Veera Pengal Munnetra Sangam

Veera Pengal Munnetra Sangam We are a union of women workers from Chennai. Beyond our daily work, we have dreams, struggles, and stories that deserve to be heard.

We’re here to share the truth of our journey, the moments that often go unseen but shape who we are.

30/07/2026

ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் தனது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் உரிமை கொண்டவர்.

பல பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைகளில் தொல்லை, அவமரியாதை மற்றும் தேவையற்ற நடத்தைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த வீடியோவில், VPMS-இன் சந்திரா அவர்கள் அந்த அனுபவங்களையும், பெண்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பணியாற்ற அனைவரின் ஆதரவும் மரியாதையும் ஏன் அவசியம் என்பதையும் பகிர்கிறார்.

Every woman deserves to feel safe while earning a living.

Many women auto drivers face harassment, disrespect, and unwanted behaviour on the road. In this reel, Chandra from VPMS speaks about these challenges and why respect and support for women drivers matter.

Let’s create safer roads where every woman can work with confidence and dignity.

24/07/2026

ஒரு நிமிட விழிப்புணர்வு… ஒரு உயிரைக் காப்பாற்றலாம்.

VPMS உறுப்பினர்களுக்காக ALERT Foundation நடத்திய முதலுதவி பயிற்சிப் பட்டறையில், பயிற்சியாளர் திரு. நீலகண்டன் அவர்கள் முதலுதவியின் அவசியத்தையும், அவசர நேரங்களில் சரியான உதவி செய்வதின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் முதலுதவி தெரிந்திருந்தால், சாலையில் பல உயிர்களுக்கு நம்பிக்கையாக இருக்க முடியும்.

உதவ தயாராக இருப்போம். உயிர்களை காப்போம்.

Every second matters. Every auto driver can be a first responder.

Our VPMS members took part in a First Aid Workshop conducted by the ALERT Foundation, where Mr. Nilakandan shared valuable insights on how basic first aid knowledge can save lives before medical help arrives.

A small act. A big impact. Because helping someone in need starts with being prepared.

23/07/2026

எங்கள் VPMS குடும்பத்துடன் இணைந்து தனலட்சுமி அவர்களின் பிறந்தநாளை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடினோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் என்றும் உங்களைத் தொடர வாழ்த்துகிறோம்.

Celebrating not just a birthday, but the incredible person who inspires us every day.
Happy Birthday, Dhanalakshmi! Wishing you endless happiness, good health, and continued success. Thank you for being a part of the VPMS family.

16/07/2026

ஒரு ஆட்டோ ஓட்டுநரின் பயணத்தில் வரும் சவால்கள் பல அதில் ஒன்று டோயிங் பிரச்சனை. இந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை பகிர்கிறோம்.

The journey of an auto driver comes with many challenges and towing is one of them. In Episode 2 of our VPMS Reel Series, we share important information every auto driver should know.

10/07/2026

இந்த வீடியோ எந்த ஒரு பிராண்டையும் அல்லது தயாரிப்பையும் விளம்பரப்படுத்துவதற்காக உருவாக்கப்படவில்லை. பெண்களுக்கு மாதவிடாய் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பல்வேறு பராமரிப்பு விருப்பங்களை அறிமுகப்படுத்தவும் மட்டுமே இந்த வீடியோ உருவாக்கப்பட்டது.

அறிவு பகிர்வதே எங்கள் நோக்கம்.

We've received many messages asking where to buy the products featured in our Menstrual Care Kit.

This video is not a product promotion or endorsement. It was created to raise awareness about menstrual health and introduce women to the different menstrual care options available. The products shown are part of a menstrual kit distributed as part of our awareness initiative.

Our goal is to encourage informed choices and conversations around menstrual health.

09/07/2026

வீர பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் அன்பு உறுப்பினரான தெய்வநாயகியை இன்று அன்புடன் நினைவுகூர்கிறோம்.

அவரின் புன்னகை, துணிச்சல், அன்பு எங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர் நினைவு என்றும் நிலைத்திருக்கும்.

Today, we remember Deivanayaki, a cherished member of Veera Pengal Munnetra Sangam. Her presence, strength, and kindness will always remain in our hearts. We honor her memory and extend our heartfelt condolences to her family, friends, and fellow members.

Forever remembered

04/07/2026

ஒவ்வொரு முகமும் ஒரு போராட்டம். ஒவ்வொரு கையும் ஒரு மாற்றம்.

ஸ்டீரிங்கைப் பிடித்தது ஒரு தொழிலுக்காக மட்டும் அல்ல; தங்களுக்கான இடத்தை உருவாக்குவதற்காக.

குடும்பத்தின் எதிர்ப்புகள், சமூகத்தின் சந்தேகங்கள், பொருளாதார சவால்கள், தனித்தாய் வாழ்க்கையின் பொறுப்புகள், எண்ணற்ற தடைகள் இவற்றை ஒவ்வொரு நாளும் கடந்து வந்த பெண்களின் கூட்டுப் பயணம்தான் இது.

அந்தப் பயணம் இன்று ஒரு வரலாறாக மாறியுள்ளது.

இந்தியாவின் போக்குவரத்துத் துறையின் முதல் மகளிர் கூட்டுறவுச் சங்கமாக பதிவு செய்யப்பட்டிருப்பது ஒரு சாதனை மட்டுமல்ல; பெண்கள் ஒன்றிணைந்தால் மாற்றம் சாத்தியம் என்பதற்கான வலுவான சான்று.

இந்த சர்வதேச கூட்டுறவு தினத்தில், இந்தப் பயணத்தை உருவாக்கிய ஒவ்வொரு உறுப்பினருக்கும், அவர்களின் துணிச்சலுக்கும், ஒற்றுமைக்கும், விடாமுயற்சிக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

சர்வதேச கூட்டுறவு தின நல்வாழ்த்துகள்!

Every face tells a story of struggle. Every hand cre

03/07/2026

இரவு சவாரி... பயமா? வாய்ப்பா?

Night Rides: Fear or Opportunity?

02/07/2026

மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாகும். ஆனால் நீண்ட நேரம் சாலையில் பணியாற்றும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, அந்த நாட்களை சுகாதாரமாகவும் வசதியாகவும் சமாளிப்பது சில நடைமுறை சவால்களை ஏற்படுத்தலாம்.

இந்த மாதவிடாய் பராமரிப்பு கிட் மூலம், அத்தியாவசிய சுகாதாரப் பொருட்களை வழங்குவதோடு, மாதவிடாய் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும் உருவாக்க விரும்புகிறோம். பாதுகாப்பான மற்றும் வசதியான மாதவிடாய் பராமரிப்பு, பெண்கள் தங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொண்டு நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் தங்கள் பணியைத் தொடர உதவுகிறது.

மாதவிடாய் குறித்த சமூகத் தடைகளை உடைத்து, நம் நகரங்களை முன்னோக்கி நகர்த்தும் பெண்களின் நலனுக்காக ஒன்றிணைவோம்.

Menstruation is a natural part of life, but for women who spend long hours on the road, managing their periods can come with practical challenges.

Through this Menstrual Care Kit, we aim to make those days a little easier by providing essential hygiene products and encouraging conversations around menstrual health. Access to safe and comfortable menstrual care helps women look after their health while continuing their work with confidence and dignity.

Together, let's break the stigma around menstruation and support the well-being of women who keep our cities moving.

25/06/2026

ஒரு ஆட்டோ ஓட்டுநரின் பயணத்தில் வரும் சவால்கள் பல அதில் ஒன்று டோயிங் பிரச்சனை. இந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை பகிர்கிறோம்.

The journey of an auto driver comes with many challenges and towing is one of them. In Episode 1 of our VPMS Reel Series, we share important information every auto driver should know.

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veera Pengal Munnetra Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share