நீதியைத் தேடி - ராசா துரியன் வழக்கறிஞர்

  • Home
  • India
  • Chennai
  • நீதியைத் தேடி - ராசா துரியன் வழக்கறிஞர்

நீதியைத் தேடி  - ராசா துரியன் வழக்கறிஞர் எளிய தமிழிழ் எல்லோரும் சட்டம் அறிந்துகொள்வதே எம் தலையாய நோக்கம்! netrikantv.blogspot.com

NOTARY PUBLIC APPOINTMENT ANNOUNCEMENTI am pleased to inform that I have been appointed as a Notary Public by the Govern...
13/03/2026

NOTARY PUBLIC APPOINTMENT ANNOUNCEMENT

I am pleased to inform that I have been appointed as a Notary Public by the Government of India.

I express my heartfelt gratitude to everyone for your continuous support, encouragement, and trust.

I look forward to serving the public with dedication, integrity, and responsibility in the discharge of my duties as a Notary Public.

Your continued support and good wishes are sincerely appreciated.

With sincere thanks,

Rasa DHURIYAN
Advocate
Notary Public
Government of India 🇮🇳

MEN TOO: கணவர் மீது மிளகாய்த்தூள் கலந்த கொதிக்கும் நீரை ஊற்றி கொடுமைப்படுத்திய மனைவி!கொடுமைகள், வன்முறைகளில் இருந்து பெண...
18/02/2025

MEN TOO: கணவர் மீது மிளகாய்த்தூள் கலந்த கொதிக்கும் நீரை ஊற்றி கொடுமைப்படுத்திய மனைவி!

கொடுமைகள், வன்முறைகளில் இருந்து பெண்கள் பாதுகாக்கப்படுவது போல், சட்டத்தின் கீழ் ஆண்களும் அதே பாதுகாப்புகளைப் பெற உரிமை முழு உண்டு என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு பெண் என்ற அடிப்படையில் வழக்கில் மென்மையான பார்வையை கடைபிடிக்க கேட்ட மனைவியின் கோரிக்கையை நிராகரிப்பு; மனைவிக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து நீதிபதி ஸ்வரணா காந்தா அதிரடி

உடல் ரீதியான வன்முறை அல்லது காயங்களை ஏற்படுத்தும் செயல்களில் பாலினங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது

உயிருக்கு ஆபத்தான உடல் காயங்கள் ஏற்படுத்திய ஒரு பாலினத்திற்கு சிறப்பு வகை கருணையை வழங்குவது நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா

நிர்மலா சீதாராமன் அறிவிப்புசென்னை: புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாத...
18/02/2025

நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சென்னை: புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்கனவே நிலையான கழிவு 75 ஆயிரம் வரும். இதன் மூலம் 12.75 லட்சம் வரை வரி கிடையாது.

இந்த மாற்றங்கள் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது.

0-4 லட்சம் ரூபாய் வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய் 5 சதவீதம்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம்
12-16 இலட்சம் ரூபா 15 சதம்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம்
20-24 இலட்சம் ரூபா 25 சதம்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம்

இப்போது உள்ள நடைமுறை: தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும்.

புதிய வருமான வரி முறை; புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது.

அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.

அதுவே நீங்கள் 12.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 12 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபா 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபா 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை
அப்படியே கட்ட வேண்டி இருக்கும்

பழைய வரி விதிப்பு முறை. அது நீங்கள் பழைய வருமான வரி முறையை தேர்வு செய்து இருந்தால்.. நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப நல நீதி மன்றங்கள் அனைத்தும் கீழ் காணும் வழி காட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்ன...
18/02/2025

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப நல நீதி மன்றங்கள் அனைத்தும் கீழ் காணும் வழி காட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 31.01.2025 தேதியன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

1. வழக்கறிஞரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட மனுவை குடும்ப நீதிமன்றத்தில் குடும்ப நீதிமன்ற விதி 5(ii)ன் படி தரப்பினர் அல்லது சக்தியளிக்கப்பட்ட முகவர் (Power Agent) தாக்கல் செய்யலாம்.

சக்தியளிக்கப்பட்ட முகவரால் மனு தாக்கல் செய்யப்பட்டால், சிவில் நடைமுறைச் சட்டம் (CPC) ஆர்டர் - III, விதி 1- ன் கீழ், எதிரிக்கு முன்னறிவிப்பு (Notice) வழங்காமல் முதலில் அதனை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.

2. குடும்ப நீதிமன்றம் மனுவை பதிவு செய்து, அதன் எண் (Numbering) வழங்கப்பட்டு, வழக்கறிஞர் அல்லது அவரது உதவியாளர் (Advocate Clerk) மூலமாக சம்மன் (Summons) அனுப்ப வேண்டும்.

3. தரப்பினர் அல்லது சக்தியளிக்கப்பட்ட முகவர் அவசர இடைக்கால நிவாரணத்திற்காக மனு தாக்கல் செய்யலாம்.

இந்த மனுவின் அவசரத்தன்மையை மதிப்பீடு செய்யும் போது, நீதிமன்றம் தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு உணர்வுபூர்வமாக அணுக வேண்டும்.

எதிரிக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு, நீதிமன்றம் மனுவை முடிவு செய்ய வேண்டும்.

தேவையெனில், நீதிமன்றம் ஏகபட்சமாக (Ex-Parte) உத்தரவும் பிறப்பிக்கலாம்.

4. வழக்கில் உள்ள தரப்பினரை முதலில் ஆலோசனை (Counseling) க்கு அனுப்பி பின்னர் மத்யஸ்தம் (Mediation) க்கு அனுப்ப வேண்டும்.

ஆனால், இருவரும் மத்யஸ்தத்திற்கே நேரடியாக சம்மதித்தால், ஆலோசனை (Counseling) கட்டாயமில்லை.

5. குடும்ப நீதிமன்றச் சட்டம் பிரிவு 9-ன் கீழ், தரப்பினரை மத்யஸ்தத்திற்காக அனுப்ப வேண்டும்.

அவர்கள் நேரில் (In-Person) அல்லது காணொளி (Video Conference - VC) மூலம் கலந்து கொள்ளலாம்.

காணொளி மூலம் பங்கேற்க உள்ள தரப்பினர், மத்யஸ்தருக்கும் எதிரிக்கும் முன்பே தகவல் வழங்க வேண்டும்.

6. மத்யஸ்தம் வெற்றியடைந்து குடும்ப நீதிமன்ற விதி Rule 35*ன் கீழ் ஒரு சமரசம் செய்யப்பட்டால், நீதிமன்றம் அந்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தி தீர்ப்பு (Judgment & Decree) வழங்க வேண்டும்.

Rule 27 அல்லது Rule 36*ன் கீழ் மத்யஸ்தம் தோல்வியடைந்தால், வழக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பப்படும்.

7. குடும்ப நீதிமன்றச் சட்டம் பிரிவு 13 மற்றும் குடும்ப நீதிமன்ற விதி Rule 41*ன் படி, தரப்பினர் வழக்கறிஞரால் பிரதிநிதிக்க அனுமதிக்க மனு தாக்கல் செய்யலாம்.

நீதிமன்ற அனுமதி கிடைத்த பிறகு, வழக்கறிஞர் CPC ஆர்டர் III விதி 4*ன் படி *வக்காலத்து (Vakalath) தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கறிஞர் நேரில் நீதிமன்றத்தில் இருக்கும்போது, அவரது வருகை பதிவாக வேண்டும்.

8. தரப்பினர், சக்தியளிக்கப்பட்ட முகவர் அல்லது வழக்கறிஞர் எழுத்துப் பதிலுரை / மனு / எதிர்மனு (Written Statement / Application / Counter) தாக்கல் செய்யலாம்.

9. நீதிமன்ற விசாரணையின் போது தரப்பினரின் நேரடியாக ஆஜர் (Physical Appearance) தேவைப்பட்டால், ஆனால் அவர்கள் நேரில் வர முடியாவிட்டால், காணொளி மூலம் (VC) பங்கேற்க மனு தாக்கல் செய்யலாம்.

இந்த மனுவிற்கு எதிரிக்கு நோட்டீஸ் வழங்கிய பின், அதனை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.

10. சாட்சி உறுதிமொழி (Proof Affidavit) தாக்கல் செய்யலாம். சாட்சியின் ஆதாரங்களை நேரில் (Physically) அல்லது காணொளி மூலம் (VC) பதிவு செய்யலாம்.

காணொளி மூலம் சாட்சியங்களை பதிவு செய்ய, முன்பாக எதிரிக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்.

VC மூலம் பங்கேற்கும் நபரை வழக்கறிஞர் அல்லது சக்தியளிக்கப்பட்ட முகவர் சரியாக அடையாளம் காண வேண்டும்.

விசாரணை நேரத்தில்:
விசாரணையின் போது, நீதிமன்றம் வழக்கறிஞர் அல்லது தரப்பினரை நேரடியாக கேட்டுப் பாராயணம் செய்யலாம்,

தரப்பினரின் (Physical Presence) அவசியமானது என்றால், அவர்கள் நேரில் (Physically) அல்லது காணொளி (Video Conference - VC) மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகலாம்.

11. நீதிமன்ற தீர்ப்பு/உத்தரவு வழங்குதல்:

நீதிமன்றத்தின் தீர்ப்பு/உத்தரவு (Judgment/Order) ஒரு நகல் தரப்பினருக்கும் அல்லது சக்தியளிக்கப்பட்ட முகவருக்கும் (Power Agent) இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

தரப்பினர் அல்லது சக்தியளிக்கப்பட்ட முகவர் நேரில் வர இயலாத பட்சத்தில், அவரது வழக்கறிஞருக்குத் தீர்ப்பின் நகலை வழங்கலாம்.

நீதிமன்ற தீர்ப்பின் நகலை நேரடியாகப் பெற முடியாத நேரங்களில் அது மின்னஞ்சல் (E-mail) மூலம் தொடர்புடைய தரப்பிற்கு அனுப்பப்பட வேண்டும்.

12. தீர்ப்பின் நகல் பெறுவதற்கான மனு (Copy Application):

வழக்கறிஞர், தீர்ப்பின் நகலை பெறுவதற்காக (Copy Application) மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்.

தரப்பினர் வழக்கறிஞரால் பிரதிநிதிக்கப்படவில்லை என்றால் சக்தியளிக்கப் பட்ட முகவர், வழக்கறிஞர் அல்லது அவரது உதவியாளரின் (Advocate Clerk) உதவியை பெற்றுக்கொள்ளலாம். CRP 4073 of 202

தமிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவை வந்தாச்சு: 🚨இனி வீட்டில் இருந்தே புகார் செய்யலாம்🔥தமிழ்நாடு காவல் துறை, ...
18/02/2025

தமிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவை வந்தாச்சு: 🚨

இனி வீட்டில் இருந்தே புகார் செய்யலாம்🔥

தமிழ்நாடு காவல் துறை, வலைதள முதல் தகவல் அறிக்கையை (Online FIR)சமீபத்தில் துவங்கியது. இந்த புது சேவையின் மூலம் புகார் தொடுக்க விரும்பும் நபர்கள் காவல் நிலையம் சென்றுதான் புகார் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்த்து வீட்டில் இருந்தப்படியே இணையத்தின் உதவியுடன் புகார் கொடுக்கலாம்.

இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது.

இந்த ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் தவறாக பயன்படுத்தினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.👀

இந்த சேவையின் மூலம் தமிழ்நாட்டில் உறைவிடம் கொண்டவர்கள் புகார் கொடுக்கலாம்.

தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யும் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

உங்கள் புகார்களை பதிவு செய்ய இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?1

மேலேக் கொடுக்கப்பட்டுள்ள இணையத்தள முகவரிக்கு சென்றப் பின்
District: உங்கள் மாவட்டம் தேர்வு செய்யவும்(எ.கா: சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர்)

Name: புகார் கொடுக்க விரும்புவரின் பெயர் பதிவு செய்யவும்

Date of Birth: புகார் கொடுக்க விரும்புவரின் பிறந்த தேதி பதிவு செய்யவும்

Address: புகார் கொடுக்க விரும்புவரின் முகவரி பதிவு செய்யவும்

Mobile Number: புகார் கொடுக்க விரும்புவரின் அலைப்பேசி எண் பதிவு செய்யவும்

Email ID: புகார் கொடுக்க விரும்புவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

Subject: உங்கள் புகார் எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும்

Date of Occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற தேதி பதிவு செய்யவும்

Place of occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற இடத்தை பதிவு செய்யவும்

Discription: உங்கள் புகாரை முழுமையாக இங்கே பதிவுசெய்யலாம்

Want to attach Documents
[Max. 4MB(PDF, PNG, JPEG) Files alowed]:

உங்கள் புகார் தொடர்பாக ஏதேனும் கோப்புகளை இணைக்க வேண்டுமென்றால் அந்த கோப்புகள் அதிகப்பட்சமாக 4MB க்குள்ளாகவும் PDF, PNG, JPEG போன்ற வடிவங்களில் இருத்தால் மட்டும் பதிவேற்றம் செய்ய இயலும்.

Security Code:

இவை அனைத்தும் நிறைவு செய்தப் பிறகு கொடுக்கப்பட்டுள்ள பாதுக்காப்பு குறியீட்டு எண்னைப் பதிவு செய்ய வேண்டும்

Register:

அனைத்தும் செய்து முடித்தப் பிறகு உங்கள் புகாரை பதிவு செய்து நீங்கள் பதிவு செய்ததற்கான ரசீது மற்றும் எப்.ஐ.ஆர் எண் உங்களுக்கு வழங்கப்படும்.

Tamilnadu Police Citizen Portal என்ற இணையத்தளத்தில் உங்கள் எப்.ஐ.ஆர் எண்னைப் பயன்படுத்தி உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற தொழிநுட்ப்ப முன்னேற்றங்கள் நமது நேரத்தையும், அலைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை அதிகளவில் குறைப்பதோடு குற்றங்களுக்கான தீர்வும் விரைவில் கிடைக்கும்.

எனவே இது போன்ற தொழில்நுட்பங்களை நல்ல விதங்களில் பயன்படுத்தி பயன் பெறுவோம்.http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0

BCI-யில் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள்இந்திய பார் கவுன்சில் (BCI) மூன்று மத்திய அரசு பரிந்துரைக்கப்பட்ட...
18/02/2025

BCI-யில் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள்

இந்திய பார் கவுன்சில் (BCI) மூன்று மத்திய அரசு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பெண் வழக்கறிஞர்களை உள்ளடக்கும் (பிரிவு 4-க்கான திருத்தம்).

தாக்கம்: அரசாங்க மேற்பார்வையை அதிகரிக்கிறது, BCI-யின் சுயாட்சியைக் குறைக்கக்கூடும்.

வேலைநிறுத்தங்கள் மற்றும் புறக்கணிப்புகளைத் தடை செய்தல்

புதிய பிரிவு 35A, வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுப்பது, நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது அல்லது நீதித்துறை நடவடிக்கைகளைத் தடுப்பதைத் தடை செய்கிறது.

எந்தவொரு மீறலும் "தவறான நடத்தை" என்று கருதப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது.

தாக்கம்: வழக்கறிஞர்களின் வேலைநிறுத்தங்கள் கட்டுப்படுத்தப்படும், ஆனால் ஒரு விதிமுறை நீதிக்கு இடையூறு விளைவிக்காத போராட்டங்களை அனுமதிக்கிறது.

வேலைநிறுத்தங்கள் தொடர்பான தவறான நடத்தைக்கான குழு

புதிய பிரிவு 9B வேலைநிறுத்தங்கள் தொடர்பான தவறான நடத்தையை விசாரிக்க BCI-யின் கீழ் ஒரு சிறப்பு பொது குறை தீர்க்கும் குழுவை நிறுவுகிறது.

கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் BCI ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

தாக்கம்: பொறுப்புக்கூறலை மேம்படுத்துகிறது, ஆனால் வழக்கறிஞர்களின் உரிமைகளைத் தடுப்பதாகக் கருதலாம்.

தண்டனை பெற்ற வழக்கறிஞர்களை நீக்குதல்

புதிய பிரிவுகள் 24A & 24B மாநில பார் கவுன்சில்கள் (SBCs) பின்வருவனவற்றை அனுமதிக்கின்றன:

மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை பெற்றவர்களைச் சேர்க்க மறுத்தல்.

மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை பெற்ற எந்தவொரு வழக்கறிஞரையும் மாநிலப் பட்டியலில் இருந்து நீக்குதல்.

தண்டனை ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், விடுதலையானதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேர முடியும்.

தாக்கம்: நெறிமுறைத் தரங்களை வலுப்படுத்துகிறது, ஆனால் தண்டனை பெற்ற நபர்களின் மறுவாழ்வு குறித்த கவலைகளை எழுப்பலாம்.

வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் நுழைவு

பிரிவு 49A(1) இல் உள்ள புதிய பிரிவு (cc) வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் மற்றும் இந்தியாவிற்குள் நுழையும் வழக்கறிஞர்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

பிரிவு 49A இந்த விதிகளை செயல்படுத்துவதற்காக BCI-ஐ வழிநடத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

தாக்கம்: சட்ட சேவைகளின் உலகமயமாக்கலை அதிகரிக்கலாம் ஆனால் உள்ளூர் சட்ட நிறுவனங்களை பாதிக்கலாம்.

திருத்தங்களின் தாக்கங்கள்

அதிகரித்த அரசாங்க கட்டுப்பாடு: BCI-க்கு அரசாங்க உறுப்பினர்களின் நியமனம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் திறன் ஆகியவை சட்ட ஒழுங்குமுறை மீது அதிக அரசாங்க செல்வாக்கைக் குறிக்கின்றன.

கடுமையான ஒழுக்கம் மற்றும் தொழில்முறை: வேலைநிறுத்தங்களைத் தடைசெய்வதும், தவறான நடத்தைக்கான ஒழுங்கு நடவடிக்கைகளை அனுமதிப்பதும் தடையற்ற நீதித்துறை செயல்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட சட்டக் கல்வி மற்றும் நெறிமுறைகள்: உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் சட்டத் தரங்களை இணைப்பது சட்டக் கல்வி மற்றும் வக்காலத்து திறன்களை மேம்படுத்தக்கூடும்.
நீதித்துறை நடவடிக்கைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

Address

176/8, Sai Nagar 2nd Street, Chinmaya Nagar, Saligiramam
Chennai
600092

Alerts

Be the first to know and let us send you an email when நீதியைத் தேடி - ராசா துரியன் வழக்கறிஞர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to நீதியைத் தேடி - ராசா துரியன் வழக்கறிஞர்:

Share