Law in 1 Minute

Law in 1 Minute Female

13/12/2025

ஏற்ப்புடமை

தேசவழமையானது யாழ்ப்பாண மாகாண மலபார் நிரந்தரவாசிகளுக்கு ஏற்படையதான சட்டம் என கூறமுடியும். யாழ்ப்பாண மாகாணம் என்பது தற்போதுள்ள வடமாகணம் ஆகும்.

தேசவழமையானது இலங்கைக்கு வெளியே செல்லுபடியாகுமா? என்ற வினாவிற்கு "ஆம்" என கூறலாம்.

உதாரணமாக, இலங்கையில் திருமணமானது கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற தேவைப்பாடு கிடையாது. எனவே வழக்காற்று திருமணங்களை இலங்கைக்கு வெளியே எண்பிக்க தேவைப்படுமிடத்து, தேசவழமையினால் ஆளப்படும் ஆட்களுக்கு அவ்வாறு செய்யமுடியும். ஏனேனில் தேசழமையானது ஆள்சார் சட்டம். இடம்சார் சட்டம் இரு பண்புகளைக் கொண்டது. ஆள்சார் சட்டம் என்பது அவ்வாட்களைப் பின்தொடர்ந்து செல்லக்கூடியதாகும் தேசவழமை ஒழுங்கு விதி 6 யாழ்ப்பாண மாகண மலபார் நிரந்தரவாசிகளின் வழக்காறுகள் முழுமையான வழுக்கொண்டனவாக கருதப்பட வேண்டும் எனவும்,
விதி 7 எல்லா பிணக்குகளும் இவ் கோவைக்கிணங்கவே தீர்மாணிக்க பட வேண்டும் என ஏற்ப்பாடு செய்கின்றது.

யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளை சட்டம் 1947 ஆம் ஆண்டின் 57ஆம் இலக்கக் கட்டளைச் சட்டத்தினால் திருத்தப்பட்டுள்ளது.
இக் சட்டத்தின் 3 டாம் பிரிவானது திருமணத்தின் மூலமாக பெண்களுக்கு தேசவழமையானது ஏற்புடமையவதையும் ஏற்புடமையாகாததையும் ஏற்பாடு. செய்கின்றது. இதனடிப்படையில் தேசவழமையால் ஆளப்படும் பெண் ஒருவர் தேசவழமையால் ஆளப்படாத ஆண் ஒருவரை திருமணம் செய்வாராயின் திருமணம் வலிதான காலப்பகுதியில் அப் பெண் தேசவழமையினால் ஆளப்படமாட்டார்.மாறாக தேசவழமையால் ஆளப்படும் ஆண் ஒருவர் தேசவழமையால் ஆளப்படாத பெண் ஒருவரை திருமணம் செய்வாராயின் திருமணம் வலிதான காலப்பகுதியில் அப் பெண் தேசவழமையினால் ஆளப்படுவார்.

இடம்சார் சட்டம் என்பது எவ்விடயபரப்பில் இச்சட்டம் ஏற்புடையதாகும் என்பதில் உள்ளது இது தேசவழமையில் அமைந்துள்ள சகல காணிகளுக்கும் ஏற்ப்புடையதாகும். அதாவது யார் காணியின் உரிமையாளர் என்பது பெருத்தமற்றதாகும் உதாரணமாக கண்டிய சிங்களவர் ஒருவர் வடமாகணத்தில் காணியினை வாங்குமிடத்து அக் காணி தொடர்பில் தேசவழமை ஏற்படமையாகும் வழியுரிமை தொடர்பில் கண்டிய சட்டமே ஏற்ப்படையதாகும்.

⚠️ முக்கிய குறிப்பு: இந்தப் பதிவு சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. இது உங்களின் தனிப்பட்ட சட்ட ஆலோசனையாக அமையாது.

#சட்டவிழிப்புணர்வு
#ஏற்ப்புடமை

23/11/2025

📜 தேசவழமைச் சட்டம்

அறிமுகம்

இலங்கையில் பல்வேறு அந்நியர் ஆட்சிகள் நடைபெற்றாலும், எமது மக்களால் பின்பற்றப்பட்ட வழக்காறுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் "தேசவழமைச் சட்டம்" திகழ்கின்றது. இது விசேடமாக யாழ்ப்பாணத் தமிழர்களின் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டது.

1707 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், ஆளுநர் சைமன் என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், தேசவன் 'கிளாஸ் ஐசக்ஸ்' (Claasz Isaacsz) என்பவரால் யாழ்ப்பாணத் தமிழர்களின் சட்டங்கள் மற்றும் வழக்காறுகள் ஆராயப்பட்டன. பின்னர் 12 முதலியார்களின் உறுதிப்படுத்தலுடன் இது சட்டமாக்கப்பட்டது.

இன்று நாம் காணும் தேசவழமைச் சட்டமானது பின்வரும் முக்கிய கட்டளைச் சட்டங்களை உள்ளடக்கியது:

​1806 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க தேசவழமை ஒழுங்குவிதி.

​1911 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க யாழ்ப்பாண திருமண உரிமைகள் மற்றும் வழியுரிமைகள் கட்டளைச் சட்டம்: இது திருமணம் மற்றும் சொத்து வாரிசுரிமை பற்றியது.

​1947 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க தேசவழமை முன்வாங்குரிமை கட்டளைச் சட்டம்: இது கூட்டுச் சொத்துக்கள் விற்கப்படும்போது வழங்கப்பட வேண்டிய முன்னுரிமை (Pre-emption) பற்றியது.

தேசவழமைச் சட்டமானது யாழ்ப்பாணத் தமிழர்களின் கலாச்சாரத்தோடும், நிலத்தோடும் பின்னிப்பிணைந்த ஒரு முக்கிய சட்டமாகும்.

​⚠️ முக்கிய குறிப்பு: இந்தப் பதிவு சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. இது உங்களின் தனிப்பட்ட சட்ட ஆலோசனையாக அமையாது.

​ #சட்டவிழிப்புணர்வு

Address

Cheddikulam Road
Vavuniya
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law in 1 Minute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share