27/07/2017
JUSTDIAL -இல் ஏன் விளம்பரம் கொடுக்க கூடாது..?
இந்நிறுவனம் திறமையாக பொய் பேசக்கூடிய பல நபர்களை வேலைக்கு அமர்த்தி, சம்பாதித்து கொண்டிருக்கிறது...
இவர்கள் சொல்லும் முதல் பொய், GOOGLE ஐ விட இவர்களிடம் தான் அதிகம் பேர் தேடுகிறார்கள் என்று... ( சத்தியமாக நம்பும்படி இல்லை, ஆனாலும் தைரியமாக இப்படி பொய் சொல்லுவார்கள்...)
இரண்டாவதாக, உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் உங்கள் போன் எண் அவர்களுக்கு கிடைத்து விட்டால் தொடர்ந்து உங்களுக்கு போன் செய்து கொண்டே இருப்பார்கள்... ( DO NOT DISTURB - உங்கள் போனில் ஆக்டிவேட் செய்து இருந்தாலும், உங்களை சும்மா விடமாட்டார்கள்.... ) நீங்கள் ஏதாவது பேக்கஜ் -இல் இணையும் வரை, உங்களுக்கு தொடர்ந்து அவர்களிடம் இருந்து வெவேறு எண்களில் இருந்து வெவ்வேறு நபர்கள் கால் செய்து கொண்டே இருப்பார்கள்... (ஒரு சின்ன CLUE - பொதுவாக அவர்கள் நம்பர்கள் எல்லாம் 00 என்றே முடியும். ) சரி தொல்லை தாங்காமல் , ஒரு கொடுத்து சின்ன பேக்கஜ் -இல் இணைய முடிவெடுப்பீர்கள்...
நீங்கள் காம்போ பேக்கஜ் இல் இணைந்தால், சரியான முறையில் LEAD கிடைக்காது , ஏன் என்று கேட்டால், உங்களை பிளாட்டினம், கோல்ட் போன்று பெரிய பேக்கஜ் - இல் இணைய சொல்லி வற்புறுத்துவார்கள். நீங்கள் பெரிய பேக்கஜ் இணைய முடிவு செய்து விட்டீர்கள் என்றால், தவறாமல் தொடர்ந்து படிக்கவும்...
லட்ச கணக்கில் பணம் செலுத்தி இவர்களிடம் பிளாட்டினம், கோல்ட், என்று மிக உயர்ந்த பேக்கஜ் - இல் இணைந்தவர்கள், ஏன் அடுத்த வருடம் தொடர்வதில்லை என்று யோசியுங்கள்... பிளாட்டினம், கோல்ட் பேக்கஜ்-இல் நன்றாக ஒருவர் சம்பாதித்திருந்தால் ஏன் அடுத்த வருடம் அதே பேக்கஜ் -ஐ தொடர்வதில்லை....? ( நீங்கள் இப்படி கேள்வி கேட்டால், யாரோ இரு நிறுவனத்தை கூறி அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள் என்று மழுப்புவார்கள். அடுத்து உங்கள் மனதில் எழவேண்டிய கேள்வி - ஏன் மற்ற நிறுவங்கள் தொடரவில்லை என்பது தான்? )
கடைசியாக: justdial நிறுவனம் தனது தவறான அணுகுமுறையால் தற்போது மிக மோசமான நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது... கடந்த 2013 ஜூலை மாதம் 645 ரூபாய் விற்கப்பட்ட இதன் பங்கு (ஷேர் ) , 2017 ஜூலை மாதத்தில் 369 ரூபாய் அளவுக்கு இதன் ஷேர் மதிப்பு குறைந்துள்ளது... சுமார் நான்கே வருடத்தில் 50% மதிப்பு குறைந்துள்ளது... மேலும் விவரமறிய, கூகுள் சென்று - JUSTDIAL SHARE PRICE என்று தேடவும்...
( சென்னையில் இருந்து பாதிக்கப்பட்ட உங்களில் ஒருவன். )
Just Dial