AMC Solutions

AMC Solutions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AMC Solutions, Legal, Franch City, Maruthamunai.

Secretarial & Allied Services

�Sworn Translations Service (English, Tamil and Sinhala)
�Notary Public Service
�Land Survey Service
�Valuation Report
�Real Estate

28/10/2025

LDO காணி என்றால் என்ன? – சட்டம் சொல்வது உங்களை தெளிவு மிகுந்த ஆச்சரியப்படுத்தும்!



LDO காணி (Land Development Ordinance Land) என்பது அரசாங்கத்தின் கீழ் வரும் ஒரு சிறப்பு நிலம் ஆகும். இதனைப் பற்றி பலருக்கும் குழப்பம் — “இது எனது சொந்த நிலமா? விற்கலாமா? பரிமாறலாமா?” என்று!

அப்படியெனில் தெளிவாக பார்ப்போம்
LDO – Land Development Ordinance (No. 19 of 1935)

இச்சட்டத்தின் கீழ் அரசு நிலங்கள் மக்களுக்கு permit அல்லது grant முறையில் வழங்கப்படுகின்றன.

அதாவது, இந்நிலம் முழுமையான தனிநபர் சொத்து அல்ல, அரசாங்கம் அதற்கு மேலான அதிகாரத்தை வைத்துள்ளது...!

சட்ட ஏற்பாடுகள்:

Section 19 to 22 – Land Development Ordinance, 1935 இவை கூறுகின்றன:

1️⃣ Permit/Grant மூலம் நிலம் வழங்கப்பட்டால், அந்த Permit/Grant holder வாழ்நாள் பயன்பாட்டு உரிமை மட்டுமே பெறுவார்.

2️⃣ அவர் இறந்த பின் நிலம் அவரின் குடும்பத்திலிருந்து “Nominated successor” என நியமிக்கப்பட்டவருக்கு மட்டுமே செல்லும்.

3️⃣ அந்த நிலத்தை விற்பது, அடைவு வைப்பது, வாடகைக்கு விடுவது போன்றவை அரச அனுமதி இன்றி சட்டவிரோதம்.

உதாரணம்:
ஒரு குடும்பம் அரசிடம் இருந்து “LDO permit” மூலம் 2 ஏக்கர் நிலம் பெற்றது எனக் கொள்வோம்.
அவர் அதை விற்றுவிட்டால் —
1. அந்த பரிமாற்றம் சட்டப்படி செல்லாது,
2. அரசாங்கம் அந்த நிலத்தை திரும்பப் பெறும் அதிகாரம் உடையது!

நீதிமன்ற தீர்ப்புகள்:

1️⃣ Somawathie v. Minister of Lands (1993) 1 Sri LR 151

சட்டப்பிரிவுகள்:
Sections 19, 20 & 48 – Land Development Ordinance (No. 19 of 1935)

விவரம்:
இந்த வழக்கில், Somawathie என்ற பெண், தனது கணவருக்கு வழங்கப்பட்ட LDO permit நிலத்தில் உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார்.
அந்த கணவர் permit holder ஆக இருந்தார், ஆனால் அவர் nominee நியமிக்காமல் இறந்துவிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பு:
👉 Permit holder இறந்த பின், nominee இல்லை என்றால், நிலம் அவரின் வாரிசுகளுக்குப் போகாது.
👉 அது மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
👉 நீதிமன்றம் தெளிவாக கூறியது:

“LDO permit என்பது ஒரு சொத்து உரிமை அல்ல, அரசு வழங்கும் ஒரு பயன்பாட்டு அனுமதி மட்டுமே.”

சுருக்கமாக:
LDO காணியில் வாரிசு உரிமை (succession) கூட சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

2️⃣ Punchi Banda v. The Land Commissioner (1993) 2 Sri LR 174

சட்டப்பிரிவுகள்:
Sections 20 & 48 – Land Development Ordinance

விவரம்:
Permit holder ஒருவர் அரச அனுமதி இல்லாமல் தனது நிலத்தை விற்றுவிட்டார். அந்த வாங்கியவர் (purchaser) நில உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு:
👉 “அரச அனுமதி இல்லாமல் permit நிலம் விற்பது சட்டவிரோதம்.”
👉 அத்தகைய விற்பனை null and void ஆகும்.
👉 அரசாங்கம் எந்த நேரத்திலும் அந்த நிலத்தை திரும்பப் பெறும் அதிகாரம் உடையது.

சுருக்கமாக:
Permit நிலம் விற்பது சட்டப்படி செல்லாது.

3️⃣ Dissanayake v. Seneviratne (1998) 1 Sri LR 84

சட்டப்பிரிவுகள்:
Section 72 – Land Development Ordinance

விவரம்:
இரு சகோதரர்கள் LDO காணியில் உரிமை விவகாரத்தில் மோதினர். ஒருவர் permit holder; மற்றவர் தன்னைப் பங்குதாரராகக் கூறினார்.

நீதிமன்றத் தீர்ப்பு:
👉 LDO நிலம் permit holder-க்கு மட்டுமே lawful possession தருகிறது.
👉 மற்றவர் அவ்வளவு மட்டுமே licensee அல்லது occupant ஆக கருதப்படுவார்.
👉 அதனால் அவர் “co-owner” எனக் கூற முடியாது.

சுருக்கமாக:
LDO காணியில் கூட்டுரிமை (co-ownership) இல்லை — permit holder மட்டுமே சட்டரீதியான பயனாளர்.

4️⃣ Nandawathie v. M.A. Wijesuriya (2000) 3 Sri LR 49

சட்டப்பிரிவுகள்:
Sections 19, 20, 22 & 48 – Land Development Ordinance

விவரம்:
ஒரு permit holder தனது நிலத்தை வாடகைக்கு விட்டிருந்தார். பின்னர் அரசு அதிகாரிகள் அதை சட்டவிரோதம் என கூறினர்.

நீதிமன்றத் தீர்ப்பு:
👉 “Permit holder cannot lease or rent the land without prior written approval from the Land Commissioner.”
👉 LDO சட்டத்தின் நோக்கம், நிலம் “வளர்ச்சி”க்காக வழங்கப்படுவது, வணிகப் பரிமாற்றம் செய்வதற்காக அல்ல.

சுருக்கமாக:
LDO நிலம் வாடகைக்கு விடப்பட கூடாது; அனுமதி அவசியம்.

5️⃣ Sirisena v. Land Commissioner (2005) – Court of Appeal Decision

சட்டப்பிரிவுகள்:
Section 48(1)(a) & (b) – Land Development Ordinance

விவரம்:
Permit holder ஒருவர் சட்ட விதிகளை மீறியதால், அரசு அவரது permit-ஐ ரத்து செய்தது. அவர் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றத் தீர்ப்பு:
👉 அரசு தகுந்த காரணத்திற்காக (e.g. misuse, illegal sale, etc.) permit-ஐ ரத்து செய்யும் அதிகாரம் உடையது.
👉 ஆனால், ரத்து செய்யும் முன் நியாயமான விசாரணை (natural justice) வழங்கப்பட வேண்டும்.

சுருக்கமாக:
அரசுக்கு permit ரத்து செய்யும் அதிகாரம் உண்டு, ஆனால் அதை சட்டப்படி செய்ய வேண்டும்.

சட்டத்தின் சாரம் (Essence of the Law):
1. LDO காணி என்பது அரசு சொத்து.
2. Permit holder – பயன்பாட்டு உரிமையாளர் (not absolute owner).
3. Nominee system – குடும்பத்திற்குள் பரிமாற்றம் செய்ய அனுமதி.
4. Sale, mortgage, lease – அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.
5. Government – ultimate control வைத்திருக்கும்.

எச்சரிக்கை :
பலர் இந்நிலத்தை தனிநபர் சொத்து போல விற்பதால் பின்னர் வழக்குகள், நிலப் பறிமுதல், குடும்பத் தகராறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
எனவே, LDO காணி தொடர்பான ஒப்பந்தங்கள் செய்யும் முன் ஒரு சட்டத்தரணியிடம் ஆலோசனை பெறுவது அவசியம்!

சிந்தியுங்கள் :
உங்கள் நிலம் உண்மையில் “உங்கள் சொத்து” தானா, இல்லையா அரசின் “அனுமதி சொத்து” தானா?

பகிருங்கள் – மற்றவரும் விழிப்புணர்வு பெறட்டும்!

நிலம் என்பது வாழ்வின் அடிப்படை, ஆனால் சட்டம் அதை எப்படி பார்க்கிறது என்பதையும் அனைவரும் அறிய வேண்டும்.

உங்கள் கருத்தை கீழே சொல்லுங்கள்.

நான் சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்

(இது பூரணமான சட்ட விளக்கமாக கருதப்படல் வேண்டாம். இதனுடன் விதிவிலக்குகள், விசேட ஏற்பாடுகளும் அடங்கும்)



Disclaimer:
இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. இதை சட்டரீதியான ஒரு ஆவணமாக பயன்படுத்தலாகாது. மேலும் உங்கள் தனிப்பட்ட வழக்குகள் தொடர்பில் உங்கள் சட்டத்தரணியை ஆலோசனை பெறுங்கள்.

20/10/2025

காணி வழக்கில் பிடியாணை வருமா? உண்மையை மக்கள் மறைக்கிறார்கள் – நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

காணி வழக்குகளில் நேரடியாக
1. அழைப்புக் கட்டளை,
2. அறிவித்தல்,
3. கட்டளைச் சேவகர் மூலமான அழைப்புக் கட்டளை,
4. கிராம சேவையாளர் மூலமான அழைப்புக் கட்டளை,
5. காணியில் ஒட்டி சேவித்தல் போன்ற முறைகளில் தான் பொதுவாக எதிராளி மற்றும் வழக்காளிக்கு அல்லது ஏதேனும் ஒரு தரப்பினருக்கு தகவல் அறிவிக்கப்படும்.

அதையெல்லாம் கடந்து சிவில் வழக்கா? பிடியாணை வராதுனு யார் சொன்னது? பலர் சொல்வார்கள் – "Civil caseல Arrest கிடையாது" என்று.

அது தவறில்லை… ஆனால் முழுமையான உண்மை இல்ல!

நீதிமன்ற அவமதிப்பு நடந்தால்நேரடியாக உங்களுக்கு பிடியாணை வரும்!

எப்போது பிடியாணை வரும்? – கவனமா வாசிங்க!

1. Court Order மீறினா = Warrant

2. Injunction வந்தும் நிலம் விற்க முயற்சித்தால்

3. Court order- இனை மதிக்காமல் எல்லைகளை (boundary) மாற்றினால்

4. Illegal construction தொடர்ந்தால்
Law: Judicature Act – Sec 53 (Contempt of Court)

5. Summons-மூலம் அழைத்தும் வராமல் தப்பித்து தலைமறைவாகி இருந்தால் = Warrant - Civil Procedure Code – Sec 55

6. சத்தியப்பிரமாணத்தில் பொய் சொன்னா = Arrest
Penal Code – Sec 188 (Perjury)

7. Court-ஐ அவமதிச்சா = Arrest + Fine
Power of Court – Contempt Jurisdiction

MOST IMPORTANT:
காணி வழக்குகளில் நேரடியாக பிடியாணை வராது. நீதிமன்ற உத்தரவை மீறினால் மட்டும் உங்க தலைமேல் பிடியாணை விழும்!

Case Example:
நீங்க Ejectment Case போட்டிருக்கிறீர்கள் Respondent-க்கு Court Injunction இருக்கு.
ஆனால் அவர் இரகசியமா காணியை வேற யாருக்கோ விற்க முயற்சித்தால்?

Immediate-ஆ Court-ல Contempt Petition போடுக்கலாம் →

Judge அந்த Respondent-க்கு பிடியாணை போடலாம்.

சட்டத்தை விளையாட்டா நினைக்காதீங்க. நீதிமன்ற உத்தரவை மதிச்சா உங்கள் மரியாதை காக்கப்படும்.
மீறினா – Warrant from Court is 100% Legal!

இதைப் படிக்கணும் அத்தனை பேருக்கும் ஒரு கடமை! Share செய்யுங்க!

உங்க Doubts Comment-ல கேளுங்க – நான் Reply பண்ணுவேன்!

நான் சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்

(இந்த பதிவு கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே பதிவிடப்படுகின்றது மாறாக வேறு எந்த நோக்கமும் அல்ல. மேலும் இந்த பதிவில் உள்ள விடயங்கள் மூலச்சட்டத்துடன் முரண்பாடுகள், தவறுகள், பிழைகள் காணப்பட்டால் மூல சட்டங்களும் அதன் விளக்கங்களுமே மேலோங்கும்.)

10/11/2024

Secretarial & Allied Services

#அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்புச் சேவை.
(Sinhala, Tamil & English)
பிறப்பு/இறப்பு/திருமணம் சான்றிதழ்கள்
பிரஜா உரிமை பத்திரம் /காணி உறுதி ஏனைய சட்ட ஆவணங்கள்

# Sworn Translations service (Birth/Death,Marriage &Citizenship Certificates,Deed and Other Legal Documents.

பதியப்பட்ட நில அளவியல் மற்றும் மட்ட நோக்குனர் சேவை.

# public service பிரசித்தி பெற்ற நொத்தாரிசு சேவை. (காணி உறுதி மற்றும் அதனோடு தொடர்பான ஆவணங்களின் உண்மைத்தன்மையை பரிசீலித்தல்.)

# காணியோடு தொடர்புபட்ட பிரச்சினைகளுக்கான சட்ட வழிகாட்டல்.

# Valuation Reports

# சகல நாடுகளுக்குமான விமான பயணச்சீட்டு பதிவுகள்.

Consultancy service. வெளிநாட்டு இடம்பெயர் ஆலோசனை.

# திருமணமாகாத சான்றிதழ்.

# பெயர் மாற்றுச் சான்றிதழ்.

# Online appointment

# Visa Documentations

# Law Consultancy Service

# வங்கிகளுடனான வீட்டுக் கடன், வியாபாரக் கடன், மற்றும்👍வாகனங்களுக்கான leasing வசதிகளை செய்து கொடுத்தல்.

# Online Police Clearance Certificate.

எங்களது இச் சேவையானது சேவை பெறுனரின் நலன் கருதி உங்களது இடத்திற்கே வரவழைக்கப் படுகின்றது.

Hot line +94 77 712 2005

Secratarial & Allied Services

13/05/2024
29/04/2024

Secretarial & Allied Services

#அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்புச் சேவை.
(Sinhala, Tamil & English)
பிறப்பு/இறப்பு/திருமணம் சான்றிதழ்கள்
பிரஜா உரிமை பத்திரம் /காணி உறுதி ஏனைய சட்ட ஆவணங்கள்

# Sworn Translations service (Birth/Death,Marriage &Citizenship Certificates,Deed and Other Legal Documents.

பதியப்பட்ட நில அளவியல் மற்றும் மட்ட நோக்குனர் சேவை.

பிரசித்தி பெற்ற நொத்தாரிசு சேவை. (காணி உறுதி மற்றும் அதனோடு தொடர்பான ஆவணங்களின் உண்மைத்தன்மையை பரிசீலித்தல்.)

வெளிநாட்டு இடம்பெயர் ஆலோசனை.

# திருமணமாகாத சான்றிதழ்.

# பெயர் மாற்றுச் சான்றிதழ்.

அனைத்து வகையான சட்ட ஆலோசனைச் சேவை.

#ஒன்லைன் பொலிஸ் Clearance சான்றிதழ்.

எங்களது இச் சேவையானது சேவை பெறுனரின் நலன் கருதி உங்களது இடத்திற்கே வரவழைக்கப் படுகின்றது.

Hot line -0672222109
Coordination officer 0777122005
Secratarial & Allied Services

Secretarial & Allied Services #அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்புச் சேவை. (Sinhala, Tamil & English)பிறப்பு/இறப்பு/திரு...
15/11/2023

Secretarial & Allied Services

#அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்புச் சேவை.
(Sinhala, Tamil & English)
பிறப்பு/இறப்பு/திருமணம் சான்றிதழ்கள்
பிரஜா உரிமை பத்திரம் /காணி உறுதி ஏனைய சட்ட ஆவணங்கள்

# Sworn Translations service (Birth/Death,Marriage &Citizenship Certificates,Deed and Other Legal Documents.

# சகல நாடுகளுக்குமான விமான பயணச்சீட்டு பதிவுகள்.

பதியப்பட்ட நில அளவியல் மற்றும் மட்ட நோக்குனர் சேவை.

# public service பிரசித்தி பெற்ற நொத்தாரிசு சேவை. (காணி உறுதி மற்றும் அதனோடு தொடர்பான ஆவணங்களின் உண்மைத்தன்மையை பரிசீலித்தல்.)

Consultancy service. வெளிநாட்டு இடம்பெயர் ஆலோசனை.

# திருமணமாகாத சான்றிதழ்.

# பெயர் மாற்றுச் சான்றிதழ்.

appointment
Visa Documentations
Consultancy Service அனைத்து வகையான சட்ட ஆலோசனைச் சேவை.

#ஒன்லைன் பொலிஸ் Clearance சான்றிதழ்.

எங்களது இச் சேவையானது சேவை பெறுனரின் நலன் கருதி உங்களது இடத்திற்கே வரவழைக்கப் படுகின்றது.

Hot line +94 77 712 2005

Secratarial & Allied Services

Secretarial & Allied Services #அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்புச் சேவை. (Sinhala, Tamil & English)பிறப்பு/இறப்பு/திரு...
11/11/2023

Secretarial & Allied Services

#அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்புச் சேவை.
(Sinhala, Tamil & English)
பிறப்பு/இறப்பு/திருமணம் சான்றிதழ்கள்
பிரஜா உரிமை பத்திரம் /காணி உறுதி ஏனைய சட்ட ஆவணங்கள்

# Sworn Translations service (Birth/Death,Marriage &Citizenship Certificates,Deed and Other Legal Documents.

#அனைத்து நாடுகளுக்குமான விமான சேவை டிக்கட் பதிவுகள்

பதியப்பட்ட நில அளவியல் மற்றும் மட்ட நோக்குனர் சேவை.

பிரசித்தி பெற்ற நொத்தாரிசு சேவை. (காணி உறுதி மற்றும் அதனோடு தொடர்பான ஆவணங்களின் உண்மைத்தன்மையை பரிசீலித்தல்.)

வெளிநாட்டு இடம்பெயர் ஆலோசனை.

# திருமணமாகாத சான்றிதழ்.

# பெயர் மாற்றுச் சான்றிதழ்.

அனைத்து வகையான சட்ட ஆலோசனைச் சேவை.

#ஒன்லைன் பொலிஸ் Clearance சான்றிதழ்.

எங்களது இச் சேவையானது சேவை பெறுனரின் நலன் கருதி உங்களது இடத்திற்கே வரவழைக்கப் படுகின்றது.

Hot line -0672222109
Coordination officer 072 444 0031
Maruthamunai.
Secratarial & Allied Services

05/10/2023

உங்களிடம் உள்ள காணிக்கான உறுதி ( Deed ) ஓர் இறுதிச்சான்று பத்திரம் ஆகுமா ?


பதில், நிச்சயமாக இல்லை. ஆனால் பொது மக்கள் பலர் தங்களிடம் உள்ள காணி உறுதி ஒன்றே தம் காணியின் உரிமையாளர் என்பதை எண்பிக்கும் என தவறாக விளங்கிக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் நீதிமன்றின் முன்னிலையில் அக்காணியின் மீது அக்கறை உடையோர் யாருமே உங்கள் உறுதியின் வலிதார்ந்த தன்மையை கேள்விக்குட்படுத்தலாம். உங்களிடம் உள்ள உறுதி ஆனது நீதிமன்றின் முன்பு ஒரு முகத்தோற்ற அளவிலான ( Prima Facie )ஆவணமாகவே கருதப்படும். நீங்கள் முதலில் காணிப்பதிவக இடாப்பில் உங்கள் உறுதியின் பதிவை மேற்கொள்வதால் உங்களுக்கு பின்னர் பதியப்படும் நபர்களை விட ஓர் முன்னுரிமையை (Priority) பெறுகிறீர்கள். ஆனால் இன்னும் இந்த “முன்னுரிமை” என்ற பதம் எமது நீதிமன்றங்களினால் தெளிவாக என்ன பயன்பாடு என்று வரையறுக்காமை காணிச்சட்டத்தில் ஓர் இடைவெளியை உருவாக்கியுள்ளது

மேற்போர்ந்த பிணக்குகட்கு தீர்வேதும் இல்லையா ?

காணிப்பிணக்குகளை கையாளவும் , எதிர்காலத்தில் காணிகளின் உரிமைத்தன்மையை நிச்சயப்படுத்தி கொள்ளவும், மோசடிகளை தவிர்க்கவும், கணணி இற்றைபடுத்தற் செயற்பாடுகள் மூலம் வினைத்திறனை பேணவும் 1998ம் ஆண்டு உரித்து பதிவுச்சட்டத்தை ( Registration of Title Act ) பிம் சவிய நிகழ்ச்சி திட்டம் மூலம் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

உரித்துப்பதிவு ( Registration of Title ) என்றால் என்ன ?

இது முதன் முதலில் அவுஸ்ரேலியாவில் அமுலாக்கப்பட்ட ஓர் காணி அளவீட்டு முறையாகும். இதன் போது அரசாங்கம் நாட்டின் சகல காணிகளையும் அளவை செய்து அதன் மீது உரித்து உடையவர்கள் என தகுதி காண்போருக்கு காணி உரித்து சான்றிதழ் வழங்கும். இச்சான்றிதழானது காணி உரிமை தொடர்பில் இறுதிச்சான்றாவணமாக அனைத்து நிர்வாக, நீதி விடயங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.


பிம் சவிய ( Bim Saviya ) என்றால் என்ன ?

பிம் சவிய என்பது பின்வரும் நான்கு அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக உரித்து பதிவு முறைமையை அமுலாக்குவதற்கான ஓர் செயற்றிட்டமாகும்.

01.நில அளவையாளர் திணைக்களம்

02. பதிவாளர் திணைக்களம்

03. காணி ஆணையாளர் நாயக திணைக்களம்

04. காணி உரித்து நிர்ணய திணைக்களம்.


இதன் நடைமுறைகள் யாவை ?

முதலாவதாக பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு நில அளவையாளர் நிறுவனத்தால் அப்பிரதேசம் முழுமையாக அளவீடு செய்யப்படும். பின்னர் பொதுமக்கள் தங்கள் காணிகட்கு உரிமைகளை கோருமாறு வேண்டப்படுவர். அப்போது காணிக்கு உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தமது காணி என முன்மொழிவு ஒன்றினை வெளிப்படுத்துவர். குறிப்பிட்ட காணிக்கு வேறு எவராலும் உரிமைத்தடங்கற்கள் ஏற்படுத்தப்படாது விடத்து என இரு தரப்படுத்தப்பட்ட காணி உரித்து சான்றிதழ் வழங்கப்படும். அதே காணிக்கு வேற்றார் மூலம் உரிமைத்தடங்கல் ஏற்படத்தப்படின் அது மாவட்ட நீதிமன்றின் நியாயாதிக்கத்திற்குட்பட்டதாகும்.

காணி உரித்து சான்றிதழ் ( Land Title Certificate ) என்றால் என்ன ? அதன் நன்மைகள் என்ன ?

மேற்குறிப்பிட்ட செயன்முறைகளின் இறுதியில் காணியின் சொந்தக்காரருக்கு வழங்கப்படும் ஓர் சான்றிதழ். இது உங்களிடம் இருப்பின் உங்களின் காணி உரிமை தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது.



அதோடு தொடர்ச்சியான கொடுக்கல் வாங்கலிலும் ( விற்பனை / நன்னொடை) இங்கு உயர்வினைத்திறன் இங்கு பாதுகாக்கப்படுகின்றது.

காணியை உரிமை மாற்றம் செய்யும் போது குறித்த சான்றிதழ் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். பிறகு புதிய உரிமையாளர்கட்கு புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட உரித்து சான்றிதழ் வழங்கப்படும். இதே போல காணிகளை துண்டாடி கைமாற்றினும் உரிய காணி சான்றிதழ் கையளிக்கப்பட்டு துண்டங்கட்கான சான்றிதழ் வழங்கப்படும் என்பதால் ஆவண பதிவு முறைமையின் கீழ் உள்ள குறைபாடுகள் மற்றும், மோசடிகட்கு தீர்வாய் அமையும் எனலாம்.

Address

Franch City
Maruthamunai
32314

Telephone

+94777122005

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMC Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AMC Solutions:

Share

Category