01/05/2026
தோழர்களுக்கு வணக்கம்,
இன்று ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற மாபெரும் மே தின பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
தொடக்கமாக, ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் மே தின உரையாற்றினர். பின்னர், அசோக் லேலண்ட் யுனைடெட் எம்ப்ளாயீஸ் யூனியன் (யூனிட்–1) மற்றும் ஒசூர் அசோக் லேலண்ட் எம்ப்ளாயீஸ் யூனியன் (யூனிட்–2) ஆகிய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மே தின உரையாற்றி, கொடி அசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தனர்.
ஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பேரணி தொடங்கி, அரசு மருத்துவமனை, ஏரி தெரு வழியாக அண்ணா சிலையை சென்றடைந்தது.
அண்ணா சிலையருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து, பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்:
புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும்!
ஒப்பந்தத் தொழிலாளர் முறையை கைவிட்டு, நேரடி பணியமர்த்தலை அமல்படுத்த வேண்டும்!
வேலைநீக்கத் தடைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
6 மணி நேர வேலைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்!
இந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் வர்க்க உணர்வுடன் கலந்து கொண்டு, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை வெளிப்படுத்திய அனைத்து தொழிலாளர்களுக்கும், சகோதர தொழிற்சங்கங்களுக்கும் HTUF தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
“ஒசூர் தொழிலாளர்களுக்கும், ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையிலான இணைப்பு, வர்க்க உணர்வால் உருவானது.”
நன்றி!!