளர்) ஆகியோருக்கு அனுப்பப்பட வேண்டும்.
10. தத்தெடுத்தல்:
மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாகத் தத்தெடுக்கப்படும் நேர்வில், மாவட்ட மாஜிஸ்திரேட்டு உத்தரவின் அடிப்படையில் (2022-ஆம் ஆண்டு தத்தெடுப்பு ஒழுங்குமுறைகளின்படி) தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் பிறப்பு பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களுக்குள் குழந்தை தத்தெடுக்கப்பட்டால், தத்தெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பான பதிவு முறையான தத்தெடுப்பு ஆவணத்தில் சார்-பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்யப்பட வேண்டும்.
தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் பிறப்பு (உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களுக்குள் தத்தெடுப்பு) பதிவு செய்யப்படவில்லை என்றால், நிருவாக நடுவர் (வருவாய் கோட்டாட்சியர் பதவி நிலைக்கு குறையாத) அவர்களால் காலதாமதமாகப் பதிவு செய்வதற்கான நடைமுறையின்படி பதிவு செய்யப்பட வேண்டும்.

11. மேல்முறையீடு:-
வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த ஆணைக்கெதிராக, ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, 60 நாட்களுக்குள், மாவட்ட வருவாய் அலுவலரிடம், ஆணைகளை மறுபரிசீலனை செய்ய, பாதிக்கப்பட்ட நபர்கள் மேல்முறையீடு செய்யலாம். மாவட்ட வருவாய் அலுவலர் விண்ணப்பதாரரையும், விசாரணைக்குத் தேவைப்படுகிற ஏனைய சாட்சிகளையும் விசாரணைக்கு வருமாறு அழைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் திருப்தி அடையும்பட்சத்தில் பிறப்பு / இறப்பினை பதிவு செய்து அல்லது விண்ணப்பத்தினை நிராகரித்து ஆணைகளைப் பிறப்பிப்பார். விண்ணப்பதாரரிடமிருந்து தேவையான அனைத்து ஆவணங்களும் பெறப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
12. பொதுவான அறிவுறுத்தல்கள்
1. வருவாய் கோட்டாட்சியரால் பிறப்பிக்கப்படும் காலதாமதமாக மேற்கொள்ளப்படுகிற பிறப்பு மற்றும் இறப்பு பதிவுக்கான ஆணைகளுக்கென தனி பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.
2. விண்ணப்பதாரர் பணியமர்த்தத்தின்போது அளித்த பிறப்புச் சான்றிதழ்/பள்ளிச் சான்றிதழ்/வயதுச் சான்றிதழில் ஏற்கெனவே வயதைப் பதிவு செய்திருந்தால், வருவாய் கோட்டாட்சியர் வயது திருத்தம் செய்ய முற்படக் கூடாது.
3. ஏழு ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் குறித்த நேர்வில், இறப்பு குறித்து சிவில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலதாமதமான இறப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.
4. உண்மையை மறைத்து காலதாமதமான பதிவு ஆணை பெறப்படும் நேர்வில், வருவாய் கோட்டாட்சியர் அதை இரத்து செய்து, அத்தகைய இரத்து ஆணையை கூடுதல் மாவட்டப் பதிவாளருக்கு (வருவாய் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்) அனுப்ப வேண்டும்.
குமார் ஜெயந்த்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
//உண்மை நகல்//
//உண்மை நகல்//
ஒம்/- பிரிவு அலுவலர்

Address

Door No. 29C, Bharathkumar Law Office, Ettayapuram Road
Kovilpatti
628501

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

919443170786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharathkumar Law Office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share