JB Law Associates

JB Law Associates We are one stop law firm for all your legal needs! Tamil Nadu, India.

JB Law Associates

PRINCE INFO CITY-II, Unit No. 1, 1st Floor,

283/3 and 283/4, Rajiv Gandhi Salai (OMR),

Perungudi, Chennai - 600096.

குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பது மட்டுமே ஒருவரை வழக்கறிஞராக பதிவு செய்யத் தடை விதிக்க முடியாது என்ற சட்டக் கோட்பாட்...
14/01/2026

குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பது மட்டுமே ஒருவரை வழக்கறிஞராக பதிவு செய்யத் தடை விதிக்க முடியாது என்ற சட்டக் கோட்பாட்டை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது !!!

CASE DETAILS
WP(MD) No.6986/2015
S BHASKARA PANDIAN
vs
THE CHAIRMAN/ SECRETARY
BARCOUNCIL TAMILNADU & PUDUCHERRY

மாண்புமிகு நீதிபதிகள் G.R. Swaminathan & R. Kalaimathi அமர்வு, இந்த விவகாரத்தை பெரிய அமர்வு (Larger Bench) முன் வைக்க பதிவகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் மனுதாரர் S. Bhaskara Pandian, 1984 ஆம் ஆண்டு சட்டப் பட்டம் பெற்றவர். அரசு பணியில் VAO ஆக பணியாற்றி 2014 இல் ஓய்வு பெற்ற பிறகு, வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பித்தார்.
அவர்மீது இரண்டு குற்றவியல் வழக்குகள் FIR நிலையில் இருப்பதால் அவரது விண்ணப்பம் பார்கவுன்சிலால் நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம்,
Advocates Act, 1961 – Section 24A யில் "தண்டனை" மட்டுமே தகுதி இழப்பாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், வழக்கு நிலுவையை அடிப்படையாக கொண்டு பதிவு மறுப்பது சட்டத்திற்கு முரணானது எனக் குறிப்பிட்டது.

> "Presumption of Innocence ஒரு மனித உரிமை" என அமர்வு வலியுறுத்தியது.

வழக்கறிஞர் பதிவு தொடர்பான முக்கிய சட்ட திருப்பம் இந்த வழக்கு, Advocates Act, 1961 இன் செயல்பாட்டு எல்லைகளைப் பற்றிய மிக முக்கியமான சட்டக் கேள்வியை எழுப்புகிறது.

Section 24A – வழக்கறிஞர் தகுதி இழப்பு குறித்து தெளிவாக "conviction" என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்துகிறது.
ஆனால் S.M. Anantha Murugan வழக்கில் உருவாக்கப்பட்ட நடைமுறை, வழக்கு நிலுவையையே தகுதி இழப்பாக மாற்றியது.

மதுரை அமர்வு இந்நடைமுறை குறித்து:

> "When legislation occupies the field, courts cannot prescribe new disqualifications."

என்று சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை உறுதி செய்துள்ளது.

மேலும் > "Presumption of innocence is a human right."

என்று கூறியிருப்பது, வழக்கறிஞர் தொழிலுக்கான நுழைவு உரிமையை அரசியல் மற்றும் நிர்வாகத் தடைகளிலிருந்து பாதுகாக்கும் முக்கிய சட்டக் கருத்தாகும்.

இந்த வழக்கு ஆயிரக்கணக்கான சட்ட பட்டதாரிகளுக்கு நம்பிக்கை பல ஆண்டுகளாக குற்றவியல் FIR காரணமாக வழக்கறிஞர் பதிவில் இருந்து தடுக்கப்பட்டஆயிரக்கணக்கான சட்ட பட்டதாரிகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

VAO ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற S. Bhaskara Pandian அவர்களின் தனிப்பட்ட போராட்டம், இன்று ஒரு தேசிய அளவிலான சட்டக் கேள்வியாக மாறியுள்ளது.

நீதிமன்றம் கூறியது:

> "ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பது மட்டுமே ஒருவரின் வாழ்வாதார உரிமையை பறிக்க முடியாது."

இந்த வழக்கு குற்ற வழக்குகளில் நிலுவை உள்ள பல சட்ட பட்டதாரிகளின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது .

14/01/2026

Address

Chennai
600041

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when JB Law Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share