Sakthi Law Office, Legal services

Sakthi Law Office, Legal services best Law office to get solutions for all your problems by legal methods

04/10/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

*சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால் மற்றும் தண்டனைகள்* சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள், அவதூறு ...
28/11/2024

*சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால் மற்றும் தண்டனைகள்*

சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள், அவதூறு அல்லது புண்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்துவது ஒரு சட்டபூர்வ குற்றம் ஆகும். இது தனிப்பட்ட முறையிலோ, பொது தளத்திலோ செய்தால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

1. சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால்

சட்ட பிரிவுகள் மற்றும் தண்டனைகள்:

1. Section 499 & 500 - Defamation (அவதூறு)

குற்றம்: பொய்யான கருத்துக்களை பகிர்ந்து மற்றவரின் மதிப்பினை சேதப்படுத்துதல்.

தண்டனை:

2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம், அல்லது இரண்டும்.

2. Section 509 - Insulting Modesty of a Woman

குற்றம்: பெண்களை அவமதிக்கும் வகையில் பேச்சு அல்லது கருத்துக்களை பகிர்வது.

தண்டனை:

1 ஆண்டு சிறை அல்லது அபராதம்.

3. Section 67 - IT Act (Publishing Obscene Material)

குற்றம்: ஆபாசமான அல்லது தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பகிர்வது.

தண்டனை:

முதல் குற்றத்திற்கு: 3 ஆண்டு சிறை மற்றும் ₹5 லட்சம் அபராதம்.

மீண்டும் குற்றம் செய்தால்: 5 ஆண்டு சிறை மற்றும் ₹10 லட்சம் அபராதம்.

4. Section 503 & 506 - Criminal Intimidation (மிரட்டல்)

குற்றம்: வலைத்தளங்களில் மிரட்டல் அல்லது பயமுறுத்தும் செய்திகளை பகிர்வது.

தண்டனை:

2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம்.

2. ஒரு வழக்கறிஞர் இப்படி செயல்பட்டால்

வழக்கறிஞர்கள் மீது Advocates Act, 1961 மற்றும் பொதுச் சட்ட பிரிவுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்டனைகள்:

1. Advocates Act, 1961

தண்டனை:

தொழில் அனுமதி ரத்து அல்லது பதவியை நிறுத்துதல்.

2. Section 504 - Intentional Insult

தண்டனை:

2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம்.

3. தனிப்பட்ட முறையிலோ பொது தளத்திலோ செய்தால்

தனிப்பட்ட முறையில்:

சட்ட பிரிவு: Section 67 - IT Act

தண்டனை:

முதல் முறைக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம்.

பொது தளத்தில்:

சட்ட பிரிவு: Section 499 & 500 - Defamation

தண்டனை:

2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம்.

*தகவல்களை ஆதரிக்க தேவையான ஆதாரங்கள்*

1. Screenshots

தகவல்கள், கருத்துக்கள், அல்லது வீடியோ பதிவுகளின் திரையொளிப்படம்.

2. Digital Forensics

மிண்ணனு சாதனங்களில் சேமிக்கப்பட்ட தகவல்கள்.

3. சாட்சிகள்

சம்பவத்தை கண்டவர்கள் வழங்கும் வாக்குமூலம்.

4. தொலைபேசி/மின்னஞ்சல் பதிவுகள்

தொடர்புடைய தகவல்கள் சேகரித்தல்.

உதாரணம்:

1. நிகழ்வு:

ஒரு நபர் சமூக வலைத்தளத்தில் தவறான கருத்துக்களை பகிர்ந்து மற்றவரை அவமானப்படுத்தினார்.

சட்ட பிரிவு: Section 499 & 500 (Defamation).

தண்டனை: 2 ஆண்டு சிறை மற்றும் அபராதம்.

2. நிகழ்வு:

ஒரு வழக்கறிஞர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பெண்களை அவமதிக்கும் வகையில் பேச்சுகளை பகிர்ந்தார்.

சட்ட பிரிவு: Section 509 & Advocates Act.

தண்டனை: தொழில் அனுமதி ரத்து மற்றும் சிறை.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

19/12/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Rafik Malukarsha A, Alagappanvelusamy Alagappanvelusamy, Perumal R, Vimalkumar Sundarrajan, Sathyan Kutti

15/12/2023

*நீதிமன்ற காவல் என்றால் என்ன*

நீதிமன்ற காவல் என்பது கைது செய்யப்பட்ட நபரை காவல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைப்பதே நீதிமன்ற காவல் எனப்படும். நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைத்தல் சிறைச்சாலையில் வைப்பதனையே சுட்டிக்காட்டுகின்றது.

*நீதிமன்ற காவல் சட்டதிட்டங்கள்*

நீதிமன்ற கட்டுப்பட்டில் உள்ள ஒருவரை நீதிமன்ற அனுமதியின்றி காவல் நிலையங்களில் உள்ள சிறைக்கூடங்களில் வைக்ககூடாது.

தடுப்பு காவல் சட்டத்திற்கு இது பொருத்தமற்றதாகும். அதாவது தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை காவல் நிலையத்தில் 24 மணி நேரத்தித்திற்கு மேல் வைக்க முடியும்.

நீதிமன்ற கட்டுப்பாட்டில் கைது செய்யப்பட்ட நபரை சிறையில் அடைப்பதற்கு 15 நாட்கள் வரை மட்டுமே நீதிமன்றம் உத்தரவு அளிக்க முடியும். வழக்கின் புலன் விசாரனை முடியவில்லை என காரணம் காட்டி நீதிமன்ற காவலை நீடிக்க அரசு தரப்பு கேட்டுக் கொண்டால் நீதிமன்ற காவல் நீடிப்பை ஒவ்வொரு 15 நாளுக்கு ஒரு முறை நீடிப்பு செய்ய உத்தரவிடப்படும்.

இவ்வாறாக காணப்படினும் 90 நாட்களுக்குள் விசாரனை முடியவில்லை எனின் காவல் நீடிப்பு செய்ய நீதிமன்றம் மறுத்து கைது செய்யப்பட்டவரை பிணையில் விடும். மேலும் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கக்கூடிய குற்றத்திற்கு 60 நாட்கள் அரசு தரப்பு புலன் விசாரனை செய்து முடித்தல் வேண்டும்.

*நீதிமன்ற காவல் மற்றும்* *காவல் துறை* *காவல்களுக்கிடையிலான* *வேறுபாடு*

காவல்துறை காவலில் காவல் அதிகாரி ஒருவர் எந்தவொரு குற்றவாளி அல்லது சந்தேகத்திற்குரிய நபரை அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக தனது காவலில் தடுத்து வைப்பதற்கு முடியும். ஆனால் நீதிமன்ற காவலில் குற்றம் சாட்டப்பட்ட நபர் சம்மந்தப்பட்ட மஜிஸ்திரேட்டின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்படுவார்.

நீதிமன்ற காவலில் உள்ள நபரானவர் நீதிமன்றம் பிணை வழங்கும் வரை சிறையிலேயே அடைக்கப்பட்டு காணப்படுவர். ஆனால் காவல் துறை காவலில் உள்ள ஒருவர் 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட மஜிஸ்திரேட்டின் முன் ஆஜராக வேண்டும்.

காவல் துறை காவலில் உள்ள சந்தேக நபர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குற்றம் நிரூபிக்கப்படாத பட்சத்தில் நீதித்துறையினூடாக நீதிமன்றத்தில் ரத்துசெய்யப்படலாம். ஆனால் நீதிமன்ற காவலில் அவ்வாறு காணப்படுவதில்லை.
காவல் துறை காவலில் காவல் அதிகாரி மூலமாகவே சந்தேக நபரை கைது செய்கின்றனர். ஆனால் நீதிமன்ற காவலானது வழக்கறிஞரின் ஊடாகவே இடம் பெறுகின்றது.

காவல் துறை காவலில் காவல் பாதுகாப்பு காணப்படுகின்றது. அதே போன்று நீதிமன்ற காவலில் நீதிபதியினூடாக வழங்கப்படுகின்றது. இவ்வாறாக காவல் துறை காவல் மற்றும் நீதிமன்ற காவலுக்கிடையிலான வேறுபாட்டினை அவதானிக்க முடிகின்றது.
குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியை தண்டிப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் நீதிமன்ற காவலில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க மஜிஸ்திரேட்டிக்கே அதிகாரம் உள்ளது.

நீதிமன்ற காவலில் மஜிஸ்திரேட் அனுமதியின்றி அதிகாரிகளை விசாரிக்க முடியாது. ஆனால் காவல் துறை காவலில் யாருடைய அனுமதியும் இல்லாமல் அதாவது நீதிபதியாக இருந்தாலும் சரி குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறை அதிகாரியால் விசாரிக்க முடியும்.
எனவேதான் நீதிமன்ற காவலில் அல்லது காவல் துறை காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் சந்தேகத்திற்குரியவராக இல்லாவிடின் அவர் காவலில் வைக்கப்படுகின்றார்.

மேலும் அவர்மீது குற்றம் சாட்டப்படுமேயானால் அவர்களை கைது செய்து காவல் துறை மற்றும் நீதிமன்ற காவல்களில் வைக்கின்றனர். இந்த இரண்டு துறையும் குற்றங்களை தடுக்க அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளே ஆகும்.

13/12/2023

Case title Defsys Solution Pvt Ltd v Union of India Date of Order 6th December 2023 Bench HONBLE MR JUSTICE YOGESH KHANNA HONBLE MR JUSTICE TUSHAR RAO GEDELA Pa

Shout out to my newest followers! Excited to have you onboard! Shaul Hameed, Prabu Prabuc
08/12/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Shaul Hameed, Prabu Prabuc

11/11/2023

Address

23/1-A Arts College Road
Coimbatore
641018

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 10am - 10pm

Telephone

+919025989888

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi Law Office, Legal services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sakthi Law Office, Legal services:

Share