சட்டத்தால் யுத்தம் செய்

  • Home
  • India
  • Chennai
  • சட்டத்தால் யுத்தம் செய்

சட்டத்தால் யுத்தம் செய் இந்த பக்கமானது தகவல் அறியும் சட்டம் தொடர்புடையது

10/03/2026

டெல்லியில் இருக்கும் பாஜக மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்து தனிநபர் தகவல்களாக இருந்தால் இந்த சட்டத்தில் தகவல் தர தேவையில்லை என்று மாற்றம் செய்த போது டெல்லியை வீழ்த்துவோம் என்று தமிழகத்தில் கோஷம் போட்டுக் கொண்டு இருப்பவர்கள் இந்த சட்ட திருத்தம் குறித்து போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்யாமல் அமைதி காத்தனர். காரணம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஒழித்துக் கட்டுவதில் மத்திய பாஜக அரசின் கொள்கையை அப்படியே தமிழகத்தில் திமுக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

அதனால் தான் தமிழகத்தில் இன்னும் அனைத்து அரசு துறைகளுக்கும் Online RTI விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்படவில்லை. அப்படி கொண்டு வரப்பட்ட ஒரு சில அரசு துறைகளுக்கும் விண்ணப்பிக்கும் இணையதளம் வேலை செய்யவில்லை. கைபேசி எண்ணுக்கு OTP அனுப்பமாட்டார்களாம். Email முகவரிக்கு தான் அனுப்புவார்களாம். அதுவும் 30 நிமிடத்தில் Login செய்யவேண்டிய OTPஐ 12 மணி நேரம் கழித்து தான் அனுப்புவார்களாம். இதுக்கு ஒரு தலைமை ஆணையர், அவர் கூட குப்பை கொட்ட 7 ஆணையர்கள்.

சரி மேல்முறையீடு குறித்த தகவல்கள் பார்க்கலாம் என்றால் அங்கேயும் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. மாநில தகவல் ஆணையத்தின் வருடாந்திர செயல்பாடுகள் குறித்த அறிக்கை கடந்த 2 வருடங்களாக வெளியிடப்படவில்லை. (செயல்பட்டால் தானே வெளியிடுவது என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது).

மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்தால் தானாகவே அனைத்து அரசு தகவல்களையும் மக்களுக்காக இணையதளத்தில் வெளியிடவேண்டும். ஆனால் இங்கே நாங்கள் எதிராளிகள் என்று நாடகம் போட்டுக் கொண்டு திமுகவும் பாஜகவும் RTI சட்டத்தை நிர்மூலாமாக்குவாதில் கூட்டணி வைத்து செயல்படுகிறார்கள்.

https://rtionline.tn.gov.in/index.php
https://tnsic.gov.in/

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when சட்டத்தால் யுத்தம் செய் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share