Velmurugan Manickam

Velmurugan Manickam This is a page of Adv. M. Velmurugan. He started practising law in the year 1995 and since then has been part of the MHAA.

Currently the bar council member of Tamil Nadu and Puducherry. He is running for the President of MHAA 2023.

20/01/2026
28/12/2023

We lost one of our finest and honest leader

11/04/2023

AAP
Officially Declared As
Recognised
NATIONAL PARTY

24/03/2023

Height of Political vendetta.
Death of Democracy

MHAA மீட்டெடுத்து புதிய அத்தியாயம் படைப்போம்!வழக்கறிஞர்களின் நலனிலும், சங்கத்தின் நலனிலும் அக்கறை கொள்ளாமல் செயல்பட்டவர்...
08/01/2023

MHAA மீட்டெடுத்து புதிய அத்தியாயம் படைப்போம்!

வழக்கறிஞர்களின் நலனிலும், சங்கத்தின் நலனிலும் அக்கறை கொள்ளாமல் செயல்பட்டவர்களின் அலட்சியத்தால், சிறப்பு மிக்க நம் மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தன் பெருமைகளையும் - உரிமைகளையும் இழந்தது.

இழந்த உரிமைகளையும் - பெருமைகளையும் மீட்கவும், சங்கத்தின் வளர்ச்சிக்காகவும், வழக்கறிஞர்களின் நலனுக்காகவும் பல்வேறு முன்னேற்ற திட்டங்களுடன் வலிமையான தலைமையாக களமிறங்கி உள்ள மூத்த வழக்கறிஞர் திரு M. வேல்முருகன் அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுப்போம்.

பெண் வழக்கறிஞர்களுகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.பெண் வழக்கறிஞர்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்க ...
08/01/2023

பெண் வழக்கறிஞர்களுகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

பெண் வழக்கறிஞர்கள் தங்கள் குழந்தைகளை பராமரிக்க உயர்நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே குழந்தைகள் பாதுகாப்பு அறை உருவாக்கப்படும்.

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பெண் வழக்கறிஞர்களுக்கு அரசின் உதவியுடன் தங்கும் விடுதிகள் உருவாக்கப்படும்

இளம் வழக்கறிஞர்களும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பெண் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களிடம் ஆலோசிக்க இலவச ஆலோசனை அறைகள் உருவாக்கப்படும்

இப்படி பெண் வழக்கறிஞர்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்த மாற்றம் தேவை.

நமக்கான கோரிக்கைகளை நாமே நிறைவேற்ற மாற்றம் தேவை! மாற்றம் சாத்தியமே!

மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இழந்த பெருமைகளை மீட்கவும் வலிமையான சங்கத்தை உங்கள் துணையோடு உருவாக்கவும் வரும் தேர்தலில் மூத்த வழக்கறிஞர் திரு. M.வேல்முருகன் அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுப்போம்

MHAA மீட்டெடுத்து புதிய அத்தியாயம் படைப்போம்!ஆண்டுகள் பல கடந்தும் நமக்கான தேவைகள் நிறைவேற்றப்படாமல் உரிமைகள் மறுக்கப்பட்...
07/01/2023

MHAA மீட்டெடுத்து புதிய அத்தியாயம் படைப்போம்!

ஆண்டுகள் பல கடந்தும் நமக்கான தேவைகள் நிறைவேற்றப்படாமல் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்கும் நம் வழக்கறிஞர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நேர்மையான, அர்ப்பணிப்புடன் செயல்படும், வலிமையான, அனுபவம் வாய்ந்த தலைமை தேவை.

சங்கம் இழந்த பெருமைகளை மீட்கவும், வழக்கறிஞர்கள் எந்த கவலைகளும் இல்லாமல் இருக்க, சமூக உயர்வு அடைய, நமக்கான தேவைகளை நாமே நிறைவேற்றவும் மாற்றம் தேவை.

மாற்றம் சாத்தியமே உங்களின் ஒரு ஓட்டு நம் சங்கத்தின் நலனையும், ஒட்டு மொத்த வழக்கறிஞர்களின் நலனையும் தீர்மானிக்கும். வலிமையான நேர்மையான வெளிப்படையான சங்கத்தைக் கட்டியெழுப்ப மூத்த வழக்கறிஞர் திரு.M. வேல்முருகன் அவர்களுக்கு வாக்களித்து தலைவராகத் தேர்ந்தெடுப்போம்!

06/01/2023

MHAA மீட்டெடுத்து புதிய அத்தியாயம் படைப்போம்!

சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளையும் தீர்க்கும் வழக்கறிஞர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒரு மாற்றம் தேவை!

வரலாற்று சிறப்புமிக்க மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இழந்த பெருமைகளை மீட்க மாற்றம் தேவை!

சமூகத்தின், இந்திய நாட்டின் ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் வழக்கறிஞர்களின் நலனை காக்க, உரிமைகள் மீட்க மாற்றம் தேவை!

நமக்கான உரிமைகளை மீட்கவும், நமக்கான கோரிக்கைகளை நாமே நிறைவேற்றவும். நம்மில் ஒருவரான, சமூகப் பொறுப்பும், அர்ப்பணிப்பும், போராட்டக் குணமும் கொண்ட வலிமையான தலைமையான மூத்த வழக்கறிஞர் திரு வேல்முருகன் அவர்களால் மட்டுமே அந்த மாற்றத்தை தர முடியும்

நமக்கான கோரிக்கைகளை நாமே நிறைவேற்ற மாற்றம் தேவை! மாற்றம் சாத்தியமே!

மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இழந்த பெருமைகளை மீட்கவும் வலிமையான சங்கத்தை உங்கள் துணையோடு உருவாக்கவும் வரும் தேர்தலில் மூத்த வழக்கறிஞர் திரு. M.வேல்முருகன் அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுப்போம்

06/01/2023

MHAA மீட்டெடுத்து புதிய அத்தியாயம் படைப்போம்

அகாடாமிக் கவுன்சில் உருவாக்கப்பட்டு இளம் தலைமுறை வழக்கறிஞர்களின் நலனுக்காகவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், உரிமையியல் நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதிகள் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கவும் மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

வழக்கறிஞர்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும் எனும் கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க தென்னிந்திய அளவில் அனைவரையும் ஒருங்கிணைத்து கோரிக்கையை நிறைவேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

நமக்கான கோரிக்கைகளை நாமே நிறைவேற்ற மாற்றம் தேவை! மாற்றம் சாத்தியமே!

மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இழந்த பெருமைகளை மீட்கவும் வலிமையான சங்கத்தை உங்கள் துணையோடு உருவாக்கவும் வரும் தேர்தலில் மூத்த வழக்கறிஞர் திரு. M.வேல்முருகன் அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுப்போம்

கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் நாம் பட்ட துன்பங்கள் மீண்டும்  நடக்காமல் இருக்க சமூகத்தைப் பேணி பாதுகாக்கும் வழக்கறி...
05/01/2023

கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் நாம் பட்ட துன்பங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க சமூகத்தைப் பேணி பாதுகாக்கும் வழக்கறிஞர்களான நம் உடல் நலனையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட தொகையில் மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்படும்.

05/01/2023

வழக்கறிஞர்களின் அத்தியாவசிய தேவைகளான நூலகம், மின்தூக்கி, கழிவறை, உணவகம் என அடிப்படையான தேவைகளைக் கூட பூர்த்தி செய்யாமல் நம்மை சிரமத்திற்கு ஆளாக்கியவர்களை வரும் தேர்தலில் புறக்கணிப்போம்.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் இழந்த பெருமைகளை மீட்கவும், நமக்கான தேவைகளும் - உரிமைகளும் பூர்த்தி அடையவும் மூத்த வழக்கறிஞர் திரு. M.வேல்முருகன் அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுப்போம்

MHAA மீட்டெடுத்து புதிய அத்தியாயம் படைப்போம்!

04/01/2023

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக விளங்கும் நீதித்துறைக்கும் - வழக்கறிஞர்களுக்குமான உறவு மிக முக்கியமானது. கடந்த காலங்களில் இருந்தது போன்ற சுமூகமான உறவு தற்போது இல்லை எனவே BENCH & BAR உறவை மேம்படுத்தி சங்கத்தையும், நிர்வாகத்தையும் வலுவாக்க வேண்டும்.

இளம் தலைமுறை வழக்கறிஞர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் உதவும் வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்ற நூலகத்தை இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இ-நூலகமாக உருவாக்க வேண்டும்.

கொரோனா போன்ற பெருந்தொற்றின் போது வழக்கறிஞர்கள் அடைந்த துன்பங்கள் சொல்லி மாலாது, இது போன்ற இன்னல்களை இனிவரும் காலங்களில் வழக்கறிஞர்கள் சந்திக்காமல் இருக்க சங்க உறுப்பினர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

இப்படி எண்ணற்ற நன்மைகள் நமக்கு வந்து சேர வரும் தேர்தலில் மூத்த வழக்கறிஞர் திரு. M. வேல்முருகன் அவர்களை தலைவராகத் தேர்ந்தெடுப்போம்.

சங்கம் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து புது வரலாறு படைப்போம்!

MHAA மீட்டெடுத்து புதிய அத்தியாயம் படைப்போம்!

Address

Chennai House 5th Floor (Right Wing), No 6, Esplanade Road, George Town
Chennai
600108

Telephone

+919840298926

Website

Alerts

Be the first to know and let us send you an email when Velmurugan Manickam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Velmurugan Manickam:

Share