Satyam International Law Firm

Satyam International Law Firm Our law firm constituted by a team of advocates and legal consultants specialized in Family/matrimo www.satyamlawfirm.com

30/12/2021

பெண்களை காக்கும் சிறப்பு சட்ட உரிமைகள்

சமையல் அறையில் கட்டுப்பட்டு வாழ்ந்த காலம் மாறி இப்போது பெண்கள் தங்களுக்கு என ஒரு நிலையை அடைந்துள்ளனர். படிப்பது, வேலைக்கு செல்வது என்று இருக்கும் இவர்களில் எத்தனை பேருக்கு தங்களுக்கான உரிமைச் சட்டங்கள் இருக்கிறது என்று தெரிந்துள்ளது. பல பெண்களுக்கு அப்படி ஒரு சட்டம் உள்ளதா என்று கூட தெரிவதில்லை. தமக்கான உரிமைகளைக் கூட அறியாமல் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பெண்கள் பலர் உள்ளனர். அப்படி ஒரு சட்டம் இருப்பது பற்றி தெரிந்து இருந்தாலும், அதில் உள்ள சலுகைகள் மற்றும் சட்டத் திட்டங்கள் பற்றி படித்த பல பெண்களுக்கு தெரிவதில்லை.

அறிவே ஆற்றல் தரும் என்பதால் பெண்களுக்கான சட்ட நலன்களைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கட்டுரை. சென்னை, உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருபது ஆண்டுகளாக பணியாற்றி வரும் விஜயலட்சுமி, பெண்களை காக்கும் சட்டங்கள் பற்றி விரிவாக தெரிவித்தார். ‘‘நம் பெண்களில் பலருக்கு அரசாங்கம் அளிக்கும் சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதனால் தான் தங்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது அதை சமாளிக்க முடியாமல் சித்ரவதையை அனுபவித்து மௌனமாக வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் அவர்களை காக்க சட்டத்தில் உரிமைகள் உள்ளன. அது என்ன என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்வது அவசியம்.

* இலவச சட்ட உதவிக்கான உரிமை

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்ட சலுகை இது. அவர்கள் தங்கள் உரிமைக்காக போராட சட்டம் அவர்களுக்கென இலவச சேவை வழங்குகிறது. இது பெண்கள் தாமாக முன்வந்து தங்களின் துயரத்திற்கு நியாயம் தேடுவதற்கான சலுகை. இந்த சட்டத்தில் பெண்கள் தங்களின் பிரச்சனைகளை புகார்களாக நேரில் சென்று கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக காவல்துறை, போலீஸ் கமிஷனர் அல்லது துணை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவிக்கலாம். பின்பு, இந்த புகார் உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு உரிய விசாரணைக்குப் பின் வழக்கு பதிவு செய்யப்படும்.

* குடும்ப வன்முறைச் சட்டம் (2005)

இது மகளிரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சட்டம். நம் குடும்ப கட்டமைப்புகள் ஆண்களுக்கு சாதகமான ஒரு அமைப்பாகவே இருந்து வந்துள்ளது. பெண்கள் அதிகம் வீட்டில் தான் புண்படுத்தப்படுகின்றனர். அடித்து உதைத்து துன்புறுத்துவது மட்டும் வன்முறையாகாது. வீட்டில் பூட்டி வைத்து, உணவு கொடுக்காமல், வெளியே செல்ல அனுமதிக்காமல் துன்புறுத்துதலும், தினம் வசைப்பாடி அவமானப்படுத்துவதும், பயமுறுத்துதலும் கூட வன்முறைதான். இது கணவன், மனைவி இருவரையும் காக்கும் சட்ட,மாகும். இந்த சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தால், பெண்களுக்கு முழு பாதுகாப்பும், அவர்கள் வீட்டில் வாழும் உரிமையும் கிடைக்க நீதிமன்றம் உதவும். மேலும் குடும்பத்தினருக்கு ஆலோசனை மையங்கள் மூலம் உதவியும் அளிக்கப்படும்.

* ஜீரோ எஃப்.ஐ.ஆர் (Zero FIR)

பொதுவாக ஒரு புகாரை குற்றம் நடந்த இடத்தில், அந்த ஆட்சி எல்லைக்கு கீழ் இருக்கும் காவல் நிலையத்தில் தான் புகார் கொடுக்க வேண்டும். ஆனால் பெண்கள் துணிந்து வந்து புகார் கொடுப்பதே சவாலாக உள்ள இந்த காலக்கட்டத்தில், அவர்களை அங்கு செல், இங்கு செல் எனத் தட்டிக் கழிப்பது சரியல்ல. இதனை கருத்தில் கொண்டு, இந்த சட்டம் அமலுக்கு வந்தது. அதேபோல், சிறுவயதில் தங்களுக்கு எதிராக நடந்த குற்றத்தை வளர்ந்த பின் அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான புகார்களுக்கு நேர வரம்பு கிடையாது.

எவ்வளவு காலம் கழிந்த பின்னும் தங்கள் புகாரை முறையிடலாம். சூரிய உதயத்திற்கு முன்னும், சூரியன் மறைந்த பின்னும் காவல் நிலையம் கொண்டு செல்ல இயலாது. அதாவது மாலை ஆறு மணிக்கு மேல், காலை ஆறு மணிக்குள் எந்த சூழலிலும், பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கவோ அல்லது கைது செய்யவோ முடியாது. இது, பெண் போலீசார் உடன் இருந்தாலும் முடியாது.

ஆனால், அவசர கால அடிப்படையில், ஒரு பெண் கடுமையான குற்றத்தை செய்திருக்கும் பட்சத்தில், நீதிபதியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்று இரவில் கைது செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல, வெறும் விசாரணைக்காக, பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லவும் தடையுள்ளது. விருப்பப்பட்டால் பெண்ணின் வீட்டில், குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன், பெண் காவல் அதிகாரியும் உடன் இருந்து விசாரித்து அறிக்கை பெறலாம்.

* வேலை செய்யும் இடங்களில் தொந்தரவு

பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்யும் அனைத்து இடங்களிலும் மூன்று பேர் கொண்ட ஐசிசி (ICC - Internal Complaints Committee) புகார் கமிட்டி நிச்சயம் அமைக்கப்பட வேண்டும். இதில் 50% மேலாக பெண்களே இருக்க வேண்டும் எனவும் சட்டம் சொல்கிறது. மூன்றாம் நபர், நிறுவனத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத அங்கு பணியில் இல்லாதவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு முறை பெண்களுக்கு எதிராக வன்முறை நிகழும் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் தான் வேலையில் இருந்து நிற்பதும் அல்லது இடமாற்றம் பெற்று அந்த இடத்தை விட்டும் செல்கிறார்கள். ஆனால் இது நிரந்தர தீர்வாக இருக்காது. குற்றம் செய்த நபர் அதே இடத்தில் வசதியாக தான் இருக்கிறார். அடுத்து அந்த இடத்தில் வரும் இன்னொரு பெண்ணிற்கும் அதே நிலைதான். இதனால், ஐசிசி கமிட்டி புகாரை தீவிரமாக விசாரித்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு தக்க தண்டனை அளிக்க உதவும்.

* பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை பாதுகாத்தல்

பாலியல் தாக்குதலுக்குள்ளான பெண்கள் மற்றும் சிறார்களின் அடையாளத்தை பாதுகாப்பது பத்திரிகையாளர்களின் கடமையாகும். பெயரை மாற்றி குறிப்பிட்டு செய்தி வெளியிடலாம். ஆனால் கண்டிப்பாக புகைப்படத்தை எக்காரணம் கொண்டும் வெளியிட்டுக் காணொளி படுத்தக்கூடாது. இது, ஏற்கனவே நம் சமூகத்தால் பாதிப்படைந்திருக்கும் ஒருவரை மேலும் காயப்படுத்தாமல் உதவும். அதேபோல், பெண்கள் தங்கள் அறிக்கையை தனியாக நீதிபதி மற்றும் ஒரு பெண் காவலாளியுடனும் கேமரா முன் தெரிவிக்கலாம். நீதிமன்றத்திற்கு முகத்தை மறைத்தும் பர்தா அணிந்தும் வரலாம்.

* ஆண்களுக்கு நிகரான ஊதியம்

ஒரு பெண் தான் வேலை செய்யும் இடத்தில் தனக்கு நிகரான பதவியில் இருக்கும் ஆணுக்கு என்ன சம்பளமோ, அதே சம்பளத்தை உரிமையுடன் கேட்டு வாங்கலாம். அதே சமயம், சம வேலை, சம படிப்பிற்கு தான் சம ஊதியமும் எதிர்பார்க்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெண்கள் ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு, காவல்நிலையத்திலும் நீதிமன்றத்திலும் கால் வைப்பதையே குற்றமாக எண்ணி பயந்தார்கள். அதனால் அனைத்து துன்பங்களையும் வலிகளையும் அனுபவித்த பின் சமாளிக்கவே முடியாத சூழலில் தன் வாழ்கையின் பெரும் பகுதியை இழந்த நிலையில் நீதி கேட்டு வருவதுண்டு.

ஆனால், இப்போது பெண்கள் தைரியமாக தங்களை பாதுகாத்துக்கொள்ள நீதிமன்ற வாசலுக்கு தலை நிமிர்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பொருளாதார ரீதியில் ஒரு பெண்ணிற்கு இருக்கும் சுதந்திரமும் கல்வி மற்றும் ஊடகங்களின் தாக்கமும் தான். இவர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண நீதிமன்றம் பல ஆலோசனை மையங்களை அமைத்தும், சலுகைகள் கொடுத்தும் நீதி வழங்கி வருகிறது’’ என்றார் வழக்கறிஞர் விஜயலட்சுமி.

27/11/2021

அரசியல் சாசனம்..நாட்டின் உயிர் நாடி..
நமக்கான சொந்த வீடு.. ஒவ்வொரு அங்குலத்திலும் என்னென்ன அம்சங்கள் வேண்டும் என நாம் பார்த்து பார்த்துகட்டிய வீடு.
வாழ்வற்கு, வீட்டிற்கு உள்ளே புகும்முன் எவ்வளவு பரவசமான நிலையை உணருவோம். அதைவிட கோடி மடங்கு நிகரானது, நம்மை நாமே ஆள்வதற்கு இந்திய அரசியல் சாசன சட்டத்தை தயாரித்து முடித்த தருணம்.
உலக நாடுகளின் அரசியல் சாசனத்திலேயே நம்முடையதுதான் மிக நீண்டது என்ற பெருமை உடையது.
12 உள்ளடக்கங்கள்.. 448 பிரிவுகள், 103 மூன்று சட்டத்திருத்தங்கள் என பல சிறப்புகளை கொண்டது.
இறையாண்மை, சமதர்தம், மதச்சார்பின்மை, சுதந்திரம், ஜனநாயகம் போன்ற வர்த்தைகளின் பீடத்தின்மேல் எழுப்பப்பட்டதுதான் அரசியல் சாசனம்.
நம்மிலிருந்து பிரிந்த பாகிஸ்தானும் அரசியல் சாசனம் எழுதியது. ஆனால் பல முறை நொறுங்கிப்போயிற்று. ஜனநாயக ஆட்சிகளுக்கும் ராணுவ ஆட்சிகளுக்கும் இடையே இன்னமும் அந்நாடு கட்டிப்புரள்கிறது
ஆனால் நம்முடைய அரசியல் சாசனம் இன்னமும் உயிர்ப்புடனேயே உள்ளது. மக்கள் ஆட்சியை காக்கிறது. காரணம், நம்நாட்டில் அரசியல் சாசனத்தை எழுப்பியவர்களுக்கு இருந்த அறிவுத்திறன், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை. வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் உள்ள அழுத்தமான பிடிப்பு, தொலைநோக்கு பார்வை. ஆகியவையே.
தமிழகத்தை சேர்ந்த அல்லாடி கிருஷ்ணமாச்சாரி ஐயர், என் கோபாலசாமி ஐயங்கார் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் ஏழு பேர் கொண்ட குழு சாசனத்தை தயாரிக்க ஆரம்பித்தது.
வரைவு குழுவிற்கே தலைமை என்ற பொறுப்பை ஏற்றவர் சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார். குழுவில் இருந்த சிலர் ஒத்துழைப்பு தராமல் பல காரணங்களை சொல்லி தாமதப்படுத்தியபோது அம்பேத்கார் ஓயாமல் உழைத்த உழைப்பு, அன்றைய அரசியல் ஆச்சர்யம்
பல நாட்டு அரசியல் சாசனைங்களை அலசி ஆராய்ந்து எவையெல்லாம் நமக்கு அவசியம் என்று சுமார் மூன்றாண்டுகள் பாடுபட்டு ஷரத்துக்களை உருவாக்கியது அரசியல் சாசன குழு.
அப்படிப்பட்ட சாசனம் முழுமை பெற்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. சரியாக இன்றோடு 72 ஆண்டுகள் ஆகின்றன.
அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டிய தலைவன், குடியரசு தலைவர்.
மத்திய அமைச்சரவை, அதற்கு தலைமை ஏற்கும் பிரதமர், ஆளுநர்கள், மாநில ஆட்சிகள். நீதிமன்றங்கள் என அனைத்துக்குமே உயிர் நாடி இந்த அரசியல் சாசனம் தரும் அதிகாரம்தான்.
சாசனம் படைக்கப்பட்டபின் அதில் ஜனநாயத்தின் விருப்பத்தின் பேரில் பல திருத்தங்களை இந்தியா கண்டுள்ளது. பட்டியலினத்தவர்க்கு இட ஒதுக்கீடு மொழிகள் அடிப்படையில் மாநிலங்கள் சீரமைப்பு , கட்சித்தாவல் தடை, வாக்குரிமை வயது 21 லிருந்து 18 ஆக குறைப்பு என நிறைய உண்டு.
அதே நேரத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க இந்திரா காந்தி 1975-ல் மிசாவுக்காக அரசியல் சாசன சட்டத்திருத்தத்தில் கைவைத்த கருப்பு அத்தியாயங்களும் உண்டு.
1949-ல் அன்றைய அரசியல் சாசன நிர்ணய சபை உறுப்பினர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் ஒவ்வொருவரும், புதிதாய் தயாரிக்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தில் தனித்தனியாய் கையெழுத்திட் டார்கள்.
பிரேம் பெஹாரி நரைன் என்ற ஓவியரின் கைவண் ணத்தில் வரிக்கு வரி உருவாக்கப்பட்ட கைப்பிரதி புத்தகம் ஆது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் என இரு மொழி வடிவங்களில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள்.
அவை இன்றும் நாடாளுமன்ற மைய நூலகத்தில் மிகுந்த பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகள் கழித்துதான் அரசியல் சாசனமே முழுமையாய் அச்சில் வடிக்கப்பட்டது.
இந்து, முஸ்லீம், கிறிஸ்து உள்ளிட்ட எந்த மதத்தை சேர்ந்தவனாகட்டும். இந்தியன் என்று வந்துவிட்டால், ஒவ்வொருவருக்கும் அரசியல் சாசன சட்டம்தான் முதன்மையான புனித நூல்.
இந்த அரசியல் சாசனம் அமுலுக்கு வந்த 1950 ஜனவரி 26-ந்தேதியைத்தான் நாம் இந்தியாவின் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.
இந்துவோ முஸ்லிமோ கிறிஸ்தவரோ அல்லது வேறு மதமோ.. இந்தியன் என்ற ஒற்றை வார்த்தையில் அனைவரையும் பாரபட்சமின்றி தாங்கிப் பிடிப்பது இந்த அரசியல் சாசன சட்டம்தான்..
இந்திய அரசியல் சாசன சட்டம்.

26/05/2020
04/02/2020

We Have To Accept That India Is A Nation Of Plural Views, Multitude Of Cultures : Justice Chandrachud

30/01/2020

கடைசிக் கதவும் அடைக்கப்பட்டது: நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து தாக்கல் செய்த குற்றவாளி முகேஷ் குமார் மனு தள்ளுபடி; உச்ச நீதிமன்றம்

Good morning friends
04/01/2020

Good morning friends

Address

Parrys Corner
Chennai
600024

Telephone

+91 - 76670 77744

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satyam International Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Satyam International Law Firm:

Share