Astrology Services

Astrology Services Astrology, Numerology, Vasthu

28/03/2014

பிரம்ம முகூர்த்தம்: பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை.

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத்தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞா னமும் கூறுகின்றன. வைக றைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந் தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பை யும், உற்சாகத்தையும் கொ டுக்கின்றன. கண்கள் ஆரோ க்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண் ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்தஅதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள் ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்ப தாகும். உஷத்காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன்உதயமாகிறான்.

இதனாலேயே விடியற் காலை நேரம் உஷத் காலம் எனப்படு கிறது. இந்த தேவதை யின் செழிப்பான கிரணங்கள் விடி யற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடு தல்விசேசமாக சொல் லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகி றது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில்எழுந்திருக்க வேண் டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பறிமாறும் முறை1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்...
28/03/2014

தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பறிமாறும் முறை

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:
பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்

1. அருந்துதல் – மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் – பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் – வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் – நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5. தின்றல் – தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் – சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் – நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் – முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் – நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் – பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் – கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் – பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

28/03/2014

ஞானம் அருளும் குரு பகவான்!
ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை
பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.
குருபலம்!
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள்.
ஸ்தான தோஷம்!
குரு முழு சுப கிரகமாக இருப்பதால் ஜோதிட விதிப்படி அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பானது அல்ல. இதை குறிப்பிடும் வகையில்தான் ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற பழமொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு
பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும். ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.
மதபோதகர், மத பிரசாரகர், சொற்பொழிவாளர், கதாகலாட்சேபம் போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். கோயில் கட்டுதல்,
கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தல், அறங்காவலர் பதவி, தர்மஸ்தாபனம் அமைத்தல் போன்ற பாக்கியத்தை அருள்வார். தலைசிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பவர்கள் குருவின் பரிபூரண அருள் பெற்றவர்களே. கல்வித்துறை, நிதி, நீதித்துறைகள், வங்கி போன்றவற்றில் பணி செய்யக்கூடிய
பாக்கியத்தை அருள்பவரும் குரு பகவானே.
பரிகாரம்!
குரு பகவானின் பரிபூரண அருள் வேண்டுபவர்கள் அனைத்து முருகன் ஸ்தலங்களுக்கும் சென்று வணங்கலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக் கடலை சுண்டல் வழங்கலாம். கும்பகோணம் அருகில் ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். குரு ஜெயந்தி நாளை
கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குரு பகவானை வணங்கி அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக.
கைரேகை அமைப்பு!
விரல்கள் அமைப்பில் ஆள்காட்டி விரல் குரு விரல் ஆகும். இந்த விரல் அடியில் உள்ள மேடு குரு மேடாகும். இந்த மேட்டில் வளையம் போன்ற ரேகை அமைப்பு இருந்தால் குருவளையம் என்றும், ‘சாலமன்ரிங்’ என்றும் இதை அழைப்பார்கள். இந்த அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த
பதவி, அந்தஸ்தில் இருப்பார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு இருக்கும்.

Divine Treasures (Temples) of Tamilnadu
20/01/2014

Divine Treasures (Temples) of Tamilnadu

Address

Muhammed Anas
Erode

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astrology Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category