Defence lawyers associate-Perambalur

Defence lawyers associate-Perambalur we contribute meaningfully to the discourse on legal developments and trends in the practices and se

10/06/2024
26/11/2023

Death Certificate Cannot Be Refused On Technical Ground That Death Occurred In Another District: Madras High Court
in below video

Death By Rash & Negligent Driving: Karnataka High Court Sends Youth To 6 Months Imprisonment, Expresses Concern At Incre...
17/11/2023

Death By Rash & Negligent Driving: Karnataka High Court Sends Youth To 6 Months Imprisonment, Expresses Concern At Increasing Accidents

The Karnataka High Court has confirmed a six months impriso

16/11/2023
Sub-registrar has no power to cancel registered document through ‘cancellation deed’: Karnataka High Court.Though a regi...
05/11/2023

Sub-registrar has no power to cancel registered document through ‘cancellation deed’: Karnataka High Court.

Though a registrar/sub-registrar has no power to desist from registering a document submitted along with necessary documents, but the registrar is not competent to cancel an already registered document"

A sub-registrar has no power under the Registration Act, 1908, to cancel a registered General Power of Attorney (GPA) by registering another deed in the name of ‘Cancellation of GPA’, the High Court of Karnataka has said.

03/11/2023

“To subject a woman to a life akin to a slave merely because of her marital status is an egregious injustice… She should never become a target, facing the threat of violence or deprivation, merely because her parents cannot satisfy the insatiable demands of her in-laws."

-Delhi HC.

The Court upheld sentence of a man convicted for demanding dowry from his wife which ultimately drove her to su***de and also held distressing pattern of dowry deaths was proof that women are still seen as financial burden and dowry deaths reflect the failure of our societal mindset.

Satpal Singh Vs. State. Dt.31.10.2023.

02/05/2023

IPC 354 D என்பது ஆண்கள் மட்டுமே பெண்களை இணையதளம் அல்லது நேரடியாக பின்தொடர்ந்தல்.ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவரை பின் தொடர கூடாது.இந்த பிரிவில் ஆண்கள் மட்டுமே பெண்களை தொடர்வது ஆகும்.இந்த பிரிவு Gender Neutral கிடையாது,பெண்களுக்கு எதிராக Stalking நடந்தால் மட்டுமே இந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும்.இந்த சட்டபிரிவின் ஆரம்பத்தில் "Any Man " என்று உள்ளதை கவனிக்கவும். மேலும் இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவு 8 ல் .. "He" என்ற வார்த்தை இருந்தால் அந்த இடத்தில் ஆண் ,பெண் இருவரையும் குறிக்கும்.இது சம்பந்தமாக பாம்பே உயர்நீதிமன்றம்

State of Maharashtra vs Rovena @ Aadnya Amit Bhosle

IPC 354 Criminal Force and Assault இந்த பிரிவு ஆண் ஒரு பெண்ணை உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டால் தான் இதில் வரும் என வாதிடப்பட்டது.ஆனால் உயர்நீதிமன்றம் Sec 8 of IPC யில் He என்ற வார்த்தையில் Male and Female இருபாலரும் அடங்கும் எனவும் ,இந்த வழக்கில் ஒரு பெண் மற்றொரு பெண்ணை உடல்ரீதியாக ஆடைகளை கலைத்து மற்றவர்கள் முன்பு அசிங்கப்படுத்தியது IPC 354 இன் கீழ் குற்றம் என தீர்ப்பை உறுதி செய்தது.
இந்த வழக்கில் IPC 354 ல் ஆண் ,பெண் இருவருமே குற்றவாளிகளாக வருவார்கள் என்று தீர்ப்பளித்தது.
ஆனால் 354 ,354A,B,C,D இதில் உள்ள பிரிவில் பெண்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நபர்களாக வருவார்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டில்லியில் நடந்த கோர செயலில் நிர்பயா என்ற பெண் பாதிக்கப்பட்டதால், அதன்பின்பு ஜஸ்டிஸ் வர்மா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி பரிந்துரை செய்யப்பட்டதால் கடந்த 2013 ஆம் ஆண்டு 354 A,B,C,D பிரிவுகள் சேர்க்கப்பட்டது.அந்த கமிட்டி பரிந்துரையில் ஜஸ்டிஸ் வர்மா அவர்கள் பெண்களுக்கு எதிராக குற்றத்தை தடுக்க கோரி தான் அவர் இந்த பிரிவுகளை பரிந்துரை செய்தார்.

இந்த சட்டப்பிரிவுகளை இயற்றுவதற்கு காரணம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக. இந்த பிரிவுகளில் பெண்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் /Victim களாக வருவார்கள்.

21/11/2022

சேகர் என்பவர் தனது மனையை சர்வே செய்து தரும்படி கேட்டு ராசிபுரம் நகர் தாசில்தாரிடம் மனு அளித்தார். அதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 100/- க்கு பணம் கட்டியிருந்தார். ஆனால் தாசில்தார் மனையை அளக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார். ஆனால் பயனில்லை. எனவே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மனையை சர்வே செய்து தர உத்தரவிட வேண்டும் மற்றும் இழப்பீடாக ரூ. 1 லட்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

வழக்கில் ஆஜரான தாசில்தார், மனையை அளக்க இரண்டு பேர் ஆட்சேபனை தெரிவித்தால் அளக்கவில்லை என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம்...

மனை சேகருக்கு பாத்தியமானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆவணங்கள் அனைத்தும் சேகர் பெயரிலேயே உள்ளது. ஆனால் தாசில்தார் இரண்டு பேர் நிலத்தை அளந்து கொடுக்க ஆட்சேபனை செய்வதாக கூறுகிறார். அந்த இரண்டு பேரின் ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சேபனை செய்பவர்களிடமிருந்து அபிடவிட் பெறவில்லை. ஆட்சேபனை செய்பவர்களை ஒரு சாட்சியாக விசாரிக்கவில்லை. ஆட்சேபனை செய்பவர்களுக்குரிய எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. ஆட்சேபனை செய்மவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தது யார் என்று தெரியவில்லை. பதிவு செய்தவரின் பெயரும் இல்லை. சொத்துக்கு சம்மந்தமே இல்லாத இருவர் ஆட்சேபனை செய்ததாக கூறி சர்வே பண்ணுவது மறுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஆட்சேபனை செய்ததால் இடத்தை அளக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், அப்படி அளக்க மறுக்கலாம் என்பதற்கு ஏதாவது சட்டம் அல்லது விதிகள் உள்ளதா? என்று தாசில்தாரால் கூறப்பட முடியவில்லை. ஆட்சேபனை தெரிவித்தால் நிலத்தை அளக்க தேவையில்லை என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதா? என்றால் அதற்கும் விளக்கமில்லை. எந்த சட்டமும், ஆணையும் இல்லாமல் ஆட்சேபனை செய்கிறார்கள் என்று கூறி நிலத்தை அளந்து கொடுக்காமல் இருப்பது சேவைக்குறைபாடு ஆகும். தாசில்தார் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்துள்ளார். இது சேகருக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தும் செயலாகும். அரசு அதிகாரிகள் சட்டப்படியே ஒரு செயலை செய்யவோ அல்லது மறுக்கவோ முடியும்.

தாசில்தார் சேகர் ஒரு நுகர்வோர் கிடையாது என்றும் வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடியாது என்றும் ஒரு வாதத்தை வைத்துள்ளார். ஆனால் அந்த வாதத்தை ஏற்க முடியாது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் " காஸியாபாத் வளர்ச்சி முகமை Vs பல்பீர்சிங்" என்ற வழக்கில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அனைத்து அரசுத்துறை அலுவலங்களில் நடக்கும் சேவைக்குறைபாடுகளுக்கும் பொருந்தும். அனைத்து அரசு அலுவலகங்களும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் வரும். பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளில் அலட்சியமாக இருந்தால், அந்த அதிகாரிகளை நுகர்வோர் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் " ஹரியானா நல வளர்ச்சி முகமை Vs சாந்தி தேவி" என்ற வழக்கில், ஒரு இந்திய குடிமகனுக்கு தீராத மன உளைச்சலையும், நிம்மதியின்மையையும் ஒரு அரசு அதிகாரி பொறுப்பற்ற நடவடிக்கைகளால் ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல்" Dr. R. ஜெகன் Vs Director motor vehicles maintenance department & others என்ற வழக்கிலும், Shiksha vihar sehkari avaas samithi Ltd Vs Chairman Ghaziabad Development Authority and Another என்ற வழக்கிலும் இதே கருத்தை உத்தரவாக தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கியுள்ளது.

மேற்கண்ட தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த வழக்கை பார்க்கும் போது, தாசில்தார் பணியில் அலட்சியமாக இருப்பதும், சேவைக்குறைபாடு செய்திருப்பதும் நன்றாக தெரிய வருகிறது.

ஆகவே 15 நாட்களுக்குள் சேகரின் நிலத்தை தாசில்தார் அளந்து கொடுக்க வேண்டும் மேலும் ரூ 10,000/- இழப்பீடாகவும், ரூ. 2000/- வழக்கு செலவுத் தொகையாகவும் வழங்க
வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்ட ஆலோசனைக்கு
திரு.அன்புமணி தங்கவேல் பி.இ,பி.எல்
வழக்கறிஞர்
பெரம்பலூர்
9047520058

22/09/2022

பாஞ்சாங்குளம் தீண்டாமை வழக்கு
பிரிவு 10 -ன் சிறப்பு விளக்கம்
வழக்கறிஞர் த.அன்பு
9047520058

Address

Veppur Main Road , , Near MLA Office, Kunnam
Perambalur
621708

Opening Hours

9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Defence lawyers associate-Perambalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Defence lawyers associate-Perambalur:

Share

Category