Tamil Nadu Advocates

Tamil Nadu Advocates We are looking at all kind of cases. if you need any legal explanation or requests to register cases

Contact any Arbitration cases in ChennaiI handle it..!!
19/06/2020

Contact any Arbitration cases in Chennai
I handle it..!!

ஒரு  #கிரிமினல்_வழக்கில்,  #இரண்டு_கோணங்கள் இருந்தால்,  #குற்றம்_முழுவதும்_நிரூபிக்க_முடியாத_நிலையில்,  #சந்தேகத்தின்_பல...
12/06/2020

ஒரு #கிரிமினல்_வழக்கில், #இரண்டு_கோணங்கள் இருந்தால், #குற்றம்_முழுவதும்_நிரூபிக்க_முடியாத_நிலையில், #சந்தேகத்தின்_பலனை #எதிரிக்கு கொடுத்து #எதிரியை_விடுதலை செய்ய வேண்டும் என்று #காசோலை_மோசடி வழக்கில் தீர்ப்பு.

of - the to be .

If there is possibility of two views in a criminal case, the view which can be taken in favour of the accused alone shall be chosen by the law courts as the guilty of the person under punitive provision of law has to be proved beyond a reasonable doubt.

Therefore, if there is any iota of doubt available in the mind of the Court, based on the theory of giving benefit of doubt to the accused, the accused shall be acquitted and cannot be punished, that is why, even though the be in of the under the of 139 as well as 118 of the Negotiable Instruments Act, such statutory presumption would be considered always as a and once an the side certainly, the statutory presumption build up in favour of the complainant shall be shattered and in that case, it is by the that the accused had been guilt for the offence punishable under Section 138 of the Negotiable Instruments Act, to a that the is of the .

08/06/2020
கிறிஸ்தவமும், இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை...பற்றி இங்கு காண்போம்..!! (இப்பதிவு ஆண் வாரிசுதாரர்களுக்கு அல்ல....
08/06/2020

கிறிஸ்தவமும், இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை...பற்றி இங்கு காண்போம்..!! (இப்பதிவு ஆண் வாரிசுதாரர்களுக்கு அல்ல..!!)
பெண் சுதந்திரம் என்பது எந்தளவுக்குப் பொய் என்பதை அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் நமக்கு வெளிச்சப் படுத்துகின்றன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களில் பிறந்த பெண்கள் சொத்துரிமையில் சந்திக்கும் சிரமங்களும் அதற்குச் சான்றாகின்றன. கூட்டுக் குடும்பச் சொத்து, பரம்பரைச் சொத்து...
இவை இரண்டும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பொருந்துவதில்லை. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களின் சொத்துரிமையைப் பற்றி இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925-ன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

கிறிஸ்தவப் பெண்களுக்கான சொத்துரிமை...என்பது

கிறிஸ்தவர் ஒருவர் உயில் எழுதாமல் சொத்தை விட்டுச்சென்றிருந்தால், அந்தச் சொத்தில் இறந்தவரின் மகள், மனைவி, தாய் ஆகியோரின் உரிமைகள் இவைதாம்...

மகளுக்கு...

* உயில் எழுதாமல் ஒரு பெண்ணின் தந்தையோ, தாயோ விட்டுச்சென்ற சொத்தை உடன்பிறந்தவர்களோடு சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்.

*ஒருவேளை பெண்ணின் தாய் உயிரோடு இருந்தால், சொத்தில் மூன்றில் ஒரு பாகம் அவருக்குச் செல்லும்.
அம்மாவின் பங்கு போக மீதமிருக்கும் சொத்தை இறந்தவரின் வாரிசுகள் பிரித்துக் கொள்ளலாம்.

மனைவிக்கு...

*கணவரின் சொத்தில் மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கு உரிமை இருக்கிறது. மீதமுள்ள பங்குகளை அவரின் வாரிசுகள் பிரித்துக்கொள்ளலாம்.

*இறந்தவருக்கு வாரிசு இல்லாமல் இருக்கும் பட்சத்தில், கணவரின் சொத்தில் பாதிப் பங்கு மட்டுமே மனைவியைச் சேரும். மீதமுள்ள பங்கு இறந்தவரின் தந்தை வசம் சென்றடையும்.

* கணவருக்கு வாரிசுகளோ, நேரடி உறவுகளோ இல்லாதபட்சத்தில் தான் முழுச் சொத்தும் மனைவியை வந்தடையும்.
(அதாவது பெற்றோர் காலமாகி இருந்தால் மட்டுமே)

தாய்க்கு...

*வாரிசு இல்லாமல் இறந்த ஆணின் சொத்தில் அவரின் மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கு சேரும்.
மீதமிருக்கும் பங்குகள் இறந்தவரின் தந்தை வசம் சென்றடையும்.
ஒருவேளை, அவரின் தந்தை உயிரோடு இல்லாமலிருக்கும்பட்சத்தில், இறந்தவரின் மனைவியின் பாதிப் பங்கு போக மீதமுள்ள பங்கை அவரின் தாய் மற்றும் அவரின் உடன் பிறப்புகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவமும் இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை
இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி கிறிஸ்தவ பெண்களுக்குப் பாரபட்சமான சூழலே நிலவுகிறது.
வேற்றுமை பாவிக்கும் இந்தச் சட்டப் பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பெண்களுக்கான சொத்துரிமை...

இஸ்லாமியப் பெண்களின் சொத்துரிமையை அவர்களின் தனிச்சட்டமான ஷரியத் விளக்கு கிறது (இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம் 1937).

மகளுக்கு...

*தந்தையின் சொத்தில் சகோதரர் களுக்குக் கிடைக்கும் பங்கின் அளவில் பாதி பங்குதான் மகளுக்குக் கிடைக்கும்.

*இறந்தவருக்கு ஒரே மகள் மட்டும் இருந்தால் அவரின் சொத்தில் பாதி பாகம் மகளுக்குக் கிடைக்கும்.

* மணமானாலும், மணமாகாவிட்டாலும் தந்தையின் சொத்தில் மகளுக்கு பாகம் கோர உரிமை உண்டு. ஆனால், சொத்தைப் பிரிக்கும்போது சகோதரர்களுக்குக் கிடைக்கும் சொத்தில் பாதி பாகம்தான் மகளுக்குக் கிடைக்கும்.

மனைவிக்கு...

*வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் கணவரின் சொத்தில் எட்டில் ஒரு பங்கு மனைவிக்குக் கிடைக்கும். மீதமுள்ள பங்கை அவரது வாரிசுகள் பிரித்துக் கொள்வார்கள்.

*வாரிசுகள் இல்லாதபட்சத்தில் மொத்த சொத்தில் நான்கில் ஒரு பாகம் மனைவிக்குக் கிடைக்கும். மீதி கணவரின் பெற்றோருக்குச் சென்றுவிடும்.

மதம் மாறிய பெண்களுக்கான சொத்துரிமை...

மதம் மாறும் பெண்களுக்கு எந்த மதச் சட்டப்படி சொத்துரிமை கையாளப்படும் என்கிற சந்தேகம் காலம்காலமாக இருந்துவருகிறது.
இந்த மாபெரும் கேள்விக்கான சட்டமுடிச்சு, நயனா வழக்கின் மூலம் அவிழ்ந்தது. சமீபத்தில் நயனா என்ற பெண் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். இந்து குடும்பத்தில் பிறந்த நயனா 1990-ல் இஸ்லாமியராக மதம் மாறினார். அவரது பெயரையும் நஷிபானு என மாற்றம் செய்துகொண்டு இஸ்லாமியரைத் திருமணம் செய்துகொண்டார். நஷிபானுவின் தந்தை காலமான பிறகு, அவரது சகோதரர்கள் சொத்தைப் பங்கிட்டனர். வாரிசுகள் பட்டியலில் இஸ்லாமியராக மாறிவிட்ட நஷிபானுவின் பெயர் இடம்பெறவில்லை. தந்தையின் சொத்தில் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி தனக்கும் பங்கு உண்டு என்று நஷி, தாசில்தார் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

தாசில்தார் அலுவலகம் நஷியின் உரிமைக்குப் பச்சைக்கொடி காட்டியது. அதற்கடுத்து அவரின் சகோதரர்கள் மாவட்ட ஆட்சியரை அணுகினர். இந்து வாரிசுரிமைச் சட்டப்படி இந்து அல்லாத நஷிபானுவின் உரிமை கேள்விக்குள்ளானது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதும் நஷி தோற்றுத்தான் போனார்.
ஆனால், தனது முயற்சியைக் கைவிடாமல் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்துவாக இல்லாத பெண் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி அவள் பெற்றோரின் சொத்தில் பங்கு கேட்க முடியாது என்கிற பெரியதொரு சட்டச் சவால் முன்னின்றபோதும், குஜராத் உயர் நீதிமன்றம் ‘Caste Disabilities Removal Act of 1850’ என்ற சட்டத்தை மேற்கோள் காட்டியது. இந்து பெண் ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியிருந்தாலும், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி பெற்றோரின் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சட்டரீதியாகவும், புத்தகங்களில்
படித்து பார்த்து பகிர்ந்துள்ளேன்.
எதேனும் சந்தேகம் இருப்பின்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
S.SURESH
Advocate
9500005764/ 9840242490
Chennai-600012.

Tamilnadu Advocates Team Ready Know
06/06/2020

Tamilnadu Advocates Team Ready Know

ஜீரோ Zero FIR  (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன? ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பது எஃப்.ஐ.ஆர் ஆகும், இது குற்றவியல் இடம் மற்றும் காவல் நில...
30/05/2020

ஜீரோ Zero FIR (எஃப்.ஐ.ஆர்) என்றால் என்ன?

ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்பது எஃப்.ஐ.ஆர் ஆகும், இது குற்றவியல் இடம் மற்றும் காவல் நிலையத்தின் அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் அறியக்கூடிய குற்றம் தொடர்பாக பதிவு செய்யப்படலாம்.

ஜீரோ எஃப்.ஐ.ஆரைப் பதிவுசெய்த பிறகு, வழக்கு அதிகார வரம்புடன் காவல் நிலையத்திற்கு வழக்கு ஒதுக்கப்படுகிறது, அதன்பிறகு சம்பந்தப்பட்ட காவல் நிலையம் வழக்கை விசாரிக்கிறது.

அதிகார வரம்பு இல்லாத எந்தவொரு போலிஸ் நிலையமும் ஜீரோ எஃப்.ஐ.ஆரை ஒரு வரிசை எண் ஜீரோவுடன் குறிக்க முடியும், அதன்பிறகு சம்பந்தப்பட்ட ஆவணங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அதிகார வரம்பைக் கொண்டு மாற்றலாம், அங்கு அது எண்ணப்பட்டு பின்னர் விசாரணை தொடங்குகிறது.

ZERO FIR ஐ பதிவு செய்ய மறுத்ததன் விளைவுகள்?

ஜீரோ எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய மறுத்த எந்தவொரு காவல்துறை அதிகாரியும் ஐ.பி.சி.யின் பிரிவு 166 ஏ இன் கீழ் தண்டிக்கப்படலாம், இது 2 மாதங்கள் வரை 6 மாதங்களுக்கும் குறையாத காலத்திற்கு கடுமையான சிறைத்தண்டனை குறித்து சிந்திக்கிறது.

மேலும், ஜீரோ எஃப்.ஐ.ஆரை மாஜிஸ்திரேட் அறிந்திருந்தாலும் கூட: -

a. எந்தவொரு குற்றத்தையும் உள்ளடக்கிய உண்மைகளின் புகாரைப் பெறுதல்,
b. சில உண்மைகளின் பொலிஸ் அறிக்கையில்,
Cr.P.C இன் பிரிவு 460 (e) இன் கீழ் இது அகற்றப்படாது.

ஜீரோ எஃப்.ஐ.ஆரை பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய சரிபார்ப்பு பட்டியல்: -
1. காவல்துறை அதிகாரி எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டிய அறிக்கை,
2. அறிக்கையை அதிகாரப்பூர்வமாக்குவதற்கு தகவல் கையொப்பம் அவசியம்,
3. தகவலறிந்தவருக்கு வழங்கப்பட வேண்டிய புகாரின் நகல்,
4. தகவலறிந்தவர் எப்போதும் அடையாள எண்ணைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்,
5. அனைத்து ஆவணங்களையும் விசாரணைக்கு தகுதியான காவல் நிலையத்திற்கு மாற்றுதல்.

வழக்கு சட்டம்: -
சமீபத்தில் டாக்டர் பிரியங்கா ரெட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரமான வழக்கில், சட்ட வரம்புகளின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஷம்சாபாத் காவல் நிலையம் மறுத்தது, இது சட்டத்தின் பார்வையில் மோசமானது என்று கூறப்பட்டது, அது உயர் நீதிமன்ற கர்நாடகாவால் நடைபெற்றது. பொலிஸ் நிலையத்தின் பிராந்திய அதிகார எல்லைக்கு வெளியே குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், எஃப்.ஐ.ஆர் இன்னும் பதிவு செய்யப்படும், மேலும் இது அடுத்த நடவடிக்கைக்கு பொருத்தமான காவல் நிலையத்திற்கு மாற்றப்படும்.

முடிவுரை:-

எனவே, கற்பழிப்பு, கொலை, தாக்குதல், விபத்து போன்ற பல்வேறு குற்றங்களில் ஜீரோ எஃப்.ஐ.ஆர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அங்கு போலிஸ் நிலையத்தின் அதிகார வரம்பைப் பற்றி சிந்திப்பதை விட உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின்
தொடர்பு கொள்ளவும்
S.SURESH
Advocate
Perambur, Chennai-12
9500005754 / 9840242490
___________________

 #சட்டம்_அறிவோம் #ஒரு_குழந்தை_தாயிடம்  #வளரவேண்டுமா_தந்தை_பராமரிப்பில்_வளரவேண்டுமா... என்பது குறித்த  #உச்சநீதிமன்ற_தீர்...
29/05/2020

#சட்டம்_அறிவோம்

#ஒரு_குழந்தை_தாயிடம் #வளரவேண்டுமா_தந்தை_பராமரிப்பில்_வளரவேண்டுமா...
என்பது குறித்த #உச்சநீதிமன்ற_தீர்ப்பு.

உச்சநீதிமன்றத்தில் "விவேக் சிங் Vs ரொமணி சிங் (2017-2-CTC-69)(AIR-2017-SC-929)(2017-3-MLJ-184)" என்ற ஒரு வழக்கு நடந்தது.

அந்த வழக்கில் 21 மாதங்களேயான ஒரு பெண் குழந்தையை அதன் தாயாரிடமிருந்து அந்த குழந்தையின் தந்தை பறித்து சென்று விட்டார். அந்த சம்பவம் குறித்த வழக்கு இறுதியாக உச்சநீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது அந்த பெண் குழந்தைக்கு 8 வயதாகியிருந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குழந்தைக்கு ஆரம்பக்கட்ட பாதுகாப்பை வழங்குபவர் தாயார் என்றும் ஒரு இளவர் குழந்தைக்கு தாயின் பாசமும், அரவணைப்பும்தான் மிக முக்கியமான தேவை என்றும் தாய்க்கும், குழந்தைக்குமான உறவு குழந்தை பிறக்கும் போதே ஏற்பட்டு விடுகிறது என்றும் தாய்க்கு பதிலாக வேறு ஒருவர் குழந்தையை கவனித்தால் 2 மாதத்திலேயே குழந்தைக்கு அதிருப்தி ஏற்படும் என்றும் ஒரு குழந்தை 4 வாரங்களில் தனது தாயின் குரலை அடையாளம் கண்டு கொள்கிறது என்றும் குழந்தைகள் தாயுடன் 8 மாதங்கள் வரை இருக்க அடம் பிடிக்கும் என்றும் குழந்தைக்கு 1 வயதாகும் போது தாயுடன் ஒரு பாசப் பிணைப்பை ஏற்படுத்தி கொள்கிறது என்றும் #ஒரு_குழந்தையின்_சிறிய_உலகத்தில்_தாய்தான்_மிக_முக்கியமான_நபர்_என்றும் தாயுடனான இந்த பிணைப்பு குழந்தைக்கு எதிர்காலத்தில் தேவைப்படுபவற்றை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் #தாயுடனான_இந்த_பிணைப்பு_மற்றவர்களுடனும்_மனித_குலத்துடனும்_குழந்தை_தொடர்பை_ஏற்படுத்தி_கொள்வதற்கு #அடித்தளமாக_அமைகிறது என்றும்

#குழந்தைக்கு_தாயின்_அன்பும்_வழிகாட்டுதல்களும்_கிடைக்க_வேண்டியது_அவசியமா_ஒன்று என்றும்
#தீர்ப்பு_கூறியுள்ளது.
நன்றி சகோ .!!

ஏதேனும் சட்ட விளக்கம் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
S SURESH
Advocate
9500005764
perambur,Chennai-12

09/03/2020

1)- உயிலை நிரூபிப்பதற்கு, உயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது.
(AIR-2001-SC-3522)&(1996-1-MLJ-481)

2)- உயிலில் சாட்சியாக கையொப்பம் போடுபவர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் தங்களது கையெழுத்தை, உயிலை எழுதி வைப்பவரின் முன்பாக போடுதல் வேண்டும். இதுவே போதுமானதாகும். இவ்வாறு நிலைகள் சந்தேகத்தை ஏற்படுத்தாது. சாதாரண முரண்பாடுகள் எல்லாம் சந்தேக சூழ்நிலைகளை ஏற்படுத்தாது.
(AIR-1997-SC-127)

3)- உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை, உயில் எழுதி வைத்தவர் பார்க்கவில்லை. அதேபோன்று உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை உயிலை தயாரித்தவரும் பார்க்கவில்லை. அதனால் உயிலில் சாட்சி கையெழுத்து போட்டது நிரூபிக்கப்படவில்லை.
(AIR-1998-M. P - 46)

4)- உயிலானது, உயிலை எழுதி வைத்தவரின் சுதந்திரமான போக்கில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் திருப்தியடைந்திருத்தல் வேண்டும்.
(1998-2-MLJ-SC-128)

5)- ஒரே ஒரு சாட்சியை மட்டும் உயிலை நிரூபிக்க விசாரித்தது போதுமானதாகும். (ஆனால் மனநிறைவு அடையாவிட்டால் வெறும் ஒரு சாட்சியை விசாரித்தது மட்டுமே போதுமானதாகாது)
(AIR-2003-SC-761)

6)- உயில் பதிவு செய்யப்பட்டது என்ற காரணத்தால் மட்டுமே அந்த உயிலின் மீதான சந்தேக சூழ்நிலைகள் அகன்று விடாது. பதிவு செய்யப்பட்ட உயில் என்றாலும் அதனை சாட்சிகளை கொண்டு நிரூபிக்கவேண்டும்.
(1999-2-MLJ-609)

7)- Indian Evidence Act - sec 68 - உயிலை எழுதி வைத்தவர் உயிலில் கண்ட சொத்து விவரத்தின் கீழ் கையொப்பமிட்டார். மற்றபடி ஒரு பக்கத்தை தவிர மற்ற பக்கங்களில் கையொப்பம் செய்திருந்தார். எனவே இந்த உயில் செல்லக்கூடியதாகும்.
(AIR-1999-KER-274)

8)- உயிலை எழுதி வைத்தவர் உயிலில் பெருவிரல் ரேகையைப் பதித்திருந்தார். உயிலை எழுதி வைத்தவருக்கு கையெழுத்து போட தெரியும். எனினும் கையெழுத்து போடததற்கு என்ன காரணம் என்று உயிலில் குறிப்பிடப்படவில்லை . அதற்கான காரணத்தை அறிய சார்பதிவாளர் விசாரிக்கப்பட்டார். ஆனால் அது போதுமானதாக இல்லை. உயில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
(1999-3-MLJ-608)

9)- அசல் உயில் ஒப்படைக்கப்படவில்லை. உயிலின் சான்றிட்ட நகல் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அது இரண்டாம் நிலை சாட்சியமாகும். அது சான்றாவணமாக அனுமதிக்கப்பட்டது. அசல் உயிலை ஒப்படைக்காதது பாதிப்பை ஏற்படுத்தாது.
(1999-3-MLJ-651)

10)- உயில் எழுதப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் மற்றும் உயிலை தயாரித்தவர் என அனைவரும் இறந்து விட்டார்கள். இந்த உயிலில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்த உயிலை உண்மையானது என்று ஊகிக்கலாம்.
(AIR-2002-A. P - 164-NOC)
(1999-3-MLJ-577)

Arbitration award ஐ வைத்து திடீரென்று EP Notice வந்து சொத்தோ அல்லது salary யோ attachment ஆகிவிடும். அதுவும் பழைய award c...
19/07/2019

Arbitration award ஐ வைத்து திடீரென்று EP Notice வந்து சொத்தோ அல்லது salary யோ attachment ஆகிவிடும். அதுவும் பழைய award copy ஐ வைத்து பத்து வருடம் கழித்து வேண்டுமென்றே பல company கள் திருட்டு தனமாக EP ஐ போட்டு சொத்தை Attachment செய்வார்கள்.
அதுவும் அது போன்ற Arbitration Award இருப்பது பாதிக்க பட்ட நபர்களுக்கு தெரியாமல் திடீரென EP போடுகின்றனர், இந்த சூழலில் EP நடத்துவதை விட AWARD COPY யை எடுத்து உடனடியாக Appeal போட்டு stay வாங்கி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றலாம், மேலும் பல வருடம் ஆகிய award copy வைத்து.. Appeal limitations னில் வராது என்றாலும் உங்களுக்கு Award இருப்பதை தெரிய வந்த தேதி Date of knowledge ஐ வைத்து போட்டால் petition number ஆகும், மேலும் bonafide ஐ நீங்கள் நீதிமன்றத்திற்க்கு நிருபிக்க court custody யில் Deposit கட்டி வழக்கு நடத்தலாம்.. ARC என்று Award ஐ வைத்து EP notice வந்தால் பயப்படாமல் மேற்கண்ட வழக்கு போட்டு Litigation property ஐ காப்பாற்றலாம்..!!

Address

Chennai
600011

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Advocates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tamil Nadu Advocates:

Share

Category