T L C

T L C TLC is Consultant for Legal Solutions.
(1)

இந்தியர்களின் அடிப்படைக் கடமைகள்List of Fundamental Duties of Indian Citizen Under Constitution of India================...
07/06/2025

இந்தியர்களின் அடிப்படைக் கடமைகள்
List of Fundamental Duties of Indian Citizen Under Constitution of India
=============================================
அடிப்படைக் கடமைகள் என்பவை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பின்பற்ற வேண்டிய கடமைகளாகும்.
கடமைகளின்றி பொறுப்பற்றத் தன்மையில் செயல்படும் போது ஒழுங்கின்மைக்கும், கட்டுப்பாடற்ற தன்மைக்கும் நாட்டை இட்டுச் செல்லும்.
எனவேதான் அரசியலமைப்புத் திருத்தம் நான்காம் பகுதியில் தனித்தலைப்பில் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பை வடிவமைத்தக் கொடுத்தவர்கள் அரசியலமைப்பு அடிப்படையில் சமூக நலத்தை பேணிக் காப்பதற்காக ஆட்சியாளர்கள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை வரையறுத்துள்ளனர்.
இவை அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் பகுதி 4-ல் கொடுக்கப்பட்டுள்ளன. பகுதி 3,4,4-ஏ ஆகிய மூன்று பகுதிகளும் இந்தியக் குடிமக்களின் நலனைப் பேணுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளன.
1976-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 42-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் படி இந்திய அரசியல் சட்டம் பகுதி 4-ஏ பிரிவு 51-ஏ இல் இந்திய குடிமக்களின் கடமைகளை வலியுறுத்துகிறது.

1. அரசியல் சட்டம், தேசிய சின்னம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு மதிப்பு அளித்தல்.
2. சுதந்திர போராட்ட வீர்களின் உன்னத உணர்வை நினைத்துப் பேணல்
3. நாட்டின் இறைமை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாத்தல்
4. நாட்டின் பாதுகாப்பிற்காகச் செயல் ஆற்றுதல்
5. மதம், மொழி, இனம், வகுப்பு வேற்றுமைகளைத் துறந்து சகோதர உணர்வுடன் தேசிய ஒற்றுமையை ஓங்கச் செய்தல்
6. நம்முடைய பண்பாடு பன்முகப் பாராம்பரியக் கலாச்சாரத்தின் மேன்மையை மதித்தல்
7. இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து மேம்படுத்துதல்
8. அறிவியல் மனப்பான்மை மற்றும் மனித நேயம் வளர்த்தல்
9. பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்
10. தன்னுடைய முயற்சியினால் அனைத்துத் துறைகளிலும் தனிமனித மற்றும் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
11. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி பெறுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
நம்முடைய அடிப்படைக் கடமைகள் பற்றித் தெரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்படுவோம்.
Source: inidhu. ஜனவரி 8, 2017
The following are the 11 Fundamental Duties of every citizen of India:
-------------------------------------------------------------------------------------
(1) To abide by the Constitution and respect the National Flag and the National Anthem;
(2) To cherish and follow the noble ideals which inspired our national struggle for freedom;
(3) To uphold and protect the sovereignty, unity and integrity of India;
(4) To defend the country and render national service when called upon to do so;
(5) To promote harmony and the spirit of common brotherhood among all people of India transcending religious, linguistic and regional or sectional diversities and to renounce practices derogatory to the dignity of women;
(6) To value and preserve the rich heritage of our composite culture;
(7) To protect and improve the natural environment including forests, lakes, rivers and wildlife and to have compassion for all living creatures;
(8 ) To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;
(9) To safeguard public property and to abjure violence;
(10) To strive towards excellence in all spheres of individual and collective activity, so that the nation constantly rises to higher levels of endeavor and achievement."
(11) To provide opportunities for education by the parent, the guardian, to his child, or a ward between the ages of 6-14 years as the case may be.

பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சட்டப்படியாக அதற்கு எந்தெந்த வகையில் நடவடிக்கை எடுப்பார்கள்?✍✍✍✍✍✍✍✍👇👇👇👇பொதுச்சொத்தி...
04/05/2025

பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தால் சட்டப்படியாக அதற்கு எந்தெந்த வகையில் நடவடிக்கை எடுப்பார்கள்?
✍✍✍✍✍✍✍✍👇👇👇👇

பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை எடுக்கும் முறைகள்!

ரயில் மறியல், பஸ் மறியல், பஸ்ஸை கொழுத்துவது, சேதப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்பது போன்ற அத்துமீறல்கள் நம் அரசியல் பாரம்பரியமாகிப் போனது. அரசின் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த பல அரசியல் கட்சிகள் சுய விளம்பரம் மற்றும் சுய லாபத்திற்காக செய்யும் சில ஆபத்தான அபத்த காரியங்களே இவை.

ஒரு மரம் வளர பல ஆண்டுகள் பிடிக்கும். வளர்ந்த பின், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தனது கிளைகளாலும், இலைகளாலும் நிழலைத்தந்து, காய், கனிகளை வழங்கி, மழை தந்து, மனித இனத்திற்கு அளப்பரிய தொண்டாற்றுபவை மரங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது மனித இனத்தையே வெட்டிச் சாய்ப்பதற்கு சமமாகும்.

சரி, இவற்றை செய்பவர்களுக்கு தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 சொல்லும் நடவடிக்கைகளைப் பற்றி பார்ப்போம்

தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992

Tamilnadu Property (prevention of Damage &Loss) Act,1992

சட்ட எண்: 59/1992

பொருள் வரையறைகள்- (பிரிவு 2)

“அரசு” என்றால் மாநில அரசு என்று பொருள்படும்.

“கேடு” (Mischief) என்பது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 425 ஆம் பிரிவின் உள்ள அதே பொருளைக் கொண்டதாக இருக்கும்;
“அரசியல் கட்சி” என்றால், 1968-ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் அளிப்பு) ஆணையின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சி என்று பொருள்படும்;
“சொத்து” என்றால், கீழ்க்குறித்துள்ளவற்றில் ஏதொன்றுக்கும் சொந்தமான அல்லது அதன் உடைமையிலுள்ள அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள அசையும் அல்லது அசையாச் சொத்து அல்லது இயந்திரம் எதுவும் என்றும் பொருள்படும்.

மத்திய அரசு; அல்லது
மாநில அரசு; அல்லது
உள்ளூர் அதிகார அமைப்பு ஏதொன்றும்; அல்லது
தமிழ்நாடு மாநில மின்சார வாரியம்; அல்லது
இந்த மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஏதொன்றும்; அல்லது
1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்திக் கீழ்ப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்பட்டுள்ள, ஒரு நிலவள வங்கி உள்ளடங்களாக, கூட்டுறவுச் சங்கம் ஏதொன்றும்; அல்லது
நாடளுமன்றத்தாலோ அல்லது இந்த மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையாலோ நிறைவேற்றப்பட்ட சட்டம் ஏதொன்றின்படியேனும் அமைத்துருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனம் ஏதொன்றும்; அல்லது,

மத்திய அரசு அல்லது மாநில அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஏதொன்றும்; அல்லது
ஏதேனும் நிலையம், வணிக அமைப்பு அல்லது தொழில் நிறுவனம்; அல்லது
ஏதாவது நிறுவனம்
விளக்கம்: இந்தக் கூற்றின் படி “நிறுவனம்” என்பது ஏதேனும் கூட்டமைப்பு எனப் பொருள்படும் மற்றும் இதில் பொறுப்பாட்சி, நிறுவனம், சங்கம் அல்லது தனி ஆட்களைக் கொண்ட கழகம் உள்ளடங்கும்.

சொத்தைப் பொறுத்த அளவில் கேடு செய்வதற்கான தண்டனை (பிரிவு 3)

Punishment for committing mischief in respect of Property

சொத்து எதனையும் பொறுத்த அளவில், செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்து, அதன் மூலம் அத்தகைய சொத்திற்கு நூறு ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையளவிற்குச் சேதம் அல்லது இழப்பை விளைவிக்கின்ற அல்லது,

எந்த நோக்கத்திற்காகவேனும் பொதுமக்களுக்கோ அல்லது நபர் எவருக்குமோ தண்ணீர் வழங்கும் அளவைக் குறைத்தலையோ, அல்லது பொது வடிகால் ஏதேனும் வழிந்தோடுதலையோ அல்லது அதற்குத் தடங்கலையோ விளைவிக்கின்ற அல்லது பெரும்பாலும் விளைவிக்கக்கூடும் என்று தாம் அறிகின்ற செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்கின்ற அல்லது
பொதுச்சாலை, பாலம் அல்லது இயற்கையான அல்லது செயற்கையான நீர்வழிப்போக்கு வரவுக்குரிய கால்வாய் எதனையும் பயணஞ் செய்வதற்கோ அல்லது பாதுகாப்பு குன்றியதாக ஆக்குகின்ற செயல் எதையேனும் செய்வதன் மூலமாக கேடு செய்கின்ற எவரொருவரும்

ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது, போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனும் இருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு ஓராண்டிற்கும் குறைவானதொரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

தீ அல்லது வெடிபொருள் மூலமாகப் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவிக்கின்ற கேடு: (பிரிவு 4,)

Mischief causing damage to Property by Fire or Explosive Substance

சொத்து எதற்கேனும் நூறு ரூபாய் அல்லது அதற்கு மேம்பட்ட தொகையின் அளவிற்குச் சேதம் விளைவிக்கும் உட்கருத்துக்கொண்டோ, அல்லது தன்செயலின் மூலம் தான் சேதத்தைப் பெரும்பாலும் அதற்கு விளைவிக்கக்கூடும் என்பதை அறிந்தோ, தீ அல்லது வெடிப்பொருள் எதனின் மூலமாகவேனும் கேடு செய்கின்ற எவரொருவரும் இரண்டாண்டுகளுக்குக் குறைவானதாக இருக்கக்கூடாத, ஆனால் பத்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு காலளவிற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனுமிருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு, இரண்டாண்டுக்கும் குறைவானதொரு காலஅளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

மோட்டர் வாகனங்களில் பயணஞ் செய்கின்றவர்கள் மீது கற்கள், செங்கற்கள் முதலானவற்றை எறிவதற்கான தண்டனை:- (பிரிவு 5)

Punishment for throwing stones, Bricks, etc., upon persons travelling in motor vehicles

மோட்டர் வாகனங்களில் எதிலேனும் பயணஞ்செய்கின்ற நபர்கள் மீது கற்களையோ, செங்கற்களையோ, சோடா பாட்டில்களையோ அல்லது பிற பொருள் எதையேனும் எறிகின்ற செயலைச் செய்கின்ற அல்லது அதைத் தூண்டிவிடுகின்ற அல்லது ஏவிவிடுகின்ற அல்லது அதற்கு மற்றபடி உடைந்தையாயிருக்கின்ற எவரொருவரும், ஆறு திங்களுக்குக் குறையானதாக இருக்கக்கூடாத, ஆனால் ஐந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையும் மற்றும் பணத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால் நீதிமன்றமானது போதுமான மற்றும் தனியான காரணம் ஏதேனுமிருப்பின் அதைத் தீர்ப்புரையில் குறிப்பிட்டு, ஆறு மாதங்களுக்கு குறைவானதொரு காலஅளவிற்குச் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

விளக்கம்: இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக “இயக்கூர்தி” (மோட்டார் வாகனம்) என்பது 1988-ஆம் ஆண்டு இயக்கூர்திகள் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (28)- ஆம் கூறிலுள்ள அதே பொருளைக் கொண்டதாக இருக்கும்.

ஜாமீன் குறித்துத் தனியான வகைமுறை ( பிரிவு 6.)

Special Provision regarding Bail

இந்தச் சட்டத்தின்படி, தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயலொன்றைச் செய்துள்ளத்தாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள அல்லது தண்டனைத்தீர்ப்பு, வழங்கப்பட்டுள்ள நபரெவரும், அவர் காவலில் இருப்பாராயின், விடுவிக்கப்படுவதற்கான விண்ணப்பத்தை எதிப்பதற்கான வாய்ப்பொன்று குற்றவழக்குத் தொடரும் அரசு தரப்புக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றாலன்றி (மற்றவர் அளிக்கும்) பிணையத்தின் (ஜாமீன்) பேரிலோ, அல்லது சொந்தப் பிணைமுறிவின் பேரிலோ விடுவிக்கப்படுதல் ஆகாது.

இழப்பீடு செலுத்துவதற்கான ஆணை (பிரிவு 7)

(Order to pay Compensation)

இந்தச் சட்டத்தின் படியான குற்றச் செயலொன்றுக்காகப் பணத்தடையை விதிக்குங்கால், நீதிமன்றமானது, தீர்ப்புரை வழங்குகையில், வசூலிக்கப்பட்ட பணத்தண்டனைத்தொகை முழுவதும் அல்லது அதன் பகுதி எதுவும்; -

குற்றவழக்குத் தொடர்ந்த நடவடிக்கையில் முறையாக ஏற்பட்ட செலவுகளைக் கொடுத்துத் தீர்ப்பதற்கு;

அக்குற்றச்செயலால் விளைவிக்கப்பட்ட இழப்பு அல்லது ஊறு எதற்குமாக, நபரெவருக்கேனும் இழப்பீடு செலுத்துவதற்கு;
பொதுச்சாலை, பாலம் அல்லது இயற்கையான அல்லது செயற்கையான நீர்வழிப் போக்குவரவுக்குரிய கால்வாய் ஏதொன்றும் உள்ளடங்கலாக, அப்பொதுச் சொத்திற்குப் பதிலாக வேறொன்றை அமைத்துத் தருவதற்கு அல்லது நேர்விற்கேற்ப, முன்பிருந்த நிலைக்கு அதை மீட்டளிப்பதற்குப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று ஆணையிடலாம்.

மேல்முறையீட்டிற்குட்பட்ட வழக்கொன்றில் பணத் தண்டனையனது விதிக்கப்படுமாயின், அம்மேல்முறையீட்டினை முன்னிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட கால அளவு முடிவடைவதற்கு முன்னரோ, அல்லது மேல்முறையீடானது முன்னிடப்பட்டிருந்தால், அம்மேல்முறையீட்டில் தீர்ப்பளிப்பதற்கு முன்னரோ, அவ்வாறு பணஞ்செலுத்துதல் கூடாது.

இந்தப் பிரிவின்படியான ஆணையொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றமோ, அல்லது தனது சீராய்வு அதிகாரங்களைச் செலுத்தும் போது உயர்நீதிமன்றமோ கூடப்பிறப்பிக்கலாம்.
அதே பொருள் குறித்த பிந்தைய உரிமையியல் வழக்கெதிலேனும் இழப்பீட்டினை வழங்கு காலத்தில், நீதிமன்றமானது, இந்தப் பிரிவின்படி இழப்பீடாகச் செலுத்தப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்ட தொகை எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

வேறுவிதமாக வகை செய்யப்பட்டவாறல்லாமல், பணத்தண்டனையானது ஒரு பகுதியாக அமைந்திராத தண்டனையொன்றை நீதிமன்றமொன்று விதிக்கின்றபோது, அந்நீதிமன்றமானது, தீர்ப்புரை வழங்குகையில், எந்தச் செயலுக்காகக் குற்றஞ்சுமத்தப்பட்ட நபருக்கு அவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ, அந்தச் செயலின் காரணமாக இழப்பு அல்லது ஊறு எதையேனும் உற்றிருக்கின்ற நபருக்கு இழப்பீடு என்கின்ற வகையில், அந்த ஆணையில் குறித்துரைக்கப்படக்கூடிய தொகையை செலுத்துமாறு குற்றஞ்சுமத்தப்பட்ட நபருக்கு ஆணையிடலாம்.
குற்றச் செயல்களை விசாரணை செய்வதற்கான அதிகாரம்: - (பிரிவு 8)

Power to try Offences

பெருநகர் தலைமைக் குற்றவியல் நடுவரொருவரின் நீதிமன்றத்திற்கு அல்லது அமர்வு நீதிமன்றத்திற்குக் கீழமைந்த நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க குற்றச்செயல் ஏதொன்றையும் விசாரணை செய்தல் ஆகாது.

குறித்த சில நேர்வுகளில் இழப்பீட்டைச் செலுத்துவதற்கான கடப்பாடு(பிரிவு 9.)

(Liability to pay Compensation in Certain Cases)

இந்தச் சட்டத்தின் என்ன அடங்கியிருந்தபோதிலும், அரசியல் கட்சியொன்றினாலோ, வகுப்பு, மொழி அல்லது இனக் குழுவொன்றினாலோ ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம், ஒருங்கு கூடுகை, சட்டம், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம் எதனின் அல்லது பிற நடவடிக்கை எதனின் பேரிலும் இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்கதான குற்றச்செயலொன்று செய்யப்பட்டிருக்குமிடத்து, அந்தக் குற்றச் செயலானது அத்தகைய அரசியல் கட்சியாலோ, அல்லது வகுப்பு, மொழி அல்லது இனக்குழுவினாலோ செய்யப்பட்டிருப்பதாகவுங்கூட அனுமானிக்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அத்தகைய அரசியல் கட்சியோ அல்லது வகுப்பு மொழி அல்லது இனக்குழுவோ, சொத்து எதற்கும் விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்கான இழப்பீட்டை இந்தச் சட்டத்திற்கும் மற்றும் அதன்படி செய்யப்படும் விதிகளின் வகைமுறைகளுக்கும் இணங்கச் செலுத்துவதற்குக் கடப்பாடுடையதாக இருத்தல் வேண்டும்.

இழப்பீட்டுக் கோரிக்கை (பிரிவு 10.)

Claim For Compensation

சொத்திற்கு விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்காகக் கேட்கப்படும் இழப்பீட்டுல் கோரிக்கை எதுவும்,
அவ்வாறான சேதம் (அ) நட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஏதேனும் நபர் ஒருவரால்; அல்லது
பிரிவு 2-ன் கூறு (4) உட்கூறு (a) முதல் (i) வரையில் குறிப்பிடப்பெற்ற அதிகார ஆயத்தினால் அதிகாரமளிக்கப்பெற்ற ஏதேனும் அலுவலரால் செய்து கொள்ளப்படுதல் வேண்டும்.
சொத்திற்கு விளைவிக்கப்படும் சேதம் அல்லது இழப்பிற்காகக் கேட்கப்படும் இழப்பீட்டுக் கோரிக்கைக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப் படக்கூடிய படிவத்தில் இருக்க வேண்டுமென்பதடன், வகுத்துரைக்கப்படக்கூடிய விவரங்களைக் கொண்டிருத்தலும் வேண்டும்.
பிரிவு 11 இழப்பீட்டை முடிவு செய்வதற்கான அதிகார அமைப்பு:

Authority to Decide Compensation

சொத்திற்கு விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்காகக் கேட்கப்படும் இழப்பீட்டுக் கோரிக்கை ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படக்கூடிய அதிகார அமைப்பினிடம் செய்துகொள்ளப்படுதல் வேண்டும் என்பதுடன், அதன்பேரில் அதன் முடிவே இறுதியானதாகும்; மேலும், நீதிமன்றம் எதிலும் அதற்கு ஆட்சேபம் எழுப்பப்படுதலுமாகாது.
பொதுச் சொத்திற்கு விளைவிக்கப்பட்ட சேதம் அல்லது இழப்பிற்கான இழப்பீட்டின் அளவைகுறித்து முடிவுக்கு வருவதில் (1)-ஆம் உட்பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பானது.
அச்சொத்தின் மதிப்பு:
அப்பொதுச் சொத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் அளவு, மற்றும்
வகுத்துரைக்கப்படகூடிய பிற விசயங்கள்
ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

(1)-ஆம் உட்பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பு, இழப்பீட்டிற்கான கோரிக்கையை முடிவுசெய்வதில், வகுத்துரைக்கப் படக்கூடிய நடைமுறையைப் பின்பற்றுதல் வேண்டும்.

(1)-ஆம் உட்பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பானது,
உறுதிமொழியின் பேரில் சாட்சியம் எடுக்கின்ற;
சாட்சிகள் முன்னிலையாவதை வலியுறுத்துகின்ற;
ஆவணங்களையும் முக்கிய சான்றுப் பொருள்களையும் வெளிக்கொணர்கின்ற மற்றும் அவற்றை தாக்கல் செய்கின்ற நோக்கத்திற்காகவும்; மற்றும்
வகுத்துரைக்கப்படக்கூடிய பிறநோக்கங்களுக்காகவும்,
- ஆம் ஆண்டு உரிமை வழக்கு விசாரணைமுறைத் தொகுப்புச் சட்டத்தின்படி உரிமைவழக்கு நீதிமன்றமொன்றிற்குள்ள அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருக்கும்.
இழப்பீடானது நிலவரி நிலுவையைப் போன்றே வசூலிக்கப்படுதல் (பிரிவு 12)

Recovery of Compensation as Arrear of Land Revenue

11-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி வகுதுரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பு, சொத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதம் அல்லது இழப்பு எதற்குமான இழப்பீட்டுத்தொகை நிர்ணயிக்கப்பட்டதன் பேரிலும்

10-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் படி நபரின் விண்ணப்பத்தின் பேரில் அல்லது வகுத்துரைக்கப்பட்டுள்ள அலுவலரின் விண்ணப்பத்தின் பேரிலும் அத்தொகைக்கான சான்றிதழொன்றை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கலாம்; மாவட்ட ஆட்சியரும், நிலவரி நிலுவையொன்றைப் போன்ற அதே முறையில், அதனை வசூலிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மேல்முறையீடு (பிரிவு 12 A)

Appeal

பிரிவு 11-ன் உட்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பெற்ற அதிகார ஆயத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்திரவினால் பாதிப்புற்ற ஏதேனும் நபர், வகுத்துரைக்கப்பட்ட அவ்வாறான கால அளவிற்குள், இதன் பொருட்டு அரசினால் குறிப்பிடப்பெற்ற அவ்வாறான அதிகாரிக்கு, குறிப்பிடப்பெற்ற அவ்வாறான வகையில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
மேல்முறையீட்டினை முடிவு செய்திட, உட்பிரிவு (1)-ன் கீழ் குறிப்பிடப்பெற்ற அதிகாரி, வகுத்துரைக்கப்படவாறான நடைமுறைவினைப் பின்பற்றிடுவார் மற்றும் அவ்வாறான மேல்முறையீட்டில் அவ்வாறான அதிகாரியின் முடிவே இறுதியானதாகும் மற்றும் அம்முடிவிற்கு யாதொரு நீதிமன்றத்திலும் வினா எழுப்பிட இயலாது.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம் (பிரிவு 13.)

Power to make Rules

அரசு இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
மேற்சொன்ன அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு ஊறின்றி, அத்தகைய விதிகள்:
இழப்பீட்டிற்கான விண்ணப்பமொன்று எந்த அலுவலரால் செய்துகொள்ளப்படவேண்டும் என்பதற்கும்.
இழப்பீட்டிற்கான விண்ணப்பத்தைப் பொறுத்த அளவில், இழப்பீட்டிற்கான விண்ணப்பத்தின் படிவம், அதில் என்ன விவரங்கள் அடங்கியிருக்கலாம் என்பது, மற்றும் அதற்காகச் செலுத்தப்படவேடிய கட்டணங்கள் எவையேனுமிருப்பின் அக்கட்டணங்கள் ஆகியவற்றிற்கும்
இழப்பீட்டுக் கோரிக்கையானது எந்த அதிகார அமைப்பிடம் செய்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்கும்,

11-ஆம் பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பினால் இழப்பீட்டின் அளவைக் குறித்து முடிவுக்கு வருவதில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விசயங்கள் எவை என்பதற்கும்;
11 –ஆம் பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்டுள்ள அதிகார அமைப்பினால், இழப்பீட்டுக் கோரிக்கையை முடியு செய்வதில் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன என்பதற்கும்; மற்றும்,
வகுத்துரைக்கப்படவேண்டியதற்கான அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விசயம் எதற்கும்.
வகுத்துரைக்கப்படவேண்டியதற்கான அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற விசயம் எதற்கும் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும் அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அல்லது அதனை அடுத்துவருகின்ற கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர், அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும் மாறுதல் எதையும் செய்யச் சட்டமன்றப் பேரவை உடன்படுமானாலோ அல்லது அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படவோ அல்லது பிறப்பிக்கப்படவோ கூடாது என்று சட்டமன்றப் பேரவை உடன்படுமானாலோ அந்த விதி அல்லது அறிவிக்கையானது அதன் பின்னர் அத்தகைய மாற்றியமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெறுதல் வேண்டும்; அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம் போதல் வேண்டும்; எனினும் அவ்வாறு மாற்றியமைத்து அல்லது செயல் வடிவம் பெறாது போனது எதுவும், அந்த விதியின்படியோ அல்லது அறிவிக்கையின்படியோ, முன்னதாகச் செயல்பட்ட செயல் எதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.

பிரிவு. 14 காப்பு

இந்தச் சட்டத்தின் வகைமுறைகள், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் ஏதொன்றிற்கும் கூடுதலாக அமைந்தவையாக இருக்கவேண்டுமேயன்றி அதைக் குன்றச் செய்வனவாக இருத்தலாகா; மற்றும் இந்தச் சட்டம் ஒருபுறமிருக்க, நபரெவருக்கேனும் எதிராகப் புலனாய்வு என்கிற வகையிலோ, அல்லது மற்றப்படியோ தொடுக்கபடக்கூடிய நடவடிக்கை எதிலிருந்தும் அந்நபருக்கு இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும் விலக்களித்தல் ஆகாது.

பிரிவு 15. நீக்கம்

1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச்சொத்து (அழிப்பு மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டமானது, இதன் மூலம் நீக்கப்படுகிறது.

26/04/2025

CPC ON FINGER TIPS.

0) framing of issues Order 14
0) Plaint Description Order 7
1) To delete/Add parties ORDER 1 RULE 10.
2) Amendment of Suit to add defendants ORDER 1 RULE 10(4)
3) Substitute service ORDER 5 RULE 20
4) Amendment of pleadings ORDER 6 RULE 17
5) Additional W.S ( Rejoinder ) ORDER 8 RULE 9
6) Setting aside ex-parte order ORDER 9RULE 7
7) Restoration ORDER 9 RULE 9
Set aside ex-parte decree ORDER 9 RULE 13
9) To order production of documents ORDER 11 RULE 14
11) Inspection of documents ORDER 11 RULE 15
12) To produce documents ORDER12 RULE 8
13) Production of documents ORDER 7 RULE 14(3)
14) To return unmarked documents ORDER 13 RULE 7(2)
15) To return marked Documents 13 RULE 9
16) Adjournment 17 RULE 1
17) Recalling witness 18 RULE 17
18) To grant installments after decree passed ORDER 20 RULE 11(2)
19) Stay of ex*****on ORDER 21 RULE 26
20) Delivery of immovable property ORDER 21 RULE 35
21) To Break open door ORDER 21 RULE 35(3)
22) Attachments of movables of JDRs ORDER 21RULE 43
23) Attachments of Payorders of JDRs ORDER 21RULE 45(1)
24) Attachment of salary of JDRs ORDER 21 RULE 48
25) Attachment of Immovable property of JDRs ORDER 21 RULE 54
26) Sale of attached property ORDER 21 RULE 64
27) Adjournment/stoppage of sale ORDER 21RULE 69
28) Delivery of movable property ORDER 21 RULE 9
29) To bring L.Rs on record in case of death of Plaintiff ORDER 22 RULE 3
30) To bring L.Rs on record in case of death of Defendant ORDER 22RULE 4
31) For Compromise ORDER 23 RULE 3
32) Appointment of commissioner to examine witness ORDER 26 RULE 1
33) Appointment of commissioner to make local investigation ORDER 26RULE 9
34) Appointment of commissioner to examine adjust A/Cs ORDER 26 RULE 11
35) Appointment of commissioner to make partition of immovable property ORDER26 RULE 13
36) Disclose partners names ORDER 30RULE 2
37) Appointment of guardian for minors ORDER 33RULE 1
38) Removal of guardian ORDER 32 RULE 9
39) To declare as major ORDER 32 RULE 12
40) Appointment of guardian to unsound person ORDER 32 RULE 15
41) Attachment before judgment ORDER 38 RULE 5
42) Appointment of receiver ORDER 40RULE 1
43) Regular appeal ORDER 41 RULE 1
44) Stay of ex*****on of decree in appeal ORDER 41 RULE 5(1)
45) Restore of appeal dismissed for default ORDER 41 RULE 19
46) Production of additional evidence in appeal ORDER 41 RULE 27
47) Second appeal ORDER 42 RULE 1 (SEC 100 CPC )
48) Review of Judgment ORDER 47 RULE 1 (114 CPC )
49) Advancement RULE 109(2)
50) Third party for C.Cs RULE188(2)
51) Amendment of Judgments/decrees/orders ORDER Sec.152
52) To summon (Handover summons) for evidence ORDER 16 RULE 7(4)

சட்ட வார்த்தைகள் தெரிந்து கொள்வோம்..!1. உச்சநீதிமன்றம் - Supreme Court2. உயர்நீதிமன்றம் - High Court3. நீதித்துறை நடுவர்...
10/04/2025

சட்ட வார்த்தைகள் தெரிந்து கொள்வோம்..!

1. உச்சநீதிமன்றம் - Supreme Court
2. உயர்நீதிமன்றம் - High Court
3. நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Judicial Magistrate Court

4. மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் - District Munsif Court

5. தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Chief Judicial Magistrate Court

6. சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - Special Judicial Magistrate Court

7. அமர்வு நீதிமன்றம் - Sessions Court
8. உரிமையியல் வழக்குகள் - Civil Cases
9. குற்றவியல் வழக்குகள் - Criminal Cases
10. எதிர்வாதி / எதிர்மனுதாரர் / பிரதிவாதி - Defendant

11.வாதி / மனுதாரர் /புகார்தாரர் - Plaintiff / Complainant /Petitioner
12. குற்றஞ்சாட்டப்பட்டவர் - Accused
13. பாதிக்கப்பட்ட தரப்பு - Adverse Party
14. கட்சிக்காரர் - Client
15. சங்கதி - Fact
16. மறு விசாரனை - Re Examination
17. ஆபத்தான கேள்வி - Risky Question
18. தடாலடி பதில் - Fatal Reply
19. குறுக்கு விசாரனை - Cross Examination
20. உண்மை உறுதிமொழி ஆவணம் - Affidavit
21. குற்றவாளி - Offender
22. குற்றச்சாட்டு - Charge
23. மெய்ப்பிப்பு - Proof
24. சொத்து - Property
25. குற்றம் - Offense
26. கட்டைவிரல் ரேகைப்பதிவு - Thumb Impression
27. திருட்டு வழக்கு - Theft Case
28. திருட்டுப் பொருள் - Stolen Property
29. பைத்தியம் - Insanity
30. சான்றொப்பம் - Attestation
31. சச்சரவு - Affray
32. தீர்ப்பு - Sentence
33. அவசரத்தன்மை மனு - Emergent Petition
34. கீழமை நீதிமன்றம் - Lower court
35. பரிகாரம் - Remedy
36. உறுத்துக் கட்டளை - Injection Order
37. நிரந்தர உறுத்துக் கட்டளை - Permanent Injection Order
38.வழக்கின் மதிப்பு - Suit Valuation
39. வழக்குரை - Plaint
40.வழக்குரையில் திருத்தம் - Amendment in Plaint
41.பண வழக்கு - Money Suit
42.அவதூறு வழக்கு - Defamation Suit
43.வறியவர் வழக்கு - Pauper Suit
44. எதிர்வுரை - Counter
45. எழுவினாக்கள் (சிக்கல்) - Issues
46. மேல்முறையீடு -Appeal
47.வரைமொழி வாதுரை - Written Argument
48. குற்றப்பத்திரிக்கை - Charge Sheet
49. தற்காலிக நிறுத்த மனு - Caveat petition
50. கோருரிமை மனு - Claim Petition
51.தடை நீக்கம் - Removal of obstruction
52. வழக்கில் சமரசம் செய்து கொள்ளல் - Compromise of suit
53. எதிர் மேல்முறையீடு - Cross Appeal
54.எதிர் மறுப்பு - Cross-objection
55.வறியவர்களால் தொடுக்கப்படும் வழக்குகள் - Suits by Indigent Persons u
56. நீதிமன்றக் காப்பாளர் - Court Guardian
57.ஒத்தி வைத்தல் - Adjournment
58. சாட்சி - witness

குண்டர் சட்டம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சட்டத்தின் முழு பெயர் The Tamil Nadu Prevention of Dangerous Activiti...
05/04/2025

குண்டர் சட்டம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சட்டத்தின் முழு பெயர்

The Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers Drug Offenders Goondas, Immoral Traffic Offenders and Slum - Grabbers Act

இந்தியாவின் பல குற்றவியல் சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் அப்போது அடிமைகளாக இருந்த இந்தியர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டவையே இந்த குண்டர் சட்டமும் வங்காளத்தில் கடந்த 1923ஆண்டு உருவாக்கப்பட்டது அந்த சட்டமே பல மாற்றங்களுடன் தமிழ்நாடு உட்பட நாட்டின் பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது.

அடிப்படையில் இது தண்டனை வழங்கும் சட்டமல்ல ஒரு தடுப்பு காவல் சட்டமே ஆனால் குற்றம் தொடர்பான விசாரணை நடைபெறாமலே தண்டனை வழங்கும் அநீதியான சட்டமாகவும் இருக்கிறது.

தொடர் குற்றங்களை செய்பவர்களை சிறிது காலத்திற்கு சிறைக்குள் முடக்கி வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே இந்த சட்டம் இப்போது காவல் துறையோடு இணக்கமாக செல்ல முடியாதவர்களை அச்சுறுத்துவதற்கா
மீடியாக்கள் மூலம் மக்களின் கவனத்தை கவரும் வழக்குகளில் சிக்குவோரையும் தவறான முறையில் சிறையில் அடைத்து வைப்பதற்கான சட்டமாக பயன்படுத்தப்படுகிறது இந்த சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஒரு ஆண்டுக்கு பிணை கோர முடியாது எனவே அவர்களை சிறையில் அடைத்து வைப்பது உத்தரவாதம்.

ஏதோ ஒரு குற்றத்தில் சிக்கி சிறையில் இருப்பவர் மீது மேலும் பல பழைய வழக்குகளை இணைத்து இந்த சட்டத்தில் ஒருவரை கைது செய்வதற்கு உத்தரவிடும் அதிகாரம் மாவட்ட ஆட்சிதலைவர்களிடம் இருந்தது காலப்போக்கில் காவல் துறையினர் கற்பனைவளத்துடன் புனையும் வழக்குகளைஏற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யும் ஆணையில் கையெழுத்திட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தயங்கவே சென்னை போன்ற பெருநகரங்களில் காவல்துறை உயர் அதிகாரிகளிடமே அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபருக்கு அவர்மீதான வழக்குகளின் விவரங்களை கொடுக்க வேண்டும் சில நூறு பக்கங்கள் இருக்கும் இந்த ஆவணங்களை தயாரிக்க அரசுதரப்பில் 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் கூறுகின்றன.

எனினும் தமிழ்நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் வழக்குகள் குண்டர் சட்டத்தில் பதிவு செய்யப்படுகின்றன அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 8 வழக்குகள்.

இந்த வழக்குகளை எதிர்த்து முறையீடு செய்வதற்கு அறிவுரைக் குழுமம் என்ற அமைப்பு உள்ளது. இங்கு தீர்வு கிடைக்காவிட்டால் உயர்நீதி மன்றத்தை அணுகலாம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களில் சுமார் 75% பேர் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர் ஆனால் இதற்கு சுமார் 4 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம் ஆக மொத்தத்தில் அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு சிறையில் அடைத்து முடக்கி வைக்கும் காவல்துறையின் நோக்கம் ஏறத்தாழ நிறைவேறி விடுகிறது.

ஆனால் இந்த குண்டர் சட்டம் என்ற சட்டம் மனித உரிமைகளை மீறும் ஒரு கருப்புச் சட்டமாகும் இந்திய குற்றவியல் சட்டங்களில் உள்ள நடைமுறைகளை சரியாக பயன்படுத்தினாலே குற்றங்களை புலனாய்வு செய்யவும் தடுக்கவும் முடியும்.இந்த குண்டர் சட்டம் காவல் துறையினரின் பழிவாங்கலுக்கே பெரிதும் பயன்படுவதாக தோன்றுகிறது.

அண்மையில் அயனாவரத்தில் சிறுமி ஒருவர் பாலியல் கொடுமைக்கு உள்ளான வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேர் மீதும் குண்டர் சட்டம் ஏவப்பட்டது ஆனால் அவர்கள் மீது தொடர் குற்றங்களில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை அதை தயாரிப்பதற்கு காவல்துறை எடுத்துக்கொண்ட காலம் சற்று அதிகமாகிவிட்டது போலிருக்கிறது அதன் காரணமாக அவர்கள் மீது ஏவப்பட்ட குண்டர் சட்ட நடவடிக்கைகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது இது சரியான நடவடிக்கையே அவர்கள் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

குண்டர் சட்டத்தை தேவையின்றி இயந்திரத்தனமாக பயன்படுத்த கூடாது சென்னை உயர்நீதிமன்றம் பல முறை காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது அதை காவல்துறை மதிப்பதில்லை லஞ்ச - ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசு அதிகாரிகள் மீது ஏன் குண்டர் சட்டத்தை ஏவக்கூடாது என்றுகூட ஒரு முறை உயர்நீதிமன்றம் நகைச்சுவை செய்துள்ளது அதையும் காவல் துறையினர் செய்யமாட்டார்கள்.

ஆக மொத்தத்தில் இந்த குண்டர் சட்ட நடவடிக்கைகள் மூலம் காவல் துறையினரின் பணிச்சுமை அதிகரிக்கிறது மக்கள் வரிப்பணம் வீணாகிறது வழக்கறிஞர்களுக்கு வருமானம் வருகிறது அவ்வளவுதான் இந்த சட்டத்தின் பயன்.

காவல்துறையில் பல சீர்திருத்தங்கள் தேவை குற்றவியல் சட்டங்களிலும் காலத்திற்கேற்ற பல மாற்றங்கள் தேவை.

சைபர் குற்றவாளிகள் கையாளும்36 வகை தந்திரங்கள்..!1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வ...
17/03/2025

சைபர் குற்றவாளிகள் கையாளும்
36 வகை தந்திரங்கள்..!

1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கி விபரங்களை கேட்பதில்லை. மேற்படி அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. ஆகவே மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்கவும்.

2) வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி 1) A/c நெம்பர் 2) ATM DEBIT CARD நெம்பர், 3) PIN நெம்பர் 4) CVV நெம்பர், 5) OTP நெம்பர் 6) நெட் பேங்கிங் PASS WORD 7) CREDIT CARD நெம்பர் கேட்டால் தெரிவிக்க வேண்டாம். தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு HACK செய்யப்படலாம்.

3) சுகாதாரதுறையில் இருந்து பேசுவதாகவும், தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்க விபரங்களை UPDATE செய்ய வேண்டும் என கேட்பது போல் விபரங்களை கேட்டு, உங்களது உங்கள் வங்கி கணக்கை குறிவைத்து 1) Bank A/c No, 2) Aadhar Card No, 3) PAN Card No, etc பெற்றுக்கொண்டு உங்கள் செல்லுக்கு வந்த OTP விபரம் கேட்டு பணத்தை பறிக்க முயற்சி
செய்யக்கூடும். விபரம் தெரிவித்தால்
உங்கள் வங்கி கணக்கு HACK செய்யப்படலாம்.

4) உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ / லோன் தொகை பிடிக்கப்பட்டதாகவோ SMS அனுப்பி, செய்யவில்லை எனில், அந்த SMS வுடன் உள்ள LINK ஐ CLICK செய்ய வலியுறுத்துவார்கள். CLICK செய்யாமல் அதை தவிர்க்கவும். தேவைபட்டால் வங்கிக்கு நேரில் சென்று விளக்கம் பெறவும். CLICK செய்தால் உங்கள் A/c ல் இருந்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சிப்பார்கள்.

5) KYC/PAN/AADHAR NO விபரங்கள் குறித்து கேட்டாலோ, SMS/ LINK அனுப்பினாலோ UPDATE செய்ய வேண்டாம். வங்கிக்கு நேரில் சென்று தேவைப்பட்டால் ஆவணங்களை கொடுக்கவும். BANK Account-ற்கான செல்போன் / ATM Card தொலைந்து போனாலோ / திருட்டு போனாலோ உடனடியாக வங்கிக்கு நேரில் தெரியபடுத்தி விரைந்து BLOCK செய்யவும்.

7) வளைதளத்தில் தேடப்படும் வங்கி கஸ்டமர் கேர் எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. CUSTOMER CARE CALLS செய்பவர், உங்களுக்கு
உதவுவது போல் LINK அனுப்பியோ / SCREEN SHARE செய்ய விலியுறுத்தியோ OTP விபரங்கள் பெற்றும் உங்கள் A/C ஐ HACK செய்யபடலாம் . எச்சரிக்கையாக செயல்படவும்.

8) உங்களது தனிப்பட்ட புகைபடங்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். அதை MORPHING செய்து பணம் பறிக்கவும் / வேறு வகையில் உங்களை மிரட்டவும் நேரிடலாம்.

9) Face bookல் உங்களுக்கு தெரிந்தவர் பெயரில் போலி கணக்கு துவங்கி உங்களிடம் பண உதவி கேட்க வாய்ப்புண்டு, எனவே பணம் அனுப்பும் முன் அவரிடம் நேரிலோ, தொலைபேசியிலோ உறுதி செய்யவும்.

10) SOCIAL MEDIA-களில் உங்கள் தனிப்பட்ட விபரங்களை யார் யாரெல்லாம் பார்க்கவேண்டும்/ பார்க்க கூடாது என்பதை PRIVACY SETTINGS ல் தெளிவாக குறிப்பிடவும்.

11) SOCIAL MEDIA-வில் உங்களது அன்றாட இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய LIVE UPDATE பதிவுகள் குற்றவாளிகளால் கவனிக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

12) SOCIAL MEDIAவில் வரும் LINK- ஐ, CLICK செய்தால், Bank a/c HACK ஆக வாய்ப்புள்ளது.

13) பொது இடங்களில் வைக்கப்பட்ட USB சார்ஜர்களில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவும், உங்களது தகவல்கள் (JUICE JACKING) முறையில் திருட்டு போக வாய்ப்புள்ளது.

14) பொது இடங்களில் உள்ள WI- FI பயன்படுத்தும்போது உங்கள் மொபைல் HACK செய்யப்படலாம்.

15) குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக SOCIAL MEDIA தகவலின் அடிப்படையில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக செயல்படவும்.
(Fake website ஆக இருக்கலாம்)

16) செல்போன் Tower அமைக்க இடம் தேவை, மாதம் ரூ 30,000/- வாடகை, 30 லட்சம் முன்பணம் வழங்கப்படும் என வரும் செய்திகளை நம்பி பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.

17) APP-களின் விபரங்களை முழுவதும் அறியாமல் Download செய்யவேண்டாம். உங்களது தகவல் / வங்கி கணக்கு திருட்டு போக வாய்ப்புள்ளது.

18) ஆர்வத்தை தூண்டும் தலைப்புகளில் வரும் செய்தி LINK- களுக்கு பின்னால் தகவல் / பணம் பறிக்கும் கும்பல் மறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்வீர்,

19) முதலீடு செய்யும் பணத்திற்கு தினசரி 1% கமிஷன் வழங்கப்படும் என வரும் விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்யாதீர்கள். மாதத்திற்கு 30 % கமிஷன் யாராலும் தரமுடியாது என்பதை சற்று நிதானமாக யோசித்து பாருங்கள்.

20) PART TIME JOB/ WORK FROM HOME/ DAILY EARN Rs 200/- to 3,000/- என வரும் தொகைக்கு ஆரம்பத்தில் கமிஷம் முதலீடு செய்யாதீர்கள். பெரும் தொகை அவர்கள் கைக்கு சென்றால் திரும்ப கிடைக்காது.
விளம்பரங்களை பார்த்து செலுத்தும் சிறு வழங்கப்படுவதை நம்பி பெரும் தொகையை இழக்காதீர்கள்.

21) உங்கள் தொலைபேசி
எண்ணுக்கு விலைமதிப்புமிக்க பரிசு விழுந்துள்ளது என வரும் தகவலை நம்பி அதை பெற அவர்களால்
சொல்லப்படும் எந்த கட்டணத்தையும்
செலுத்தாதீர்கள்.

22) DEPOSIT இருந்தால் லோன் வழங்கப்படும் என வரும் விளம்பரத்தை நம்பாதீர்கள். லோனுக்காக செலுத்தும் சேவை கட்டணங்கள் லோனுடன் திருப்பி செலுத்தப்படும் என நம்ப வைத்து பணம் பறிக்கப்படுகிறது. ஏமாறவேண்டாம்.

23) அறிமுகம் இல்லாதவர்களிடம் WhatsApp CALL-ல் பேச வேண்டாம். உங்கள் செல்போனில் உள்ள FRONT CAMERAவினால் எதிர் தரப்பில் உள்ளவர்களால், உங்களின் நடவடிக்கைகள் பதிவு
செய்யப்பட்டு, அந்த பதிவுகளை
உறவினர்களுக்கோ/ SOCIAL MEDIAவிலோ போட்டுவிடுவோம் என உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது.

24) ONLINE-ல் வேலை தரப்படும் என ஆசையை துண்டும் விளம்பரங்கள் மூலம் உங்களை நம்ப வைத்து, உங்களிடம் சேவை கட்டணம் என்ற பெயரில் பணம் பறிக்க வாய்ப்புள்ளது. பணம் செலுத்தும் முன், அந்த நிறுவனத்தை பற்றியும், அவர்களால் வேலை பெற்றவர்கள் விபரங்களை கேட்டு பெற்று வேலை பெற்றவர்கள் இல்லத்துக்கே சென்று உறுதி செய்யுங்கள்.

25) PASSWORD விபரங்களை எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும் ஒருபோதும்
கொடுக்கவேண்டாம். அடிக்கடி Password ஐ Change பண்ணவும்.
பல வங்கி கணக்கு வைத்துள்ளவர் எனில் அனைத்துக்கும் ஒரே Password கொடுக்காதீர். தங்களது ஒரு வங்கி கணக்கு பாதிக்கப்படடால் மற்ற எல்லா கணக்கும் பாதிக்கப்படும்.

26) SOCIAL MEDIA வில் தனிப்பட்ட தகவல்கள் (முகவரி, தொலைபேசி எண். படித்த பள்ளி பெயர், நிரந்திர மற்றும் தற்காலிக இருப்பிடம்) போன்றவற்றை வெளிப்படையாக தெரியாமல் PROFILE LOCK செய்யவும்.

27) பெற்றோர் மேற்பார்வை இல்லாமல், அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆன்லைனில் பழகிய யாருடனும் நேரில் சந்திக்க ஒப்புக்கொள்ள கூடாது.

28) அச்சுறுத்தலான E-mail, Message, Post போன்ற தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

29) பயமுறுத்தும் அல்லது புண்படுத்தும் வகையிலான
ONLINE / SOCIAL MEDIA உரையாடல்களை பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் உடனே தெரிவிக்க வேண்டும். உதவிக்கு அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.

30) SHARE MARKET ல் நஷ்டம் இல்லாமல் செய்துதரப்படும் என தொலைபேசியில் / SMS ல்/ LINK
மூலம் அனுகினால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் பணம் குறிவைக்கப்படுகிறது. ஜாக்கிரதை.

31) Scratch card offer To receive Rs 4900/- enter pin என அனுப்பி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கபடும்.

32) கடைகளில் ஒட்டப்பட்டுள்ள
QR - CODEகளை கடை
உரிமையாளர்களுக்கு தெரியாமல் குற்றவாளிகளால் மாற்றி வைக்கப்படுவதால், கடை உரிமையாளர்களும், பணம் செலுத்துபவர்களும் பாதிப்பு ஏற்படவாய்ப்புள்ளது. எனவே
QR - CODE களை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.

33) பொது இடங்களில் தனி DEBIT / CREDIT CARD பயன்படுத்தவும். அவைகளில் தேவைக்கு ஏற்ப பணம் இருப்பு வைத்தால் பெரும் சேதம் ஏற்பாடமல் பாதுகாக்கலாம்.
பரிவர்த்தனை நடைபெற்றதை.

34) தவறான அறிந்தவுடன் உடனடியாக NATIONAL HELPLINE TOLL FREE NO /155260 எண்ணுக்கு தொடர்பு
கொண்டு தகவல் தெரிவித்தால் சைபர் குற்றவாளிகள் கைகளுக்கு செல்லாமல், பணம் பரிவர்த்தனையை தடுத்து நிறுத்த இயலும்.

35) பெரும் சேமிப்பு உள்ள வங்கி கணக்கிற்கு CELL NO/ DEBIT/ CREDIT CARD/ NET இணைக்காமல் இருப்பது சிறந்தது. BANKING

36) தினசரி பண பரிமாற்றத்துக்கு தனி வங்கி கணக்கு குறைந்த இருப்பில் வைத்து பத்திரமாக
கையாள வேண்டும். தவறு நடைபெற்றாலும், பெரும் நஷ்டம் ஏற்டாமல் தவிர்க்க உதவும்...

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when T L C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category