11/07/2022
#இந்து_வாரிசு_உரிமை_சட்டம்:(ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில்)
தந்தை உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில் , தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது குடும்ப பாகப் பிரிவினை மூலமாக கிடைத்தபரம்பரை சொத்தில் பங்கு பெற , வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கும் , விதவை மனைவிக்கும் முழு உரிமை உள்ளது . காலமான தந்தையின் சகோதரர்களுடைய வாரிசுதாரர்கள் உள்ளிட்ட மற்ற குடும்ப இண உறுப்பினர்களைவிட , இந்து வாரிசு உரிமை சட்டத்தின் கீழ் , தந்தையின்நேரடி வாரிசான மகள்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் . இந்த வழக்கு , இந்து பெண்கள் , விதவைப் பெண்களின் சொத்துரிமையுடன் தொடர்புடையது . இறந்த தந்தை உயில் எழுதி வைக்கவில்லை என்பதற்காக , அவர்களது சொத்துரிமையை மறுக்க முடியாது . தந்தையின் சொத்து மகள்களுக்கு வழங்கப்பட வேண்டுமே தவிர , சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லை என்று கூறி , அதை வேறு யாருக்கும் வழங்க முடியாது . ஒரு விதவை அல்லது மகளுக்கு தந்தையின் சுய சம்பாத்திய சொத்து அல்லது கூட்டுச் சொத்தைபிரிப்பதன் மூலம் பெறப்பட்ட பங்கை மரபுரிமையாக பெறுவதற்கான உரிமை என்பது பழைய பாரம்பரிய இந்து சட்டத்தின் கீழ் மட்டுமல்லாது பல்வேறு
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வாயிலாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.