Law College Student

Law College Student law

CYBER CRIME COMPLAINTS********************சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:*********************************...
20/03/2014

CYBER CRIME COMPLAINTS
********************
சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
******************************************
சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் ஐ.டி சட்டம் 2008 ன் படி மூன்று ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை வழங்கப்படும்.

ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவர்களில் ஆபாச மெசேஜ் அனுப்புவது, ஆபாச போட்டோ போடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது, போலி ID உருவாக்கி தன்னை வேருவர் போல் காட்டிக்கொள்வது, ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது, சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல், ஆபாச போட்டோ வெளியிடுதல், ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால் அவர்கள் ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்யப்படுவார்கள்.

1.ஹேக்கிங் [ HACKING ]
2.ஆபாசமாக மெஸ்சேஜ் அனுப்புதல். [ PORM SMS ]
3.கம்ப்யூட்டர் இன்டர்நெட் வழியாக திருடப்பட்டதை வாங்குவது.
4.அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது.
5.போலி ID உருவாக்கி தன்னை வேருவர் போல் காட்டிக்கொள்வது.
6.ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது.
7.சைபர் டெரரிசம் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல்.
8.ஆபாச போட்டோ வெளியிடுதல்.
9.ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல்.
10.குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல்.

புகார்களை sms அனுப்ப : 95000 99100.

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்ய
phone: 044-23452350

Cyber Crime Cell
Chennai
******
Sri Sudhakar
Assistant Comissioner of Police
Cyber Crime Cell
Commissioner office Campus
Egmore, Chennai- 600008

(044) 55498211
[email protected]
EMail: [email protected]
EMail: [email protected]

Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512

Chennai for Rest of Tamil Nadu,
Cyber Crime Cell
CB, CID
Off: 044 25393359

Delhi
****
Supdt. of Police,
Cyber Crime Investigation Cell Central Bureau of Investigation,
5th Floor, Block No.3, CGO Complex,
Lodhi Road,
New Delhi - 3, Phone: 4362203, 4392424

20/03/2014

போலீஸ்காரர்களே ஜாக்கிரதை!
**************************
எப்.ஐ.ஆர், பதிவு செய்ய
*********************
மறுக்காதீங்க
***********
நாடு முழுவதும் போலீசாருக்கு தலையில் குட்டு வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட் எப்.ஐ.ஆர், தொடர்பா ஒரு சிறப்பு யோசனையை வழங்கியிருக்கிறது.

அத்துடன் இந்த உத்தரவை பின்பற்றாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் இன்று கூறியுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தல் தனது மகள் கடத்தப்பட்டது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தது தொடர்பாகவும் , இதில் சரியான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற விஷயத்தை வலியுறுத்தியும் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது;
******************************************
ஒரு குற்றப்புகாரில் வெளிப்படையான , தெரியும் அளவிற்கு குற்றம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தாலே உடனே எப்.ஐ.ஆர்.,( முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்ய வேண்டும்.

இது மிக அவசியமானதும் கூட. இதனை தவிர்க்க கூடாது. மேலும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும் முன்பாக போலீசார் விசாரணை என்ற கட்டம் தேவையற்றது. அது போல் எப்.ஐ.ஆர்., போடாமல் நடவடிக்கை எடுப்பதும் அவசியமில்லை.

போலீசாரின் முதல்கட்ட ஆய்வும் 7 நாட்களுக்குள் இருக்க வேண்டும்.

தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகார் அடிப்படையில் நடவடிக்கை என்பதை விட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கலாம். எப்.ஐ.ஆர்., போட மறுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

திருமண பந்த பிரச்னை, ஊழல், நிதி முறைகேடு, நம்பிக்கை தொடர்பான விஷயங்களில் முதல்கட்ட விசாரணை மிக முக்கியத்துவமாக இருக்க வேண்டும்.

இது ஏற்று கொள்ளக்கூடியது. எப்.ஐ.ஆர், பதிவேட்டில் காட்டப்பட்டு அதற்கான நகல்கள் புகாரர்தாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

புகாரில் ஆதாரங்கள் இருந்தால் ஒழிய கைது நடவடிக்கை தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

கட்டப்பஞ்சாயத்து இனி முடியாது :
******************************
தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட ( அரசியல் சாசன பெஞ்ச் ) இந்த சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு முக்கியத்தும் வாய்ந்ததாகும்.

குறிப்பாக பல போலீஸ் ஸ்டேஷன்களில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுப்பது, எப்.ஐ.ஆர்., போட்டும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது, காவல் நிலையங்களிலேய பேசி தீர்க்கும் கட்டப்பஞ்சாயத்து இனி நடத்த முடியாது.

2014 ஆம் ஆண்டின் முதல் நற்செய்தி.********************************உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு.இச்செய...
20/03/2014

2014 ஆம் ஆண்டின் முதல் நற்செய்தி.
********************************
உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு.

இச்செய்தி தினமலர் 19/3/2014 கோயம்பத்தூர் நாளிதழில் வெளிவந்துள்ளது .

சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் முடிவு.

2000 ஆண்டுக்கு பின் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் முப்பதாயிரம் தீர்ப்புகளில் முதற்கட்டமாக இரண்டாயிரத்து நூறு தீர்ப்புகளை மொழி பெயர்க்க முடிவு செய்துள்ளனர்.

இனிப்பு வழங்கி கொண்டாட ஆசை எனக்கு.

நிச்சயமாக சட்ட மாணவர்களுக்கும், வழக்குரைங்கர்களுக்கும் பயனுள்ள மற்றும் இனிப்பான செய்தி.

Share பண்ணுங்க

by
Law Colleğe Studeŋt

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு
கீழ் கோர்ட் நீதிபதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் வசதிக்காக, சுப்ரீம் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு விவரங்கள், பொதுமக்கள், மாணவர்கள் படிப்பதற்கு வசதிக்காக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அம்பேத்கர் சட்ட பல்கலை முடிவெடுத்துள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும், அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், தமிழகம் முழுவதும் 7 அரசு சட்ட கல்லுாரிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் தினசரி புதிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அவற்றை சட்டக் கல்லுாரி மாணவர்கள் முதல் கீழ் கோர்ட்டில் உள்ள நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

கோர்ட்களில் "வீடியோ கான்பரன்சிங்" வசதி வந்துள்ள நிலையில், கல்லுாரிகளிலும், பல வசதிகளை ஏற்படுத்த சட்ட பல்கலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர், வணங்காமுடி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் மாணவர்கள், சட்ட கல்லுாரி, சட்ட பல்கலையில் இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, பி.காம்., - பி.எல்., படிப்பிற்கு வரவேற்பு உள்ளது. பல்கலையில் படிக்கும் முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு, அவ்வபோது, சுப்ரீம் கோர்ட் மற்றும் பிற கோர்ட்களின் நீதிபதிகள், சிறப்பு வகுப்பு எடுக்கின்றனர்.

இதை சட்ட கல்லுாரி மாணவர்களும் பார்க்க, வீடியோ கான்பரன்சிங் வசதி செய்யப்பட உள்ளது. இது தவிர, இணையதள டிவி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. நாட்டிலேயே, முதல் முறையாக, தமிழகத்தில், இவ்வசதி ஏற்படுத்தப்படுகிறது.

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள, தமிழ்நாடு சட்ட பள்ளியுடன் இணைந்து, தமிழகத்தில், சட்ட கல்வியின் தரம் உயர்த்தப்படும். சட்டம் படிக்கும் மாணவர்கள், யு.ஜி.சி., - நெட் - சிவில் நீதிபதி தேர்வுகளில் பங்கேற்க, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பொதுமக்களுக்காக, முக்கியமான, 20 சட்டப் பிரிவுகள், ஆங்கிலத்தில் இருப்பதை, தமிழில் மொழிபெயர்த்து, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும். சட்டம் படிக்கும் மாணவர்களுக்காக, 27 மிக முக்கிய சட்ட நுால்கள், தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

கீழ் கோர்ட் நீதிபதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புகளின் ஆங்கில வரையறைகள், தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. முதல் கட்டமாக, 2,000ம் ஆண்டுக்கு பின் அளிக்கப்பட்ட, 30 ஆயிரம் தீர்ப்புகளில், 2,100 தீர்ப்புகளின் வரையறைகள், ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன. மீதமுள்ளவை, 3 ஆண்டுகளுக்குள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

உச்ச நீதிமன்றம் டில்லியில் உள்ளது. நாட்டின் உயரிய நீதிமன்றமான, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, தமிழகத்தை சேர்ந்த, பி.சதாசிவம் உள்ளார். சுப்ரீம் கோர்ட்டிற்கு கீழ் உள்ள அனைத்து கோர்ட்டுகளும் கீழ் கோர்ட்டுகள் என, அழைக்கப்படுகின்றன.

MP ன் சம்பளம் மற்றும் சலுகைகள்.( Member of Parliament ) தமிழில் பாராளுமன்ற உறுப்பினர்.1) ரூ 50,000 மாத சம்பளம். ( ஐந்து ...
20/03/2014

MP ன் சம்பளம் மற்றும் சலுகைகள்.
( Member of Parliament ) தமிழில் பாராளுமன்ற உறுப்பினர்.

1) ரூ 50,000 மாத சம்பளம். ( ஐந்து வருடத்துக்கு ரூ 30 லட்சம் )
2) பாராளுமன்ற கூட்டுதொடர் நடக்கும்போது ஒவ்வொரு நாளுக்கும் 2,000 ரூபாய்.
3) ஓரு ஆண்டுக்கு 34 முறை உள்நாடு / வெளிநாடு இலவச விமான பயணம். அப்போ ஐந்து வருடத்துக்கு 170 முறை உள்நாடு / வெளிநாடு இலவச விமான பயணம்.
4) ஐந்து வருடங்களுக்கு ரயில் பயணம் முதல் வகுப்பு AC இலவசம்.
5) டெல்லியில் அரசாங்க வீடு (வாடகை, 3 இணைப்புகள் தொலைபேசி, ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரம், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர்) அத்தனையும் இலவசம்.
6) அவருக்கும் அவரது குடும்பத்துக்கே மருத்துவ சிகிச்சை இலவசம்.
7) MP யின் அலுவலக செலவுக்கு மாதம் 45 ஆயிரம் ருபாய்.
8) Ex. MP க்கு பென்ஷன் மாதம் 20 ஆயிரம் ருபாய்.

- பாலு திருச்சி

35 வயதுக்கு பின் சட்டம் படித்து வக்கீலான 400 பேர் இடைநீக்கம்*******************************************************400 L...
20/03/2014

35 வயதுக்கு பின் சட்டம் படித்து வக்கீலான 400 பேர் இடைநீக்கம்
*******************************************************
400 Lawyers suspended by Tamil Nadu bar council
************************************

சென்னை, மார்ச்.4 - மாலை மலர்

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் கூறியாவது:-

2009-ம் ஆண்டு சட்டப்படிப்பில் சேர்ந்து, பட்டம் பெற்று 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வக்கீலாக பதிவு செய்தவர்களின் வயது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

இதில், சுமார் 400 பேர், 35 வயதுக்கு பூர்த்தியான பின்னர் (2009-ம் ஆண்டு ஜூன் மாதம்) சட்டப்படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்றவர்கள் என்று தெரியவந்தது.

தமிழ்நாட்டை சேர்ந்த பலர் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து, பட்டம் பெற்று, தமிழ்நாடு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்கின்றனர். அந்த மாநிலங்களில் சட்டப்படிப்புகளில் சேர வயது வரம்பு எதுவும் கிடையாது என்பதால், தமிழகத்தை சேர்ந்த பலர் அங்குள்ள கல்லூரிகளில் பட்டம் பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, அவர்களிடம் விளக்கம் பெறாமல் நேரடியாக 35 வயதுக்கு பின் சட்டம் படித்து வக்கீலான 400 பேரை சஸ்பெண்டு செய்துள்ளோம்.

இதன்பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களது வக்கீல் பதிவை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

***********************************************************

Although the Bar Council of India (BCI) has abolished the controversial upper age limit of 35 years for students taking law degrees, the Tamil Nadu bar council has retained the age ceiling, and reinforced it in a resolution on Saturday (14 December). The conflict has left thousands of students in the state, who enrolled in law courses between 2008 and 2011, in limbo, said the BCI, which is looking into the matter.

Based on this, the Tamil Nadu and Pondicherry Bar Council have suspended the registration of 400 lawyers. T Selvam who is the President of the Bar Council has mentioned, “The details and ages of the people who have joined law colleges in the year 2009 and who had got the law degrees in the year 2012 and 2013 have been collected. It has come to our notice that about 400 people who have attained the age of 35 years have joined the course in the year 2009 (June month). As per the High Court directions we have suspended them. After the enquiry, action will be taken to cancel the bar registration”.

இந்த நிலையில், அகில இந்திய பார் கவுன்சில் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு உத்தரவினை பிறப்பித்தது. அதில், 2009-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு 35 வயது பூர்த்தியானவர்கள் சட்டப்படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று இருந்தால், அவர்கள் வக்கீலாக பதிவு செய்ய முடியாது என்று கூறியிருந்தது. இந்த உத்தரவை சில மாநிலங்களில் உள்ள பார் கவுன்சில்கள் ஆதரித்தது. சில மாநிலங்களில் பார் கவுன்சில்கள் எதிர்ப்பு தெரிவித்தது.

அதேநேரம், இந்த வயது வரம்பு உத்தரவை ரத்து செய்ய கோரி அந்தந்த மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சில ஐகோர்ட்டுக்குள், பார் கவுன்சில் உத்தரவுக்கு தடை விதித்தும், சில ஐகோர்ட்டுக்குள் தடை விதிக்க மறுத்தும் உத்தரவிட்டன.

அந்த வகையில், அகில இந்திய பார் கவுன்சிலின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், அகில இந்திய பார் கவுன்சில், இந்த வயது தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்ய ஒரு நபர் கமிஷன் அமைத்தது. இந்த ஒரு நபர் கமிஷன் செய்த பரிந்துரையின் அடிப்படையில், வயது வரம்பு நிர்ணயம் செய்த உத்தரவை வாபஸ் பெற்று அகில இந்திய பார் கவுன்சில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

ஆனால், வயது வரம்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஒரு இடைக்கால உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். அதில், 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 35 வயது பூர்த்தியானவர்கள், சட்டப்படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்று, வக்கீலாக பதிவு செய்திருந்தால், அவர்களது வக்கீல் பதிவை சஸ்பெண்டு செய்தும், பின்னர் விசாரணை நடத்தி அவர்களை பார் கவுன்சிலில் இருந்து நீக்கம் செய்தும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனடிப்படையில், 400 வக்கீல்களின், (வக்கீல்) பதிவை சஸ்பெண்டு செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

State Wise List Advocates in INDIA*************************In INDIA ( As per 2011 census )******There are " 1,273,289 " ...
20/03/2014

State Wise List Advocates in INDIA
*************************
In INDIA ( As per 2011 census )
******
There are " 1,273,289 " Advocates Enrolled in BAR COUNCIL.
That is "One Crore, Twenty Seven Lakhs, Three Thousand, Two Hundred and Eighty Nine" Advocates are Enrolled in BAR COUNCIL.

In Tamil Nadu ( As per 2011 Census )
**********
67,000 ( Sixty Seven Thousand )

20/03/2014

HOW TO WRITE A WILL ? ( Format in TAMIL & ENGLISH )
*****************************************
உயில் சாசனம்
*************

20014 ம் வருடம்________ மாதம்________ ந்தேதி கிராமம்/ டவுன் ________ தெரு ________ கதவு எண் ________ என்ற விலாசத்தில் வசிக்கும் திரு ________ அவர்களின் மனைவி ________ ஆகிய நான் நல்ல ஞாபக சக்தியுடனும் பிறருடைய தூண்டுதல் இல்லாமலும் என்னுடைய முழு விருப்பப்படி எழுதி வைத்த உயில் சாசனம் என்னவென்றால்,

இப்பொழுது எனக்கு ________ வயதாகிறது.என் வயோதிகத்தின் காரணமாக எனக்கு நாளுக்கு நாள் உடல் நலம் குன்றி பலவீனம் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. நான் இந்த நல்ல நிலைமையில் இருக்கும் போதே எனக்கு பாத்தியப்பட்ட சொத்து விபரத்தில் கண்ட சொத்து குறித்து ஒரு எழுத்து மூலமான உயில் எழுதி வைக்க வேண்டும் என்ற விருப்பத்தின் போ¤ல் இந்த உயில்சாசனத்தை எழுதி வைக்கிறேன்.

எனக்கு திருமணமாகி என் கணவர் திரு ________மூலமாக திரு ________ என்ற மகனும் திருமதி. ________ மற்றும் திருமதி ________ என்ற 2 மகள்களும் உள்ளனர். தற்போது என் கணவர் உயிரோடு இல்லை. என் கணவர் காலமானபின் என்னுடைய மகன்தான் எனக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொண்டு காப்பாற்றி வருகின்றான். இனிமேலும் எனது இறுதிக்காலம் வரை அவன் என்னை நல்லமுறையில் கவனித்து வருவான் என்று எனக்கு பூரண நம்பிக்கை உள்ளது. மேலும் மகள்கள் இருவருக்கும் என் கணவர் உயிருடன் இருக்கும் பொழுதே நல்ல முறையில் போதுமான சீர் வரிசைகளுடன் நல்ல இடங்களில் திருமணம் செய்து கொடுத்து விட்டோம். ஆகவே எனக்கு உரிமையான சொத்து விபரத்தில கண்ட ________ சொத்தை எனது காலத்துக்கு பின் எனது மகன் திரு.________ பூரணமாக சகல பாத்தியதைகளுடன் அடைந்து புத்திர பௌத்திர பாரம்பர்யமாக ஆண்டனுபவித்துக் கொள்வதாக இந்த உயில் சாசனம் எழுதி வைக்கிறேன்.

இந்த உயில் சாசனத்தில் கண்ட சொத்து எனக்கே பாத்தியப்பட்டது என்றும் அதில் வேறு எவருக்கும் எவ்வகை உரிமையும், பாத்தியமும் சம்மந்தமும், கிடையாதென்றும் இந்த உயில் சாசனத்தை எழுதி வைக்க எனக்கு பூரண உ£¤மை உள்ளது என்றும் உறுதி கூறுகிறேன்.

இந்த உயில் சாசனம் என்னுடைய ஆயுட் காலத்திற்கு பிறகு நடைமுறைக்கு வர வேண்டியது. இதை நான் வேண்டும் போது ரத்து செய்யவும் மாற்றி எழுதவும் திருத்தி அமைக்கவும் எனக்கு பூரண உரிமை உண்டு.

இதுவே நான் எழுதி வைக்கும் உயில் சாசனம் ஆகும்.
இந்தப்படிக்கு நான் என்னுடைய பூரண சம்மதத்தின் போ¤லும் பிறருடைய தூண்டுதல் இல்லாமலும் நல்ல ஞாபக சக்தியுடனும் என் விருப்பப்படியும் எழுதி வைத்த உயில் சாசனம்.
சொத்து விபரம்

___________பதிவுமாவட்டம்____________சார்பதிவகம்________ கிராமம்____________சர்வே எண். -ல் மொத்த விஸ்தீரணம் _____ல்_____ சதுரடி கொண்ட காலிமன இந்த உயிலுக்குக்கட்டுப்பட்டது,
இதற்து நான்கு எல்லைகள் விவரம்

வடக்கில் - ---------------- ரோடு
தெற்கில் - பிளாட் எண்.-----------
கிழக்கில் - பிளாட் எண். ----------
மேற்கில் - ---------------- ரோடு

இதன் மத்தியில் கிழமேல் அடி____ தென்வடல் அடி_____ஆக சதுரடி____ கொண்ட காலி மனை இந்த உயில் சாசனத்திற்கு உட்பட்டது.

எழுதி வைப்பவர்

சாட்சிகள்

1.

2.

WILL
***
This is the LAST WILL and TESTAMENT executed at on this____ day of ____ 2014 by me , Thiru.____ son of ____ , hindu , residing at ____

Out of my own free will and in a full disposing state of mind without any coercion, undue influence from any body.

I am now aged about____ years old and I am anxious that after my life time all my properties whether movable or immovable and my interest in the business concern belonging to me should devolve smoothly according to my desires set out in this Will, so that there may not be any complications.

I acquired property more fully described in the schedule hereunder from Thiru. ____ in and by sale deed dated. ____ registered as Doct.No. ____ of Book 1 volume filed at pages____ to on the file of the Sub Registrar ____ of ____ and from the said date, the said property has been in my exclusive enjoyment and have been enjoying without any interruption from any body.

I give, devise and bequeath the movable and immovable properties property more fully described in the schedule hereunder to Thiru. ____ , son of Thiru.____ Hindu aged about years residing presently residing at ____ and the said shall be the absolute owner of the property after my life time.

I possess 60 % of shares in the Company. I give, devise and bequeath my said shares absolutely in favor of my wife and she will have unfettered discretion to do whatever she likes with the said shares as and when they devolve on her. In the event of my wife predeceasing me, I give, devise and bequeath my said shares of 60% in the said Company to my two daughters absolutely to be taken by them in equal shares.

I give, devise and bequeath whatever properties movable or immovable wherever situated and which are not specifically set out in this Will to be taken absolutely by both of my daughters equally.

I appoint my elder daughter to be the Executor and Trustee of this Will.

This Will shall come into effect after my death.

I reserve my right to alter or revoke this Will.

Thus I have executed this Will as set out above out of my own free Will and with a full disposing state of mine.

Signed by the TESTATOR and acknowledged by him to be his last Will and Testament in the presence of us, both of us being present at the same time, who at his request, in his
presence and in the presence of each other,
have subscribed out names as witnesses.

WITNESSES: TESTATOR

GOLD MEDAL & SCHOLARSHIP for TOP MARK HOLDERS in Govt Law College, Tamilnadu1. JEEVA ENDOWMENT SCHOLARSHIPi. Donor : Gov...
20/03/2014

GOLD MEDAL & SCHOLARSHIP for TOP MARK HOLDERS in Govt Law College, Tamilnadu

1. JEEVA ENDOWMENT SCHOLARSHIP

i. Donor : Govt. of Tamil Nadu
ii. Corpus Fund : Rs. 25,00,000/-
iii. Conditions for the award

First 5 rank holders in each year of the 3 year/5 year of B.L. Degree courses and M.L. Degree course in each year of each branch at the affiliated Govt. Law Colleges.

The candidate should be passed all the subjects in the 1 st attempt itself.

NB: Scholarship is subject to availability of interest accrued on the corpus fund in the account.

2 . THIRUMALAISAMY AUDISESHAN ENDOWMENT

i. Donor : Thiru. Audiseshan, Former Vice-Chancellor, TNDALU.
ii. Corpus Fund : Rs. 25,000/-
iii. Conditions for the award

Gold Medal shall be awarded to;

a. Student getting First Rank in the 3 year B.L. Degree Course.
b. Student getting First Rank in the 5 year B.L. Degree Course.
c. Student getting First Rank in the M.L. Degree Course.

3. JUSTICE P.N. BHAGAWATHI ENDOWMENT

i. Donor : Hon'ble Justice P.N. Bhagawathi
ii. Corpus Fund : Rs. 25,000/-
iii. Conditions for the award

A Gold Medal shall be awarded every year to a regular student who secures highest marks in the subject “Human Rights and International Law” in the following courses:

B.A.B.L.(Hons) Degree Course
B.L. 5 year Degree Course
B.L. 3 year Degree Course

A student should have secured the highest mark in the subject “Human Rights and International Law” and should have secured not less than 50% of the total marks in the year in which the subject is prescribed.

4 . SRI V. SRIDEVAN ENDOWMENT SCHOLARSHIP

i. Donor : Hon'ble Justice Sri V. Sridevan
ii. Corpus Fund : Rs. 1,00,000/-
iii. Conditions for the award

Scholarship shall be awarded to a student getting first mark in the M.L. I.P.R. degree Course.

5 . SRI. A.S. VENKATRAMA IYER ENDOWMENT

i. Donor : Sri. A.S. Venkatrama Iyer
ii. Corpus Fund : Rs. 25,000/-
iii. Conditions for the award

Gold Medal shall be awarded every year to a student getting “First Rank” in “Business Law” in M.L. Degree Course.

6. HON'BLE MR. JUSTICE K. VEERASAMY ENDOWMENT

i. Donor : Hon'ble Mr. Justice K. Veerasamy
ii. Corpus Fund : Rs. 1,25,000/-
iii. Conditions for the award

A regular student who secures First Rank in the Subject “Constitutional Law” in the following courses:

B.A.B.L. (Hons) Degree Course
B.L. 5 year Degree Course
B.L. 3 year Degree Course

First Rank holder of the M.L. Degree Course (Branch-Constitutional Law & Human Rights].

7. K.G.R. SCHOLARSHIP
i. Donor : Prof. K. Govindarajan [Retd.]
ii. Corpus Fund : Rs. 25,000/-
iii. Conditions for the award

Scholarship shall be awarded every year to a regular student of B.A.B.L. (Hons) Degree Course in School of Excellence in Law to be awarded to the “First Rank Holder” in the subject “Contract – I (General Principles of Law of Contract.

8 . THIRU. P. ANANDA RAO ENDOWMENT

i. Donor : Mr. P. Ananda Rao,
ii. Corpus Fund : Rs. 50,000/-
iii. Conditions for the award

One gold medal in the name of the Thiru. P. Ananda Rao Endowment” to a student securing first rank in Constitutional Law and other gold medal to a student securing First rank in company Law every year in the 3/5 year Law Degree Course shall be awarded.

9. SHRI. V. AYODHYA RAMAIAH ENDOWMENT

i. Donor :
ii. Corpus Fund : Rs. 1,00,000/-
iii. Conditions for the award

Two Gold Medals and two cash prizes will be awarded to two students one from 3 year B.L. Degree Course who secures highest marks in the subject “Civil Procedure Code” (CPC) at the Dr. Ambedkar Govt. Law College, Chennai –104.

10. SHRI. V.V. RAMANA RAO PATNAIK ENDOWMENT

i. Donor :
ii. Corpus Fund : Rs. 1,00,000/-
iii. Conditions for the award

Two Gold Medal and Two Cash Prize will be awarded to two students who secures highest marks in the subject of “Law of Evidence” in the Dr. Ambedkar Govt. Law College, Chennai in the 3 year and 5 year B.L. Degree Courses every academic year.

11. SRIDEVAN ENDOWMENT

i. Donor : Hon'ble Mr. Justice Sridevan
ii. Corpus Fund : Rs. 50,000/-
iii. Conditions for the award

To award cash prize of Rs. 5,000/- to the Best Memorial to be selected by the judge in the National Moot Court Competition conducted by the students of the School of Excellence in Law every year.

12 NEPC TROPHY

i. Donor : Hon'ble Mr. Ravi Prakash Khemka, Chairman, NEPC.
ii. Corpus Fund : Rs. 1,00,000/-
iii. Conditions for the award

Endowment in the name of “NEPC TROPHY”

I. Out of the interest accrued, 50% of the interest amount will be utilized for NEPC lectureship on Public Law to be awarded to a nominee suggested by the Committee comprising of a. The Vice-Chancellor, b. the NEPC Representative and c. the Dean P.G. Department. The lectureship theme will be on “Environmental Law and Developmental Laws” to be delivered annually by a jurist including judge, Academician or an eminent Lawyers chosen by the above Committee.

II. The remaining 50% of the interest will be utilized for the award of two prizes per year to the UG & PG Law Degree Courses offered in the Law University.

One Medal (Gold Polished Silver Medal) shall be awarded to the first rank holder in the Environmental Law of the 5 year B.A.B.L.(Hons) Degree Course and,
One Medal (Gold polished Silver Medal) shall be awarded to the First Rank Holder in the overall performance in the P.G. Degree Course Examinations of all the Branches offer at the University Departments.

13. J . PAUL ENDOWMENT

i. Donor : Prof. J. Paul, Former Principal, GLC, Madurai.
ii. Corpus Fund : Rs. 1,00,000/-
iii. Conditions for the award

The Scholarships shall be awarded to three M.L. students of any branch who are pursuing M.L. Degree Course, one each from Dr. Ambedkar Government Law College, Chennai, Government Law College, Madurai, Government Law College, Trichy affiliated to the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai provided that the student should have passed B.L. Degree Examination in the first attempt and admitted to M.L. Programme in any branch in the respective colleges securing highest marks.

The Scholarships shall be awarded to those M.L. students who come from 3 year B.L. Degree Course and 5 year B.L. Degree Course in alternative years.

The Scholarships shall be of the value of Rs. 3,000/- each and shall be given in the form of standard Text Books in the Law subject for the respective M.L. Degree Course with the approval of the Vice-Chancellor of the Tamil Nadu Dr. Ambedkar Law University .

14. VAZHAKKARINGAR VAANGALAMPALAYAM CHELLAPPAN PALANISAMY ENDOWMENT

i. Donor : Prof. Va. Se. Kulandaisamy, Former Vice-Chancellor,
ii. Corpus Fund : Rs. 1,00,000/-
iii. Conditions for the award

A lectureship based on the subject viz. Constitutional Law and its allied area, Judicial Reforms and Legal Studies or any other topic to be decided by University be conducted every year. The Lectureship may be conducted either in Tamil or in English.

நோட்டரி பப்ளிக்**************பல்வேறு சந்தர்ப்பங்களில், நம்மிடம் இருக்கும் அசல் டாக்குமென்ட்களின் பிரதிகளை( Xerox ) அரசாங...
20/03/2014

நோட்டரி பப்ளிக்
**************

பல்வேறு சந்தர்ப்பங்களில், நம்மிடம் இருக்கும் அசல் டாக்குமென்ட்களின் பிரதிகளை( Xerox ) அரசாங்கம், கோர்ட், இதர நிறுவனங்கள் என்று பலருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அப்போது அசல்(Original) டாக்குமென்ட்களை கொடுப்பது சாத்தியமில்லை.

எனவே, அவற்றின் பிரதிகளை (அந்தக் காலத்தில் டைப் செய்யப்பட்ட நகல்கள்) ஜெராக்ஸ் பிரதிகளாக சமர்ப்பிக்கலாம்.

ஆனால், நாம் கொடுக்கும் பிரதிகள் உண்மை நகல்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? இது உண்மையான நகல் என்று நமக்கு நாமே உறுதி அளித்துக் கொள்ள முடியாது. அங்கீகரிக்கப்பட்ட, பொறுப்பான வேறு ஒருவர்தான் அதைச் செய்ய முடியும். அவர்தான் நோட்டரி பப்ளிக். ஒரு டாக்குமென்ட்டை `உண்மை நகல்' என்று இவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அது சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப் படும் தகுதியைப் பெற்றுவிடுகிறது.

இன்னும் சில விஷயங்களில் சட்டப்படி, முத்திரைத்தாளில் பிரமாண மாக எழுதி, கையெழுத்திட்டு சமர்ப்பிப் பார்கள். சாட்சிகள் முன்னிலையில் அப்படிக் கையெழுத்திட்டு, சமர்ப்பித் தாலும் கூட, ஒரு நோட்டரி பப்ளிக், என் முன்னிலையில் இன்னார், இன்ன தகவல்கள் இடம் பெறும்படியான பிரமாணத்தில் கையெழுத்திட்டார் என்று சான்றொப்பம் இடவேண்டும்.

அப்போதுதான் அந்தப் பிரமாணத்துக்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது.

வழக்கறிஞர்களாக குறைந்த பட்சம் ஏழு வருடங்கள் பிராக்டீஸ் செய்தவர்கள் மட்டுமே நோட்டரி ஆவதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை மூத்த நோட்டரிகள் இரண்டு பேர் சிபாரிசு செய்து கையெழுத்திட வேண்டும். பிறகு, அதற்குரிய கட்டணம் செலுத்தி மாவட்ட நீதிபதியிடம் சமர்பிக்க வேண்டும். அவர் அந்த விண்ணப் பங்களைப் பரிசீலனை செய்து தகுதி யானவற்றை சிபாரிசு செய்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைப்பார்.

வழக்கறிஞர்கள் நோட்டரி ஆவதற்கு விண்ணப்பித்திருக்கும்போது `இவர்கள் நோட்டரி ஆவதில் யாருக்கேனும் ஆட்சேபணை இருக்குமானால், அர சாங்கத்துக்குத் தெரிவிக்கலாம்' என்று கெசட்டில் அறிவிப்பு வெளியாகும். ஆட்சேபணை ஏதுமில்லாமல், மற்ற அம்சங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த வழக்கறிஞர்கள் நோட்டரியாக நியமிக்கப்படுவார்கள்.

இப்படி நியமிக்கப்படுபவர்கள் நோட்டரியாக செயல்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட நகரம், மாவட்டம் அல்லது மாநிலம் என்று வரையறை செய்யப்படும். அவரவர்கள் தமக்கு குறிப்பிடப்பட்ட எல்லைக்குட்பட்ட பகுதிக்கான விஷயங்களில் மட்டுமே நோட்டரியாக செயல்பட முடியும். மாநில அரசிடம் மட்டும் அனுமதி பெற்ற செங்கல்பட்டு

பகுதியைச் சேர்ந்த நோட்டரி ஒருவர், புதுக் கோட்டை டாக்குமெண்டை அட்டஸ்ட் செய்ய முடியாது. ஆனால், ஒரு வழக்கறிஞர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்கள் வைத்துச் செயல்பட விரும்பினால் அவர் ஆல் இந்தியா நோட்டரியாக செயல்பட மத்திய, அரசிடம் அனுமதி பெறவேண்டும்.

முன்பெல்லாம் நோட்டரியாக செயல்பட ஒருவருக்கு மூன்றாண்டுகள் அனுமதி அளிக்கப்படும். மூன்றாண்டு களுக்கு ஒருமுறை அந்த அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இப்போது விண்ணப்பிக்கும்போதே ஐந்து வருடங்களுக்கு அனுமதி வழங்கப் படுகிறது. அதன் பிறகு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொண்டால் போது மானது. இதற்கும் கட்ட ணம் உண்டு.

ஒரு வழக்கறிஞர் நோட்டரிக்கான அனுமதி பெற்றதும் நோட்டரிக்குரிய இரண்டு ரப்பர் ஸ்டாம்ப் களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று நோட்டரியின் பெயர் மற்றும் அவர் செயல்பட அனு மதிக்கப்பட்ட எல்லையைக் குறிப்பிடும் வட்ட வடிவத் திலானது. இன்னொன்று அவரது பெயர் மற்றும் முகவரி கொண்ட செவ்வக வடிவ ரப்பர் ஸ்டாம்ப். நோட்டரி பப்ளிக் என்பவர் ஆவ ணத்தில் கையெழுத்திடும்போது பச்சை மையில்தான் கையெழுத்துப் போட வேண்டும்.

அஃபிடவிட் என்று சொல்லப் படும் பலவிதமான பிரமாணப் பத்திரங்களை நோட்டரி, அட்டஸ்ட் செய்யலாம். ஒருவருடைய உயிலின் பிரதிகளை, சொத்து டாக்குமென்ட்களை `உண்மை நகல்' என்று அட்டஸ்ட் செய்யலாம். ஒருவர் பெயரில் இருக்கும் டெலிஃபோனை அவரது வாரிசுதார ருக்கோ அல்லது அவரது விருப்பத்தின் பேரில் வேறு ஒருவருக்கோ மாற்றும் போது, அந்த ஒப்பந்தத்தை அட்டஸ்ட் செய்யலாம். வங்கிகளுக்கோ, இதர நிறுவனங்களுக்கோ அளிக்கும் இன்டம் னிடி பாண்டுகளை அட்டஸ்ட் செய்யலாம். அமெரிக்கா போன்ற அயல் நாடுகள் செல்லும்போது, நீங்கள் அமெரிக்காவுக்குப் போய் அங்கேயே தங்கிவிட மாட்டீர்கள்; இந்தியாவுக்கு திரும்பி வந்துவிடுவீர்கள்; அதற்கான அவசியம் உங்களுக்கு இருக்கிறது என்று எடுத்துச் சொல்வதுபோல் சில அஃபிடவிட்கள் கொடுக்க வேண்டும். அவற்றுக்கு நோட்டரியின் அட்டஸ் டேஷன் அவசியம்.

ஆண்டுக்கு ஒரு முறை, ஒவ்வொரு நோட்டரியும், தாங்கள் அட்டஸ்ட் செய்த டாகுமென்ட் களின் விவரங்களை, அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையும் இருக்கிறது.

நோட்டரிகள் பயன்படுத்தக் கூடிய `நோட்டரி ஸ்டாம்ப்' என்று ஒன்றுண்டு, பிரமாணப் பத்திரம், பவர் ஆஃப் அட்டர்னி, விற்பனை அக்ரிமென்ட்கள் என்று நோட்டரிகள் எதில் கையெழுத் திட்டாலும், அதில் பத்து ரூபாய் மதிப்புள்ள நோட்டரி ஸ்டாம்ப்களை ஒட்ட வேண்டியது அவசியம். ஆனால், உண்மை நகல் என்று சான்றளிக்கும் டாக்குமென்டில் நோட்டரி ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியமில்லை.

அட்டஸ்ட் செய்கிறபோது சம்பந்தப்பட்டவர் அந்த நோட்டரிக்கு ஏற்கெனவே அறிமுகமானவராக இருக்க வேண்டும். அப்படித் தெரியாத பட்சத்தில், சம்பந்தப் பட்டவருக்கும், நோட்டரிக்கும் அறிமுகமான ஒரு பொதுவான நபர் அவசியம். இருவருக்கும் தெரிந்த அந்த நபர், இன்னாரை எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டு கையெழெுத்திட வேண்டும்; அதன் பிறகு நோட்டரி, `நான் அறிந்த இன்ன நபரால், அடையாளம் கூறப் பட்ட இவர், என் முன்னிலை யில் அளித்த பிரமாணம்

இது' என்று குறிப்பிட்டு கையெழுத்திடலாம்.

துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள், வந்து சேர வேண்டிய குறிப்பிட்ட தினத்தில் வராமல் தாமத மாக வந்து சேர்ந்தால், அந்தக் கப்பலின் கேப்டன் காலதாமதத்துக்கான காரணங் களைக் குறிப்பிட்டு, ஒரு பிரமாணப் பத் திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அந்நிய நாட்டிலிருந்து வரும் கப்பலின் கேப்டனுக்கு இங்கே இருக்கும் நோட் டரியை எப்படித் தெரிந்திருக்கும்? அப் படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் கப்பலுக் குரிய லோக்கல் ஏஜென்ட் மூலமாக அடையாளம் கண்டு நோட்டரி பிரமாணப் பத்திரத்தை அட்டஸ்ட் செய்வார்.

நன்றி : பாலா நடராஜன்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Law College Student posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share